வேதநாயகன் Archives - Oruvan.com

“மாங்குளம் பேருந்து நிலையத்தை முழுமையாக இயக்குக”: அதிகாரிகளுக்கு வடக்கு ஆளுநர் உத்தரவு
முல்லைத்தீவு மாவட்டத்தின் முக்கிய மையப் புள்ளியாகத் திகழும் மாங்குளம் பேருந்து நிலையத்தை, முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு ஏதுவான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

மாங்குளம் பேருந்து நிலைய அபிவிருத்தி தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகார சபையால், தயாரிக்கப்பட்ட திட்டவரைவு பற்றி ஆராயும் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (23.01.2026) மாலை நடைபெற்றது.

மாங்குளம் பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சூழவுள்ள வர்த்தக நிலையங்கள் என்பன உரிய வகையில் பயன்படுத்தப்படாத நிலையில் காணப்படுகின்றன.

இதனை மாற்றியமைத்து, அப்பகுதியை முழு அளவில் இயக்குவதற்கான திட்ட வரைபு நகர அபிவிருத்தி அதிகார சபையால் தயாரிக்கப்பட்டு, இக்கலந்துரையாடலில் சமர்ப்பிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் பின்வரும் விடயங்கள் ஆராயப்பட்டன:

பேருந்து நிலையத்துக்கான போக்குவரத்துப் பாதைகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கான இணைப்பு வீதிகள் அமைத்தல். மாங்குளத்தை மையப்படுத்தி, முல்லைத்தீவு மாவட்டத்தின் உள்ளூர் பேருந்து சேவைகளை எதிர்காலத்தில் வினைத்திறனாக ஒருங்கிணைத்து நடைமுறைப்படுத்துதல்.

பேருந்து நிலையத்துக்காகத் திட்டமிடப்படும் வீதி, மாங்குளம் ரயில் நிலையத்திற்குரிய காணி எல்லைக்குள் வருவதால், ரயில்வே திணைக்களத்தின் அனுமதியை விரைவாகப் பெற்றுப் பணிகளை ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

இத்திட்ட முன்மொழிவை முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பித்து அங்கீகாரத்தைப் பெறுமாறும் ஆளுநர் இதன்போது பணிப்புரை வழங்கினார்.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர், முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர், புதுக்குடியிருப்புப் பிரதேச சபைத் தவிசாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் மற்றும் பிரதிப் பணிப்பாளர், ரயில்வே திணைக்களப் பொறியியலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்டப் பொறியியலாளர், வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர், இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post “மாங்குளம் பேருந்து நிலையத்தை முழுமையாக இயக்குக”: அதிகாரிகளுக்கு வடக்கு ஆளுநர் உத்தரவு appeared first on Oruvan.com.

ஆட்சிமாற்றத்தின் பின்னர் முதலீட்டாளர்கள் வடக்கை நோக்கி வருகின்றார்கள்
எதிர்காலத்தில் இங்கு முதலீட்டாளர்கள் ஊடாக தொழில்வாய்ப்புக்கள் உருவாக்கப்படும்போது அதில் பங்கெடுக்கும் வகையில் எம்மை நாம் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் குறிப்பிட்டார்.

‘பி.எல்.சி. கம்பஸின்’ (BLC Campus) இணைவு விழா (Fusion Fest) வலம்புரி ஹோட்டலில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர், நிறுவனத்தின் விரிவுரையாளர்களுக்கான கௌரவத்தை வழங்கி வைத்தார்.

ஆளுநர் தனது உரையில், நாங்கள் கல்வி கற்கின்ற காலத்தில் வாய்ப்புக்கள் மிகக் குறைவு. எங்களுக்கு அப்போதிருந்த தெரிவு அரசாங்கத்தின் பல்கலைக்கழகம் மட்டுமே. ஆனால் இன்று அப்படியல்ல. இங்கு பல தனியார் கல்வி நிறுவனங்கள் செயற்படுகின்றன. அதன் ஊடாக உயர்கல்வி கற்பதற்கு வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அரசாங்க பல்கலைக்கழகத்துக்கு வாய்ப்புக் கிடைக்காவிட்டால் அன்று வேறு தெரிவு என்பது குறைவாக இருந்தது. ஆனால் இன்று பல தெரிவுகள் – வாய்ப்புக்கள் உங்கள் முன்னால் இருக்கின்றன.

இன்று வேலை வாய்ப்பு என்பது சவலானதாக உள்ளது. அரசாங்க வேலை வாய்ப்பாக இருக்கலாம், தனியார்துறை வேலை வாய்ப்பாக இருக்கலாம் எதுவென்றாலும் அவை சவாலானதாகவே இருக்கின்றன. ஆட்சிமாற்றத்தின் பின்னர் முதலீட்டாளர்கள் வடக்கை நோக்கி முதலிடுவதற்கு வருகின்றார்கள். வெகு விரைவில் இங்கு தொழிற்சாலைகள் உருவாகும். வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன்.

இன்று இங்கு சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளும் உங்களின் எதிர்காலம் சிறக்க வாழ்த்துகின்றேன், என்றார்.

The post ஆட்சிமாற்றத்தின் பின்னர் முதலீட்டாளர்கள் வடக்கை நோக்கி வருகின்றார்கள் appeared first on Oruvan.com.

இந்தியாவை நம்பியிருக்கின்றது வடக்கு என்கின்றார் ஆளுநர் வேதநாயகன்
“எமக்கு உடனடியாக உதவிகளைச் செய்யும், எமக்கு மிக வேண்டப்பட்ட நாடாக இந்தியா இருக்கின்றது. வடக்கு மாகாணம் உதவிகளுக்காக இந்தியாவை நம்பியிருக்கின்றது. எங்களுக்கு இதுவரை உதவிகளை வழங்கிய இந்திய மக்களுக்கும், இந்திய அரசுக்கும் வடக்கு மக்களின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.”

– இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

இந்திய அரசு மற்றும் இந்திய மக்களிடமிருந்து மனிதாபிமான உதவிகள் வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது:-

“முல்லைத்தீவு மாவட்டச் செயலராக நான் பணியாற்றியிருக்கின்றேன். இங்குள்ள கடற்றொழில் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எனக்கு மிக நன்றாகவே தெரியும். போரால் பாதிக்கப்பட்ட நீங்கள் மீள்குடியமர்வின் பின்னர் சட்டவிரோத மீன்பிடியால் பாதிக்கப்பட்டிருந்தீர்கள். உங்கள் பெறுமதியான வலைகளையும் இழந்திருந்தீர்கள். இன்று இந்திய மக்களும், இந்திய அரசும் உங்களுக்குப் பெறுமதியான வலைகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்குகின்றனர்.

இந்திய மக்களும், இந்திய அரசுகளும் எங்களுக்குக் காலத்துக்குக் காலம் பல்வேறு உதவிகளை வழங்கியிருந்தன. முக்கியமாக இந்திய வீட்டுத் திட்டத்தைக் குறிப்பிட வேண்டும். அவர்களால் எமது ரயில் பாதைகள் புனரமைக்கப்பட்டன.

இன்றைய தினம் முல்லைத்தீவு மருத்துவமனையின் புனரமைப்பை இந்தியா பொறுப்பேற்பதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா அறிவித்திருக்கின்றார். அதற்கு அவருக்கு நன்றிகளைக் கூறிக்கொள்கின்றேன். எதிர்காலத்திலும் எமது மக்களுக்கான உதவிகளை இந்தியா தொடர வேண்டும்.” – என்றார்.

இதன் பின்னர் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் விசேட உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கான குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் வலைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கி.திலகநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

The post இந்தியாவை நம்பியிருக்கின்றது வடக்கு என்கின்றார் ஆளுநர் வேதநாயகன் appeared first on Oruvan.com.

ஆட்களை கழுத்தோடு வெட்டுவதைப்போன்று வீதிகளில் வளர்ந்துள்ள மரங்களை வெட்டுகின்றார்கள் – வேதநாயகன்
‘‘ஆட்களை கழுத்தோடு வெட்டுவதைப்போன்று வீதிகளில் வளர்ந்துள்ள மரங்களை வெட்டுகின்றார்கள். அந்த மரங்களை வளர்ப்பதற்கு எவ்வளவு தூரம் கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பதைப்பற்றிச் சிந்திக்காமல் இவ்வாறு அசிரத்தையாகச் செயற்படுகின்றனர்.‘‘ இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

மரம் நடுகை தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (22.05.2025) நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் இலங்கை மின்சார சபையின் மின்வடங்களுக்கு பாதிப்பு எனத் தெரிவித்து மரங்கள் மற்றும் மரக்கிளைகள் மிகமோசமான முறையில் வெட்டப்படுகின்றமை தொடர்பிலும் அந்தக் குப்பைகள் வீதிகளில் வீசப்படுகின்றமை தொடர்பாகவும் ஆளுநருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டது. அத்துடன் ரயில்வே திணைக்களத்தால் தென்மராட்சி பிரதேசத்தில் நடுகை செய்யப்பட்ட மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டமை தொடர்பாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

இதன்போது இலங்கை மின்சார சபையின் வடபிராந்திய பிரதிப்பொது முகாமையாளர் எஸ்.பிரபாகரன், தடையற்ற மின்சாரத்தை வழங்கும்நோக்கில் மின்வடங்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கருதும் மரங்கள் அல்லது மரக்கிளைகளே வெட்டப்படுகின்றன எனக் குறிப்பிட்டார். இதன்போது ஒப்பந்தகாரர்கள் வெட்டுகின்ற மரங்களை வீதிகளிலேயே போட்டுவிட்டுச் செல்கின்றமை உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருக்கின்ற என்பதை ஏற்றுக்கொண்டார். அத்துடன் இதனை முகாமை செய்வதிலும் சில இடர்பாடுகள் இருக்கின்றன எனவும் ஒப்புக்கொண்டார்.

மாரி காலத்தை அண்மித்தே மக்கள் மரங்களை வெட்டுவது வழக்கம் எனவும், ஆனால் ஒப்பந்தகாரர்கள் கோடை காலத்திலும் மரங்களை வெட்டுகின்றனர் எனச் சுட்டிக்காட்டப்பட்டது. இதற்குப் பதிலளித்த பிரதிப்பொது முகாமையாளர், வருடத்தின் 4 தடவைகள் இந்த மரங்கள் அல்லது கிளைகளை வெட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார். மின்வடங்களின் பாதுகாப்புக்கே முக்கியத்துவம் கொடுப்பதாகவும் தெரிவித்தார். தற்போது மின்வடங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய விதத்தில் மரங்களை நடுகை செய்வதற்கு அனுமதிப்பதில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இந்த ஒப்பந்தப் பணிகளுக்குரியவர்கள் இங்கு இல்லை என பிரதிப் பொதுமுகாமையாளர் குறிப்பிட்டார். எனவே மரங்களை அதற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் வெட்டுவதற்குரிய ஆளணியினரை இங்கு உருவாக்கி எதிர்காலத்தில் அவர்கள் ஊடாக அதனைச் செய்வதற்கான யோசனையை தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் முன்வைத்தார்.

இதேவேளை, ரயில்வே திணைக்களம் தமது ரயில் பாதைகளிலிருந்து 30 அடிக்குள் மரங்கள் நடுகை செய்யக்கூடாது என்ற ஏற்பாடுகள் உள்ளது எனச் சுட்டிக்காட்டினர். தென்மராட்சியில் தமது அனுமதி பெறாமலே நடுகை செய்யப்பட்டது எனக் குறிப்பிட்டனர். தற்போது அனுமதி பெறாமல் யாராவது நடுகை செய்தால் அதனை பக்குவமாக அகற்றி வேறு இடங்களில் நடுகை செய்ய வழங்குவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ரயில் பாதைகளுக்குள் நடுகை செய்யக் கூடாது என்ற விடயத்தை மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

மேலும், வடக்கு மாகாணத்தில் மரம் நடுகையை அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் முன்னெடுக்கவேண்டும் என அறிவுறுத்திய ஆளுநர், அதனை தன்னார்வமாக முன்னெடுக்கும் நிறுவனங்களைத் தொடர்புகொண்டு செயற்படுத்துமாறு பணித்தார்.

இந்தக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், சிரேஷ்ட உதவிச் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், யாழ். மாநகர சபை ஆணையாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் மற்றும் வடக்கு மாகாணத்தில் தன்னார்வமாக மரம் நடுகையை முன்னெடுக்கும், கிறீன் லேயர் அமைப்பின் நிறுவுனர் பா.சசிக்குமார், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

The post ஆட்களை கழுத்தோடு வெட்டுவதைப்போன்று வீதிகளில் வளர்ந்துள்ள மரங்களை வெட்டுகின்றார்கள் – வேதநாயகன் appeared first on Oruvan.com.

நெடுந்தீவு மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கிய ஆளுநர் வேதநாயகன்
நெடுந்தீவு பிரதேச மக்கள் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்திய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், சில விடயங்களுக்கு உடனடியாகத் தீர்வை வழங்கியதுடன் வேறு சில விடயங்கள் நீண்ட கால அடிப்படையில் தீர்வை வழங்குவதாகத் தெரிவித்தார்.

நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நேற்று புதன்கிழமை மக்கள் குறைகேள் சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாண பிரதம செயலர், அமைச்சுக்களின் செயலர்கள், திணைக்களத் தலைவர்கள், மத்திய அரசின் திணைக்களத் தலைவர்களும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.

நெடுந்தீவு துறைமுகம், கடல்போக்குவரத்து, வீதிப்போக்குவரத்து என்பனவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பில் மக்கள் சுட்டிக்காட்டினர்.

வடதாரகை படகின் மின்விசிறிகள் இயங்காமையால் மிகவும் இன்னல்படுவதாக மக்கள் தெரிவித்த நிலையில் அதற்குப் பதிலளித்த வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர், வடதாரகைப் படகின் மின்பிறப்பாக்கியில் திருத்தவேலை முன்னெடுக்க வேண்டியிருப்பதாகவும் அதற்கான உதிரிப்பாகங்களைப் பெற்றுக்கொள்வதில் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

இயன்றவரையில் விரைவாக சீர்செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகப் பதிலளித்தார். நெடுந்தாரகைப் படகின் நங்கூரம் காணாமல்போயுள்ள நிலையில், தற்காலிகமாக எழுதாரகைப் படகின் நங்கூரத்தை நெடுந்தாரகைப் படகுக்கு பயன்படுத்துவதற்கு ஆளுநரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் அதற்கு ஆளுநர் இணக்கம் தெரிவித்தார்.

நெடுந்தீவு துறைமுகத்தை புனரமைப்பதற்கான திட்டங்கள் கடற்படையினரிடம் இருப்பதாகவும் அது தொடர்பில் தன்னுடன் பேசப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த ஆளுநர், வெளிநாட்டு நிதி மூலங்களிலிருந்தே அதனை புனரமைப்புச் செய்ய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டார். அதற்கான முயற்சிகளையும் எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், குறிகாட்டுவான் துறைமுகத்தை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நெடுந்தீவில் சுற்றுலாத்துறையை நீண்டகால நோக்கில் அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் வடக்கு மாகாண சுற்றுலாத்துறை அதிகார சபை ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், இதன்போது நெடுந்தீவின் உள்ளூர் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும் எனவும் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலர் செ.பிரணவநாதன் தெரிவித்தார்.

நெடுந்தீவு கடற்றொழில் சமாசத்துக்குச் சொந்தமான அலையரசி படகு திருத்த வேலை காரணமாக பயன்படுத்த முடியாத நிலைமையில் இருப்பதாக ஆளுநருக்குத் தெரியப்படுத்தப்பட்டது. இந்தப் படகு திருத்தத்துக்கான நிதி ஐ.ஓ.எம். நிறுவனம் வழங்கவிருந்த நிலையில் நிர்வாகச் சிக்கல் காரணமாக அந்த நிதி வேறு திட்டங்களுக்கு மாற்றப்பட்டதாக பிரதேச செயலர் குறிப்பிட்டார் நிர்வாகச் சிக்கலை தீர்ப்பதற்கான நடவடிக்கை வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக விரைவில் முன்னெடுக்கப்படும் என்று இதன்போது பிரதம செயலாளர் குறிப்பிட்டார்.

நெடுந்தீவு கடற்கரையோரத்தைச் சூழ தடுப்பணை அமைப்பதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்கான ஆய்வுகளை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் முன்னெடுத்துள்ளதாகவும், பெருமளவு நிதி ஒதுக்கீடு இதற்குத் தேவை என்றும் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

நெடுந்தீவில் பாடசாலைகளுக்கான ஆசிரிய நியமனம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. படகுச் சேவையின் நேரத்தை கருத்தில் கொண்டு நெடுந்தீவிலுள்ள பாடசாலைகளை ஆரம்பிக்கும் நேரத்தை மாற்றியமைப்பது தொடர்பில் ஆராய்வதாக கல்வி அமைச்சின் செயலர் இங்கு குறிப்பிட்டார்.

நெடுந்தீவில் வீதி விளக்குகள் பொருத்தப்படாமல் இருந்த பிரச்சினைக்கு ஆளுநர் உடனடியாகத் தீர்வை வழங்கினார். மேலும், நெடுந்தீவில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்தை திருத்தியமைத்து தருமாறு மக்கள் கோரினர்.

இதேவேளை, நெடுந்தீவில் 150 வகையான மருத்துவ மூலிகைகள் காணப்படுவதாக கண்டறிந்துள்ளதாக வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டார். அதை மக்களுக்குத் தெரியப்படுத்தி அவர்களுக்கு அதன் ஊடாக வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு ஆளுநர் இதன்போது பணிப்புரை விடுத்தார்.

The post நெடுந்தீவு மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கிய ஆளுநர் வேதநாயகன் appeared first on Oruvan.com.

யாழ்ப்பாணம் – கிளிநொச்சசி குடிநீர் விநியோக திட்டத்தை பார்வையிட்ட வேதநாயகன்
யாழ்ப்பாணம் – கிளிநொச்சசி குடிநீர் விநியோக திட்டத்தின், தாளையடியில் அமைந்துள்ள கடல்நீரை நன்னீராகச் சுத்திகரிப்புச் செய்யும் நிலையத்தை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேற்று வெள்ளிக்கிழமை (28.02.2025) நேரில் சென்று பார்வையிட்டார்.

ஆளுநரை, திட்டப் பணிப்பாளர் பொறியியலாளர் எஸ்.மாலதி, பொறியியலாளர் விஜயகாந் தலைமையிலான குழுவினர் வரவேற்றனர்.

குடிநீர் விநியோகத் திட்டத்தின் கட்டுப்பாட்டு அறையின் செயற்பாடுகளை ஆளுநர் பார்வையிட்டார்.

அதன் பின்னர் கடல்நீரை உள்ளெடுக்கும் நிலையம், சுத்திகரிப்பு மற்றும் விநியோகம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டார்.

இதன்போது திட்டப் பணிப்பாளர் மற்றும் பொறியியலாளர்களால் உரிய விளக்கங்களும் ஆளுநருக்கு வழங்கப்பட்டன.

The post யாழ்ப்பாணம் – கிளிநொச்சசி குடிநீர் விநியோக திட்டத்தை பார்வையிட்ட வேதநாயகன் appeared first on Oruvan.com.