வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் Archives - Oruvan.com

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி மோசடி செய்தமைக்காக 500க்கும் மேற்பட்ட வழக்கு தாக்கல்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளில் ஈடுபட்ட தனிநபர்கள் மற்றும் உரிமம் பெறாத நிறுவனங்களுக்கு எதிராக கடந்த ஏழு மாதங்களில் 567 நீதிமன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

இந்த காலகட்டத்தில் 2,620 முறைப்பாடுகள் கிடைத்ததாகவும், வேலை தேடுபவர்களை ஏமாற்றியதாக சந்தேக நபர்களிடமிருந்து 199.4 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணம் மீட்கப்பட்டுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட உரிமம் பெற்ற வேலைவாய்ப்பு நிறுவனம் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு சோதனைகளை மேற்கொண்டது.

இதன்போது உரிமம் பெற்ற நிறுவனங்களில் இருந்து ஏழு பேர் உட்பட மொத்தம் 36 பேர் கைது செய்யப்பட்டனர்.

2024 ஆம் ஆண்டில் மட்டும், வேலைவாய்ப்பு தொடர்பான மோசடியால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 18.25 மில்லியன் ரூபா பணத்தை பணியகம் மீட்டுள்ளது.

கடந்த ஆண்டில் மொத்தம் 4,658 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், இஸ்ரேல், தென் கொரியா, ஜப்பான், ருமேனியா மற்றும் மத்திய கிழக்கு போன்ற நாடுகளில் வேலை வாய்ப்புகளை கையாளும் போது, குறிப்பாக மோசடி வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களுக்கு பணியகம் அறிவுறுத்தியுள்ளது.

1989 என்ற ஹொட்லைன் இலக்கத்தை தொடர்பு கொண்டு வேலை வாய்ப்புகளைச் சரிபார்க்குமாறும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

The post வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி மோசடி செய்தமைக்காக 500க்கும் மேற்பட்ட வழக்கு தாக்கல் appeared first on Oruvan.com.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்; 13 நாடுகளுக்கு புதிய சட்டம் நடைமுறை
சர்வதேச நாடுகளுக்கு தொழில் வாய்ப்புகளுக்காக செல்பவர்களுக்கான புதிய சட்டம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 13 நாடுகளில் இப்புதிய சட்டம் அமுலுக்கு வரவுள்ளது.

சுயதொழில் மூலமான தொழில்துறை மற்றும் நிறுவனத்துறை வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்கள், குறித்த நாடுகளில் வேலை வாய்ப்பு ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த வேண்டியதை சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் அமுல்படுத்தியுள்ளன.

ஏற்கனவே கடந்த ஜூன் 07 ஆம் திகதி முதல் இதனை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. நேற்று வரை இந்த நடைமுறை ஒத்திவைக்கப்பட்டதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

புதிய நடைமுறைக்கு அமைய, சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கட்டார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமான், இஸ்ரேல், ஜோர்தான், லெபனான், மாலைதீவு, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் வேலைவாய்ப்புக்கு செல்வோர் இப்பதிய திட்டத்தை பின்பற்றுவது அவசியமாக்கப்பட்டுள்ளது.

இதற்காக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பதிவைப் பெறுவதற்கு அவர்களின் சேவை ஒப்பந்தம் அந்த நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் தொழிலாளர் மற்றும் நலன்புரிப் பிரிவுகளால் சான்றளிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதற்காக 60 அமெரிக்க டொலர் கட்டணம் செலுத்தப்பட வேண்டும் எனவும் கடந்த காலங்களில், ஆட்கடத்தல் காரணமாக இலங்கை தொழிலாளர்கள் வெளிநாடுகளில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட பிரச்சினைகளுக்கு தீர்வாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

The post வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்; 13 நாடுகளுக்கு புதிய சட்டம் நடைமுறை appeared first on Oruvan.com.

10,000 ரூபாய் பணம் தருவதாக பரவும் தகவல் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விளக்கம்
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு 10,000 ரூபாய் பணம் தருவதாக கூறி வௌிநாட்டில் இயங்கும் யூடியூப் தளம் ஒன்றினால் வௌியிடப்பட்ட தகவல் உண்மைக்கு புறம்பானது என அந்த பணியகம் அறிவித்துள்ளது.

இதற்காக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் கடவுச்சீட்டின் நகலை நாட்டில் உள்ள எந்தவொரு பணியக அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம் என அந்த வீடியோவில் கூறப்படுகிறது.

எனினும் பணியகம் இதுபோன்ற ஒரு அறிக்கையை ஒருபோதும் வெளியிட்டதில்லை என்றும், இந்த மோசடியில் சிக்கி யாரும் ஏமாற வேண்டாம் என்றும் பணியகம் பொதுமக்களை வலியுறுத்துகிறது.

இதுவரை இதுபோன்ற ஒரு திட்டத்தை பணியகம் செயல்படுத்தவில்லை என்றும், இது புலம்பெயர்ந்த சமூகத்தை தவறாக வழிநடத்தும் நோக்கம் கொண்ட பிரச்சாரம் மட்டுமே என்றும் பணியகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

இதுபோன்ற பொய்யான பிரச்சாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் புலம்பெயர்ந்த சமூகத்தை பணியகம் கேட்டுக்கொள்கிறது.

மேலும், இதுபோன்ற சமூக ஊடக நிறுவனங்களுக்கு அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பரப்புவதற்கு அங்கீகாரம் இல்லை என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற மோசடி செய்பவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்கள், பணியகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம், பேஸ்புக், யூடியூப் மற்றும் டிக்டொக் மூலம் மட்டுமே பணியகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

The post 10,000 ரூபாய் பணம் தருவதாக பரவும் தகவல் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விளக்கம் appeared first on Oruvan.com.

உயிரிழந்த மகளையும், உயிருக்கு போராடும் மகளையும் விரைந்து மீட்டு தாருங்கள் – ஜனாதிபதியிடம் உருக்கமான கோரிக்கை
பணிப்பெண்ணாக வெளிநாடு சென்ற நிலையில், உயிரிழந்த தனது இளைய மகளனி உடலை கொண்டுவரவும், உயிருக்கு போராடும் மூத்த மகளையும் நாட்டிற்கு அழைத்துவரவும் அவர்களின் பெற்றோர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தின் சுசி கிராமத்தை சேர்ந்த பெற்றோரே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவர்களின் இரு மகள்கள் வெளிநாட்டிற்கு பணிப்பெண்ணாகச் சென்ற நிலையில் அவர்களில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் உள்ள சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரின் தலையீட்டினால் இவர்கள் இருவரும் ஓமானுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதில் 22 வயதான யுவதி ஓமானில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். உயிரிழந்த யுவதியின் 24 வயதான மூத்த சகோதரி துபாயில் பணிபுரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் பணிப்புரியும் இந்த இரண்டு யுவதிகளும் கடுமையாக துன்புறுத்தப்பட்டதாகவும், ஊதியம் வழங்காம் தனித் தனி வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இரண்டு யுவதிகளும் இலங்கையில் உள்ள தங்கள் பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறி, தங்களை மீட்குமாறு கேட்டுக் கொண்டனர்.

அதன்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்ய அவர்களது பெற்றோர் சென்றிருந்த போதிலும், முறைப்பாட்டை ஏற்க பணியகம் மறுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

மகள்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு சுமார் எட்டு லட்சம் வரை செலவாகும் என பணியகத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாக பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்தனர்.

இபெற்றோர்கள் வெளிவிவகார அமைச்சுக்கு முறைப்பாடு செய்ய வந்த போது சமுர்த்தி உத்தியோகத்தர் வீட்டிற்கு வந்து ஏன் இவ்வாறு முறைப்பாடு செய்தீர்கள் என வினவியதுடன் அவர்களை அச்சுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஹம்பாந்தோட்டை நிர்வாக வளாகத்தில் கடமையாற்றும் நபர் எனவும், சில காலமாக துபாய், ஓமன், போன்ற நாடுகளுக்கு மனித கடத்தலில் ஈடுபட்டு வந்தவர் எனவும் மேலதிக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து வெளிவிவகார அமைச்சில் முறைப்பாடு செய்ததன் பேரில், தனது மகள் கொல்லப்பட்டிருக்கலாம் என, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட யுவதியின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்நிலையில், 24 வயதான மூத்த மகள் தன்னை விரைந்து மீட்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக யுவதியின் தாய் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை சுசி கிராமத்தில் தகரங்களால் ஆன சிறிய வீட்டில் குடும்பம் வாழ்ந்து வருவதாகவும், உயிரிழந்த மகளின் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வர முடியவில்லை என பெற்றோர்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.

பத்து குழந்தைகளைக் கொண்ட இந்தக் குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் இருப்பதும், அவர்கள் தகரக் கொட்டகையில் வசித்து வருவதும் தெரியவந்தது.

குறித்த குடும்பத்தின் தந்தை தற்போது சுகவீனமடைந்துள்ளதாகவும், குறித்த யுவதிகள் இருவரும் வீடு கட்டும் நம்பிக்கையிலும் தந்தைக்கு சிகிச்சை அளிக்கும் நம்பிக்கையிலும் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் ஹம்பாந்தோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்ய சென்றதாகவும், ஆனால் பொலிஸார் முறைப்பாட்டினை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

The post உயிரிழந்த மகளையும், உயிருக்கு போராடும் மகளையும் விரைந்து மீட்டு தாருங்கள் – ஜனாதிபதியிடம் உருக்கமான கோரிக்கை appeared first on Oruvan.com.