வெலிகம பிரதேச சபை Archives - Oruvan.com

வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு மீண்டும் ஒத்திவைப்பு
பல சர்ச்சைக்குரிய சம்பவங்கள் பதிவான வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளரைத் தெரிவு செய்யும் நடவடிக்கை இரண்டாவது முறையாகவும் ஒத்திவைக்க நேரிட்டுள்ளது.

சபையில் நிறைவெண் இல்லாத காரணத்தினால் இவ்வாறு புதிய தவிசாளரைத் தெரிவு செய்யும் நடவடிக்கை இரண்டாவது முறையாகவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வெலிகம பிரதேச சபையின் தவிசாளராகப் பணியாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த லசந்த விக்கிரமசேகரவின் படுகொலை காரணமாக, அந்தப் பிரதேச சபையின் தவிசாளர் பதவி வெற்றிடமாகியிருந்தது.

புதிய தவிசாளர் ஒருவரைத் தெரிவு செய்வது கடந்த நவம்பர் 28 ஆம் திகதி தென் மாகாண சபையின் உள்ளூராட்சி ஆணையாளரின் தலைமையில் நடைபெறவிருந்த போதிலும், நிறைவெண் இன்மையால் அந்த நடவடிக்கை இன்றைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய, 45 உறுப்பினர்களைக் கொண்ட வெலிகம பிரதேச சபையின் தவிசாளரைத் தெரிவு செய்யும் நடவடிக்கை இன்று (26) காலை 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இன்றைய தினம் 22 உறுப்பினர்கள் மட்டுமே சபைக்கு வருகை தந்திருந்ததன் காரணமாக, நிறைவெண் இன்மையால் தவிசாளரைத் தெரிவு செய்யும் நடவடிக்கையை மீண்டும் ஒத்திவைக்க உள்ளூராட்சி ஆணையாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

The post வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு மீண்டும் ஒத்திவைப்பு appeared first on Oruvan.com.

லசந்த விக்கிரமசேகர!! பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது
வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளாலேயே கெக்கிராப பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது.

கடந்த 22ஆம் திகதி காலை வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர, அவரது அலுவலகத்திற்குள் வைத்து அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டிருநு்தார்.

அவரின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெறுகின்றது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரேதுப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றிருந்தனர். இச்சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக நான்கு பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post லசந்த விக்கிரமசேகர!! பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது appeared first on Oruvan.com.

லசந்த விக்ரமசேகரவின் இறுதிச் சடங்குகள் இன்று
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளன.

இதன்படி, தற்போது வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடல், இன்று காலை 11 மணிக்கு வெலிகம பிரதேச சபைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

அங்கு பிற்பகல் வரை அஞ்சலிக்காக உடல் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் இறுதிச் சடங்குகளுக்காக உடல் குடும்ப மயானத்திற்கு எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, லசந்த விக்ரமசேகரவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அரசியல்வாதிகள் உள்ளிட்ட ஏராளாமானோர் நேற்று வருகைதந்திருந்தனர்.

கடந்த 22ஆம் திகதி காலை வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர, அவரது அலுவலகத்திற்குள் வைத்து அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தென்னிலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சம்பவம் குறித்து தற்போது நான்கு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

இதன்படி, பாதுகாப்பு கெமரா காட்சிகள் மற்றும் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகள் உள்ளிட்ட தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post லசந்த விக்ரமசேகரவின் இறுதிச் சடங்குகள் இன்று appeared first on Oruvan.com.

லசந்த விக்ரமசேகர படுகொலை!! சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி விசாரணை
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, நான்கு பொலிஸ் குழுக்கள் மூலம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தென் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜெயலத் தெரிவித்தார்.

நேற்று (22) காலை, வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர, அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இனந்தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சந்தேகநபர்கள் வெள்ளைச் சட்டை அணிந்து, கறுப்பு முகமூடி அணிந்தபடி, அலுவலகத்திற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

உத்தியோகபூர்வ இருக்கையில் இருந்த தலைவர் லசந்த விக்ரமசேகரவை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சுமார் நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதையும், மற்றொரு நபருடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்வதையும் சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன.

துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த தலைவர், மாத்தறை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சூட்டின் விளைவாக பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் தலை, கழுத்து மற்றும் மார்புப் பகுதியில் காயம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, தென் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் நான்கு பொலிஸ் குழுக்கள் சம்பவம் குறித்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளன.

எனினும், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த சந்தேக நபரும் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில், பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மிதிகம ருவானின் பிரிவினரால் இந்தக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தனக்கு எதிராக விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் குறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரி லசந்த விக்ரமசேகர ஆகஸ்ட் 29 ஆம் தேதி ஐஜிபிக்கு கடிதம் அனுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், வெலிகம பிரதேச சபைத் தலைவரின் கொலை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலந்துரையாடலுக்குப் பிறகு ஊடகங்களுக்குப் பேசிய ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, இது ஒரு அரசியல் படுகொலை என்று கூறினார்.

The post லசந்த விக்ரமசேகர படுகொலை!! சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி விசாரணை appeared first on Oruvan.com.

வெலிகம பிரதேச சபையின் அதிகாரத்தை கைப்பற்றிய ஐக்கிய மக்கள் சக்தி
வெலிகம பிரதேச சபையின் தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் லசந்த விக்ரமசேகர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தவிசாளர் தெரிவுக்காக இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளருக்கு 23 உறுப்பினர்கள் வாக்களித்ததோடு, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளருக்க 22 பேர் ஆதரவு வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post வெலிகம பிரதேச சபையின் அதிகாரத்தை கைப்பற்றிய ஐக்கிய மக்கள் சக்தி appeared first on Oruvan.com.