விராட் கோலி Archives - Oruvan.com

விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வு?
அவுஸ்திரேலிய தொடருக்கு பின்னர் மூத்த வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஓய்வு பெறுவதாக வெளியான வதந்திகளை இந்திய கிரிக்கெட் சபையின் துணை தலைவர் ராஜீவ் சுக்லா நிராகரித்துள்ளார்.

ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரை வெற்றிகொண்ட இந்திய அணிக்கு அவர் பாராட்டையும் இதன்போது தெரிவித்திருந்தார்.

அத்துடன், ஒருநாள் அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

அவர்கள் இருவரும் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் வெற்றியில் அவர்களின் இருப்பு முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்

இந்த தொடர் அவர்கள் இருவரின் கடைசி தொடர் என்ற வதந்திகளையும் ராஜீவ் சுக்லா நிராகரித்தார், இதுபோன்ற கூற்றுக்களை சொல்வது முற்றிலும் தவறு என்று வலியுறுத்தினார்.

ஓய்வு முடிவுகள் வீரர்களை மட்டுமே சார்ந்தது என்றும் அவர் கூறினார். கோலி மற்றும் சர்மா இருவரும் டெஸ்ட் மற்றும் டி20 வடிவங்களில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வு? appeared first on Oruvan.com.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது ஏன்? முதல் முறையாக விராட் கோலி சொன்ன சுவாரஸ்ய தகவல்
இந்தியாவின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான விராட் கோலி, கடந்த மே மாதம் சமூக ஊடகங்களில் ஒரு சுருக்கமான குறிப்பை வெளியிட்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெற்றார்.

எனினும், அவர் தனது ஓய்வுக்கான காரணத்தை வெளியிடாமல் இருந்ததால் இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

இந்நிலையில், தற்போது தனது ஓய்வு குறித்து முதல் முறையாக பேசிய விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தம்மால் முடிந்த அனைத்தையும் இந்தியாவுக்காக கொடுத்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தனது தொண்டு நிறுவனமான YouWeCan அறக்கட்டளைக்காக ஒரு பெரிய விருந்தை நடத்தினார், இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து பல கிரிக்கெட் நட்சத்திரங்கள் அழைக்கப்பட்டனர்.

அவர்களில் கோலியும் ஒருவர், இந்நிகழ்வில் தனது ஓய்வு குறித்த மௌனத்தை விராட் கலைத்தார். இதன்போது பேசிய அவர்,

என்னுடைய தாடியை இரண்டு நாட்களுக்கு முன்பாகத்தான் வர்ணம் செய்தேன். உங்களுடைய தாடியை ஒவ்வொரு நான்கு நாட்களுக்கு ஒரு முறை வர்ணம் பூசினால் உங்கள் (விடை பெறும்) நேரம் வந்து விட்டது என்பது உங்களுக்குத் தெரியும்.

இந்த முடிவு எளிதானது கிடையாது என்றாலும் சரியானதாக உணர்கிறேன்.

என்னால் முடிந்த அனைத்தையும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கொடுத்து விட்டேன். அதுவும் நான் நம்பியதை விட எனக்கு அதிகமாகவே திரும்பிக் கொடுத்துள்ளது. அதனால் மிகுந்த நன்றியுணர்வுடன் இந்த விளையாட்டிலிருந்து வெளியேறினேன்” என்றார்.

36 வயதான விராட் கோலி 210 இன்னிங்ஸ்களில் (123 டெஸ்ட்) 46.85 சராசரியாக 9230 ஓட்டங்கள் குவித்து ஒரு அற்புதமான டெஸ்ட் வாழ்க்கையைப் பெற்றுள்ளார். அவர் 30 சதங்கள் மற்றும் 31 அரைசதங்களுடன் இந்த ஓட்டங்களை குவித்துள்ளார்.

மேலும், அவர் 68 டெஸ்ட் போட்டிகளில் தலைமை தாங்கினார், அவற்றில் 40 போட்டிகளில் வெற்றி பெற்றார், இது அவரை இந்த வடிவ வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இந்திய தலைவராக மாற்றியுள்ளது. அவரது 58.82 வெற்றி சதவீதம் ஆகும்.

கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடந்த டி20 உலகக் கிண்ணத்தை இந்தியா வென்ற பின்னர், கோலி டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். தொடர்ந்து கடந்த மே மாதம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

எவ்வாறாயினும், ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடவுள்ளதாக விராட் கோலி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது ஏன்? முதல் முறையாக விராட் கோலி சொன்ன சுவாரஸ்ய தகவல் appeared first on Oruvan.com.

வரலாறு படைத்த விராட் கோலி
ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி, லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 227 ஓட்டங்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் சதமடித்து 118 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, 228 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 18.4 ஓவரில் 230 ஓட்டங்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய கோலி 30 பந்துகளில் 54 ஓட்டங்கள் அடித்தார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக அரைசதம் அடித்த வீரர்களின் பட்டியலில் வார்னரை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார். வார்னர் 62 அரைசதங்கள் நடித்துள்ள நிலையில் கோலி 63 அரைசதங்களை அடித்துள்ளார்.

மேலும் டி20 கிரிக்கெட்டில் ஒரே அணிக்காக 9000 ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார்.

ஆண்கள் டி20 கிரிக்கெட்டில் ஒரே அணிக்காக அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள்:

9030 – விராட் கோலி (RCB)

6060 – ரோகித் சர்மா (MI)

5934 – ஜேம்ஸ் வின்ஸ் (ஹாம்ப்ஷயர்)

5528 – சுரேஷ் ரெய்னா (CSK)

5314 – எம்.எஸ். தோனி (CSK)

மேலும், ஒரு ஐபிஎல் வரலாற்றில் 5 முறை ஒரு சீசனில் 600 ஓட்டங்களுக்கு மேல் குவித்த முதல் வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார்.

ஐபிஎல்: ஒரு சீசனில் 600+ ஓட்டங்கள் :

5 – விராட் கோலி (2013, 2016, 2023, 2024, 2025)

4 – கே.எல். ராகுல் (2018, 2020, 2021, 2022)

3 – கிறிஸ் கெய்ல் (2011, 2012, 2013)

3 – டேவிட் வார்னர் (2016, 2017, 2019)

The post வரலாறு படைத்த விராட் கோலி appeared first on Oruvan.com.

ஓய்வை அறிவித்தார் விராட் கோலி
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“14 வருடங்களுக்கு முன்பு முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நீல உடையை அணிந்தேன். இந்த விளையாட்டு என்னை இப்படி இந்த அளவுக்கு மாற்றும் என்று நினைக்கவே இல்லை.

இது என்னை சோதித்து, என்னை ஒரு நல்ல வீரனாக உருவாக்கி, வாழ்க்கைக்கு தேவையான பல பாடங்களை கற்றுக்கொடுத்தது. வெள்ளை உடையில் விளையாடுவது ஒரு தனி உணர்வு.

அமைதியாக உழைப்பது, நீண்ட நேரம் மைதானத்தில் இருப்பது, யாரும் கவனிக்காத சிறு தருணங்கள் முதல்கொண்டு இவை எல்லாம் மறக்கவே முடியாது.

இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டை விட்டு விலகுவது கடிடமாக இருந்தாலும், இது சரியான முடிவு என்று தோன்றுகிறது. நான் இதற்கு என் முழு முயற்சியையும் கொடுத்தேன். இந்த விளையாட்டு எனக்கு நிறைய கொடுத்தது.

விளையாட்டுக்கு, என்னுடன் விளையாடியவர்களுக்கு, என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. என் டெஸ்ட் வாழ்க்கையை எப்போதும் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்வேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் ரோகித் சர்மா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது கோலியும் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி இந்திய அணி தனது இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ள நிலையில், கோலியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2011ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான விராட் கோலி, மூன்று ஆண்டுகளின் பின்னர் அணியின் தலைவராக பொறுப்பேற்றிருந்தார்.

அணியின் தலைவராக 68 போட்டிகளில் இந்தியாவை வழிநடித்தியுள்ள அவர் 40 போட்டிகளில் வெற்றிகளை பதிவு செய்திருந்ததுடன், 11 போட்டிகளை சமநிலைப்படுத்தியுள்ளார்.

17 போட்டிகளில் அவர் தலைமையிலான இந்திய அணி தோல்வியை சந்தித்திருந்தது. 58.82 வீத வெற்றியுடன், டெஸ்ட் போட்டிகளில் மிகவும் சிறந்த தலைவராக செயற்பட்டுள்ளார்.

வேறு எந்த இந்திய அணி தலைவர்களும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இவ்வளவு வெற்றிகளை பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி, இதுவரை 123 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி, 46.85 சராசரியில் 9,230 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில் 30 சதங்கள் மற்றும் 31 அரை சதங்கள் அடங்கும்.

இந்தியாவின் சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் கோலி, சமீபத்திய ஆண்டுகளில் நிலைத்தன்மைக்காக கடுமையாக போராடிக்கொண்டிருந்தார்.

அவர் இறுதியாக அஸ்திரேலியாவில் விளையாடி 2024-25 போர்டர் கவாஸ்கர் தொடரின் போது, ஐந்து போட்டிகளில் வெறும் 186 ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்தார். இதில் ஒரு சதமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஓய்வை அறிவித்தார் விராட் கோலி appeared first on Oruvan.com.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி ஓய்வு?
இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்த்த நிலையில், கடந்த 7ம் திகதி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா அறிவித்தார்.

இந்நிலையில், இந்திய வீரரான விராட் கோலியும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விருப்பம் தெரிவித்து பி.சி.சி.ஐ-யிடம் தனது கருத்தை கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால், எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கருத்தில் கொண்டு ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு விராட் கோலியிடம் பி.சி.சி.ஐ. வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

The post டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி ஓய்வு? appeared first on Oruvan.com.

விராட் கோலி சீக்கிரமே ஓய்வு பெற்றுவிட்டார் – ரெய்னா கவலை
விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து சீக்கிரமே ஓய்வு பெற்றுவிட்டதாக இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

விராட் கோலி 2026ஆம் ஆண்டு வரை விளையாடும் திறன் கொண்டவர் என்று ரெய்னா சுட்டிக்காட்டியுள்ளார்.

2024 ஆம் ஆண்டு இந்தியா டி20 உலகக் கிண்ணத்தை வென்ற பிறகு விராட் கோலி டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார். அவருடன், ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் ஓய்வை அறிவித்தனர்.

இந்நிலையில், விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து சீக்கிரமாகவே ஓய்வு பெற்றுவிட்டார் என்று தான் நினைப்பதாக ரெய்னா தெரிவித்துள்ளார்

தற்போது அவர் விளையாடி வரும் வேகத்தையும், 2025 சாம்பியன்ஸ் டிராபியில் அவர் காட்டிய வேகத்தையும் கருத்தில் கொண்டு, அவர் 2026 வரை விளையாட முடியும்.

“விராட் தனது உடற்தகுதியை பராமரித்து வரும் விதத்தைப் பார்க்கும்போது, ​​அவர் இன்னும் உச்ச ஃபார்மில் இருக்கிறார் என்று கருதலாம்” என்று ரெய்னா கூறினார்.

கடந்த சீசனில் ஆரஞ்சு தொப்பியை வென்ற விராட் கோலி, இந்த சீசனிலும் பெங்களூரு அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி இதுவரை ஒன்பது போட்டிகளில் இருந்து 65.33 சராசரியுடன் 392 ஓட்டங்களை குவித்துள்ளார்.

விராட் மற்றும் பிற மூத்த வீரர்கள் ஓய்வு பெற்ற பிறகு, இந்திய கிரிக்கெட் சபை இளைய தலைமுறையினர் தலைமையில் ஒரு டி20 அணியை உருவாக்கி வருகின்றது.

தற்போது மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் இளம் இந்திய அணியினர், அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கிண்ண தொடருக்கு தயாராகி வருகிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post விராட் கோலி சீக்கிரமே ஓய்வு பெற்றுவிட்டார் – ரெய்னா கவலை appeared first on Oruvan.com.

விராட் கோலி குடிக்கும் கருப்பு தண்ணீர் விலை என்ன? கருப்பாக இருக்குமா?
விராட் கோலி, புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர். கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் விராட் கோலியின் ரசிகராகவும் இருப்பார்கள், இருந்திருப்பார்கள். இப்போது அதிகம் பேசப்படுவது அவர் குடிக்கும் கருப்பு தண்ணீர்தான்.

கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இவரது ஃபேன் கிளப்பில் மெம்பர்களாகவும் இருக்கிறார்கள். குறிப்பாக, இவர் தனது உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்துபவர் என்பதும் பலருக்கும் தெரியும்.

அதில் ஒன்றாக, அவர் கருப்பு தண்ணீர் குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். எப்போதும் பிரான்ஸிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கருப்பு தண்ணீர் எனப்படும் தண்ணீரைத்தான் குடிப்பார். இதன் மூலம், அவர் தனது உடல் ஆரோக்கியத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருவார் என்பது தெரிந்திருக்கும்.

அது ஒரு லிட்டர் தண்ணீர் ரூ.4 ஆயிரம் என்று கூறப்படுகிறது. சில நிறுவனங்களில் கருப்பு தண்ணீர் என்ற பெயரில் ஒரு அரை லிட்டர் பாட்டில் விலை ரூ.30 முதல் ரூ.200 வரை ஆன்லைனில் விற்பனையும் செய்யப்படுகிறது.

எவியன் என்ற நிறுவனத்தின் எவியன் நேட்சுரல் ஸ்பிரிங் வாட்டர் எனப்படும் குறிப்பிட்ட தண்ணீரைத்தான் கோலி தேர்வு செய்து குடிக்கிறாராம். ஆனால், பலரும் இந்த தண்ணீரே கருப்பு தண்ணீர் என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் கருப்பு தண்ணீர் என்பது நிறத்தில் நிறமற்ற நாம் குடிக்கும் அதே தண்ணீர்போலத்தான் இருக்குமாம்.உயர்தர, அதிக விலையுள்ள மிகத் தரமான, மினரல்கள் நிறைந்த தண்ணீரைத்தான் அடையாளத்துக்காக கருப்பு நீர் என்கிறார்கள்.

அதிக சத்துகள் நிறைந்த, மிகவும் அரிதான இடத்திலிருந்து பெறப்படும் தண்ணீராகவும் கருப்பு தண்ணீர் கருதப்படுகிறது. இது உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் என்று மக்கள் நம்புகிறார்களே தவிர, அறிவியல் உண்மை எதுவும் இல்லை.

பிரான்சின் ஏவியன்-லெஸ்-பெய்ன்ஸ் பகுதியிலிருந்து விராட் கோலி குடிக்கும் கருப்பு தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. இந்த தண்ணீர், பனிப்பாறை மற்றும் மணல் வடிகட்டுகள் மூலம் உயர்தர வடிகட்டுதல் செயல்முறைக்கு உள்படுத்தப்படுவதால் அதிக விலைக்கு விற்கப்படுகிறதாம்.

இது மணல் வடிகட்டிகள் மூலம் வடிகட்டப்படுவதால், தண்ணீரில் தேவையான மினரல்கள் சேரும், அது தனது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்பதால் விராட் கோலி இதனை அதிகம் விரும்பி குடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

The post விராட் கோலி குடிக்கும் கருப்பு தண்ணீர் விலை என்ன? கருப்பாக இருக்குமா? appeared first on Oruvan.com.

இளம் வீரருடன் வம்பிழுத்தாரா விராட் கோலி? – சிட்னி டெஸ்டில் தடை
இந்திய மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போர்டர் – கவாஸ்கரி டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் விராட் கோலி மற்றும் சாம் கோன்ஸ்டஸ் மோதிக்கொண்ட சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இரு வீரர்களுக்கு போட்டித் தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.

இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்பேர்னில் இடம்பெறுகின்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.

சற்று முன்னர் வரை 76 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்துள்ள அந்த அணி 282 ஓட்டங்களை குவித்துள்ளது. இந்த போட்டியின் முக்கிய அம்சமாக சுமார் 1,445 நாட்களுக்கு பின்னர் பும்ரா வீசிய பந்தில் சிக்ஸர் அடிக்கப்பட்டது.

கடந்த நான்கு ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் அபாராமாக திறமையை வெளிப்படுத்தி வரும் பும்ரா கடந்த காலங்களில் வீசிய 4,484 பந்துகளுக்கு பின்னர் இன்று முதல் முறையாக சிக்ஸர் அடிக்கப்பட்டது.

அவுஸ்திரேலியா அணியின் அறிமுக வீரராக களமிறங்கியுள்ள சாம் கோன்ஸ்டஸ் பும்ராவின் பந்துவீச்சை லாவகமாக எதிர்கொண்டார். அவர் வீசிய இரண்டாவது ஓவரில் மட்டு 16 ஓட்டங்களை கோன்ஸ்டஸ் அடித்திருந்தார்.

இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் பும்ராவின் ஓவரில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர் என்ற சாதனையை கோன்ஸ்டஸ் படைத்தார். இந்தப் போட்டியின் மற்றுமொரு முக்கிய சம்பவமாக விராட் கோலி மற்றும் சாம் கோன்ஸ்டஸ் மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

10 ஓவரின் முடிவில் பந்தை கையில் எடுத்துக்கொண்டு ஓவர் மாற்றுவதற்காக விராட் கோலி நடந்து சென்ற போது எதிர்திசையில் கோன்ஸ்டஸ் நடந்து வந்தார். இதன்போது இருவரும் தங்களுடைய தோளில் நேருக்கு நேராக மோதிக்கொண்டனர்.

இதனையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட போது மைதானத்தில் இருந்த உஸ்மன் கவஜா மற்றும் நடுவர்கள் தலையிட்டு நிலைமையை சரிசெய்தனர்.

ஆனால் அந்த இடத்தில் விராட் கோலி தான் வேண்டுமென்றே கோன்ஸ்டஸ் மீது மோதியதாக நேரலையில் ரிக்கி பாண்டிங் மற்றும் மைக்கேல் வாகன போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்தார்கள்.

இந்நிலையில் அந்த தருணத்தில் யார் மீது தவறு இருக்கிறது என்பதை போட்டி நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் விசாரிப்பார் என அவுஸ்திரேலிய வாரியம் அறிவித்துள்ளது.

ஒருவேளை அதன் முடிவில் அவர்கள் மீது தவறு இருந்தால் நடுவர் லெவல் 1 அல்லது லெவல் 2 விதிமுறை மீறியதாக பரிந்துரை செய்வார். அதை ஏற்றுக் கொண்டு ஐசிசி 3 அல்லது 4 கருப்பு புள்ளிகளை தண்டனையாக கொடுக்க (லெவல் 2 விதிமுறை) வாய்ப்புள்ளது.

ஒருவேளை லெவல் 2 விதிமுறையை மீறியதற்காக 4 புள்ளிகளை பெற்றால் இந்தத் தொடரின் 5வது போட்டியில் விராட் கோலி அல்லது கோன்ஸ்டஸ் விளையாடுவதற்கு தடை பெறுவார்கள்.

லெவல் 1 விதிமுறை மீறியதாக கருதப்பட்டால் அபராதம் மட்டும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இளம் வீரருடன் வம்பிழுத்தாரா விராட் கோலி? – சிட்னி டெஸ்டில் தடை appeared first on Oruvan.com.

போர்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் மாற்றம்
போர்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை இடம்பெறவுள்ள நான்காவது போட்டியில் இந்திய அணியில் பல மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலாவது மாற்றமாக அணித்தலைவர் ரோகித் ஷர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெர்த்தில் நடந்த தொடரின் முதல் போட்டியில் விளையாடாத ஷர்மா, அடிலெய்டில் மற்றும் பிரிஸ்பேனில் இடம்பெற்ற அடுத்த இரண்டு போட்டிகளிலும் ஆறுவது இடத்திலும் களமிறங்கினார்.

நடந்து முடிந்த மூன்றுப் போட்டிகளிலும் கேஎல் ராகுல் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி சிறப்பாக துடுப்பெடுத்தாடியிருந்தார். இந்நிலையில், அவரை மூன்றாவது இடத்தில் களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த மாற்றங்கள் காரணமாக தற்போது மூன்றாவது இடத்தில் விளையாடி வரும் சுப்மான் கில் எந்த வரிசையில் களமிறங்கி துடுப்பெடுத்தாடுவார் என் கேள்வி எழுந்துள்ளது.

மெல்போர்னில் நாளை இடம்பெறவுள்ள போட்டியில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடுவது குறித்து இந்திய அணி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் சகலதுறை வீரர் வாஷிங்டன் சுந்தர் தங்கள் விளையாடும் 11 அணியில் மீண்டும் களமிறங்கக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி சதம் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். எனினும், அடுத்த இரண்டுப் போட்டிகளிலும் அவர்கள் கடுமையாக தடுமாறியிருந்தனர்.

கேஎல் ராகுல் மட்டுமே ஆறு இன்னிங்ஸ்களில் இரண்டு அரைசதங்களுடன் ஓரளவு சிறப்பாக துடுப்பெடுத்தாடியுள்ளதுடன், இந்த தொடரில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர்களில் டிராவிஸ் ஹெட்டுக்கு அடுத்தபடியாக இரண்டாமிடத்தில் உள்ளார்.

ஜெய்ஸ்வால் 193 ஓட்டங்களுடன் இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தாலும், இதில் முதல் போட்டியில் பெற்றுக்கொண்ட 161 ஓட்டங்கள் அடங்கும்.

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ஷர்மா மற்றும் விராட் கோலி துடுப்பாட்டத்தில் மீண்டும் மீண்டும் சொதப்பியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post போர்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் மாற்றம் appeared first on Oruvan.com.

“என் அனுமதியின்றி அவ்வாறு செய்யாதீர்கள்” – கோபப்பட்டு பேசிய விராட்
விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் தங்கள் குழந்தைகளான வாமிகா மற்றும் அகாயின் தனியுரிமைக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுக்கும் தம்பதிகள் ஆவர்.

முன்னதாக, கோலி தனது குடும்பத்தினருடன் இருக்கும்போது அனுமதியின்றி படங்களை எடுக்க வேண்டாம் என்று ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போர்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வரும் நிலையில், அதன ஒரு பகுதியாக விராட் கோலியுடன் குடும்பம் தற்போது அவுஸ்திரேலியாவில் தங்கியுள்ளது.

இந்நிலையில், மெல்போர்ன் விமான நிலையத்தில் புகைப்படம் எடுக்க முயன்ற அவுஸ்திரேலிய செய்தியாளர்களிடம் விராட் கோலி கோபமாக பேசும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.

செய்தியாளர்களின் கேமரா குழந்தைகளை நோக்கி திரும்பியதால் கோலி கோபமடைந்தார்.

இதனையடுத்து, குழந்தைகளுடன் இருக்கும் போது சில தனியுரிமை வேண்டும் என்றும் கேட்காமல் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்றும் கோலி கூறுவது காட்சிகளில் தெளிவாக தெரிகிறது.

விமான நிலையத்திலிருந்து கோலி வெளியே வந்தபோது, ​​அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்டிடம் செய்தியாளர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

ஆனால் கோலியும் அனுஷ்காவும் வெளியே வந்த பிறகு கேமரா அவர்களை நோக்கி திரும்பியது. இதை கவனித்த கோலி கோபமடைந்தார்.

எவ்வாறாயினும், குழந்தைகளை படமெடுக்கவில்லை என்று செய்தியாளர்கள் கூறியதும் கோலி அமைதியாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post “என் அனுமதியின்றி அவ்வாறு செய்யாதீர்கள்” – கோபப்பட்டு பேசிய விராட் appeared first on Oruvan.com.