விமல் வீரவன்ச Archives - Oruvan.com

நீதிமன்றத்தில் ஆஜராகாத விமல் – கைது செய்யுமாறு உத்தரவு
சட்டவிரோதமான முறையில் 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களைச் சேர்த்துக் கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகாத காரணத்தினால், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

மேலும், பிரதிவாதியின் பிணையாளர்களை அடுத்த வழக்குத் தவணையில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்து அழைப்பாணை அனுப்புமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

The post நீதிமன்றத்தில் ஆஜராகாத விமல் – கைது செய்யுமாறு உத்தரவு appeared first on Oruvan.com.

விமல் வீரவன்சவின் வாக்குமூலம்: பொலிஸ் திரித்து வெளியிட்டதாக குற்றச்சாட்டு
தேசிய சுதந்திர முன்னணியின் (NFF) தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, தங்காலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவில் (CID) அளித்த வாக்குமூலத்தை பொலிஸார் திரித்து ஊடகங்களுக்கு வெளியிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பொலிஸ் தனது மூன்று மணி நேர வாக்குமூலத்தின் சில பகுதிகளை மட்டும் தேர்ந்தெடுத்து, திருத்தி வெளியிட்டு, உண்மையை மறைக்க முயல்வதாக தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையின் ஒரு சில பகுதிகளை மட்டுமே பொலிஸார் வெளியிட்டதாகவும் விமல் வீரவன்ச தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

விமல் வீரவன்சவின் பேஸ்புக் பதிவு கீழே…

“சமீபத்தில் கைது செய்யப்பட்ட பெலியத்தே சனா அல்லது புவக்தண்டாவே சனா என்ற நபர் தொடர்பாக ஒரு ஊடக சந்திப்பில் நான் வெளிப்படுத்திய தகவல்கள் குறித்து வாக்குமூலம் அளிக்க தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வு அலுவலகத்திற்கு வருமாறு எனக்கு வழங்கப்பட்ட அறிவிப்பின்படி, நேற்று (ஒக்டோபர் 09) குறித்த அலுவலகத்திற்குச் சென்று அனைத்து தகவல்களுடன் எனது முழு வாக்குமூலத்தையும் வழங்கினேன்.

குறித்த அலுவலகத்திற்கு நான் அளித்த முழு வாக்குமூலத்தின் சில பகுதிகளை மட்டுமே பொலிஸ் இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது. நான் அளித்த சுமார் மூன்று மணி நேர வாக்குமூலத்தில் பிரித்தெடுக்கப்பட்ட பகுதிகளை வேண்டுமென்றே திருத்தி இவ்வாறு ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது. பொலிஸ் விரும்பியபடி அவற்றைத் திரித்து இவ்வாறு வெளியிடுவதன் மூலம், புவக்தண்டாவே சனா மற்றும் அவரது அரசியல் தொடர்புகள் பற்றிய உண்மையை சமூகத்திலிருந்து மறைக்க பொலிஸ் முயற்சிப்பதாக சந்தேகம் உள்ளது.

சமூகத்தில் விவாதத்திற்கு உட்பட்ட ஒரு விடயம், பொலிஸாருக்கு வழங்கப்பட்ட வாக்குமூலங்களை விசாரித்து உண்மையைக் கண்டறிவதற்குப் பதிலாக, பொலிஸார் தங்கள் விருப்பப்படி அவற்றைத் திருத்துவதன் மூலம் தங்கள் சொந்த சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்குகிறார்கள். அவற்றை விளம்பரப்படுத்துதல். பொலிஸாரால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட அறிக்கை முற்றிலும் திரிபுபடுத்தப்பட்ட அறிக்கையாகும், மேலும் இது சட்டத்தை மதிக்கும் பொலிஸுக்கு ஏற்ற செயல் அல்ல, மாறாக அரசாங்கத்தின் சேறு பூசும் படைக்கு ஏற்ற செயல் என்று கூற வேண்டும்.

The post விமல் வீரவன்சவின் வாக்குமூலம்: பொலிஸ் திரித்து வெளியிட்டதாக குற்றச்சாட்டு appeared first on Oruvan.com.

விமல், கம்மன்பில போன்றோர் இனவாதத்தை முன்னிலைப்படுத்தி மீண்டெழ முயற்சி
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோர் இனவாதத்தை முன்னிலைப்படுத்தி இழந்த அரசியல் செல்வாக்கை மீண்டும் கைப்பற்ற முயற்சிக்கின்றார்கள் என மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தேர்தலில் போட்டியிடாமலே தோல்வியை அறிந்து விலகிக் கொண்டவர்கள் இன்று தேசப்பற்றாளர்கள் போல் பேசுகின்றார்கள்.

இந்த நாடு இனவாதத்தால் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. அதற்கு இவர்கள் பொறுப்புக்கூற வேண்டும். விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் இன்றும் கடந்த அரசுதான் ஆட்சியில் உள்ளது என்று நினைத்துக் கொண்டு செயற்படுகின்றார்கள்.

போலியான விடயங்களைச் சமூக மயப்படுத்த முயற்சிக்கும் போது அந்த விடயங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அவர்கள் முன்னிலையாக வேண்டும்.

இனவாதத்தை முன்னிலைப்படுத்தி இழந்த அரசியல் செல்வாக்கை மீண்டும் கைப்பற்ற இவர்கள் முயற்சிக்கின்றார்கள்.

நாட்டு மக்கள் இதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள். மக்கள் மத்தியில் தவறான விடயத்தை சமூகமயப்படுத்த இடமளிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

The post விமல், கம்மன்பில போன்றோர் இனவாதத்தை முன்னிலைப்படுத்தி மீண்டெழ முயற்சி appeared first on Oruvan.com.

அர்ச்சுனாவை எதிர்க்கட்சித் தலைவராக்குங்கள் ; விமல் வீரவன்ச
யாழ். மாவட்ட பாரைளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனை எதிர்க்கட்சித் தலைவராக்குமாறு கோரியுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் விமல் வீரவன்ச, நாட்டின் பொது பிரச்சினையை பேசுபவர் எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருக்கிறார் என்று பார்க்க வேண்டிய அவசியமில்லை என்றார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேற்றிரவு (29) நடத்திய அரசியல் நிகழ்ச்சியின் போது, ஓரினசேர்க்கையாளர்களை இலங்கையின் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு ஈர்ப்பது தொடர்பில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

The post அர்ச்சுனாவை எதிர்க்கட்சித் தலைவராக்குங்கள் ; விமல் வீரவன்ச appeared first on Oruvan.com.

இறுதிப்போரின்போது பிரபாகரன், பொட்டு அம்மானை உயிருடன் மீட்க அமெரிக்கா கப்பல் அனுப்பியது
இறுதிக்கட்டப்போரின்போது பிரபாகரன், பொட்டு அம்மான் உள்ளிட்டவர்களை அமெரிக்கா உயிருடன் கோரி இருந்தது. அதற்காக கப்பலொன்றுகூட அனுப்பி வைக்கப்பட்டிருந்தது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ புலி டயஸ்போராக்களுடன் இந்த அரசாங்கத்துக்கு தொடர்பு இருக்கின்றது. தேர்தல் தொடர்பில் அவர்களுடன் கொடுக்கல், வாங்கல்கள்கூட இருந்திருக்கலாம். நிதி உதவிகூட கிடைக்கப்பெற்றிருக்கக்கூடும்.

கனடாவில் இனவழிப்பு நினைவகமொன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்புகூட வெளியிடப்படவில்லை. இனவழிப்பு வாரம் அறிவிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் மற்றும் கொழும்பில்கூட இனவழிப்பு நினைவுகூரப்படுகின்றது.

ஆனால் ஆட்சியாளர்கள் போர் வீரர்களுக்குரிய கௌரவத்தை வழங்கவில்லை. புலி டயஸ்போராக்களுக்கு மனம் வலிக்கும் என்பதால்தான் போர் வீரர்களைக்கூட சிப்பாயென ஆட்சியாளர்கள் விளித்துள்ளனர்.

போர்காலத்தில்கூட சர்வதேச அழுத்தங்கள் இருந்தன. அது இன்னும் தொடர்கின்றது.

இறுதிக்கட்டப்போரின்போது வடக்கு கடற்பரப்புக்கு அண்மித்து அமெரிக்காவின் மெரைன் படையணியின் கப்பலொன்று வந்தது. சர்வதேச கடற்பரப்பில் அது நிறுத்தப்பட்டிருந்தது.

பொட்டு அம்மான், பிரபாகரன் உள்ளிட்டவர்களை உயிருடன் தம்மிடம் ஒப்படைக்குமாறு அவர்கள் கோரினார்கள். எதற்காக இது? இலங்கையை பிரிக்க வேண்டும் என்பதே அந்த சக்திகளின் நோக்கம். அந்த தேவைக்காகவே புலிகள் அமைப்பு செயற்பட்டது. சர்வதேச ரீதியிலும் வலுவடைந்தது.

எமது நாட்டில் பாடப்புத்தகத்துக்கு போர் வீரர்களை உள்ளடக்க முடியாதுள்ளது. ஆனால் கனடாவில் பாடப்புத்தகத்துக்குள் இனவழிப்பு உள்வாங்கப்பட்டுள்ளது. இப்படிதான் சர்வதேச அழுத்தம் தொடர்கின்றது.” – என்றார்.

The post இறுதிப்போரின்போது பிரபாகரன், பொட்டு அம்மானை உயிருடன் மீட்க அமெரிக்கா கப்பல் அனுப்பியது appeared first on Oruvan.com.

இறுதி போரில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனரெனில் பெயர் பட்டியல் எங்கே?
” படையினர் பெற்றுத்தந்த வெற்றியை நாம் ஒருபோதும் மறக்கவில்லை. எனவே, உள்ளக பொறிமுறை ஊடாகவேனும் எமது மக்களை தண்டிப்பதற்கு இடமளிக்கமாட்டோம்.” என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சூளுரைத்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

” இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாகவும், படையினர் 40 ஆயிரம் பேரை கொலை செய்தனர் எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. இவ்வாறு படையினர் சட்டத்தக்கு புறம்பாக 40 ஆயிரம் பேரை கொலை செய்தனர் என்றால் பெயர் பட்டியல் எங்கே? வெளிநாடுகளில் உள்ளவர்களின் போலியான சாட்சியங்களின் அடிப்படையில் தகவல்களை வெளியிடுவதில் பயன் இல்லை.” எனவும் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டினார்.

இறுதிப்போரின்போது புலிகளிடமிருந்து 2 லட்சத்து 97 ஆயிரத்து 853 பேரை படையினர் மீட்டனர். இது தொடர்பான பெயர் பட்டியல் உள்ளது. ஆனால் ஆதாரம் இல்லாத 40 ஆயிரம் பற்றியே கதைக்கின்றனர்.

எனவே, இந்த பழிவாங்கலை , வேட்டையை நிறுத்த வேண்டும். எனவே, எதிர்வரும் திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு விஜேராமாவத்தைக்கு வருமாறு அனைவரையும் நாம் அழைக்கின்றோம்.

விஜித ஹேரத் தரப்பு கொண்டுவரவுள்ள உள்ளக பொறிமுறை ஊடாகவேனும் தண்டிக்க இடமளியோம்.” என விமல்வீரவன்ச மேலும் குறிப்பிட்டார்.

The post இறுதி போரில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனரெனில் பெயர் பட்டியல் எங்கே? appeared first on Oruvan.com.