விமல் வீரவங்ச Archives - Oruvan.com

சுரேஷ் சலேவால் பெறப்பட்ட துல்லியமான உளவுத் தகவலின் அடிப்படையிலேயே தமிழ்ச் செல்வன் இலக்கு வைத்து கொல்லப்பட்டார்
“சுரேஷ் சலேவால் பெறப்பட்ட துல்லியமான உளவுத் தகவலின் அடிப்படையிலேயே புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு பொறுப்பாளராக இருந்த தமிழ்ச் செல்வன் இலக்கு வைக்கப்பட்டு, வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டது.” என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே விமல் வீரவன்ச இந்த தகவலை வெளியிட்டார்.

புலி டயஸ்போராக்களின் தேவைக்காகவே அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்த சுரேஷ் சலே ஒருநாள் பாதுகாப்பு சபைக் கூட்டத்தின்போது முக்கிய தகவலொன்றை வெளியிட்டிருந்தார்.

அதாவது, அடுத்த வாரம் விசேட இலக்கு இருப்பதாகவும், விமானப்படையின் தாக்குதல் விமானமொன்றை 24 மணிநேரமும் தயார் நிலையில் வைக்குமாறும்“ அவர் கூறி இருந்தார்.

இதற்கமையவே தமிழ்ச்செல்வன் இருந்த இடம்மீது துல்லியமாக தாக்குதல் நடத்தப்பட்டதாக விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்ச் செல்வனுடன் இருக்கும் நபர் ஒருவர் ஊடாகவே அந்த உளவு தகவல் பெறப்பட்டிருந்தது.

எனவே, தமிழ்ச் செல்வனுடன் இருந்தவருடன் சுரேஷ் சலேவுக்கு தொடர்பு இருந்தது என்பதற்காக அவரை புலியென கூற முடியுமா? என விமல் வீரவன்ச கேள்வியெழுப்பியுள்ளார்.

புலனாய்வு பிரிவு என்றால் அனைத்து தரப்புடனும் தொடர்பு இருக்கும்.” எனவும் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.

The post சுரேஷ் சலேவால் பெறப்பட்ட துல்லியமான உளவுத் தகவலின் அடிப்படையிலேயே தமிழ்ச் செல்வன் இலக்கு வைத்து கொல்லப்பட்டார் appeared first on Oruvan.com.

அமெரிக்காவில் பசிலுக்கு பாரிய சொத்துகள் – சிஐடியில் வாக்குமூலம் அளித்த விமல்
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு அமெரிக்காவில் பாரிய அளவிலான சொத்துகள் உள்ளன. அவை தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணைகளை ஆரம்பிக்குமாக இருந்தால் மேலும் தகவல்களை வழங்க தயாராக இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பிகரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்ச தெரிவித்தார்.

அமெரிக்காவில் உள்ள பசில் ராஜபகச்வின் சொத்துக்கள் குறித்து கடந்த காலத்தில் விமல் வீரவங்ச வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு இன்று வெள்ளிக்கிழமை அவரிடம் வாக்குமூலமொன்றை பெற்றிருந்தது.

வாக்குமூலத்தை அளித்தப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,

பசில் ராஜபக்சவுக்கு அமெரிக்காவில் இருக்கும் சொத்துகள் தொடர்பில் நான் வெளியிட்டிருந்த கருத்துகள் குறித்து வாக்குமூலமொன்றை பெற வேண்டுமென குற்றப்புலனாய் பிரிவு அழைத்திருந்தது. என்னிட்டம் உள்ள தகவல்களை அவர்களிடம் வழங்கியுள்ளேன்.

அமெரிக்காவில் எந்தவொரு பணியும் புரியாத பசில் ராஜபக்சவுக்கு எவ்வாறு அங்கு பாரிய அளவிலான சொத்துக்கள் இருக்க முடியும். அவரது மகன் மற்றும் உறவினர்கள் சிலரது பெயரிலும் சொத்துக்கள் உள்ளன.

இந்த அரசாங்கம் உண்மையான ஊழல், மோசடியாளர்கள் குறித்து விசாரணைகள் செய்வதாக எமக்கு தெரியவில்லை. தற்போது பசில் ராஜபக்சவின் சொத்துக்கள் தொடர்பில் தகவல்களை பெற்றுள்ளனர்.

அவர் இரட்டை குடியுரிமை கொண்டவர் என்பதால் விசாரணைகளை துரிதமாக ஆரம்பிக்க முடியும். இந்த விடயத்தில் அரசாங்கம் உண்மையான விசாரணைகளை ஆரம்பித்தால் எம்மிடம் மேலதிக தகவல்கள் இருந்தால் அதனை வழங்க முடியும்.” என்றார்.

The post அமெரிக்காவில் பசிலுக்கு பாரிய சொத்துகள் – சிஐடியில் வாக்குமூலம் அளித்த விமல் appeared first on Oruvan.com.