வித்தியா படுகொலை Archives - Oruvan.com

புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை குற்றவாளி பெண் வைத்தியரிடம் அத்துமீறல்
யாழ்ப்பாணம் – புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் ஒருவர் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி பல்லேகலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த நபர் சிறையில் பணியில் இருந்த பெண் வைத்தியர் ஒருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கைதி, வைத்தியரை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பெண் வைத்தியர் கூச்சலிடவே சிறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரைக் காப்பாற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.

சம்பவம் தொடர்பில் பல்லேகலை பொலிஸார் விசாாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

2015ஆம் ஆண்டு மே 13ஆம் திகதி புங்குடுத்தீவு மாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து 2017ஆம் ஆண்டு செப்டம்பரில் ஏழு நபர்களுக்கு யாழ்ப்பாண உயர் நீதிமன்ற அமர்வு மரண தண்டனை விதித்தது.

வித்திய படுகொலை சம்பவத்திற்கு நீதி கோரி, நாடு தழுவிய போராட்டங்களும் இடம்பெற்றிருந்தன.

2015 மே 15 அன்று நடைபெற்ற வித்யாவின் இறுதிச் சடங்கில், உள்ளூர் அரசியல்வாதிகள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை குற்றவாளி பெண் வைத்தியரிடம் அத்துமீறல் appeared first on Oruvan.com.

காட்டு யானைகள் அட்டகாசம்; பல வீடுகள் சேதம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிஓடை மற்றும் பாலாமடு பகுதிகளில் காட்டு யானைகள் நேற்று இரவு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

மாவடிஓடைப் பகுதியில் 5 வீடுகளையும் ஒரு கடையையும் உடைத்து நாசம் செய்ததுடன், பாலாமடு பகுதியில் விவசாயிகளின் தங்குமிடமாக இருந்த 3 கொட்டகைகளையும் யானைகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளன. மேலும், பல பயன்தரும் மரங்களும் அழிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தொடர்ச்சியான காட்டு யானைகளின் தாக்குதலால் உயிர் அச்சத்தில் வாழும் மாவடிஓடை மக்கள், தமது பகுதியில் யானைகளின் பிரச்சினையை கட்டுப்படுத்த நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

காட்டு யானை பிரச்சினை குறித்து மட்டக்களப்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

யானைகளை துரத்துவதற்கான முயற்சிகளில் கூட அதிகாரிகள் பின்வாங்குவதாகவும், மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் யானைகளின் தாக்குதல் தொடர்பில் குறித்த பிரதேசத்தின் கிராம சேவையாளருக்கு அறிவித்த போதிலும் தாக்குதல் நடந்து இரு தினங்களின் பின்னரே குறித்த பகுதிக்கு அவர் வருகை தருவதாகவும் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கிராமங்களில் நடைபெறும் இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் நடவடிக்கையெடுக்க வேண்டிய கிராம சேவையாளரே இவ்வாறான நிலையிலேயே இருந்து வருவதாகவும் கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மாவடிஓடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் உயிர் மற்றும் சொத்து பாதுகாப்புக்காக உடனடி தீர்வை கோருகின்றனர்.

The post காட்டு யானைகள் அட்டகாசம்; பல வீடுகள் சேதம் appeared first on Oruvan.com.