விஜயின் கரூர் கூட்டம் Archives - Oruvan.com

கரூரில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் சந்திக்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை
கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தமிழக் வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேரில் சந்திக்க வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் நேற்று இடம்பெற்ற பொது மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கரூரில் பாதுகாப்பு கொடுக்க தவறியதால் 41 பேர் உயிர் இழந்துள்ளனர். மக்களை சந்திக்க தாமதமாக வந்ததே விஜய் செய்த மிகப் பெரிய தவறு. விஜய் கடமை உணர்வை தவறிவிட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கரூர் சம்பவத்தில் இரு பக்கமும் தவறுகள் உள்ளன. பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அரசும் தவறி விட்டது. தொண்டர்களை பத்திரமாக பாதுகாக்க வேண்டிய விஜய்யும் தவறு செய்து விட்டார். இதில் மாற்று கருத்து இல்லை.

விஜயகாந்த்தை அண்ணன் என்று கூறும் விஜய், அண்ணன் என்ன செய்தார் என்பதை பார்த்து செயல்பட வேண்டும் எனவும் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் பிரசார கூட்டம் நடந்த இடத்தில் மின் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதே நேரத்தில் தொண்டர்களுக்கு தண்ணீர், உணவு கொடுக்க வேண்டும்.

தலைவர் என்பவர் எப்போதும் வாகனத்தில் உள்ளேயே அமர்ந்து இருக்க கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் நேரில் சந்திக்க வேண்டும். நிதியுதவியையும் நேரில் கொடுக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் மேலும் தெரிவித்துள்ளார்.

The post கரூரில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் சந்திக்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை appeared first on Oruvan.com.

விஜய் பாஜகவின் கருவி – தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு
கரூர் பெருந்துயரத்திற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வருந்துவதாக தெரியவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாகவிஜய் நேற்று காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், அனுமதிக்கப்பட்ட இடத்தில்தான் பேசியதாகவம், நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும், பழிவாங்க நினைத்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என விஜய் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து தொல்.திருமாவளவன் பேசுகையில்,

10 மணி நேரமாக அவரை காணும் பேராவலோடு பொது மக்ள் காத்திருந்தவர்கள்.

அடியெடுத்து வைக்க கூட இடமில்லாமல் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி, தற்காத்துக்கொள்ள முயன்ற நிலையில்தான் இந்த பேரவலம் நடந்தேறியது என்ற உண்மையை அவர் உணர்ந்ததாக தெரியவில்லை.

கரூரில் 41 பேர் பலியானது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் பொறுப்பில்லாத போக்கால் ஏற்பட்ட பேரிடராகும்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது பழிசுமத்தி விஜய் பேசியிருப்பது அவரது நேர்மையை கேள்விக்குள்ளாக்கி உள்ளது.

உயிர்பலிகளை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதையே விஜய் நோக்கமாக கொண்டிருக்கிறார். சங்பரிவார்களின் சதிவலையில் சிக்கி உழல்வதையே விஜயின் காணொளி உறுதிபடுத்துகிறது.

தி.மு.க.வுக்கு எதிரான வெறுப்பு அரசியலை செய்பவர்களின் கோரப்பிடியில் விஜய் சிக்கியுள்ளார். தமிழ்நாட்டை குறி வைத்து வெளிப்படையாகவே தங்களது சித்து விளையாட்டை பாஜக தொடங்கி விட்டது.

இந்நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பாஜகவின் கருவி தான் என்பது உறுதியாவதாக தொல்.திருமாவளவன் மேலும் தெரிவித்துள்ளார்.

The post விஜய் பாஜகவின் கருவி – தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு appeared first on Oruvan.com.

புஸ்சி ஆனந்த்தை கைது செய்ய தனிப்படைகள் அமைப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோரை கைது தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருவரையும் கைது செய்ய தீவிரம் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் பொலிஸார் த.வெ.க. கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் (வயது 49), பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல்குமார் மற்றும் சிலர் என குறிப்பிட்டு ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள கிராமத்தில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த மதியழகனை நேற்றுமுன்தினம் தனிப்படை பொலிஸார் கைது செய்தனர்.

மேலும், மதியழகனுக்கு கடந்த இரண்டு நாட்களாக அடைக்கலம் கொடுத்ததாக தவெக கரூர் நகர பொறுப்பாளர் மாசி என்ற பவுன்ராஜையும் (34) கைது செய்தனர்.

இந்த நிலையில், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோரை கைது தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருவரையும் கைது செய்ய தீவிரம் காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post புஸ்சி ஆனந்த்தை கைது செய்ய தனிப்படைகள் அமைப்பு appeared first on Oruvan.com.

கரூர் சம்பவம் – விஜய் கைது செய்யபடுவாரா?
தமிழக் வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கைது செய்யப்படலாம் என தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கரூரில் நடந்த விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த நிலையில், விஜய் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து ஆண்டு தமிழகத்தின் சட்டசபை தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரங்களையும், மக்கள் சந்திப்புகளையும் முன்னெடுத்துள்ளன.

குறிப்பாக ஆளும் கட்சியான தி.மு.க, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க மற்றும் பெறும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் விஜய்யின் த.வெ.க ஆகிய கட்சிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக் வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று கரூரில் மக்கள் சந்திப்பு நடத்தியிருந்தார். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.

இந்நிலையில், அதிக மக்கள் தொகை காரணமாக பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கில் 50க்கும் மேற்பட்டவர்கள் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 10 சிறுவர்கள் உள்ளிட்ட 39 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் இதற்கு முன்னர் மத நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட நெரிசலில் தான் உயிரிழப்பு சம்பவங்கள் அதிகளவில் நடந்து இருக்கிறது. ஆனால் ஒரு அரசியல் கட்சி கூட்டத்தில் இவ்வளவு பேர் பலியாகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.

ஏற்கனவே ஆந்திராவில் கடந்த 2022ஆம் ஆண்டு நெல்லூர் கண்டுகூரில் தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி எட்டுப் பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், கரூரில் நடந்த உயிரிழப்பு சம்பவம் தொடர்பில் விஜய் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்டத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் கட்சி தலைவரே பொறுப்பு என உயர் நீதிமன்றம் ஷகூறியிருந்தது.

இந்தநிலையில் தான் கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 39 பேர் பலியான சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதனால் விஜய் உள்பட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, விஜய் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

The post கரூர் சம்பவம் – விஜய் கைது செய்யபடுவாரா? appeared first on Oruvan.com.