வானிலை Archives - Oruvan.com

இன்றைய வானிலை அறிவிப்பு
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்கபல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது மிதமான அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சாதாரண அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

The post இன்றைய வானிலை அறிவிப்பு appeared first on Oruvan.com.

அடுத்த 36 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 36 மணி நேரத்தில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

The post அடுத்த 36 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பு appeared first on Oruvan.com.

இன்று பலத்த காற்று வீசக் கூடும் – பொது மக்களுக்கு அவரச எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் இன்று (15) பலத்த காற்று வீசும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய மலைநாடு மேற்கு சரிவுகளிலும், திருகோணமலை மாவட்டம் உட்பட வடக்கு, வடமத்திய, மேற்கு, சபரகமுவ, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும் சில நேரங்களில் மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

காலை 5:30 மணிக்கு (MET) வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் வானிலை எச்சரிக்கைகள் குறித்து புதுப்பித்த நிலையில் இருக்கவும், தேவைப்பட்டால் உதவிக்கு 117 அவசர தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

The post இன்று பலத்த காற்று வீசக்  கூடும் – பொது மக்களுக்கு அவரச எச்சரிக்கை appeared first on Oruvan.com.

இன்றைய வானிலை எவ்வாறு இருக்கும்?
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மி.மீ.க்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும்.

வடமத்திய மாகாணத்திலும், மன்னார் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

The post இன்றைய வானிலை எவ்வாறு இருக்கும்? appeared first on Oruvan.com.

இலங்கை முழுவதும் மோசமான வானிலை – 1,700 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
இலங்கையை பாதித்துள்ள மோசமான வானிலையால் 485 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தமையால் நேற்றுமுதல் நாடு முழுவதும் சீரற்ற வானிலை நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று மாலை (மே 29) முதல் பல பகுதிகளில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசி வருகிறது.

கடுமையான வானிலை காரணமாக ஒன்பது மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மூன்று வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன. மேலும் 365 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளாக உள்ளன. பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையால பல முக்கிய பாதைகளில் வாகனப் போக்குவரத்திற்கு குறிப்பிடத்தக்க இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. அத்துடன், பல பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

The post இலங்கை முழுவதும் மோசமான வானிலை – 1,700 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு appeared first on Oruvan.com.

இன்று சில பகுதிகளில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்யும்
இன்று பல மாகாணங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

தெற்கு, சப்ரகமுவ, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதே நேரத்தில், கொழும்பிலிருந்து காலி வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரையோரப் பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மாலை அல்லது இரவு நேரங்களில் நாட்டைச் சுற்றியுள்ள பிற கடல் பகுதிகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

காற்று மேற்கு அல்லது தென்மேற்கு திசையில் இருந்து வீசக்கூடும், காற்றின் வேகம் மணிக்கு 25-35 கி.மீ. வரை இருக்கும்.

காங்கேசன்துறையிலிருந்து புத்தளம், காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரையோரங்களில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 45-50 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.

காங்கேசன்துறையிலிருந்து புத்தளம், காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரையோரக் கடல் பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.

நாட்டைச் சுற்றியுள்ள மற்ற கடல் பகுதிகள் லேசானது முதல் மிதமானது வரை இருக்கும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசும் மற்றும் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இன்று சில பகுதிகளில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்யும் appeared first on Oruvan.com.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு
ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு , மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல இடங்களிலும் மழை பெய்யும் என எதிர்வு கூறப்படுகிறது.

நாட்டின் பல பகுதிகளிலும் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஆங்காங்கே பெய்யக்கூடும். மேல் மாகாணத்தில் காலை வேளையில் அதிக மழை எதிர்பார்க்கப்படுகிறது.

ஊவா, மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் 75 மில்லி மீட்டருக்கு அதிகமான மழை பெய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது.

மத்திய மலை நாட்டின் கிழக்கு சரிவுகளில் மற்றும் வடக்கு, வட மத்திய மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் 30 தொடக்கம் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை மேற்கு, சபரகமுவ மற்றும் மத்திய மாகாணம் காலி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் காலை வேளையில் பணி மூட்டம் அதிகம் காணப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்புப் பெற்றுக் கொள்வதற்காக அவசியமான முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக் கொள்கிறது.

மழை நிலைமை:

மட்டக்களப்பிலிருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் காலி ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்று :

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை:

கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

The post இன்றைய வானிலை முன்னறிவிப்பு appeared first on Oruvan.com.

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை
ஐந்து மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை, கண்டி, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் அதிக மழைக் காரணமாக மொத்தம் 13 நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நீர்த்தேக்கங்களில் மகாகந்தராவ, மகாவிலச்சிய, நுவரவெவ, ராஜாங்கன, உன்னிச்சி, முருத்தவெல, வீரவில, எல்லேவெல, வேமெடில்ல, மெதியாவ, உஸ்கல, எதிமலே மற்றும் வான் எல ஆகியவை அடங்கும்.

இந்த அனைத்து நீர் தேக்கங்களிலும் நீர் கசிவு அளவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த நீர்த்தேக்கங்களின் கீழ் பகுதிகளில் வசிப்பவர்கள் திடீர் வெள்ளப்பெருக்கு குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

The post நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை appeared first on Oruvan.com.