வாகனங்களில் விலை Archives - Oruvan.com

வாகனங்களின் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டது ஏன்? அரசாங்கம் விளக்கம்
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பணவீக்கத்துடன் தொடர்புடைய விலைகளை பொருத்த வேண்டிய சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் காரணமாக இறக்குமதிக்கு முன்பே வாகன விலைகள் உயர்ந்துள்ளதாக பிரதி நிதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ,

”குத்தகை நிறுவனங்களுக்கு சாதகமாக வாகன விலைகள் அதிகரிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பதிவுகள் தவறானவை. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முழு பொருளாதாரத்தின் செயல்பாட்டையும் கருத்தில் கொண்டு முடிவுகளை எடுக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களுக்கு சாதகமாக அல்ல.

ஜனவரி மாதத்தில் புகையிலை, மதுபானம், வாகனங்கள் மற்றும் மின்னணு உபகரணங்கள் போன்ற பொருட்களின் பணவீக்கம் தொடர்பாக, ஆண்டின் பணவீக்கத்தை பொறுத்த வேண்டியதை கருத்தில் கொண்டு விலைகளை ஒப்பிட வேண்டும்.

2024 இல் சராசரி பணவீக்கம் 1.9 சதவீதமாக இருந்தது. 2024 இல் 1.9 சதவீதமாக இருந்த பணவீக்கத்துடன் 4 சதவீதத்தைச் சேர்த்த பிறகு புகையிலை, மதுபானம், வாகனங்கள் மற்றும் மின்னணு உபகரணங்களின் விலைகளை அதிகரிக்க வேண்டும். அவ்வாறுதான் இந்த விலை அதிகரிப்பு இடம்பெற்றுள்ளதே தவிர எவரது தேவைக்கும் ஏற்ப இடம்பெறவில்லை.

வாகன இறக்குமதியின் போது அந்நிய செலாவணியின் கையிருப்பு குறித்து அவதானம் செலுத்தப்படும். தற்போது 6 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான அந்நிய செலாவணி கையிருப்பில் உள்ளது. இதற்கு பாதிப்பு ஏற்படாத வண்ணமும் வாகன இறக்குமதிக்கு அனுமதியளிக்கப்படும்.

முழுமையான பொருளாதார இயக்கத்துக்கு வாகனங்களின் இறக்குமதி அவசியமாக உள்ளது. அதன் பிரகாரம் கட்டம் கட்டமாக அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் பொது போக்குவரத்துக்கு தேவையான வாகனங்கள் இறக்குமதி செய்ய அனுமதியளிக்கப்பட்டது. பின்னர் பொருளாதார தேவைகளுக்கான வாகனங்களும் தற்போது தனியார் வாகன இறக்குமதிக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆலோசனைகளின் பிரகாரம்தான் இந்த அனைத்துச் செயல்பாடுகளும் இடம்பெறுகின்றன.” என்றும் அவர் கூறினார்.

The post வாகனங்களின் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டது ஏன்? அரசாங்கம் விளக்கம் appeared first on Oruvan.com.