வவுனியா Archives - Oruvan.com

வவுனியாவில் போக்குவரத்து பொலிஸாரை மோதிவிட்டுத் தப்பிய லொறி சாரதி
யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் வவுனியா, களுக்குன்னமடுவ பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளை மோதிவிட்டுத் தப்பிச் சென்ற லொறி சாரதி ஒருவர் இன்று (24) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டளையை மீறி பயணித்த சிறிய லொறி ஒன்றை பொலிஸ் அதிகாரிகள் இருவரும் பின்தொடர்ந்து சென்றபோதே, லொறி சாரதி பொலிஸ் அதிகாரிகளை விபத்துக்குள்ளாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளை விபத்துக்குள்ளாக்கிய போது பொலிஸ் அதிகாரிகள் இருவரும் தூக்கி வீசப்பட்டு வீதியின் ஒரு ஓரத்தில் விழுந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிள் லொறியில் சிக்கி இழுத்துச் செல்லப்படும் காட்சி பின்னால் வந்த வாகனத்தில் இருந்த ஒருவரின் கையடக்கத் தொலைபேசியில் பதிவாகியிருந்தது.

லொறியில் மோட்டார் சைக்கிள் சிக்கிக் கொண்டமையினால், லொறியை வீதியில் கைவிட்டு சாரதி காட்டுப் பகுதிக்குள் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பூஓய பாலத்திற்கு அருகிலுள்ள இராணுவ முகாம் திசையில் சந்தேகநபர் தப்பிச் சென்றுகொண்டிருந்த போது, இராணுவத்தினர் அவரைக் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் லொறியையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஈரட்டைபெரியகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

The post வவுனியாவில் போக்குவரத்து பொலிஸாரை மோதிவிட்டுத் தப்பிய லொறி சாரதி appeared first on Oruvan.com.

வவுனியாவில் நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு
வவுனியா, மயிலங்குளம் குளத்தில் நீராட சென்ற மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக மாமடுப் பொலிஸார் இன்று (19.01) தெரிவித்தனர்.

வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 4 மாணவர்கள் மயிலங்குளம் குளத்திற்கு நேற்று (18.01) மாலை குளிக்கச் சென்றுள்ளனர்.

இதன்போது குறித்த மாணவர்கள் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது ஒரு மாணவன் நீரில் முழ்கி மரணமடைந்துள்ளார்.

மரணமடைந்தவர் வவுனியா, கோவில் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய சிவலிங்கம் டனுசியன் என்ற உயர்தர வகுப்பு மாணவராவார்.

சம்பவம் தொடர்பில் மாமடுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

The post வவுனியாவில் நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

வவுனியாவில் தீப்பரவல்
வவுனியா – கொரவப்பத்தான வீதியில் அமைந்திருந்த சிங்கர் இலத்திரனியல் காட்சியறை இன்று காலை 9. 45 மணியளவில் தீப்பரவலுக்கு உள்ளாகி முழுமையாக எரிந்தது.

காட்சியறையின் மேல் தளத்தில் ஏற்பட்ட மின்னொழுக்கினால் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் தீயே இந்தக் காட்சியறை முழுமையாக எரிந்தமைக்கு காரணம் என கூறப்படுகின்றது.

தீப்பரவல் ஏற்பட்டு சில நிமிடங்களில் மாநகர சபை தீயணைப்பு பிரிவு வருகை தந்து தீயை அணைப்பதற்கு முயற்சித்த போதிலும் அது கட்டுக்கடங்காமல் தீப்பரவல் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் அங்கு குழுமிய பொதுமக்களும் இணைந்து தீயை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சுமார் ஒன்றரை மணி நேரமாக முயற்சித்தனர்.

இந் நிலையில் தீயை கட்டுப்படுத்துவதற்கு விமானப்படை, இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் உதவியும் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post வவுனியாவில் தீப்பரவல் appeared first on Oruvan.com.

வவுனியாவில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் விபத்து: இளைஞன் மரணம்
வவுனியா- இராசேந்திரம்குளம் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டர் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

இன்று (06.10) பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, இராசேந்திரகுளம் பகுதியில இருந்து நெளுக்குளம் நோக்கி மோட்டார் சைக்கிள் ஒன்றில் மூன்று இளைஞர்கள் பயணித்துள்ளனர்.

குறித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் இராசேந்திரன்குளம் பாடசாலைக்கு அருகில் உள்ள பேருந்து தரிப்பு நிலையத்துடன் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் சாம்பல்தோட்டம் பகுதியைச் சேர்ந்த கோபால்ராஜ் நிலக்சன் (வயது 18) என்பவரே மரணமடைந்தவராவார்.

சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

The post வவுனியாவில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் விபத்து: இளைஞன் மரணம் appeared first on Oruvan.com.

வவுனியாவில் தோல்வியடைந்த ஹர்த்தால் – பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறப்பு
வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் இன்று ஹர்த்தால் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் வவுனியாவில் பொதுமக்களின் செயற்பாடுகள் இயல்புநிலையில் உள்ளதுடன் சில செயற்பாடுகள் மட்டுமே ஸ்தம்பிதமடைந்திருந்ததை அவதானிக்க முடிகின்றது.

வடக்கு கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரச்சன்னம் மற்றும் முல்லைத்தீவு முத்தையன்கட்டில் இடம்பெற்ற சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் திங்கட்கிழமை காலை ஹர்த்தால் ஒன்றை மேற்கொள்வதற்கு இலங்கை தமிழரசுகட்சியின் செயலாளர் எம்.எ.சுமந்திரனால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றையதினம் காலை முதல் வவுனியாவில் பொதுமக்கள் இயல்பு வாழ்கையில் ஈடுபட்டுள்ளமையினை அவதானிக்க முடிகின்றது.

நகரத்தில் அநேக வர்த்தகநிலையங்கள் திறக்கப்பட்டிருந்ததுடன், சில பூட்டப்பட்டும் இருந்தன.

பாடசாலைகளில் கல்விசெயற்பாடுகள் வழமைபோல இடம்பெற்றுவருவதுடன் மாணவர்களின் வரவு குறைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. வங்கிகள் ஏனைய நிறுவனங்களின் செயற்பாடுகள் வழமைபோல உள்ளது.

இதேவேளை ஹர்த்தால் போராட்டத்திற்கு வவுனியா உள்ளூர் விளைபொருள் உற்பத்தியாளர் சங்கம் தனது முழுமையான ஆதரவினை வழங்கியுள்ளதுடன், அவர்களது மொத்த வியாபார சந்தைக்கடைத்தொகுதி முழுமையாக மூடப்பட்டிருந்தது.

இதேவேளை பழையபேருந்து நிலையம் மற்றும் பசார் வீதியில் உள்ள இஸ்லாமிய வியாபாரநிலையங்களில் குறிபிட்ட அளவிலான வர்த்தக நிலையங்கள் மட்டும் திறந்திருந்த மையை அவதானிக்க கூடியதாக இருந்தது.

இதேவேளை புறநகரப்பகுதிகளான குருமன்காடு, செட்டிகுளம், நெடுங்கேணி, கனகராயன்குளம், புளியங்குளம் பகுதிகளில் அனேகமான வர்த்தகநிலையங்கள் திறந்திருந்ததுடன், சிலவர்த்தக நிலையங்கள் ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து பூட்டி இருந்தமையினை அவதானிக்க முடிந்தது.

போக்குவரத்து சேவைகள் வழமைபோல் இயங்கியிருந்தது.

The post வவுனியாவில் தோல்வியடைந்த ஹர்த்தால் – பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறப்பு appeared first on Oruvan.com.

வவுனியா ஓமந்தையில் கோரவிபத்து! பெண் உட்பட இருவர் பலி பலரது நிலை கவலைக்கிடம்
வவுனியா ஓமந்தை ஏ9 வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்தமையுடன் 13பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த இலகுரக வாகனம் வவுனியா ஓமந்தை மாணிக்கர் வளவுப்பகுதியில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டுவிபத்திற்குள்ளாகியது.

விபத்தின் போது குறித்த வாகனத்தில் பெண்கள் சிறுவர்கள் உட்பட 15ற்கும் மேற்ப்பட்டோர் பயணித்துள்ளனர். விபத்தினால் வாகனத்தில் இருந்த அனைவரும் வீதியில் தூக்கிவீசப்பட்ட நிலையில் படுகாயமடைந்திருந்தனர்.

மேலும் இலகுரக வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகிய பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கனரக வாகனம் குறித்த பட்டா ரக வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது.

இதன்போது வீதியால் பயணித்த பொதுமக்களின் உதவியுடன் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண் உட்பட இருவர் உயிரிழந்தமையுடன் 13பேர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெண்கள் , சிறுவர்கள் உள்ளடங்குகின்றனர் உயிரிழந்தவர்கள் முல்லைத்தீவு விசுவமடு பகுதியை சேர்ந்த யாழினி வயது33, சுயன் வயது 30 என்று தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த அனைவரும் ஒரே குடும்பங்களை சேர்ந்த உறவினர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் கண்டியில் இடம்பெற்ற மரணவீடு ஒன்றிற்கு சென்று விட்டு மீண்டும் விசுவமடு நோக்கிப்பயணித்துக்கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதேவேளை படுகாயமடைந்த சிறுவன் ஒருவன் உட்பட மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்து தொடர்பாக வவுனியா ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

The post வவுனியா ஓமந்தையில் கோரவிபத்து! பெண் உட்பட இருவர் பலி பலரது நிலை கவலைக்கிடம் appeared first on Oruvan.com.

வவுனியாவில் தனியார் கல்வி நிலைய கிணறு ஒன்றில் இருந்து உயர்தர மாணவி சடலமாக மீட்பு
வவுனியாவில் தனியார் கல்வி நிலைய கிணறு ஒன்றில் இருந்து உயர்தர மாணவி ஒருவர் நேற்று திங்கட்கிழமை (11.08) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் உயர்தர வர்த்தகப் பிரிவு மாணவர்களுக்கு காலையில் இருந்து மதியம் 12 மணிவரை வகுப்பு நடைபெற்றுள்ளது.

குறித்த கல்வி நிலையத்தில் உயர்தர வர்த்தகப் பிரிவு 2025 இல் கல்வி கற்ற குறித்த மாணவி நீண்ட நேரமாகியும் வீடு வந்து சேராமையால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குறித்த மாணவியை தேடியுள்ளனர்.

இதன்போது, குறித்த மாணவியின் புத்தகப்பை, துவிச்சக்கர வண்டி என்பன மாணவி கல்வி பயின்ற தனியார் கல்வி நிலையத்தில் காணப்பட்டதுடன், கல்வி நிலைய வளாகத்தில் இருந்த கிணற்றின் அருகே மாணவியின் செருப்பும் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பெற்றோர் மற்றும் கல்வி நிலைய நிர்வாகத்தினர் வவுனியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார், மாநகர சபையினர், கிராம அலுவர், கிராம மக்கள், மாணவர்கள் எனப் பலரும் இணைந்து 40 அடி ஆழமான கிணற்றில் தேடுதல் மேற்கொண்டு குறித்த மாணவியை சடலமாக மாலை மீட்டு எடுத்தனர்.

குறித்த சம்பவத்தில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி பயிலும் வவுனியா, கோமரசன்குளம் பகுதியைச் சேர்ந்த மாணவியே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

சடலமாக மீட்கப்பட்ட மாணவியின் உடலம் வவுனியா வைத்தியாசலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்ர்கள்.

The post வவுனியாவில் தனியார் கல்வி நிலைய கிணறு ஒன்றில் இருந்து உயர்தர மாணவி சடலமாக மீட்பு appeared first on Oruvan.com.

வவுனியாவில் மனைவி, மாமியாரை கத்தியால் குத்திவிட்டு கிணற்றில் குதித்த கணவன் சடலமாக மீட்பு!
வவுனியா சமயபுரம் பகுதியில் தனது மனைவி மற்றும் அப்பெண்ணின் தாயாரையும் கத்தியால் குத்தி காயப்படுத்திய குடும்பஸ்தர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் சமயபுரம் பகுதியில் நேற்று மாலை 7.30மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்…

வவுனியா சமயபுரம் பகுதியில் உள்ளவீட்டிற்கு நேற்று இரவு வருகைதந்த உயிரிழந்தநபர் வீட்டில் இருந்த பெண்ணையும் அவரது தாயாரையும் கத்தியால் குத்திகாயப்படுத்தியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து வீட்டினை தீயிட்டு கொழுத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த இரு பெண்களும் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் குறித்த குற்றச்செயலை புரிந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் குடும்பஸ்தர் அந்த வீட்டின் கிணற்றில் வீழ்ந்தநிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் வீழ்ந்தாரா அல்லது வேறு எதும் குற்றச்சம்பவங்கள் பதிவாகியுள்ளதா என்பது தொடர்பாக பொலிஸாரால் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை உயிரிழந்த குடும்பஸ்தரும், காயமடைந்த பெண்ணும் வெவ்வேறு பகுதிகளை சேந்தவர்கள் என கிராமமக்கள் தெரிவித்ததுடன் அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக கடந்த ஒரு வருடகாலமாக சமயபுரம் பகுதியில் வசித்துவருவதாக தெரிவிக்கின்றனர்.

அத்துடன் அவர்கள் இருவரும் ஏற்கனவே வெவ்வேறு திருமணங்களை முடித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.

சம்பவத்தில் வசந்தி வயது 30, அவரது தாயாரான இந்திரா வயது 69, என்ற இரு பெண்கள் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கிருஸ்ணகுமார் வயது 45 என்ற நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

The post வவுனியாவில் மனைவி, மாமியாரை கத்தியால் குத்திவிட்டு கிணற்றில் குதித்த கணவன் சடலமாக மீட்பு! appeared first on Oruvan.com.

வவுனியாவில் அதிபரை இடமாற்றம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்!
வவுனியா – செட்டிக்குளம் பிரதேசத்திற்குட்பட்ட கனேசபுரம் சண்முகானந்தா வித்தியாலயம் பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டும், உயர்தர பாடங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

பாடசாலையில் நன்றாக கற்பிக்கும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்யக்கூடாது என்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், விஞ்ஞான பாடம் மற்றும் தமிழ் பாடங்களுக்கான ஆசிரியர்கள் இரண்டு வருடங்களாக நியமிக்கப்பட இல்லை, அத்துடன் பாடசாலைக்கு ஒழுங்கு முறையான தளவாடங்கள் இல்லாமல் உள்ளது.

இதன் காரணமாக மாணவர்கள் மிகக் குறைந்தளவிலான புள்ளிகளையே பெற்று வருகின்றனர். எமது பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இதற்கு பாடசாலையின் ஒழுங்கற்ற அதிபரே காரணம் என பெற்றோர்கள் குற்றஞ்சாட்டினர்.

வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து மாணவர்களின் நலன்கருதி உங்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என எழுத்துமூலம் வாக்குறுதி வழங்கியதையடுத்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் கலைந்து சென்றிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

The post வவுனியாவில் அதிபரை இடமாற்றம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்! appeared first on Oruvan.com.

வவுனியாவில் வீட்டு வளாகத்தில் இருந்து ஒன்பது அடி நீளமான முதலை மீட்பு
வவுனியா கொக்குவெளி பகுதியில் வீட்டுவளவில் இருந்து 09 அடி நீளமான முதலை ஒன்று வனஜிவராசிகள் திணைக்களத்தால் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை குறித்த வீட்டிற்கு பின்புறமுள்ள தோட்டப்பகுதியில் முதலை ஒன்று உள்ளதை வீட்டின் உரிமையாளர் அவதானித்துள்ளார். அதனை துரத்துவதற்கு முற்பட்ட போது குறித்த காணியில் அமைந்துள்ள கைவிடப்பட்ட கிணற்றில் முதலை வீழ்ந்துள்ளது.

இதனையடுத்து அவரால் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இன்றையதினம் குறித்த பகுதிக்கு சென்ற வனஜீவராசிகள் திணைக்களத்தினர் காணியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து குறித்த முதலையினை பிடித்துச்சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post வவுனியாவில் வீட்டு வளாகத்தில் இருந்து ஒன்பது அடி நீளமான முதலை மீட்பு appeared first on Oruvan.com.