வலிகாமம் தெற்கு பிரதேச சபை Archives - Oruvan.com

யாழ். கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபை எதிர்ப்பு
யாழ். கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் அமைப்பதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் நேற்று கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

குறித்த நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டால் அதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைக்கு செல்வதற்கும் தயாராக இருப்பதாக வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் திராகராஜா பிரகாஸ் தெரிவித்துள்ளார்.

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று சபையின் தவிசாளர் திராகராஜா பிரகாஸ் தலைமையில் நடைபெற்றது.

இதன்போதே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தவிசாளர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட கந்தரோடை பகுதியில் அமைந்திருக்கும் தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான இடத்தில் பௌத்த மக்கள் தொடர்ச்சியாக பார்வையிடுவதற்காக வந்து கொண்டிருக்கிறார்கள்.

குறித்த பகுதியில் பிக்கு ஒருவர் காணி ஒன்றை கொள்வனவு செய்து பௌத்த மத்திய நிலையம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதற்காக பொதுமக்களிடமிருந்து நிதி வசூலிப்பு செய்கின்ற ஒரு பெயர் பலகையும் அந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கின்றது.

சட்டவிரோத கட்டடத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதன் முதற்கட்டமாக அவருக்கு அறிவித்தல் வழங்கப்பட்டிருக்கின்றது, குறித்த பகுதியில் கட்டிட நிர்மாணத்தை நிறுத்துமாறு என்னால் பிரசுரம் ஒட்ப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக அங்கு வரும் மக்களுக்கு தமிழ் பௌத்தம் இருந்த வரலாற்றை அத்தோடு இந்துமத, சைவமத வரலாற்றை மறைக்கும் முகமாக அங்கே வருகின்ற கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றது.

இது ஒரு தவறான செயல் இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அந்த இடத்தில் தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான பகுதிகளில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று அகழ்வாராய்ச்சியை செய்து வருகின்றது. அருகில் இருக்கும் காணிகளில் இந்த அகழ்வாராட்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அண்மையில் நான் அறிந்தேதேன் ஆய்வுகளின் போது மூன்று அடி உயரமான ஒரு கிருஷ்ணர் சிலை அங்கே கிடைக்கப் பெற்றிருக்கின்றது. அதனை மூடி மறைத்து குறித்த பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்ளாமல் வேறு இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இந்த பௌத்த மயமாக்கல் என்பது எங்களுடைய பிரதேசத்தில் அதாவது தையிட்டியை போல், மீண்டும் கந்தரோடையிலும் தொல்லியல் திணைக்களத்தின் அனுசரணையுடன் தற்போதைய அரசாங்கமும் பௌத்த மாயமாக்கலை எமது பிரதேசத்தில் அமூல்ப்படுத்த நினைக்கின்றது.

இந்த நடவடிக்கைகளை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் அதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைக்கு செல்வதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம் என தெரிவித்தார்.

The post யாழ். கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபை எதிர்ப்பு appeared first on Oruvan.com.

வலி. தெற்கு பிரதேச சபை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வசம்
வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த திராகராசா பிரகாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (19) பிற்பகல் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.

இதன்போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த திராகராசா பிரகாசும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியை சேர்ந்த கருணைநாதன் அபாராசுதனும் முன்மொழியப்பட்டார்.

பகிரங்க வாக்களிப்பில் நடைபெற்ற தவிசாளர் தெரிவிக்கையில்,

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த திராகராசா பிரகாசுக்கு ஆதரவாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த 13 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஒரு உறுப்பினர் என மொத்தமாக 14 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியை சேர்ந்த கருணைநாதன் அபாராசுதனுக்கு ஆதரவாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியை சேர்ந்த 6 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த 6 உறுப்பினர்கள் என மொத்தமாக 12 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த 5 உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாது நடுநிலையாக செயற்பட்டனர்.

இதன் அடிப்படையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த திராகராசா பிரகாஸ் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அடுத்து இடம்பெற்ற பிரதித் தவிசாளர் தெரிவில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த செல்வரத்தினம் உதயகுமாரன் 14 வாக்குகளைப் பெற்று வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் பிரதித் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

The post வலி. தெற்கு பிரதேச சபை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வசம் appeared first on Oruvan.com.