வடக்கு - கிழக்கு ஹர்த்தால் Archives - Oruvan.com

மன்னாரில் கடையடைப்பு – மக்களின் இயல்பு நிலை வழமைபோல்
வடக்கு – கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டம் இன்றைய தினம் (18) மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மன்னார், பஜார் பகுதியில் சில உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை தவிர பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

வடக்கில் அதிகரித்த இராணுவ பிரசன்னத்திற்கு எதிராக இன்றைய தினம் (18) கடையடைப்பு போராட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், வர்த்தக நிலையங்கள் மாத்திரம் மூடப்பட்டுள்ள போதும் மக்களின் இயல்பு நிலை வழமை போல் காணப்படுகிறது.

வடக்கில் இடம்பெறும் குற்றச்செயல்கள் மற்றும் அதிகரித்த இராணுவ பிரசன்னம் உள்ளிட்டவற்றுக்கு எதிராக இன்றைய தினம்(18) வடக்கு – கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த போராட்டத்திற்கு அரசியல்வாதிகள் முதல் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்திருந்த போதிலும், அதற்கு இணையாக பலரும் எதிர்ப்பும் வெளியிட்டிருந்தனர்.

இதையடுத்து கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ளும் நேரத்தை மட்டுப்படுத்தி தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரன் நேற்றைய தினம் (17) ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

எவ்வாறாயினும் மன்னாரில் பஜார் பகுதியில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார் போக்குவரத்துச் சேவைகள் வழமை போல் இடம் பெற்று வருவதோடு மக்களின் இயல்பு வாழ்க்கை எவ்வித பாதிப்பும் இன்றி வழமை போல் காணப்படுகின்றமை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

The post மன்னாரில் கடையடைப்பு – மக்களின் இயல்பு நிலை வழமைபோல் appeared first on Oruvan.com.

வடக்கு, கிழக்கில் ஹர்த்தால்!!! வழமைப் போல் இயங்கும் யாழ்ப்பாணம்
வடக்கு – கிழக்கில் முழு கதவடைப்பு போராட்டத்திற்கு இலங்கை தமிழரசு கட்சி அழைப்பு விடுத்திருந்த நிலையில், யாழ்ப்பாணம் வழமைப் போல் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் முல்லைத்தீவில் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை மையப்படுத்தி இந்த முழு கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

முல்லைத்தீவில் உள்ள இராணுவ முகாமுக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் அப்பகுதியில் உள்ள ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல் காரணமாகவே குறித்த இளைஞர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், சம்பவம் குறித்து இரண்டு சிறப்பு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

அத்துடன், சம்பவம் தொடர்பில் மூன்று இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த இளைஞரின் மரணத்திற்கு நீதிகோரி வடக்கு – கிழக்கில் முழு கதவடைப்பு போராட்டத்திற்கு இலங்கை தமிழரசு கட்சி அழைப்பு விடுத்திருந்தது.

முன்னதாக கடந்த 15ஆம் திகதி இந்த கதவடைப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், பல்வேறு காரணங்களுக்காக இன்று திங்கட்கிழமை (18ஆம் திகதி) பிற்போடப்பட்டிருந்தது.

இந்த கதவடைப்பு போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினர்கள் ஆதரவு வழங்கியிருந்த நிலையில், அதற்கு சமமாக எதிர்ப்புகளும் வெளியிடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், வடக்கு மற்றும் கிழக்கில் இன்று முன்னெடுக்கவுள்ள கதவடைப்பு போராட்டம் தொடர்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து பொய்யான பிரச்சாரங்களால் மக்கள் ஏமாறுவதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

மேலும், இந்த சம்பவத்தின் உண்மைகளைத் திரித்து, தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம், சில அரசியல் குழுக்கள் வடக்கு, கிழக்கு மக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

எனவே, இதுபோன்ற பிரச்சாரங்களுக்கு பொது மக்கள் ஏமாறக்கூடாது என்றும், உண்மைகளைப் புரிந்துகொண்டு அமைதியாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post வடக்கு, கிழக்கில் ஹர்த்தால்!!! வழமைப் போல் இயங்கும் யாழ்ப்பாணம் appeared first on Oruvan.com.

வடக்கு – கிழக்கு ஹர்த்தால் குறித்து அரசின் நிலைப்பாடு என்ன?
அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து மேற்கொள்ளப்படும் திரிபுவாதங்கள் மற்றும் பொய்ப் பிரச்சாரங்களால் ஏமாற வேண்டாம் என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ வடக்கு மற்றும் கிழக்கு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு சிவநகரில் உள்ள 12வது சிங்க படைப்பிரிவின் முகாமுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை முன்னிறுத்தி நாளை (18) ஹர்த்தால் இடம்பெறவுள்ளது.

இந்த விவகாரம் குறித்து மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,

“இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே மூன்று இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தின் உண்மைகளை திரிபுபடுத்தி, தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் வடக்கு மற்றும் கிழக்கு மக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்த சில அரசியல் குழுக்கள் முயற்சிப்பதாகத் தெரிகிறது.

எனவே, நாட்டு மக்கள் உண்மைகளைப் புரிந்துகொண்டு அமைதியாக நடந்து கொள்ள வேண்டும்.” என்றார்.

The post வடக்கு – கிழக்கு ஹர்த்தால் குறித்து அரசின் நிலைப்பாடு என்ன? appeared first on Oruvan.com.