லிபரல் கட்சி Archives - Oruvan.com

கனடாவில் நீடிக்கும் அரசியல் கொந்தளிப்பு – தலைமை பதவி போட்டியில் இருந்து அனிதா விலகல்
கனடாவில் அரசியல் கொந்தளிப்பு நீடித்துள்ள நிலையில், லிபரல் கட்சியின் தலைமை பதவிக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அந்த கட்சியின் முக்கிய உறுப்பினரும், அமைச்சருமான அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அண்மையில் பதவி விலகினார். அவரின் பதவி விலகளுக்கு பின்னர் லிபரல் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வியெழுந்துள்ளது.

இந்நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் அடுத்த தலைவராக தெரிவுசெய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தலைமைப் பதவிக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

அனிதா ஆனந்த் ட்ரூடோவின் மாற்றாகக் கருதப்பட்டார். இந்நிலையில், லிபரல் கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை என்று அனிதா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அடுத்த தேர்தல் வரை தனது தொகுதி மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் சேவை செய்வேன் என்று கூறிய அவர், தனது எதிர்காலப் பயணத்தைப் பற்றியும் யோசித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் அறிவித்தார். தமிழ் தந்தை மற்றும் பஞ்சாபி தாயின் மகளான அனிதா, ட்ரூடோவின் அமைச்சரவையில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

அவர் பாதுகாப்பு மற்றும் பொது சேவை போன்ற அமைச்சகங்களையும் வகித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சராக, ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான உலகளாவிய முயற்சிகளுக்கு அனிதா தலைமை தாங்கினார்.

The post கனடாவில் நீடிக்கும் அரசியல் கொந்தளிப்பு – தலைமை பதவி போட்டியில் இருந்து அனிதா விலகல் appeared first on Oruvan.com.

பதவி விலக தயாராகும் ஜஸ்டின் ட்ரூடோ – கடும் நெருக்கடியில் லிபரல் கட்சி
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகப் போவதாக அறிவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதாகவும், ஆனால் அவர் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒன்பது ஆண்டுகள் கனடாவின் ஆளும் லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவது குறித்த அறிவிப்பை இன்று திங்கட்கிழமை முன்னதாகவே ட்ரூடோ அறிவிப்பார் செய்திகள் வெளியாகியிருந்த பின்னணியில் இந்த தகவல் வந்துள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதியில் நடைபெறவிருக்கும் தேர்தலில் லிபரல்கள் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ்களிடம் மோசமாக தோல்வியடைவார்கள் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான நிலையில், ட்ரூடோவின் பதவி விலகல் கட்சிக்கு நிரந்தரத் தலைவர் இல்லாமல் போகும் வாய்ப்பை ஏற்படுத்தும் என கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ட்ரூடோ எப்போது விலகப் போவதாக அறிவிப்பார் என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றும், ஆனால் புதன்கிழமை நடைபெறும் லிபரல் சட்டமன்ற உறுப்பினர்களின் அவசரக் கூட்டத்திற்கு முன்பு அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

தொடர்ச்சியான மோசமான கருத்துக் கணிப்புகளால் பீதியடைந்த லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ட்ரூடோவை ராஜினாமா செய்யுமாறு பகிரங்கமாக வலியுறுத்தியுள்ளனர்.

எவ்வாறாயினும், பதவி விலகல் குறித்து பிரதமர் அலுவலகம் உடனடியாக பதிலளிக்கவில்லை.

மாறாக திங்கட்கிழமைக்கான பிரதமரின் வழக்கமான அட்டவணையின் கீழ், கனடா-அமெரிக்க உறவுகள் குறித்த அமைச்சரவைக் குழு கூட்டத்தில் ட்ரூடோ பங்கேற்பார் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய லிபரல் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை ட்ரூடோ உடனடியாக வெளியேறுவாரா அல்லது பிரதமராக நீடிப்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று குளோப் அண்ட் மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு கட்சி கடும் நெருக்கடியை சந்தித்து, முதல் முறையாக ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் (கனேடிய நாடாளுமன்றம்) மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டபோது, ​​ட்ரூடோ லிபரல் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post பதவி விலக தயாராகும் ஜஸ்டின் ட்ரூடோ – கடும் நெருக்கடியில் லிபரல் கட்சி appeared first on Oruvan.com.