ரிஷப் பண்ட் Archives - Oruvan.com

சங்கக்காரவின் சாதனையை முறியடித்தார் ரிஷப் பண்ட்
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் பெற்ற இந்திய விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் ரிஷப் பண்ட், விக்கெட் காப்பாளராக டெஸ்ட் போட்டி ஒன்றில் அதிக ஓட்டங்கள் பெற்ற ஆசிய வீரராக இலங்கையின் முன்னாள் வீரர் குமார் சங்கக்காரவின் சாதனையை முறியடித்துள்ளார்.

ஹெடிங்லி, லீட்ஸ் மைதானத்தில் நேற்று முடிவடைந்த இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 134 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 118 ஓட்டங்களையும் பெற்று மொத்தமாக 252 ஓட்டங்களை குவித்தார். ஆசிய விக்கெட் காப்பாளர் ஒருவராக டெஸ்ட் போட்டி ஒன்றில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் இதுவாகும்.

முன்னதாக குமார் சங்கக்கார 2002 ஆம் ஆண்டு லாகூரில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 230 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காது 14 ஓட்டங்களையும் பெற்று மொத்தமாக 244 ஓட்டங்களை பெற்றதே சாதனையாக இருந்தது.

எவ்வாறாயினும் டெஸ்ட் வரலாற்றில் விக்கெட் காப்பளர் ஒருவரராக டெஸ்ட் போட்டி ஒன்றில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர் என்ற சாதனை பட்டியலில் முதல் மூன்று இடங்களிலும் சிம்பாப்வே முன்னாள் வீரர் அன்டி பிளவரே உள்ளார்.

இதில் 2001 இல் ஹராரேவில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 142 ஓட்டங்களும் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காது 199 ஓட்டங்களும் என பிளவர் மொத்தமாக 341 ஓட்டங்களை பெற்று முதல் இடத்தில் உள்ளது.

The post சங்கக்காரவின் சாதனையை முறியடித்தார் ரிஷப் பண்ட் appeared first on Oruvan.com.