ராமதாஸ் Archives - Oruvan.com

இலங்கை சிறையில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவிக்க வேண்டும்: ராமதாஸ்
இலங்கைக்கு உதவி செய்வது நம்முடைய தார்மீக கடமை என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 22-ஆம் திகதி 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி அனுமதிச்சீட்டு பெற்று மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றன. நள்ளிரவில் இந்திய கடல் எல்லை அருகே நடுக்கடலில் 60-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மன்னார் கடல் பகுதியில் இருந்து சுற்றுக்காவல் வந்த இலங்கை கடற்படையினர் அந்த மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டி அடித்துள்ளனர்.

மேலும் மீனவர்களின் சில படகுகளை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்ததுடன், விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் அவர்களை மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று, மேல்நடவடிக்கைக்காக மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் தமிழக மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி, வவுனியா சிறையில் அடைத்துள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொடூரமாக தாக்கப்படுவதும், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதும், படகுகள் சிதைக்கப்பட்டு பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் மீன்பிடித் தொழிலையே நம்பி இருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரம் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகிறது. இது அவர்களின் குடும்பத்தினரின் அன்றாட வாழ்க்கை மட்டுமல்லாது, பிள்ளைகளின் கல்வியும் பாதிக்கப்படுகிறது.

பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்திய அரசு மறு சீரமைப்புக்கான நிதி உதவிகளையும், பல்வேறு கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொண்டிருக்கிறது. இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு துணையாக நிற்க வேண்டியது இந்தியாவின் கடமை என குறிப்பிட்டு இலங்கைக்கு இந்தியா பல்வேறு உதவிகளையும் செய்து தருகிறது. அண்டை நாடு என்கிற போது அந்நாடு பாதிப்புக்குள்ளாகும் போது, இலங்கைக்கு உதவி செய்வது நம்முடைய தார்மீக கடமை தான். அதேசமயம் நம் நாட்டு மீனவர்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும் இந்திய வெளியுறவுத்துறை முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

எனவே, மத்திய அரசு தமிழக மீனவர்கள் விவகாரத்தில் நிரந்தர தீர்வு காணும் பொருட்டு இருநாட்டு மீனவர்களும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இதிலும் அக்கறையுடன் செயல்பட வேண்டும். அதற்கு முதல் கட்டமாக இலங்கை சிறையில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post இலங்கை சிறையில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவிக்க வேண்டும்: ராமதாஸ் appeared first on Oruvan.com.

ஈழத் தமிழர்களுக்கு வாக்குரிமை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஈழத் தமிழர்களுக்கு வாக்குரிமை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து 1983-ம் ஆண்டு ஈழத்தமிழர்கள் அங்கு நடந்த போர் சூழல் காரணமாக சொத்துகளை இழந்து தமிழ் மண்ணுக்கு லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் குடியேறினர்.

கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஈழத்தமிழர்கள் இந்தியாவில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் தமிழகத்திலுள்ள 116 முகாம்களில் வசிக்கின்றனர். பல ஆண்டுகள் இவர்கள் இங்கு வாழ்ந்தாலும் இந்திய மக்களை போல சுதந்திரமாக வாழ முடியாத சூழல் இன்றும் நிலவுகிறது.

தமிழ்நாட்டில் தற்போது தொடங்கவுள்ள தீவிர வாக்காளர் திருத்த பணியின்போது தமிழ்நாட்டில் வசிக்கும் ஈழத் தமிழர்களுக்கு அவர்களின் விருப்பத்தின் பெயரில் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும்.

இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மாநில அரசு மத்திய அரசிடம் கேட்டுப் பெற வேண்டும். மத்திய அரசும் ஈழத் தமிழர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு வாக்குரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாக்குரிமை அளிக்கப்பட்டால் தான் ஈழத் தமிழர்களின் உரிமைக்காக அந்தந்த பகுதி மக்கள் பிரதிநிதிகள் பணியாற்றுவார்கள். ஆகவே இவர்களுக்கு வாக்குரிமை அளிக்க வேண்டியது அவசியம் ஆகும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

The post ஈழத் தமிழர்களுக்கு வாக்குரிமை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் appeared first on Oruvan.com.

“பாமக எனும் ஆலமரத்தை கோடரியால் வெட்ட அன்புமணி முயற்சி” – ராமதாஸ் வேதனை
“தண்ணீருக்குப் பதிலாக வியர்வையை ஊற்றி, பாமக எனும் ஆலமரத்தை உருவாக்கினேன். அந்த ஆலமரத்தில் இருந்து ஒரு கிளையை வெட்டி கோடரி செய்து, அந்தக் கோடரியால் மரத்தையே வெட்ட முயற்சிக்கிறார் அன்புமணி” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் ராமதாஸ் இன்று கூறியது: “தைலாபுரம் வரும் அன்புமணி, தாயை மட்டும் பார்த்துவிட்டு, என்னிடம் பேசாமல் செல்கிறார். மாற்று கட்சியில் இருந்து வந்த வழக்கறிஞர் ஒருவர் என்னை ‘ராமதாஸ்’ என்று அழைக்கிறார். ‘அய்யா’ என்று சொன்னவர்களை ‘ராமதாஸ்’ என்று சொல்ல வைத்தது அன்புமணிதான்.

வஞ்சனை, சூது ஆகியவை மூலம் பாமகவை கைப்பற்றி, ‘நான்தான் இனி பாமக’ என்று சொல்லத் துடிக்கிறார் அன்புமணி. அவரது தலைவர் பதவி மே மாதத்துடன் காலாவதியாகிவிட்டது. எனக்குத் தெரியாமல் உள்ளடி வேலை செய்துள்ளார். என் படத்தைப் போட்டு, எனது ஆதரவாளர்களை அவர் பக்கம் இழுக்கிறார்.

தண்ணீருக்குப் பதிலாக வியர்வையை ஊற்றி, பாமக எனும் ஆலமரத்தை உருவாக்கினேன். அந்த ஆலமரத்தில் இருந்து ஒரு கிளையை வெட்டி கோடரி செய்து, அந்தக் கோடரியால் மரத்தையே வெட்ட முயற்சிக்கிறார். பணத்தால் கட்சிப் பொறுப்பாளர்களை விலைக்கு வாங்கியுள்ளார். அன்புமணி மீது உரிய நடவடிக்கை எடுக்காததற்கு காரணம், அப்படிச் செய்தால், அவர் கட்சியின் பொறுப்பாளர் மற்றும் தொண்டர்களை அதல பாதாளத்தில் தள்ளிவிடுவார்.

நான் நான்கு சுவர்களுக்குள் பேசுவதை, பொது வெளியில் பேசுவதாகக் கூறி, கட்சியினரிடம் அன்புமணி அனுதாபம் தேடுகிறார். என் மனக் குமறல்களை வெளிப்படுத்துகிறேன். பொது வெளியில் என்னைப் பற்றி பேசாமல் இருப்பதுபோல அன்புமணி நாடகமாடுகிறார். ஆனால், பணம் கொடுத்து சமூக வலைதளம் மூலமாக வசைபாடுகிறார்.

வரும் 17-ம் தேதி கட்சியின் பொதுக்குழுவை கூட்டியுள்ளேன். வரும் 9-ம் தேதி போட்டி பொதுக்குழுவை நடத்துகிறார். பாமக இரண்டாக பிரிந்துவிட்டதைப் போல மக்களிடம் மாயையை ஏற்படுத்திவிட்டார். குடும்பத்துக்கு உள்ளேயும் பணத்தை வைத்து விளையாட முடியும் என்று கருதுகிறார். என்ன அறிவுரை கூறினாலும் அன்புமணி அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்.

தைலாபுரம் தான் பாமக தலைமை அலுவலகம். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம். சட்ட நடவடிக்கையில் எங்களுக்கு வெற்றி கிடைக்கும். அன்புமணியின் பொய் வார்த்தைகளை நம்பி அவருடன் சென்றவர்கள், என்னிடம் திரும்பி வர வேண்டும். அவ்வாறு வரும் போது பாசத்துடன் அரவணைத்துக் கொள்வேன்” என்று ராமதாஸ் கூறினார்.

The post “பாமக எனும் ஆலமரத்தை கோடரியால் வெட்ட அன்புமணி முயற்சி” – ராமதாஸ் வேதனை appeared first on Oruvan.com.

என் மூச்சு இருக்கும் வரை பாமக தலைவராக நானே தொடர்வேன்: ராமதாஸ்
என் மூச்சு இருக்கும் வரை பாமக தலைவராக தானே தொடர்வேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், தைலாபுரம் தோட்டத்திலுள்ள அவரது இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு, சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அன்புமணிக்கு தலைவர் பதவியைக் கொடுப்பதாகக் கூறினேன். ஆனால், நடப்பவற்றை பார்க்கும்போது, அன்புமணியின் செயல்களைப் பார்க்கும் போது என் மூச்சுக்காற்று நிற்கும் வரை அவரிடம் தலைவர் பதவியைக் கொடுக்க மாட்டேன்.

நான் (ராமதாஸ்) ஒரு நல்ல தந்தையாக, வழிகாட்டியாக இருந்திருக்கிறேன். ஆனால் மாநாட்டுக்குப் பிறகு நடைபெறுகின்ற செயல்களைப் பார்க்கும் போது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு நான் தலைவர் பதவியைக் கொடுக்கிறேன் எனக் கூறியதற்கு, ஏன் அப்படி கூறினீர்கள் என நூற்றுக்கு 99 சதவீதம் பேர் கேட்கின்றனர். தொண்டர்களின் வார்த்தைக்கு ஏற்ப, விருப்பத்துக்கு ஏற்ப இப்போது நான் கூறுகிறேன். என் மூச்சுக் காற்றும் நிற்கும் வரை அந்த தலைவர் பதவியில் நான் இருப்பேன்.

என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சியைத் தொடங்கும் போது நான் கூறினேன். ஆனால், அதை காப்பாற்ற முடியவில்லை. தலித் எழில்மலை, பொன்னுசாமி போன்ற இன்னும் பலருக்கு அமைச்சர் பொறுப்புகளைக் கொடுக்கும் போது, அவர்களின் செயல்பாடுகளில் திருப்தி இல்லாத போது அன்புமணிக்கு பொறுப்பு கொடுக்க வேண்டும் என்று கட்சியின் மூத்தத் தலைவர்கள் வற்புறுத்தியதன் பேரில் 35 வயதிலேயே அவரை (அன்புமணி) மத்திய கேபினட் அமைச்சராக்கினேன்.

ஆனால் இரண்டரை ஆண்டுகளில் என்னால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. நான் வந்துவிடுகிறேன் என அன்புமணி கூறினார். ஆனால் நான் தினம், தினம் எப்படி செயல்பட வேண்டும் என்று பேசி, சமாதானம் செய்த பிறகு செயல்பட்டார். உலக அளவில் பல விருதுகளை வென்றார். ஆனால், அன்புமணியால் தந்தையிடம் விருது வாங்க முடியவில்லை. தந்தையை, தாயை மதிக்க வேண்டும். அப்படி கூறினாலே அன்புமணிக்கு கோபம் வருகிறது.

சித்திரை முழு நிலவு மாநாட்டுக்குப் பிறகு அன்புமணியின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளன. நான் எத்தனை ஆண்டுகள் உயிரோடு இருப்பேன் எனக் கூறும் போதெல்லாம், நீங்கள் நூறாண்டு வரை வாழ்வீர்கள் என அன்புமணி கூறுவார். ஆனால் என் மார்பிலும், முதுகிலும் ஈட்டியால் அவர் குத்தி வருகிறார். தூக்க மாத்திரைகளைப் போட்டாலும் எனக்கு தூக்கம் வரவில்லை. அன்புமணியை நினைக்காமலும் இருக்க முடியவில்லை. பாசத்தால் அல்ல, பாசமெல்லாம் போய்விட்டது. அன்புமணி செய்யும் ஒவ்வொரு செயலும் அடாத செயலாகும்.

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, மூத்தோர் சொல், வார்த்தை அமிர்தம். இவையெல்லாம் கூறினால் அதெல்லாம் பொய் என அன்புமணி கூறுவார். இந்த பிரச்னைக்கு ஒரே தீர்வு நான் செயல் தலைவராக ஏற்றுக் கொள்கிறேன். கட்சி நிறுவனர் சொல்லும் வழியில் நடந்து கொள்கிறேன் என்பதுதான். அப்படி நடந்து கொள்வேன் எனக் கூறுவார். ஆனால் வேறு மாதிரி நடந்து கொள்வார் அன்புமணி.

பாமகவின் தொண்டர்களை, கட்சி சொந்தங்களை நினைக்கும் போதெல்லாம் எனக்கு ஏற்படும் பூரிப்பும், ஆனந்தமும் சொல்லி மாளாது. ஆனால் அன்புமணியை நினைக்கும் போதெல்லாம் எனக்கு ஏற்படுகிற அதிர்ச்சி, மனக்குமுறல்கள் எனக்கு ரத்த அழுத்தத்தை அதிகரிக்கின்றன.

இந்த கட்சியை உருவாக்கிய என்னை ஒலிபெருக்கி வைத்து பேசக்கூடாது, 200 பேருக்கு மேல் கூட்டம் கூட்டக்கூடாது, அறையில்தான் என்னை சந்திக்க வேண்டும் என கட்டளையிட இவர் யார். கட்சியின் நிறுவனரை இப்படி சொல்லும் அதிகாரம் நான் கொடுக்கவில்லையே. என் மூச்சுக் காற்றும் நிற்கும் வரை பாமகவுக்கு நான் தலைவர், நிறுவனர்.

பாட்டாளி இளைஞர் சங்கத்தலைவர் பதவிக்கு பொருத்தமான ஒருவர் நியமிக்கப்படுவார். மேலும் காலியாகவுள்ள பல பொறுப்புகளும் நிரப்பப்படும். கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் முறையாகக் கூட்டப்படும். என்னை பார்க்க யார் வேண்டுமானாலும் வரலாம். முன் அனுமதி தேவையில்லை என்றார் ராமதாஸ்.

The post என் மூச்சு இருக்கும் வரை பாமக தலைவராக நானே தொடர்வேன்: ராமதாஸ் appeared first on Oruvan.com.

‘தேவைப்பட்டால் அன்புமணியை கட்சியை விட்டு நீக்குவேன்’ – ராமதாஸ் அடுக்கடுக்காக குற்றச்சாட்டு
அன்புமணியை அவரது 35-வது வயதில் அமைச்சராக்கினேன். நான் செய்த சத்தியத்தை மீறி அவரை அமைச்சராக்கியது தவறு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், தேவைப்பட்டால் பொதுக்குழுவைக் கூட்டி அன்புமணியை கட்சியை விட்டே நீக்குவேன் என்று தெரிவித்துள்ளார்.

பாமகவின் நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் இன்று (மே.29) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அன்புமணியை அவரது 35 வயதில் நான் அமைச்சராக்கினேன். நான் செய்து கொடுத்த சத்தியத்தை மீறி அவரை அமைச்சராக்கியது எனது தவறு.

எங்களின் கட்சி பற்றிய பலமுறை கேள்வி கேட்டிருக்கிறீர்கள். நானும் பதில் சொல்லியிருக்கிறேன். தருமபுரியில் நடந்த கூட்டமொன்றில் அன்புமணி பேசியதை பார்த்திருப்பீர்கள், நானும் கேட்டேன். அந்தப் பேச்சில், “நான் என்ன தவறு செய்தேன், ஏன் பதவி நீக்கம் என்று.” அன்புமணி கேட்டிருந்தார். அது கட்சிக்காரர்களையும் மக்களையும் திசைதிருப்பும் முயற்சி. தனது தவறுகளை மறைத்து மக்களிடமும், கட்சிக்காரர்களிடமும் அனுதாபம் பெற முயற்சித்திருக்கிறார். அதற்கு சரியான விளக்கம் அளிப்பது எனது கடமை. என்னைக் குற்றவாளியாக்கி அன்புமணி அனுதாபம் தேட முயற்சித்துள்ளார்.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடோடு பயணித்தக் கட்சியில் அவர் கலகத்தை உண்டாக்கினார். வளர்த்த கிடா மார்பில் பாய்ந்துள்ளது. கட்சி வளர்ச்சிக்கு தடையாக இருந்து பல இன்னல்களைச் செய்தவர் அன்புமணி.

பாமக என்னும் ஆளுயுர கண்ணாடியை நொடியில் உடைத்தது யார்? புதுச்சேரி கூட்டத்தில் கண்ணியம் இல்லாமல் நடந்து கொண்டது யார்? நான் ஏதோ இதைப் போகிற போக்கில் சொல்லவில்லை. ஆதாரங்களுடன் தான் சொல்கிறேன்.

குருவை, அன்புமணி கீழ்த்தரமாக நடத்தினார். பெற்ற தாயை பாட்டிலை வீசித்தாக்க முயன்றவர் அன்புமணி. பாமகவை வளர்த்தது யார்? சோறு தண்ணீர் இல்லாமல் பல கிராமங்களுக்கு பயணம் செய்திருக்கிறேன். கூசாமல் பொய் சொல்பவர் அன்புமணி. நான் கூட்டிய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு செல்லவேண்டாம் என்று 108 பேருக்கு அவரே கூறியுள்ளார்.

2024 தேர்தலின் போது பாஜகவுடன் கூட்டணி வேண்டுமென்று அமைத்தார் அன்புமணி. நான் அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்று கூறினேன். அதிமுகவும், பாமகவும் இயல்பான கூட்டணி. 2024-ல் இந்தக் கூட்டணி அமைந்திருந்தால் பாமக – 3 இடங்களிலும், அதிமுகவும் 6, 7 இடங்களிலும் வென்றிருக்கும்.

பாஜக கூட்டணிக்காக அன்புமணியும், சவுமியாவும் என் கால்களைப் பிடித்து அழுதனர். அந்தக் கூட்டணிக்கான ஏற்பாட்டை சவுமியா செய்தார். தேவைப்பட்டால் பொதுக்குழுவைக் கூட்டி அன்புமணியை கட்சியை விட்டு நீக்குவேன். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

The post ‘தேவைப்பட்டால் அன்புமணியை கட்சியை விட்டு நீக்குவேன்’ – ராமதாஸ் அடுக்கடுக்காக குற்றச்சாட்டு appeared first on Oruvan.com.

தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்க : ராமதாஸ்
தெலங்கானா மாநிலத்தில் சமூகநீதி காக்கும் நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக கடந்த நவம்பர் 6 ஆம் திகதி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டிலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

“சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, சமூகநீதி வழங்கும் விஷயத்தில் தெலங்கானா மாநில அரசு நாலுகால் பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. தெலங்கானா மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த விவரங்களை அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கும் அம்மாநில அரசு, அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று முதல் நான்கு நாட்களுக்கு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்கவிருக்கிறது. ஆனால், தமிழக அரசோ, சமூகநீதிக்கான போலி முத்திரையைக் குத்திக் கொண்டு, அதற்காக எதுவும் செய்யாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

தெலங்கானா மாநிலத்தில் சமூகநீதி காக்கும் நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக கடந்த நவம்பர் 6 ஆம் தேதி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பின் போது 56 முதன்மைக் கேள்விகள் உள்ளிட்ட மொத்தம் 75 வினாக்கள் கேட்கப்பட்டு பொதுமக்களின் விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தக் கணக்கெடுப்பை மேற்கொண்ட அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அதன் அறிக்கையையும், பரிந்துரைகளையும் அம்மாநில அரசிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்திருக்கிறது.

ஐதராபாத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக தெலங்கானா சட்டப் பேரவையின் நான்கு நாள் சிறப்புக் கூட்டத் தொடரும் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

சமூகநீதியைக் காக்க தெலங்கானா அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அனைத்தும் புரட்சிகரமானவை. இதன் மூலம் இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதன் விவரங்களை வெளியிட்ட இரண்டாவது மாநிலம் என்ற பெருமையை பிகாருக்கு அடுத்தபடியாக தெலங்கானா பெற்றிருக்கிறது.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தியதுடன், தெலங்கானா அரசு அதன் கடமையை முடித்துக் கொள்ளப் போவதில்லை. பிஹார் மாநில அரசு மேற்கொண்டதைப் போலவே தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இட ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அம்மாநில அரசு தீர்மானித்திருக்கிறது.

தெலங்கானா மாநிலத்தில் இப்போது சாதிகளின் அடிப்படையில் 50% இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. அதில் பட்டியலினத்தவருக்கு 15% பழங்குடியினருக்கு 6% போக மீதமுள்ள 29% பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கு 4% ஒதுக்கீடு உள்பட பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு மொத்தம் 5 பிரிவுகளாக பிரித்து வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களின்படி, தெலங்கானாவில் 10.08% இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள்தொகை 56.33% என்று தெரியவந்துள்ளது. பட்டியலினத்தவரின் மக்கள்தொகை 17.43%, பழங்குடியினரின் மக்கள்தொகை 10.45%, 2.48% இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பிற வகுப்பினரின் மக்கள்தொகை 15.79% என்றும் சாதிவாரி மக்கள்தொகை மூலம் தெரியவந்திருப்பதாக தெலங்கானா அரசு கூறியுள்ளது.

தெலங்கானாவில் பிற வகுப்பினரின் மக்கள்தொகையில், ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கும் குறைவாக இருப்பவர்களின் எண்ணிக்கை 12%க்கும் குறைவாகத் தான் இருக்கும். ஆனால், அவர்களுக்கு அங்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதேநேரத்தில் 56.33% உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அதில் கிட்டத்தட்ட பாதி அளவுக்கு 29% இட ஒதுக்கீடு மட்டும் தான் வழங்கப்படுகிறது.

அதிலும் குறிப்பாக பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களின் மக்கள்தொகை 10.08% என்ற நிலையில், அவர்களுக்கு 4% மட்டும் இட ஒதுக்கீடு வழங்குவது நியாயமல்ல. பட்டியலின, பழங்குடியின மக்களுக்கும் அவர்களின் மக்கள்தொகையை விட குறைவாகவே இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு அம்மாநிலத்தில் இட ஒதுக்கீட்டின் அளவை மாற்றியமைக்க தெலங்கானா அரசு திட்டமிட்டுள்ளது. அது மிகவும் சரியானதே.

சமூகநீதி சார்ந்த இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் தெலங்கானா அரசு சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் கிடைத்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தான் மேற்கொள்ளப்படவில்லை. தெலுங்கானா மாநிலத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தவோ, அதன் விவரங்களை வெளியிடவோ அம்மாநில உயர்நீதிமன்றம் எந்தத் தடையையும் விதிக்கவில்லை.

அங்குள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்பதற்கான புள்ளிவிவரங்களையும் பகுப்பாய்ந்து இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரித்தால் அதையும் உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொள்ளும் என்பது எதார்த்தம்.

சமூகநீதியை நிலைநாட்டுவதை நோக்கி தெலங்கானா அரசு இந்த அளவுக்கு பயணம் செய்திருக்கும் நிலையில், சமூகநீதியைக் காப்பதற்காக அவதாரம் எடுத்தவர்கள் என்று தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்ளும் தமிழக ஆட்சியாளர்களோ, இந்தப் பயணத்தில் இன்னும் முதல் அடியைக் கூட எடுத்து வைக்கவில்லை.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கோ, உச்சநீதிமன்றம் வகுத்துள்ள வரையறைகளுக்கு உட்பட்டு, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டின் விகிதத்தை மாற்றி அமைக்கவோ எந்தத் தடையும் இல்லை. ஆனால், மாநில அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை; சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்ளாது என்ற ஒரே பொய்யை மீண்டும், மீண்டும் கூறி சமூகநீதிக்கு முட்டுக்கட்டை போடுகிறது தமிழக அரசு. இதன் மூலம் முதல்வரின் போலி சமூகநீதி வேடம் கலைந்திருக்கிறது.

சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்வது கடினம் அல்ல. தெலங்கானா மாநில அரசு வெறும் ரூ.150 கோடியில், 1.03 லட்சம் கணக்கெடுப்பாளர்களையும், 10 ஆயிரம் மேற்பார்வையாளர்களையும் கொண்டு 50 நாட்களில் நடத்தி முடித்திருக்கிறது. இதே காலத்தில் ரூ.300 கோடியில் இதை தமிழகத்தாலும் சாதிக்க முடியும்.

சமூகநீதி வார்த்தைகளில் வாழ்வதில்லை; செயல்பாடுகளில் தான் தழைக்கிறது. எனவே, தமிழ்நாட்டின் ஆட்சியாளர்களுக்கு சமூகநீதியில் உண்மையான அக்கறை இருந்தால், தங்கள் உறக்கத்தைக் கலைத்து விட்டு, தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

The post தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்க : ராமதாஸ் appeared first on Oruvan.com.