ராஜ்குமார் ரஜீவ்காந் Archives - Oruvan.com

முஸ்லிம் இளைஞர் கைது – பாலஸ்தீனம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கேள்விக்கு உட்படுத்துகிறது
ருஸ்டி என்ற இளைஞனை கைதுசெய்த பின்னரே அரசாங்கம் அவருக்கு எதிரான சாட்சியங்களை தேடியலைகின்றது போல தோன்றுகின்றது என தெரிவித்துள்ள மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந், முஸ்லிம் இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ள விவகாரம் அரசாங்கத்தின் பாலஸ்தீனம் தொடர்பான நிலைப்பாட்டை கேள்விக்கு உட்படுத்துகின்றது எனவும் தெரிவித்துள்ளார்

பயங்கரவாத தடைச்சட்டம் என்பது இலங்கையில் சமான்ய மக்களின் கருத்து சுதந்திரத்தை தடைசெய்து அரசாங்கம் சந்தேகப்படுபவர்களை குற்றவாளிகளாக்கி தண்டனைகளை வழங்கிக்கொண்டிருந்த சட்டம் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.

இந்த ருஸ்டி என்ற நபரின் கைது மற்றும் அதன் பின்னர் அரசு வெளியிட்ட ஊடக அறிக்கையானது மிகவும் பாரதூரமான விடயங்களை எமக்கு வெளிப்படுத்துகிறது. குறிப்பாக அரசாங்கம் அவரை கைதுசெய்த பின்னரே அவருக்கான சாட்சியங்களை தேடி அலைவது போல தோன்றுகின்றது.

அரசாங்கத்திடம் போதிய சாட்சியங்கள் இருந்தால் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி அவரை தடுத்துவைப்பதற்கான ஆணையை பெறமுடியும். அப்போதுதான் அவராலும் தான் குற்றமற்றவர் இல்லை என்பதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கமுடியும்.

எனவே, ஒரு தரப்பே யார் குற்றவாளி என தீர்மானிக்கிறது. இந்த சட்டத்தினால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  குறிப்பாக முஸ்லிம் சமூகத்தை எடுத்துக்கொண்டால், வைத்தியர் ஷாபி கட்டாய கருத்தடை செய்கின்றார், அவர் ஒரு தீவிரவாதி என தெரிவித்து அவரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்தார்கள்.

இந்த கைதின் போது முன்னாள் எம்.பி.களான விமல் வீரவன்ச உதய கம்மன்பில போன்றோர் அவரை ஊடகள் முன்னிலையில் தீவிரவாதி போன்று காட்டினர். குற்றம்சாட்டப்பட்ட அனைத்து விடயங்களில் இருந்தும் அவர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா என்ற சட்டத்தரணி சாதாரண தொண்டு வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்.  பயங்கரவாத நிறுவனங்களில் இருந்து பணம் வாங்குகின்றார் என்ற அடிப்படையில் அவர் கைதுசெய்யப்பட்டார்.

அவரின் கைதின் பின்னர் கட்டார் சரிட்டி என்கின்ற தொண்டு நிறுவனம் தீவிரவாத நிறுவனமாக பட்டியல் இடப்படுகின்றது. ஒரு வருடத்தின் பின்னர் அது பயங்கரவாத அமைப்பல்ல என அரசாங்கம் நீக்குகின்றது. இவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுகின்றார்.

இப்படியே தீவிரவாதி என்றும் இல்லை என்றும் கூறுகின்றனகர். குறிப்பிட்ட அவர்களுடைய வாழ்க்கை நீதிமன்றத்திலும் சிறைச்சாலைகளிலும் கழிவதும் சமூக ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

இதே போன்று ஆருரன் உட்பட பல அரசியல் கைதிகள் 15 வருடங்களின் பின்னர் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

எனவே குற்றமற்றவர்களிற்கு எவ்வாறு தண்டனையை வழங்க முடியும் என்ற விடயம் ஊடாகாவே இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தினை நாங்கள் அணுகவேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டம் இந்த நாட்டில் இருக்ககூடாது என்பதை நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதற்கான ஒரே காரணம்,குற்றவாளிகள் தப்பித்தால் கூட நிரபராதிகள் தண்டனைக்கு உள்ளாக கூடாது என்பதற்கேயாகும்.

ஞானசார தேரர், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சுமண தேரர் போன்றவர்கள் மிக மோசமான இனவாதத்தை கக்கி, சமூகங்களிற்கு இடையில் குழப்பங்களை ஏற்படுத்தி  கலவரங்களை உண்டுபண்ணக்கூடிய பேச்சுகின்றனர். இவர்கள் சாதாரணமாக எந்த சட்டத்தின் கீழும் கைதுசெய்யப்படவில்லை.

எனவே அவர்களின் செயற்பாட்டிற்கும் சட்டமும் தமிழ், முஸ்லி மக்களுக்கு ஒரு சட்டமும் கையாளப்படுவதும் மிக மோசமானது.

ருஸ்டி  என்ற முஸ்லிம் இளைஞரின் கைது அரசாங்கத்தின் இஸ்ரேல் தொடர்பான, பாலஸ்தீனம் தொடர்பான நிலைப்பாட்டை கேள்விக்கு உட்படுத்துகின்றது.” என்றும் அவர் கூறியுள்ளார்.

The post முஸ்லிம் இளைஞர் கைது – பாலஸ்தீனம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கேள்விக்கு உட்படுத்துகிறது appeared first on Oruvan.com.