ராஜித சேனாரத்ன Archives - Oruvan.com

மக்கள் ஏற்கும் பொது எதிரணியே அவசியம்: 21 ஆம் திகதி போராட்டம் குறித்து ராஜித மழுப்பல்
நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணியில் பங்கேற்பது தொடர்பில் தான் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

மேற்படி பேரணிக்கு ஆதரவை வழங்கும் முடிவை கட்சி எடுத்திருந்தாலும், அது பற்றி தான் இன்னமும் பரிசீலித்துவருவதாகவும் ஊடக சந்திப்பின்போது அவர் குறிப்பிட்டார்.

” தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்மீது நாட்டு மக்கள் அதிருப்தி அடைந்துவருகின்றனர். எனவே, எதிரணி வசம் சிறந்த மாற்று தேர்வு இருக்க வேண்டும். மாறாக மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுடன் பயணிக்க தொடங்கினால் அது பிரச்சினைக்கே வழிவகுக்க வேண்டும்.

மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான பொது எதிரணியொன்று கட்டியெழுப்பட வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும்.” என ராஜித சேனாரத்ன மேலும் குறிப்பிட்டார்.

The post மக்கள் ஏற்கும் பொது எதிரணியே அவசியம்: 21 ஆம் திகதி போராட்டம் குறித்து ராஜித மழுப்பல் appeared first on Oruvan.com.

ராஜித சேனாரத்னவுககு 9ஆம் திகதி வரை விளக்கமறியல்
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

The post ராஜித சேனாரத்னவுககு 9ஆம் திகதி வரை விளக்கமறியல் appeared first on Oruvan.com.

ராஜித நீதிமன்றில் ஆஜர்
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சற்றுமுன்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (29) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

The post ராஜித நீதிமன்றில் ஆஜர் appeared first on Oruvan.com.

ராஜித்தவின் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல்
நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதால், அதிகாரிகள் மாலபேயில் உள்ள அவரது வீட்டிற்குச் இன்று (21) சென்று அறிவித்தல் ஒன்றை ஒட்டியுள்ளனர்.

நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை ஆஜராகுமாறு தெரிவித்தே குறித்த அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.

கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகற்றும் திட்டத்தை சட்டவிரோதமாக செயல்படுத்தியதால் அரசுக்கு 262 இலட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.

அந்த மனுவின் சமர்ப்பணங்களை பரிசீலித்ததன் பின்னர், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இதேவேளை, பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று (20) நோட்டீஸ் அனுப்பியது.

The post ராஜித்தவின் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல் appeared first on Oruvan.com.

ராஜித சேனாரத்னவை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு
கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வு திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு ஒப்படைத்து அரசாங்கத்திற்கு 2.63 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனுவெல உத்தரவிட்டுள்ளார்

இந்த வழக்கு இன்று(11) கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனுவெல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கைகளை கருத்தில் கொண்ட நீதிவான், ராஜித சேனாரத்னவை கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

The post ராஜித சேனாரத்னவை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு appeared first on Oruvan.com.

அரசாங்கத்திடம் பொருளாதாரத் திட்டங்கள் இல்லை
தற்போதைய அரசாங்கத்திடம் தெளிவான பொருளாதாரத் திட்டமொன்று இல்லாததால், நாடு விரைவில் மீண்டும் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன எச்சரித்துள்ளார்.

மதுகம பகுதியில் ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர், “அரசியலில் யார் வெற்றி பெறுவார்கள், யார் சிப்பாயைப் போல் இழுக்கப்படுவார்கள் என விவாதிப்பது இப்போது நேரத்தை வீணாக்குவது மட்டுமே. நாட்டை காப்பாற்ற விரும்பினால், அதை பொருளாதாரத்தின் வழியே மட்டுமே செய்ய முடியும். ஊழல் கட்டுப்பாடு, வளர்ச்சி ஆகியவை முக்கியமானவைதான், ஆனால் அதற்கு அடிப்படையானது பொருளாதாரம்,” என அவர் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் பொருளாதாரத்தை மீண்டும் உருவாக்க வேண்டிய அவசியத்தை புரிந்துகொள்வதில்லை என்றும், அதற்கான திட்டமோ, நடவடிக்கையோ எதுவும் இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

“அவ்வாறு திட்டமின்றி செயல்பட்டால், ஆகஸ்ட் இறுதிக்குள் இந்த பொருளாதார நெருக்கடி மிகவும் கடினமான கட்டத்திற்கு நகரும். ஆண்டு இறுதிக்குள் அது தீவிரமாவதும் உறுதி. அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில், முழு நாடும் மிகப் பெரிய நெருக்கடிக்குள்ளாகும்,” என ராஜித சேனாரத்ன எச்சரித்தார்.

இதனை தவிர்க்க, அரசாங்கம் உடனடியாக அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்து, நியாயமான மற்றும் செயல்திறன் கொண்ட பொருளாதாரத் திட்டத்தை உருவாக்க வேண்டும் எனவும், திவாலான நிலைமையிலிருந்து மீள்வது எளிதல்ல என்பது அரசாங்கம் உணர வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“ரணில் விக்ரமசிங்க இரண்டரை ஆண்டுகளில் நாட்டை ஒரு வகையில் மீட்டெடுத்தார். ஆனால் மக்கள் அதற்கான மதிப்பை இப்போது உணரவில்லை. அதை மீண்டும் இழந்துவிடும் அபாயம் மிக அருகிலுள்ளது,” என அவர் கூறினார்.

The post அரசாங்கத்திடம் பொருளாதாரத் திட்டங்கள் இல்லை appeared first on Oruvan.com.

பட்டலந்த அறிக்கை – ரணில்மீது கைவைக்க முடியாது
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை முழுமையாக படிக்காதவர்களே அதில் ரணில் விக்கிரமசிங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர். எனவே இவர்களால் ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமையையும் நீக்க முடியாது. அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாதென முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணி அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

1988ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசார கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதலில் என்னுடன் மேடையில் இருந்த இருவர் கொல்லப்பட்டனர்.

நான் பலத்த காயங்களுக்கு உள்ளானேன். எவ்வாறிருப்பினும் ஜே.வி.பி.யின் அந்த கொடூர குண்டு தாக்குதலிலிருந்து நான் உயிர் பிழைத்துக் கொண்டேன்.

இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் ஜே.வி.பி. குண்டு தாக்குதல்களை மேற்கொண்ட போது நூற்றுக் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். அவற்றில் பல சம்பவங்கள் தொடர்பில் பட்டலந்த அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் மாத்திரமின்றி அரச உத்தியோகத்தர்களும் கொல்லப்பட்டனர்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு முன்னதாகவே குண்டு தாக்குதல்களை ஜே.வி.பி.யே ஆரம்பித்தது. 15 வயதுக்கு குறைவான சிறுவர்களும், 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களும் நூற்றுக்கணக்கில் ஜே.வி.பி. கிளர்ச்சிகளில் உள்வாங்கப்பட்டிருந்தனர். கிளர்ச்சிக்கும் விடுதலைக்கான போராட்டத்துக்கும் பாரிய வித்தியாசம் இருக்கிறது.

ஜே.வி.பி.யனரால் முன்னெடுக்கப்பட்டவை கிளர்ச்சிகளே தவிர, விடுதலைக்கான போராட்டங்கள் அல்ல. அன்றிலிருந்து இன்று வரை நாம் நாட்டில் அமைதிக்காகவே குரல் கொடுத்து வருகின்றோம். ஆனால் ஜே.வி.பி. ரணில் விக்கிரமசிங்கவின் பக்கம் கைகளைக் காண்பித்து தாம் தப்பிக்க திட்டமிடுகிறது.

ஆனால் அவர் மீது இவ்வாறு எந்தவொரு குற்றச்சாட்டும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. மாறாக அவர் சாட்சியாளராக மாத்திரமே அழைக்கப்பட்டிருக்கின்றார்.

வரலாறு தெரியாதவர்களால் ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமையை நீக்குவது மாத்திரமல்ல, அவருக்கு எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாது.

சந்திரிகா பண்டாரநாயக்க குமாதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிகளும், நல்லாட்சியின் போதும் பட்டலந்த அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி. எந்த சந்தர்ப்பத்திலும் பேசவில்லை. தற்போது அவர்கள் தமது குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக இதனைக் கைகளில் எடுத்துள்ளனர் என்றார்.

The post பட்டலந்த அறிக்கை – ரணில்மீது கைவைக்க முடியாது appeared first on Oruvan.com.