ரஷ்யா Archives - Oruvan.com

ஜனாதிபதி புடினைச் சந்திக்க ஈரான் வெளிவிகார அமைச்சர் மொஸ்கோ பயணம்
ஈரான் மற்றும் அமெரிக்க – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) இன்று ரஷ்யாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

மொஸ்கோ சென்றடையும் அவர், இன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது ஈரான் – ரஷ்ய இருதரப்பு உறவுகள் மட்டுமன்றி, பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் சர்வதேச ரீதியில் நிலவும் போர்ச் சூழல் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் ஓமானுக்கான விஜயங்களைத் தொடர்ந்து ரஷ்யா சென்றுள்ள Araghchi, போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவின் ஆதரவை நாடியுள்ளதாகக் கருதப்படுகிறது.

இதனிடையே, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நடைபெறவிருந்த அமெரிக்க – ஈரான் நேரடிப் பேச்சுவார்த்தைக்கான திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திடீரென ரத்து செய்துள்ளார்.

நீண்டதூரப் பயணம் என்பது நேர விரயம் எனக் குறிப்பிட்ட ட்ரம்ப், ஈரானியர்கள் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான ஈரானின் மோதல் தற்போது தற்காலிகப் போர்நிறுத்த நிலையில் உள்ள போதிலும், ஈரானால் மூடப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணை காரணமாக உலகளவில் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

இந்த எரிசக்தி நெருக்கடி மற்றும் பிராந்தியப் பதற்றங்களுக்குத் தீர்வு காண ரஷ்யா ஒரு முக்கிய மத்தியஸ்தராகச் செயற்படும் என சர்வதேச அரசியல் அவதானிகள் எதிர்பார்க்கின்றனர்.

The post ஜனாதிபதி புடினைச் சந்திக்க ஈரான் வெளிவிகார அமைச்சர் மொஸ்கோ பயணம் appeared first on Oruvan.com.

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகிக்கத் தயார் – ரஷ்யா அறிவிப்பு
இந்தியாவுக்கு கூடுதலான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை விநியோகிக்கத் தயாராக இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்கா இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போா் நடைபெற்று வரும் நிலையில்,  உலகில் கச்சா எண்ணெய் கப்பல்கள் அதிகம் செல்லும் கடல்பகுதியான ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது.

இதனால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை பெறுவதில் இந்தியா பாரிய சிக்கல்களை எதிர்கொண்டுவந்தது.

இந்நிலையில், ரஷ்ய துணைப் பிரதமா் டெனில் மான்ட்ரூவ், இந்தியாவுக்கு கூடுதலான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை விநியோகிக்கத் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

இந்திய தேவைகளைப் பூா்த்தி செய்ய ரஷ்யா தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளாா்.

The post இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகிக்கத் தயார் – ரஷ்யா அறிவிப்பு appeared first on Oruvan.com.

ரஷ்யாவில் இருந்து எரிபொருள் இறக்குமதி – கலந்துரையாடலை ஆரம்பித்துள்ள இலங்கை அரசாங்கம்
ரஷ்யாவில் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்வது தொடர்பில் இலங்கை அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பில் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.தஹஸ்கரியனுடன்  (Levan S. Dzhagaryan) வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நேற்று வெளிவிவகார அமைச்சில் கலந்துரையாடியுள்ளார்.

மத்திய கிழக்கு போர்ச்சூழலால் வளை குடா நாடுகளில் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்யும் விடயத்தில் அச்சமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையிலேயே ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெறுவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

ரஷ்யாவில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்கா தற்காலிகமாக தளர்த்தியுள்ளதால் பல நாடுகள் ரஷ்யாவில் இருந்து எரிபொருளைப் பெறுவதற்கு இராஜதந்திர ரீதியிலான முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றன.

இலங்கையின் மேற்படி கோரிக்கை தொடர்பில் ரஷ்ய அரசாங்கத்துக்கு உடனடியாக தெரியப்படுத்தப்படும் என ரஷ்ய தூதுவர் வெளிவிவகார அமைச்சரிடம் உறுதியளித்துள்ளார்.

The post ரஷ்யாவில் இருந்து எரிபொருள் இறக்குமதி – கலந்துரையாடலை ஆரம்பித்துள்ள இலங்கை அரசாங்கம் appeared first on Oruvan.com.

ரஷ்யா, உக்ரைன் போர் முடிவுக்கு வரும் சாத்தியம்
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்குரிய முயற்சியில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

உக்ரைன் ஜனாதிபதி, பிரான்ஸ் ஜனாதிபதி மற்றும் நேட்டோ தலைவர்களுடன் இது தொடர்பில் தான் விரிவான கலந்துரையாடலிலட் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.

ஐரோப்பிய தலைவர்களிடமிருந்து எமக்கு பேராதரவு கிடைக்கின்றது. அவர்களை போரை முடிவுக்கு கொண்டுவர விரும்புகின்றனர் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.

மேற்குலக நாடுகள் தமக்குரிய பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கும் பட்சத்தில் நேட்டோ அமைப்பில் இணையும் திட்டத்தை கைவிட தயார் என்ற சமிக்ஞையை உக்ரைன் வெளிப்படுத்தியுள்ளது.

ஐரோப்பாவில் நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தைக்கு மத்தியிலேயே உக்ரைன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான போர் மூன்றாண்டுகளுக்கு மேலாக நீடித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

The post ரஷ்யா, உக்ரைன் போர் முடிவுக்கு வரும் சாத்தியம் appeared first on Oruvan.com.

ரஷ்யாவின் அணுசக்தி ஏவுகணை சோதனை வெற்றி – ரஷ்யா
அணு சக்​தி​யால் இயங்​கும் புரேவெஸ்ட்​னிக் என்ற ஏவு​கணையை ரஷ்யா வெற்​றிகர​மாக பரிசோ​தித்​துள்​ளது. இதை எந்த வகை வான் பாது​காப்பு ஏவு​கணை​களாலும் நடு​வானில் தடுத்து அழிக்க முடி​யாது என ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர். ரஷ்யா ‘9எம்​730 புரேவெஸ்ட்​னிக்’ என்ற இந்த அணு சக்தி ஏவுகணையை கடந்த 2018ஆம் ஆண்டு அறி​முகம் செய்​தது. சக்​தி​வாய்ந்த ஏவு​கணை தயாரிப்பு திட்​டத்​தில் ஈடுபட​வேண்​டாம் என்ற ஒப்பந்​தத்​தில் இருந்து அமெரிக்கா கடந்த 2001ஆம் ஆண்டு வெளியேறியது. இதையடுத்து நேட்டோ படைகள் விரிவுபடுத்​தப்​பட்டன. அமெரிக்​கா​வின் வான் பாது​காப்பு ஏவு​கணை திட்​டங்​களும் விரிவுபடுத்​தப்​பட்​டன.

இதையடுத்து 9எம்​730 புரேவெஸ்ட்​னிக் என்று அணு சக்தி ஏவுகணையை ரஷ்யா அறி​முகம் செய்​தது. இதை அமெரிக்​கா​வின் வான் பாது​காப்பு ஏவு​கணை திட்​டத்​துக்​கான ரஷ்​யா​வின் பதிலடி நடவடிக்கை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கூறி​னார். இந்த ஏவு​கணையை எவ்​வளவு தூரம் வேண்​டு​மா​னாலும் செலுத்த முடி​யும். இது பறந்து செல்​லும் பாதையை​யும் கணிக்க முடி​யாது எனவும் அவர் கூறினார்.

இந்​நிலை​யில் இந்த ஏவு​கணையை ரஷ்யா பரிசோதனை செய்துள்ளது. இந்த ஏவு​கணை வானில் சுமார் 15 மணி நேரம் பறந்து 14,000 கி.மீ தூரம் சென்​ற​தாக ரஷ்ய இராணுவத் தளபதி ஜெனரல் வலேரி கெராசிமோவ் கூறி​னார்.இந்த சோதனை வெற்​றிகர​மாக முடிந்​ததையடுத்து உக்​ரைன் போரை நடத்தி வரும் இராணுவ உயர் அதி​காரி​களு​டன் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் பேசி​னார். போர்க்​கால சீருடை அணிந்து பேசிய புட்டின், ‘‘இது போன்ற சக்​தி​வாய்ந்த ஏவு​கணை உலகில் எந்த நாட்​டிட​மும் இல்​லை. இது போன்ற ஆயுதத்தை உரு​வாக்​கு​வது சாத்​தி​யமில்லை என ரஷ்ய நிபுணர்​கள் முன்பு கூறினர். ஆனால் தற்​போது, இந்த முக்கிய பரிசோதனை வெற்​றிகர​மாக நிறைவடைந்​துள்​ளது’ என பெரு​மிதத்​துடன் கூறி​னார்

The post ரஷ்யாவின் அணுசக்தி ஏவுகணை சோதனை வெற்றி – ரஷ்யா appeared first on Oruvan.com.

உக்ரைனின் மிகப்பெரிய போர்க் கப்பலை தாக்கி அழித்தது ரஷ்யா
உக்ரைன் நாட்டின் மிகப் பெரிய போர்க்கப்பலை, ட்ரோன் மூலம் ரஷ்யா தகர்த்தது. இதில் உக்ரைன் சிப்பபாய் ஒருவர் உயிரிழந்தார், பலர் காயம் அடைந்தனர். காணாமல் போன படையினரை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுவதாக உக்ரைன் கடற்படை தெரிவித்துள்ளது.

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முயற்சி எடுத்தார். ஆனால் ரஷ்ய ஜனாதிபதி புடின், உக்ரைன் மீதான தாக்குதலை இன்னும் நிறுத்தவில்லை. உக்ரைன் மீது ரஷ்யா தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது.

உக்ரைனில் உள்ள கட்டிடங்கள் மற்றும் ட்ரோன் தயாரிப்பு நிலையங்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தி வந்த ரஷ்யா, தற்போது உக்ரைன் போர்க்கப்பல்களை குறிவைத்து தாக்குதலை தொடங்கியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே பலவகையான ட்ரோன்களின் தயாரிப்பை ரஷ்யா தீவிரப்படுத்தியது. போர்க்கப்பல்களை தாக்குவதற்காக ‘ஷீ ட்ரோன்களை’ தயாரித்தது.

தற்போது இதன் மூலம் முதல் முறையாக தாக்குதலை தொடங்கியுள்ளது. ரிமோட் மூலம் தண்ணீரில் படகு போல் செல்லும் இந்த ட்ரோன், போர்க் கப்பல்களை தாக்கி மூழ்கடிக்கும் திறன் வாய்ந்தது.

உக்ரைன் கடற்படையில் மிகப் பெரிய போர்க்கப்பலாக ‘சிம்ஃபெரோபோல்’ இருந்தது. இது கடந்த 2021-ம் ஆண்டு உக்ரைன் கடற்படையில் இணைக்கப்பட்டது. லகுனா ரக போர்க் கப்பலான இதில் ரேடியோ, எலக்ட்ரானிக், ரேடார் மற்றும் ஆப்டிக்கல் வேவு கருவிகள் இருந்தன.

இந்தக் கப்பல் டனுபே ஆற்றை கடந்து சென்றபோது, அதன் மீது ரஷ்யா, ‘ஷீ ட்ரோன்’ மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் உக்ரைன் போர்க்கப்பல் சிம்ஃபெரோபோல் வெடித்து சிதறியது. உக்ரைன் போர்க்கப்பலை, ஷீ ட்ரோன் மூலம் ரஷ்யா வெற்றிகரமாக தாக்கியது இதுவே முதல் முறை.

The post உக்ரைனின் மிகப்பெரிய போர்க் கப்பலை தாக்கி அழித்தது ரஷ்யா appeared first on Oruvan.com.

ரஷ்யாவுக்கு உளவு பார்த்தவர் நியூசிலாந்தில் கைது
ரஷ்ய நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணை நியூசிலாந்து இராணுவ சிப்பாயொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டது தெரிந்தது.

நியூசிலாந்து நாட்டின் இளம் இராணுவ சிப்பாயொருவர், எதிரிநாட்டுக்கு உளவு பார்ப்பதாக கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இராணுவ உளவுப்பிரிவில் பணிபுரிந்து வந்த அவர் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

அவர் கடந்த 2020-ம் ஆண்டு இராணுவத்தில் இணைந்து சேவையாற்றி வருவதாகவும், அவர் ரஷ்ய நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அந்த ரஷ்ய பெண் மூலமாக நியூசிலாந்து நாட்டின் இராணுவ ரகசியங்கள் மற்றும் முக்கிய தளவாட அமைப்புகள் அமைந்துள்ள இடங்கள் குறித்து ரஷியாவுக்கு தகவல்களை அவர் கசியவிட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. அவருக்கு 7 முதல் 10 ஆண்டுகள்வரை சிறை தண்டனை கிடைக்கும் என தெரியவருகின்றது.

The post ரஷ்யாவுக்கு உளவு பார்த்தவர் நியூசிலாந்தில் கைது appeared first on Oruvan.com.

ரஷ்யாவைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஹவாய் தீவிலும் சுனாமி: சீனாவுக்கும் எச்சரிக்கை
ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக அங்கு சுனாமி தாக்கிய நிலையில், அமெரிக்காவின் ஹவாய் தீவுகளை சுனாமி தாக்கியுள்ளது.

ஹவாயில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கடலோரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்குமாறு அரசு வலியுறுத்தியுள்ளது. ஹவாயின் மவுயி நகரில் உள்ள கஹுலுய் என்ற இடத்தில் கடல் மட்டத்திலிருந்து 4 அடி உயரத்தில் சுனாமி அலைகள் தாக்க ஆரம்பித்திருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வணிக துறைமுகங்களையும் மூடுவதாக ஹவாய் அவசர மேலாண்மை அமைப்பு அறிவித்தது.

இந்தச் சூழலில், ஹவாயின் ஹனாலி பகுதியில் முதற்கட்டமாக 3 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும்பத் தொடங்கியுள்ளன. சுனாமி அலைகள் தாக்கம் பல மணி நேரம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுனாமி முன்னெச்சரிக்கையாக அமெரிக்க கடலோர காவல்படை அனைத்து வணிகக் கப்பல்களையும், ஹவாயின் துறைமுகங்களையும் காலி செய்ய அறிவுறுத்தியுள்ளது. சுனாமி எச்சரிக்கை நீக்கப்படும் வரை எந்த கப்பல்களும் உள்ளே நுழைவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மிட்வே அட்டோலில் 6 அடி உயர சுனாமி அலைகள் எழுந்ததாக ஹவாய் ஆளுநர் ஜோஷ் கிரீன் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், அவர் ஹவாயில், ஹொனலுலு மேயர் ரிக் பிளாங்கியார்டி குடியிருப்பாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புக்காக உயரமான தரை அல்லது கட்டிடங்களின் மேல் தளங்களுக்குச் செல்லுமாறு வலியுறுத்தினார்.

இது தொடர்பாக பேசிய அவர், “சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் கடற்கரையோரத்தில் தங்கவோ அல்லது சுனாமி எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க தங்கள் உயிரைப் பணயம் வைக்கவோ கூடாது. இது ஒரு வழக்கமான அலை அல்ல. நீங்கள் சுனாமியால் தாக்கப்பட்டால் அது உண்மையில் உங்களைக் கொன்றுவிடும்.” என்றார்.

இதற்கிடையே சீனாவுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தவிர பெரு, ஈகுவேடார் நாடுகளும் சுனாமி எச்சரிக்கை விடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.

The post ரஷ்யாவைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஹவாய் தீவிலும் சுனாமி: சீனாவுக்கும் எச்சரிக்கை appeared first on Oruvan.com.

ரஷ்ய, ஈரான் கடற்படை கஸ்பியன் கடலில் போர்ப்பயிற்சி
ரஷ்யாவும் ஈரானும் கூட்டு கடற்பயிற்சியை கஸ்பியன் கடற்பரப்பில் முன்னெடுததுள்ளன. இப்பயிற்சியில் ஈரான் இஸ்லாமிய புரட்சி காவலர் படையும் பங்குபற்றியுள்ளது.

ரஷ்ய-ஈரானிய கடற்படைகளை உள்ளடக்கிய இப்பயிற்சியில் கடல்சார் மீட்பு மற்றும் நிவாரணப் பயிற்சிகள் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளளன.

‘கசரெக்ஸ் 2025’ என்ற குறியீட்டு பெயரில் இடம்பெறும் இப்பயிற்சியில் புரட்சி காவலர் படையின் தியாகி பசீர் போர்க்கப்பலும் பங்குபற்றியுள்ளதாக ஈரானிய பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். ஈரானிய கடற்படையின் வடக்கு பிரிவால் ஏற்பாடு செய்து ‘கஸ்பியன் கடலைப் பாதுகாப்பதற்கு ஒன்றிணைவோம்’ என்ற தொனிப்பொருளில் நடத்தப்படும் இக்கூட்டுப்பயிற்சி இன்று நிறைவடைய உள்ளது, ஈரானிய கடற்படை, இஸ்லாமிய புரட்சி காவல்படையின் கடற்படை, ஈரானின் சட்ட அமுலாக்கக் கட்டளை பிரிவு, ரஷ்ய கூட்டமைப்பின் கடற்படை ஆகியவற்றின் வீரர்கள் இப்பயிற்சியில் பங்கேற்றுள்ளனர். அஜர்பைஜானும் கஜகஸ்தானும் இப்பயிற்சியில் பார்வையாளராகப் பங்குபற்றியுள்ளது.

The post ரஷ்ய, ஈரான் கடற்படை கஸ்பியன் கடலில் போர்ப்பயிற்சி appeared first on Oruvan.com.

அச்சுறுத்தல்களுக்கு அடிபணியோம்: ட்ரம்புக்கு ரஷ்யா பதிலடி
அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியப்போவதில்லை என ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது.

உக்ரைன் மீதான போரை நிறுத்த ரஷியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 50 நாள்கள் கெடு விதித்துள்ளார்.

இதற்கமைய ரஷ்யா போரை நிறுத்தாவிட்டால் அந்நாட்டின் மீது 100 சதவீத கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் இந்தக் மிரட்டலுக்கு ரஷ்யா செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பதிலளித்தார்.

” தங்கள் நாடு யாருடைய அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாது.” என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

” அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறிய கருத்துக்கள் மிகவும் தீவிரமானவை. குறிப்பாக, சில கருத்துக்கள் ஜனாதிபதி புடினை தனிப்பட்ட முறையில் குறிப்பிடுவதாக தெரிகிறது. யாருடைய இறுதி எச்சரிக்கைகளையும் நாங்கள் பொருட்படுத்தவில்லை . வாஷிங்டனின் கருத்துக்களை பகுப்பாய்வு செய்ய நாங்கள் நேரம் ஒதுக்குவோம். ஜனாதிபதி புடின் அவசியம் என்று கருதினால் நிச்சயமாக பதிலளிப்பார் ” என்று அவர் குறிப்பிட்டார்.

The post அச்சுறுத்தல்களுக்கு அடிபணியோம்: ட்ரம்புக்கு ரஷ்யா பதிலடி appeared first on Oruvan.com.