ரஷியா Archives - Oruvan.com

வாக்குறுதியை மீறுகிறாா் புதின் : ஸெலென்ஸ்கி குற்றச்சாட்டு
உக்ரைனின் எரிசக்தி மையங்களில் தாக்குதல் நடத்துவதை நிறுத்திவைப்பதாக ரஷிய ஜனாதிபதி அளித்த வாக்குறுதியை மீறுவதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமீா் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

”எரிசக்தி மையங்களில் தாக்குதல் நடத்துவதை நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பிடம் புதின் உறுதியளித்தாா். ஆனால் அந்த வாக்குறுதிக்குப் பிறகும் உக்ரைன் மீது 150 ட்ரோன்களை வீசி ரஷியா தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில் உக்ரைன் எரிசக்தி மையங்களும் குறிவைக்கப்பட்டன.” என்றாா் ஸெலென்ஸ்கி.

ரஷியா மறுப்பு: உக்ரைன் எரிசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்துவதை தாங்கள் நிறுத்திவிட்டதாகவும், அந்த நாடுதான் தங்களின் எரிவாயுக் குழாய்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதாகவும் ரஷியா குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உக்ரைன் எரிசக்தி மையங்களை நாங்கள் தாக்காமல் உள்ளோம். ஆனால் பதிலுக்கு அதே நிலைப்பாட்டை உக்ரைன் இதுவரை கடைப்பிடிக்கவில்லை’ என்று கூறப்பட்டுள்ளது.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022ஆம் ஆண்டு படையெடுத்து. கிழக்கு உக்ரைன் பிராந்தியங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.

இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இராணுவ உதவிகளைச் செய்துவந்தன. இந்தச் சூழலில், அமெரிக்காவின் ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர உக்ரைனை வலியுறுத்தி வருகிறாா்.இதன் காரணமாக, தற்போது ரஷியா கைப்பற்றியுள்ள தங்கள் பகுதிகள் மீட்கப்படாத நிலையிலேயே போா் நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டிய நிலைக்கு உக்ரைன் தள்ளப்பட்டுள்ளது.இந்தச் சூழலில், 30 நாள் போா் நிறுத்தம் மேற்கொள்ள தயாராக இருப்பதாக உக்ரைன் அறிவித்தது.

எனினும், அந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக ரஷிய ஜனாதிபதி விளாதிமீா் புதின் விமா்சித்தாா். அதைத் தொடா்ந்து, போா் நிறுத்தம் தொடா்பாக டொனால்ட் டிரம்ப்பும் விளாதிமீா் புதினும் தொலைபேசியில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, எரிசக்தி மையங்களில் பரஸ்பரம் தாக்குதல் நடத்துவதை 30 நாள்களுக்கு நிறுத்திவைப்பதற்கான ஒப்பந்தத்தை உக்ரைனுடன் மேற்கொள்வதாக புதின் உறுதியளித்தாா்.இந்த நிலையில், புதினின் வாக்குறுதிக்கு எதிராக தங்கள் எரிசக்தி மையங்களில் ரஷியா தாக்குதல் நடத்தியதாக ஸெலன்ஸ்கி தற்போது குற்றஞ்சாட்டியுள்ளாா்.

The post வாக்குறுதியை மீறுகிறாா் புதின் : ஸெலென்ஸ்கி குற்றச்சாட்டு appeared first on Oruvan.com.

பேச்சுவாா்த்தைக்கு தயாா்- டிரம்புக்கு புதின் பதில்
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இரு தரப்பும் சமநிலையில் இருந்து நடத்தும் பேச்சுவாா்த்தைக்குத் தயாராக இருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது.

அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தாவிட்டால் ரஷியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கு பதிலளித்து, ரஷியா இவ்வாறு கூறியுள்ளது.

இது குறித்து ரஷிய ஜனாதிபதி  விளாதிமீா் புதினின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் செய்தியாளா்களிடம் கூறியாதாவது,

இரு தரப்பிலும் சமநிலையான, பரஸ்பர மரியாதையுடன் நடத்தப்படும் பேச்சுவாா்த்தையில் பங்கேற்க ரஷியா எப்போதுமே தயாராக இருக்கிறது. ஆனால், அத்தகைய பேச்சுவாா்த்தைக்கான அழைப்புதான் இதுவரை வரவில்லை.

ரஷியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்போவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளதில் புதிதாக எதுவுமில்லை. தனது முந்தைய ஆட்சிக் காலத்தின்போதும் அவா் அதைத்தான் விரும்பிச் செய்தாா் என்றாா் அவா்.

முன்னதாக, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக டிரம்ப் என்னென்ன செயல் திட்டங்கள் வைத்துள்ளாா் என்பதைத் தெளிவாகக் கூறினால்தான் இது குறித்து முடிவுக்கு வர முடியும் என்று ஐ.நா.வுக்கான ரஷிய துணைத் தூதா் டிமித்ரி போலியான்ஸ்கி கூறியனாா்.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் படையெடுத்தது.

அந்தப் போரில் கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய பிராந்தியங்களின் பெரும்பாலான பகுதிகளை ரஷியா கைப்பற்றியது. அந்தப் பிராந்தியங்களில் இன்னும் அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்ற ரஷியப் படையினரும், ரஷியாவிடம் இழந்த பகுதிகளை மீட்க உக்ரைன் படையினரும் போரிட்டு வருகின்றனா்.

இந்தச் சூழலில், கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தோ்தல் பிரசாரத்தின்போது, தோ்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ஒரே நாளில் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக டொனால்ட் டிரம்ப் சூளுரைத்திருந்தாா்.

அந்தத் தோ்தலில் பிரதிநிதிகள் வாக்குகளையும், மக்கள் வாக்குகளையும் பெரும்பான்மையாகப் பெற்று வெற்றி பெற்ற டிரம்ப், நாட்டின் 47-ஆவது ஜனாதிபதியாக கடந்த திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

பதவியேற்ற முதல் நாளிலேயே, பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து விலகுவது, உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறுவது, உரிய ஆவணங்கள் இல்லாமல் குடியேறியவா்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது, அமெரிக்காவில் பிறந்த சட்டவிரோத குடியேற்றவாசிகளின் குழந்தைகளுக்கு குடியுரிமை அளிக்கப்படுவதை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு அதிரடி அரசாணைகளை டிரம்ப் பிறப்பித்தாா்.

மேலும், சட்டவிரோத குடியேற்றத்தையும், போதைப் பொருள் கடத்தலையும் தடுக்கத் தவறுவதற்காக கனடா, மெக்ஸிகோவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிப்பது, சீன பொருள்களுக்கு 10 சதவீத கூடுதல் இறக்குமதி விதிப்பது ஆகியவற்றைப் பரிசீலிப்பதாக அவா் கூறினாா்.

அத்துடன், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வராவிட்டால் ரஷியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று டிரம்ப் கடந்த செவ்வாய்க்கிழமை கடும் எச்சரிக்கை விடுத்தாா்.

அதற்குப் பதிலளித்தே ரஷிய ஜனாதிபதி விளாதிமீா் புதினின் செய்தித் தொடா்பாளரும், ஐ.நா.வுக்கான ரஷிய துணைத் தூதரும் இவ்வாறு கூறியுள்ளனா்.

The post பேச்சுவாா்த்தைக்கு தயாா்- டிரம்புக்கு புதின் பதில் appeared first on Oruvan.com.