ரயில் சேவை Archives - Oruvan.com

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்றுமுதல் விசேட ரயில் சேவை
நத்தார் பண்டிகை, பாடசாலை விடுமுறை மற்றும் வருட இறுதியில் காணப்படும் நீண்ட விடுமுறையை முன்னிட்டு மேலதிக ரயில் சேவை ஒன்றை ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

இதற்கமைய, இன்று (24) பிற்பகல் 3.00 மணிக்கு மருதானையிலிருந்து மாத்தறை நோக்கி விசேட கடுகதி ரயில் ஒன்று பயணிக்கவுள்ளது.

அந்த விசேட ரயில், இம்மாதம் 29 ஆம் திகதி காலை 5.00 மணிக்கு மாத்தறை ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் புறப்பட்டு, காலை 8.30 மணிக்குக் கொழும்பு கோட்டையை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை இடையிலான நகரங்களுக்கிடையிலான ரயில் சேவை எதிர்வரும் 25 மற்றும் 28 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தப் ரயில் 9 முதலாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டிகளைக் கொண்டதாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்றுமுதல் விசேட ரயில் சேவை appeared first on Oruvan.com.

சொந்த ஊர்களுக்குச் செல்ல விசேட ரயில் சேவை
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்று (11) முதல் விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்காக 10 விசேட ரயில்கள் சேவையில் சேர்க்கப்படும் என்று ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.

அதன்படி, இன்று இரவு 7.30 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு ஒரு விசேட ரயில் இயக்கப்படும், அதே நேரத்தில், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கும் ரயில் ஒன்று பயணிக்கவுள்ளது.

மேலும், இன்று இரவு 7.20 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து காலிக்கு ஒரு விசேட ரயில் இயக்கப்படும், அதே நேரத்தில் காலியில் இருந்து கொழும்பு கோட்டைக்கு ரயில் ஒன்று இயக்கப்படவுள்ளது.

மேலும், இன்று காலை கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கு விசேட ரயில் ஒன்று பயணித்ததுடன், அந்த ரயில் மீண்டும் எதிர்வரும் 18 ஆம் திகதி திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த 10 விசேட ரயில்கள் ஊடாக புத்தாண்டு பருவம் மற்றும் நீண்ட வார இறுதி விடுமுறை நாட்களில் 31 பயணங்களை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர மேலும் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், சொந்த ஊர்களுக்கு பயணிக்கும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான பேருந்துகளை இன்றைய தினமும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செயல்பாடுகள் மற்றும் சேவை மேற்பார்வை பணிப்பாளர் ஷெரீன் அதுக்கோரல தெரிவித்துள்ளார்.

மேலும், பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பி.எச்.ஆர்.டி. சந்திரசிறி குறிப்பிட்டுள்ளார்.

The post சொந்த ஊர்களுக்குச் செல்ல விசேட ரயில் சேவை appeared first on Oruvan.com.

புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவை
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக 10 சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 11ஆம் திகதி முதல் இந்த ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

ரயில்களில் இருக்கை முன்பதிவு வசதி உள்ள ரயில்களுக்கு, தற்போது அந்த வசதி இணையம் மூலம் வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

“புத்தாண்டு சிறப்பு இரவு தபால் ரயில் (New Year Special Night Mail Train) என்ற பெயரில் ஒரு சிறப்பு ரயிலை ஆரம்பிக்கிறோம். இது கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி இயக்கப்படும். இந்த ரயில் கொழும்பு கோட்டையில் இருந்து மாலை 7:30 மணிக்கு புறப்படும். இது ஏப்ரல் 11, 12, 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் இயக்கப்படும்.

அதே நேரத்தில், இதற்கு இணைந்ததாக பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை வரையும் ரயில் ஒன்று இயக்கப்படவுள்ளது. புத்தாண்டு காலத்தில் காலியில் இருந்து அனுராதபுரம் வரை ஒரு ரயிலை இயக்க திட்டமிட்டுள்ளோம். காலியில் இருந்து காலை 4:00 மணிக்கு புறப்படும் இந்த ரயில், ஏப்ரல் 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் இயக்கப்படும்.

ஏப்ரல் 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் கொழும்பு கோட்டையில் இருந்து காலி வரை மாலை 3:00 மணிக்கு ஒரு ரயிலை இயக்குகிறோம். அதேபோல், ஏப்ரல் 11, 12, 16 மற்றும் 21 ஆகிய திகதிகளில் காலியில் இருந்து காலை 6:10 மணிக்கு கொழும்பு கோட்டை வரை ரயில் ஒன்று இயக்கப்படவுள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரை, கொழும்பு கோட்டையில் இருந்து பெலியத்த வரை சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.” என்றார்.

The post புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவை appeared first on Oruvan.com.