ரணில் விக்ரமசிங்க Archives - Oruvan.com

ஏப்ரல் மாதம் எம்.பியாகும் ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஏப்ரல் மாதம் தமிழ், சிங்கள புத்தாண்டின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராகும் எண்ணத்தில் இருப்பதாக எதிர்க்கட்சியின் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்திருந்த ரணில் விக்ரமசிங்க, 2021ஆம் ஆண்டு மீண்டும் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு வந்திருந்தார்.

கடந்த 2022ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அரகலய போராட்டத்தின் பின்னர் பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் நாட்டின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக உருவெடுத்திருந்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அவர் படுதோல்வியடைந்திருந்ததால் அரசியல் செயல்பாடுகளில் இருந்து சற்று ஒதுங்கியிருந்தார்.

என்றாலும், ஊழல் குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்ட பின்னர் மீண்டும் தீவிர அரசியலில் களமிறங்கியுள்ள ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் தமிழ், சிங்களப் புத்தாண்டின் பின்னர் நாடாளுமன்றத்துக்கு செல்லும் எண்ணத்தில் காய்களை நகர்த்தி வருவதாக எதிர்க்கட்சிகளின் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

The post ஏப்ரல் மாதம் எம்.பியாகும் ரணில் appeared first on Oruvan.com.

நிதி துஷ்பிரயோகம்; ரணிலுக்கு எதிரான விசாரணை இன்று
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, இன்று (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவி வகித்த காலப்பகுதியில், அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் செல்வதற்கு அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதன்படி, வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சமூகமளித்த முன்னாள் ஜனாதிபதி, கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, ஓகஸ்ட் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

பின்னர், முன்னாள் ஜனாதிபதி தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட வைத்திய அறிக்கைகளைக் கருத்திற்கொண்ட கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர, முன்னாள் ஜனாதிபதியை தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளின் கீழ் விடுவிக்க உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையை இன்றைய தினம் (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறும் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

The post நிதி துஷ்பிரயோகம்; ரணிலுக்கு எதிரான விசாரணை இன்று appeared first on Oruvan.com.

இலங்கையில் பல கட்சி ஆட்சி முறையை ஒழிக்க முயற்சி
இலங்கை என்பது நீண்டகாலமாக ஜனநாயகத்தின் வழியில் பயணிக்கும் நாடு. செல்வந்த வர்க்கம் மாத்திரமல்ல சாதாரண மக்களும் ஜனாதிபதியாக முடியும். அப்படிதான் ரணசிங்க பிரேமதாச, மைத்திபால சிறிசேன மற்றும் அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் ஜனாதிபதிகளாக தெரிவாகினர் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

எமது நாட்டில் நீண்டகாலமாக பல கட்சி ஆட்சிமுறை உள்ளது. அதனை ஒழிக்க அரசாங்கம் முற்படுகிறது. அதற்கு இடமளிக்க முடியாது.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய தருணமிது. என்னை கைது செய்வதன் ஊடாக எதிர்க்கட்சியினை அச்சுறுத்த பார்க்கின்றனர். இதற்கு நாம் அச்சப்பட கூடாது. அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என்றும் ரணில் விக்ரமசிங்க கூறினார்.

The post இலங்கையில் பல கட்சி ஆட்சி முறையை ஒழிக்க முயற்சி appeared first on Oruvan.com.

ரணில் சாணக்கியனிற்கு வழங்கியது அபிவிருத்தி நிதியில் மோசடி
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு அபிவிருத்திக்காக 400 மில்லியன் ஒதுக்கினார். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா 800 மில்லியன் வழங்கப்பட்டதாக தெரிவிக்கின்றார் என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் வர்த்தகருமான அன்ரனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

எனவே மிகுதி 400 மில்லியன் ரூபா எங்கே? என்ன நடந்தது? இந்த மோசடி தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, ஜனாதிபதி விசாரணை குழு ஒன்றை நியமித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று(27) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்ட போதே அன்ரனிசில் ராஜ்குமார் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

அண்மையில் கச்சேரியில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் என் மீது நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அப்பட்டமான பொய் குற்றச்சாட்டு ஒன்றை வைத்திருந்தார்.

எனவே அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் என் மீது சுமத்தப்பட்ட பொய் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் என இந்த ஊடக சந்திப்பு ஏற்படுத்தினேன்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அபிவிருத்திக்காக அவருக்கு 400 மில்லியன் ரூபா பணத்தை ஒதுக்கினார்.

The post ரணில் சாணக்கியனிற்கு வழங்கியது அபிவிருத்தி நிதியில் மோசடி appeared first on Oruvan.com.

ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனுக்கு பின்னர் கைதான முதல் அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைதுசெய்யப்பட்ட விவகாரம் இலங்கை அரசியலில் மாத்திரமல்ல உலக அரசியலிலும் பேசுபொருளாக மாறியிருந்தது.

நேற்றைய தினம் ரணில் விக்ரமசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த போதிலும் இந்த கைது அவரது அரசியல் வாழ்க்கையில் பெரும் இழுக்கை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கைதின் பின்னர் இலங்கை வரலாற்றில் கைதான முதல் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதிவாகியிருந்தார்.

இலங்கையில் 1978ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பின் ஊடாக ஜனாதிபதி பதவி அறிமுகப்படுத்தப்பட்டது.

நாட்டின் முதல் ஜனாதிபதியாக ஜே.ஆர்.ஜயவர்தன தெரிவாகியிருந்தார். அவருக்குப் பின்னர் ரணசிங்க பிரேமதாச, டி.பி.விஜேதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க என பலர் ஜனாதிபதிகளாக பதவி வகித்திருந்தனர்.

அநுரகுமார திசாநாயக்கவுக்கு முன்னர் தெரிவாகியிருந்த அனைத்து ஜனாதிபதிகள் மீதும் குற்றச்சாட்டுகள் இருந்தன. ஆனால், எவரும் கைதுசெய்யப்பட்டிருக்கவில்லை.

ஆட்சி மாற்றங்கள் இடம்பெற்றிருந்தாலும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை எந்தவொரு அரசாங்கமும் விசாரணைக்கு உட்படுத்தி தண்டனை வழங்க முற்பட்டதில்லை.

19ஆவது திருத்தச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட முன்னர், முன்னாள் ஜனாதிபதிகள், தாம் பதவி வகித்த காலத்தில் எடுத்த முடிவுகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக வழக்கு தொடரவோ அல்லது தண்டனைக்கு உட்படுத்தவோ முடியாதென்ற வகையில் சட்ட ஏற்பாடுகள் இருந்தன. அதனை மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம்தான் 2016ஆம் ஆண்டு 19ஆவது திருத்தச்சட்டத்தில் மாற்றியமைத்தது.

இந்தப் பின்புலத்தில்தான் முதல் முறையாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்தின் கீழ் கடந்தகால அரசாங்கங்களின் ஊழல், மோசடிகள் மற்றும் அரச நிதியை வீண் விரயம் செய்தமை தொடர்பில் ரணில் விக்ரமசிங்க கைதுசெய்யப்பட்டிருந்தார்.

அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு சென்ற பயணத்தில் அரச நிதி வீண் விரயம் செய்யப்பட்ட குற்றச்சாட்டில் ரணில் விக்ரமசிங்க கைதுசெய்யப்பட்டதுடன், நேற்றைய தினம் 50 மூன்று சரீர பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், 1815ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் அரச தலைவர் ஒருவர் கைதுசெய்யப்பட்ட முதல் சந்தர்ப்பமாக இதனை பார்க்கின்றனர்.

கண்டி இராச்சியத்தின் இறுதி மன்னரான ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் 1815 பெப்ரவரி 18 அன்று கைது செய்யப்பட்டிருந்தார். மெதமஹநுவர என்ற இடத்தில் தலைமறைவாக இருந்தபோது, பொதுமக்கள் குழுவினரால் அவர் கண்டறியப்பட்டு ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதன் விளைவாக கண்டி இராச்சியம் முடிவுக்கு வந்தது.

ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனுக்கு பின்னர் கைதுசெய்யப்பட்ட முதல் அரச தலைவர் ரணில் விக்ரமசிங்கவே என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் ஜனாதிபதி பதவி அறிமுகப்படுத்தப்பட முன்னர் காணப்பட்ட பிரதமர் பதவியை வகித்தவர்கள்கூட கைதுசெய்யப்பட்டிருக்கவில்லை. அத்துடன், ஆங்கிலேயேர் ஆட்சியில் இருந்த ஆளுநர்கள்கூட கைதுசெய்யப்பட்டிருக்கவில்லை.

இந்த சமகாலத்தில் ஒரு பேசுபொருளாக மாத்திரமின்றி, வரலாற்று ரீதியாக மிகப்பெரிய பதிவாக மாறியுள்ளது. மிஸ்டர் கிளீன் என ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க, 2015ஆம் ஆண்டுமுதல் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி வந்ததுடன், தற்பொது அவர் கைதும் செய்யப்பட்டுள்ளார்.

இது அவரது அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய இலுக்காக மாறியுள்ளது.

The post ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனுக்கு பின்னர் கைதான முதல் அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க appeared first on Oruvan.com.

ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி
விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்ததன் காரணமாக வைத்திய ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

The post ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி appeared first on Oruvan.com.

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு விளக்கமறியல்
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (22) உத்தரவிட்டது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பாக ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மற்றும் சந்தேகநபர் ரணில் விக்ரமசிங்க சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜா பிரேமரத்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இந்த உத்தரவை பிறப்பித்த நீதவான், விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களை ஆராய்ந்ததில், இந்த வழக்கின் அடிப்படையான பிரச்சினைக்குரிய பயணம் ஒரு தனிப்பட்ட பயணம் என்று தெரிகிறது என்று கூறினார்.

சந்தேகநபர் இந்த பயணத்திற்கு அரசாங்க நிதியைப் பயன்படுத்தியதை சந்தேகநபரின் சட்டத்தரணிகள் மறுக்கவில்லை என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பொது சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்படும்போது அசாதாரண சூழ்நிலைகள் வெளிப்படும்போது மட்டுமே பிணை வழங்க முடியும் என்றும், ஆனால் சந்தேகநபரின் பிணை விண்ணப்பம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்கள் அசாதாரண சூழ்நிலைகளை வெளிப்படுத்தாததால், அவருக்கு பிணை வழங்க முடியாது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, சந்தேக நபரின் பிணை மனுவை நிராகரித்த நீதவான், அவரை 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

சந்தேக நபருக்கு சிறையில் தேவையான பாதுகாப்பு மற்றும் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்றும் நீதவான் மேலும் உத்தரவிட்டார்.

வெளிநாட்டுப் பயணத்தின் போது அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (22) மதியம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அவர் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டபோது இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

அதன்படி, ரணில் விக்ரமசிங்க பிற்பகல் 03.00 மணியளவில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இலங்கை வரலாற்றில் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பதவிக் காலத்தில், 2023 செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் நியூயோர்க்கிற்குச் சென்றிருந்தார்.

சுற்றுப்பயணத்தை முடித்து நாட்டிற்குத் திரும்புவதற்கு முன்பு, முன்னாள் ஜனாதிபதி தனது மனைவி மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள லண்டன் சென்றிருந்தார்.

இங்கிலாந்தின் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜான் ராஃப்டர், லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் மூலம் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவிக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பிதழ் வழங்கியிருந்தார்.

இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட சுற்றுப்பயணத்தின் போது அரசாங்க நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி ஒரு நபர் சமீபத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்ததாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

அதன்படி, விசாரணை தொடங்கப்பட்டு, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க மற்றும் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட உதவியாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமிருந்து சமீபத்தில் அந்தத் திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்தது.

அதைத் தொடர்ந்து, விக்ரமசிங்கவை இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, அவர் நேற்று காலை 9.00 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார்.

சுமார் 4 மணி நேரம் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி பிற்பகல் 1.15 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் நேற்று பிற்பகல் 3.00 மணியளவில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அந்த நேரத்தில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட அவரது ஆதரவாளர்கள் பலர் நீதிமன்ற வளாகத்திற்கு வந்திருந்தனர்.

அதன்படி, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி தொடர்பான சட்ட நடவடிக்கைகள் கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

பின்னர் மாலை 5.30 மணியளவில் நீதவான் வழக்கு தொடர்பான உத்தரவை அரை மணித்தியாலத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார்.

சந்தேகநபரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, முறைப்பாட்டாளர் தரப்பு சார்பாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் விளக்கமளித்தார்.வி.எஸ். கருணாரத்ன என்ற நபர் 17.03.2025 அன்று ஜனாதிபதியிடம் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தில் உள்ளக விசாரணை நடத்தப்பட்டதாகவும், பின்னர் 23.05.2025 அன்று ஜனாதிபதியின் செயலாளரால் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக இருந்த காலத்தில், 13.09.2023 முதல் 20.09.2023 வரை கியூபா மற்றும் அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பின்னர், 22 மற்றும் 23.09.2023 ஆகிய திகதிகளில் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்வதாகக் கூறி தனிப்பட்ட பயணத்தில் ஈடுபட்டதன் மூலம் அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதன்படி, தொடர்புடைய சம்பவம் தொடர்பாக 33 சாட்சிகளிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், நாட்டின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவை சந்தேகநபராகப் பெயரிட்டு கைது செய்ததாக திலீப பீரிஸ் தெரிவித்தார்.

The post முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு விளக்கமறியல் appeared first on Oruvan.com.

இலங்கை வரலாற்றில் கைதான முதல் ஜனாதிபதி ரணில்
இலங்கை வரலாற்றில் கைதான முதல் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதிவாகியுள்ளார்.

இலங்கையில் 1978ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பின் ஊடாக ஜனாதிபதி பதவி அறிமுகப்படுத்தப்பட்டது.

நாட்டின் முதல் ஜனாதிபதியாக ஜே.ஆர்.ஜயவர்தன தெரிவாகியிருந்தார். அவருக்குப் பின்னர் ரணசிங்க பிரேமதாச, டி.பி.விஜேதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க என பலர் ஜனாதிபதிகளாக பதவி வகித்திருந்தனர்.

தற்போது அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவி வகிக்கிறார். ரணில் விக்ரமசிங்கவுக்கு முதல் பதவி வகித்த அனைத்து ஜனாதிபதிகள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தன. ஆனால், எந்தவொரு முன்னாள் ஜனாதிபதியும் கைதுசெய்யப்பட்டிருக்கவில்லை.

ஆட்சி மாற்றங்கள் இடம்பெற்றிருந்தாலும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை எந்தவொரு அரசாங்கமும் விசாரணைக்கு உட்படுத்தி தண்டனை வழங்க முற்பட்டதில்லை.

ஆனால், முதல் முறையாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்தின் கீழ் கடந்தகால அரசாங்கங்களின் ஊழல், மோசடிகள் மற்றும் அரச நிதியை வீண் விரயம் செய்தமை தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

முன்னாள் அமைச்சர்கள், எம்.பிகள், அரச நிறுவனங்களில் பிரதானிகளாக மற்றும் அதிகாரிகளாக பணியாற்றிய பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், சமகால அரசாங்கத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபடும் அதிகாரிகளும் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர்.

இந்தப் பின்புலத்திலேயே தற்போது ரணில் விக்ரமசிங்கவும் கைதுசெய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைதுசெய்யப்படுவது இலங்கை வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு சென்ற பயணம் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்றுவரும் பின்புலத்திலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

The post இலங்கை வரலாற்றில் கைதான முதல் ஜனாதிபதி ரணில் appeared first on Oruvan.com.

ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியுள்ளார்.

ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு சென்ற பயணம் தொடர்பான விசாரணைக்காக இவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளராக இருந்த சமன் ஏகநாயக்க மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமும் பொலிஸார் ஏற்கனவே வாக்குமூலம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை appeared first on Oruvan.com.

ரணிலின் வெளிநாட்டுப் பயணங்கள்; CID விசாரணை
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுரவிடம் இந்த விடயங்களை குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அறிக்கையிட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேற்கொண்ட தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் அப்பயணங்கள் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பில் பொதுச்சொத்து சட்டத்தின் கீழ் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விசாரணை தொடர்பில் தற்போது வெளிநாட்டிலுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் கடமையாற்றிய, இரண்டு சிரேஷ்ட அதிகாரிகளிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலங்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

The post ரணிலின் வெளிநாட்டுப் பயணங்கள்; CID விசாரணை appeared first on Oruvan.com.