ரணில் கைது Archives - Oruvan.com

ரணில் கைது – எரிக் சொல்ஹெய்ம் அதிருப்தி
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமைக்கு இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கவை விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது சமூக ஊடக கணக்கில் விடுத்துள்ள பதிவொன்றின் மூலம் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க, 2022ஆம் ஆண்டில் இலங்கை பொருளாதார மற்றும் அரசியல் பேரழிவை அடைந்தபோது அதைக் காப்பாற்ற எழுந்து நின்ற தலைவர் அவர் என்றும், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்றும் சொல்ஹெய்ம் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊழலுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் பிரச்சாரத்தை முழுமையாக ஆதரிக்க வேண்டும், ஆனால் உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று எரிக் சொல்ஹெய்ம் மேலும் கேட்டுக்கொள்கிறார்.

இதேவேளை, தனது பதவி காலத்தில் அரச நிதியை தவறாக பயன்படுத்தியமைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் இறுதியில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

The post ரணில் கைது – எரிக் சொல்ஹெய்ம் அதிருப்தி appeared first on Oruvan.com.

ரணிலுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம்!! தேசிய வைத்தியசாலையில் அவசர பரிசோதனைகள்
குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர், மருத்துவ ஆலோசனையின் பேரில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஏற்பட்ட கடுமையான நீரிழப்பு காரணமாக சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக, முன்னாள் ஜனாதிபதியின் இதயம் மற்றும் சிறுநீரகங்களின் நிலையில் மாற்றம் காணப்படுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த மாற்றம் இரண்டு முதல் மூன்று நாட்களுக்குள் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நீரிழப்புடன் கடுமையான தலைவலியும் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதிக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதா என்பதைக் கண்டறிய சோதனைகள் நடத்தப்பட்டதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அவரது உடல்நிலையை இயல்பு நிலைக்குக் கொண்டுவர சிகிச்சை வழங்கப்படுவதாகவும், அவரது உடல்நிலையை சிறப்பு வைத்தியர்கள் குழு உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலை குறித்து நாளை விஷேட அறிக்கை வெளியிடப்படும் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும், தற்போது அவர் நல்ல மனநிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

The post ரணிலுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம்!! தேசிய வைத்தியசாலையில் அவசர பரிசோதனைகள் appeared first on Oruvan.com.

ரணில் விக்ரமசிங்க நாளை கைது செய்யப்படுவார் – சுதத்த திலகசிறி தகவல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை வெள்ளிக்கிழமை 22ஆம் தேதி குற்றப் புலனாய்வுத் துறையினரால் நிச்சயமாக கைது செய்யப்படுவார் என்று பிரபல யூடியூபர் சுதத்த திலகசிறி தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகத்தின் காணொளியை வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நாட்டின் சட்டம் அனைவருக்கும் பொதுவானது. இந்த நாட்டில் பிறந்த அனைவரும் அந்த ட்டத்தின் கீழ் உள்ளனர். சட்டப் புத்தகத்தில் உள்ளபடி நீதிமன்றம் முடிவுகளை எடுக்கின்றது.

நாளை ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார். ரணில் விக்ரமசிங்க நாளை கைது செய்யப்படாவிட்டால், தனது யூடியூப் பக்கத்தை முடக்கிக்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை வெள்ளிக்கிழமை 22ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியாக இருந்தபோது அவர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

இந்த விசாரணை தொடர்பாக ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது அவரது செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏகநாயக்க மற்றும் அவரது தனிப்பட்ட உதவியாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமிருந்தும் முன்னர் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ரணில் விக்ரமசிங்க அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த போது> லண்டனில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள பிரித்தானியா சென்றமை குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

The post ரணில் விக்ரமசிங்க நாளை கைது செய்யப்படுவார் – சுதத்த திலகசிறி தகவல் appeared first on Oruvan.com.