ரஞ்சித் மத்தும பண்டார Archives - Oruvan.com

எதிரணியை ஒடுக்க இடமளியோம் – ரஞ்சித் மத்தும பண்டார
“வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள பணம் நாட்டுக்கு கொண்டுவரப்படும், பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும் எனக் கூறிய தேசிய மக்கள் சக்தியினர், ஆட்சிக்கு வந்த பிறகு அந்த உறுதிமொழியை மறந்துள்ளனர்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கள்வர்களை பிடிப்பதற்கு மற்றும் ஊழல், மோசடிகளைத் தடுப்பதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு நாம் எதிர்ப்பு இல்லை. அதற்கு முழு ஆதரவு வழங்கப்படும்.

எனினும், கள்வர்கள் என்ற போர்வையில் எதிரணியை அடக்க – ஒடுக்க முற்பட்டால் அதனை அனுமதிக்கப்போவதில்லை. அதற்கு எதிராக அணி திரள்வோம்.

கள்வர்களைக் கைது செய்வோம், வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட பணத்தை கொண்டுவருவோம் எனக் கூறிய தேசிய மக்கள் சக்தியினர், அவற்றை மறந்து எதிரணி மீது கைவைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றது.

மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை வைத்துதான் எதிரணியை மட்டுப்படும் நடவடிக்கை நாடாளுமன்றத்துக்குள்ளும், வெளியிலும் இடம்பெறுகின்றது. நாடாளுமன்ற ஜனநாயகத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.” – என்றார் ரஞ்சித் மத்தும பண்டார்.

The post எதிரணியை ஒடுக்க இடமளியோம் – ரஞ்சித் மத்தும பண்டார appeared first on Oruvan.com.

பொதுஜன பெரமுன சஜத் அணிக்கு சவால் கிடையாது – ரஞ்சித் மத்தும பண்டார
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தமது அணிக்கு சவால் கிடையாது எனவும், கூட்டணி அமைப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் மாத்திரமே தற்போது பேச்சு நடத்தப்பட்டுவருகின்றது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

” அனைவருக்கும் அரசியல் செய்யும் உரிமை இருக்கின்றது. அந்தவகையில் மொட்டு கட்சி செயல்படுகின்றது. அவர்களின் நடவடிக்கை எமக்கு சவால் கிடையாது.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணையையே கட்சி ஆதரவாளர்கள் விரும்புகின்றனர். சிலர் எதிர்த்தபோதிலும், பெரும்பாலானவர்கள் ஆதரவு நிலைப்பாட்டிலேயே உள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப்பதவியில் எவ்வித மாற்றமும் வராது. சஜித் பிரேமதாசவே தலைவர். அவருக்கே மக்கள் ஆதரவு உள்ளது.

அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.” – என்றார்

The post பொதுஜன பெரமுன சஜத் அணிக்கு சவால் கிடையாது – ரஞ்சித் மத்தும பண்டார appeared first on Oruvan.com.

அரசாங்கத்தின் எதிர்காலம் கேள்விக்குறியில் – ரஞ்சித் மத்தும பண்டார
எதிர்க்கட்சிகள் அனைத்தையும் இணைத்து அரசாங்கத்தின் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு எதிராக போராடுவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

முன்னாள் கியரை போட்டால் அது பின்னால்தான் அரசாங்கத்துக்கு விழுகிறது. சுற்றுநிரூபங்களை மாற்றியமைக்கும் நிலைக்கு அரசாங்கத்தின் நிலைமை தள்ளப்பட்டுள்ளது. 1960ஆம் ஆண்டு மார்ச் மாதம் உருவான அரசாங்கம் ஜுலை மாதத்தில் கவிழ்க்கப்பட்டது. 2001இல் நாம் அமைத்த அரசாங்கம் 2004இல் வீழ்ந்தது. கோட்டாபய ராஜபக்ச, மூன்று வருடங்களுக்குள் வீட்டுக்குச் செல்ல நேரிட்டது. எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என கணிக்க முடியாது.

எதிர்க்கட்சிகள் அனைத்தையும் இணைத்து அரசாங்கத்தின் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு எதிராக போராடுவோம். எதிர்க்கட்சிகள் அனைத்தும் எம்முடினே இருக்கின்றன.” என்றார்.

இந்த சந்திப்பில் கலந்துகொண்ட பேராசிரிய சரித்த ஹேரத்த கருத்து வெளியிடுகையில்,

”அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை மீறியே செயல்படுகிறது. கல்வித்துறையை சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளனர். பிரதமர் ஹரிணி அமரசூரிய வெளியிடும் சுற்றுநிரூபங்களை மீள திருத்தியமைக்க போலி கல்வி அமைச்சர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுவொரு அரசியல் ‘புட்செலாட்’. எவ்வாறு நாட்டை முகாமைத்துவம் செய்யப் போகின்றனர் என நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.” என்றார்.

The post அரசாங்கத்தின் எதிர்காலம் கேள்விக்குறியில் – ரஞ்சித் மத்தும பண்டார appeared first on Oruvan.com.