யாழ்ப்பாணம் Archives - Oruvan.com

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று ஆரம்பம்
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள், சுமார் எட்டு மாத கால இடைவெளிக்குப் பின்னர் யாழ் நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இன்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட இரண்டு கட்ட அகழ்வுப் பணிகளின் போது, 240 மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதுடன், அவற்றில் 239 எச்சங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

பருவமழை மற்றும் காலநிலை சீரின்மை காரணமாக இரண்டாம் கட்டப் பணிகள் கடந்த செப்டெம்பர் மாதத்துடன் நிறைவடைந்தன.

புதைகுழிக்குள் மழை வெள்ளம் தேங்கியதால் நிலவிய தடைகளைத் தாண்டி தற்போது அடுத்தகட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அப்பகுதியில் மேலும் எலும்புக்கூடுகள் காணப்படுவதால் அகழ்வுப் பணிகளைத் தொடர 8 வார கால அவகாசம் கோரி சட்ட வைத்திய அதிகாரி முன்வைத்த விண்ணப்பத்திற்கு அமைய நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

இந்த மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்காக நிதி அமைச்சினால் 2 கோடியே 10 இலட்சம் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று ஆரம்பம் appeared first on Oruvan.com.

ஈழத் தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச்சபை உத்தியோகபூர்வ ஆரம்பம்
இலங்கையின் நீண்டகால இனப்பிரச்சினைக்குத் தீர்வாக, தமிழ்த் தேசத்தின் இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் வகையிலான புதிய அரசியல் தீர்வுத்திட்ட வரைபை தயாரிக்கும் பணிகளை ‘ஈழத் தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச்சபை’ உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் அரசறிவியற்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி தி. விக்னேஸ்வரனை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு இந்தச் செயன்முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் யாழ். நல்லூரில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில், தற்போதைய அனுரகுமார திசநாயக்க அரசாங்கத்தினால் முன்மொழியப்படும் ‘ஏக்ய ராஜ்ய’ எனப்படும் ஒற்றையாட்சி அரசியல் யாப்பை முற்றாக நிராகரிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திம்புக் கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு, தமிழர் தேசத்திற்கும் சிங்கள தேசத்திற்கும் இடையில் ஒரு சமூக ஒப்பந்தத்தை உருவாக்குவது மற்றும் விரிவான கூட்டாட்சித் தீர்வுத்திட்ட வரைபை தயாரிப்பது ஆகியன இக்குழுவின் முதன்மை நோக்கங்களாகும்.

வடக்கு – கிழக்கு தாயகம் மற்றும் புலம்பெயர் தேசத்து நிபுணர்களின் பங்களிப்புடன் தயாரிக்கப்படவுள்ள இந்த உத்தேச வரைபு, பொதுமக்களின் கருத்துப் பெறலுக்காக வெளியிடப்பட்டு, எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் இறுதி வடிவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஈழத் தமிழர்களின் ஏகோபித்த அரசியல் நிலைப்பாடாக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post ஈழத் தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச்சபை உத்தியோகபூர்வ ஆரம்பம் appeared first on Oruvan.com.

யாழில் கிணறு ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து இன்று ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இணுவில் வடகிழக்கு பூவோடைப் பகுதியில் உள்ள தோட்டக் காணியில் உள்ள கிணற்றிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை கிணற்றில் சடலம் மிதப்பதைக் கண்ட பொதுமக்கள் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post யாழில் கிணறு ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு appeared first on Oruvan.com.

வெறுப்பு பேச்சுக்களுக்கு எதிராக யாழில் போராட்டம்
வெறுப்பு பேச்சுக்களை பேசும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் போராட்டமொன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக இன்று காலை ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள், இனவாதம் மற்றும் பிரதேச, சாதிய வாதங்களை பேசும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள்,

நாட்டின் சமூக ஒற்றுமை, ஜனநாயக பண்புகள் மற்றும் மக்கள் பாதுகாப்பை நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பிலுள்ள அரசியல் பிரதிநிதிகள், சமீபத்தில் பொதுத் தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து எங்களது ஆழ்ந்த கவலையையும் கடுமையான கண்டனத்தையும் வலியுறுத்துகிறோம்.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் மனித மரியாதைக்கு எதிரான சொற்கள் பயன்படுத்தப்படுவது எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

இத்தகைய வெறுப்பு தூண்டும் பேச்சுக்கள் சமூகங்களுக்கிடையேயான நம்பிக்கையையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல், பிரதேச மற்றும் இன அடிப்படையிலான பிளவுகளை தீவிரப்படுத்துகின்றன.

இது நாட்டின் அமைதிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் நேரடி அச்சுறுத்தலாகும்.

மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்களின் பிரச்சினைகளை பொறுப்புடன், நாகரிகத்துடன் முன்வைத்து தீர்வுகளை உருவாக்க வேண்டியவர்கள்.

ஆனால், அதற்கு பதிலாக வெறுப்பு, இழிவு மற்றும் பிரிவினை உணர்வுகளை தூண்டும் கருத்துக்களை வெளியிடுவது அரசியல் பொறுப்பின்மையின் வெளிப்பாடாகும்.

இத்தகைய செயல்கள் ஜனநாயக மரபுகளுக்கும் அரசியல் நாகரிகத்திற்கும் நேரடி அவமதிப்பாகும்.

மேலும், அரசியல்வாதிகள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தும் போதெல்லாம் ஆதிக்க சிந்தனைகளை பிரதிபலிக்கும் வகையிலான மொழியையும் அணுகுமுறையையும் முற்றாக கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

மக்கள் மத்தியில் சமத்துவம், மரியாதை மற்றும் பரஸ்பர புரிதலை வளர்க்கும் உரைகள் மட்டுமே அரசியல் உரையாடலின் அடிப்படையாக அமைய வேண்டும்.

இவ்வாறான பொறுப்பின்மை கொண்ட பேச்சுக்கள் தொடர்ந்தால், சமூகத்தில் இனவாதம், பிரதேசவாதம் மற்றும் பகைமை மனப்பான்மை ஆழப்படுத்தப்படும் அபாயம் உள்ளது.

இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு மட்டுமல்லாமல், குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகக் குழுக்கள் மனஅழுத்தத்திற்கும் அச்சத்திற்கும் உள்ளாகின்றனர்.

எனவே, அனைத்து அரசியல் தலைமைகளும் உடனடியாக தங்களது பொது உரைகளில் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். இன, பிரதேச மொழி அடிப்படையிலான இழிவுபடுத்தல், அவதூறு மற்றும் வெறுப்பு பேச்சுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம்.

அத்துடன், இனம், பிரதேசம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் உருவாகும் அவதூறான மற்றும் வெறுக்கத்தக்க நடத்தைகளை கண்காணிக்கவும், அவற்றைத் தடுக்கவும், தண்டிக்கவும் கூடிய

தெளிவான மற்றும் வலுவான நாடாளுமன்ற நடைமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். அவை முழுமையாகவும் கடைப்பிடிக்கத் தவறாத வகையிலும் அமல்படுத்தப்பட வேண்டும்.

மேலும், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்கள் தங்களது உள்கட்டமைப்பு கொள்கைகள் மற்றும் ஒழுக்க விதிகளை உருவாக்கும் போது. இவ்வாறான வெறுப்பு பேச்சுக்களைத் தடுக்கும் உறுதியான வழிகாட்டுதல்களை இணைத்துக் கொள்ள வேண்டும்.

இத்தகைய கொள்கை மாற்றங்கள், நிலையான சமூக மாற்றத்திற்கும் நீடித்த சமூக அமைதிக்கும் அடித்தளமாக அமையும் – என்றனர்.

இதேவேளை, அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் கிளிநொச்சி வாழ் மக்களை மிகவும் இழிவுப்படுத்தும் வகையில் பேசியிருந்தார்.

அவரின் இந்த கருத்திற்கு பல தரப்பினர்களும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

The post வெறுப்பு பேச்சுக்களுக்கு எதிராக யாழில் போராட்டம் appeared first on Oruvan.com.

யாழில் பேருந்துக்கு தீ வைப்பு
யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இன்று  அதிகாலை பேருந்து ஒன்றிற்குத் தீ வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்து சேவையில் ஈடுபட்டு வரும் இரு தரப்பினரிடையே நிலவிய நீண்டகால முரண்பாடு காரணமாக, பழிவாங்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கொடிகாமம் பொலிஸார் உடனடியாகக் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

The post யாழில் பேருந்துக்கு தீ வைப்பு appeared first on Oruvan.com.

கொழும்பு துறைமுக நகரத்திற்கு அருகில் கடலில் மிதந்த யாழ். இளைஞரின் சடலம்
கொழும்பு துறைமுக நகரத்திற்கு அருகில் கடலில் மிதந்து கொண்டிருந்த ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 24 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் கடந்த 28ஆம் திகதி கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய கொழும்பு துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, நிட்டம்புவ – ரணவிருகம சந்திக்கு அருகில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 60 முதல் 65 வயதுக்குட்பட்டவர் என்றும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சடலம் வத்துபிட்டிவல மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post கொழும்பு துறைமுக நகரத்திற்கு அருகில் கடலில் மிதந்த யாழ். இளைஞரின் சடலம் appeared first on Oruvan.com.

யாழில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவன் – இறுதி கிரியைகள் இன்று
யாழில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவனின் இறுதிக்கிரியை இன்று வியாழக்கிழமை வட்டுக்கோட்டையில் நடைபெறவுள்ளது.

அல்லைப்பிட்டிப் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை பொலிஸாரின் கட்டளையை மீறிப் பயணித்த வேன்மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் வாகனத்தை ஓட்டிச் சென்ற 17 வயதுடைய சிறுவன் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வாகனத்தில் பயணித்த மற்றுமொரு நபரும் சிறுவனின் சிறிய தந்தையும் கைது செய்யப்பட்டு, முன்னதாக எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இருவரையும் பிணையில் விடுவிக்க ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

தலா 25 ஆயிரம் ரூபா காசுப் பிணையிலும், தலா இரண்டு ஆள் பிணைகளிலும் அவர்களை விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

சந்தேகநபர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி தாக்கல் செய்த நகர்த்தல் பத்திரம் ஊடாக வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கைதானவர்கள் நீதிமன்றில் வழங்கிய வாக்குமூலத்தில் சம்பவத்தை விவரித்துள்ளனர். ஆரம்பத்தில் சிறுவனின் சிறிய தந்தையே வாகனத்தை ஓட்டியுள்ளார்.

எனினும், தீவுப் பகுதியில் வைத்து சிறுவன் விருப்பம் தெரிவித்ததால் அவரிடம் வாகனத்தை ஒப்படைத்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸார் மறித்தபோது வாகனத்தை நிறுத்தாது சிறுவன் செலுத்தியுள்ளார்.

மண்டைதீவு காவலரணில் பொலிஸார் மறிக்கத் தயாராக இருந்ததைக் கண்டு வாகனத்தை மீண்டும் அல்லைப்பிட்டி நோக்கித் திருப்பியபோது, பின்னால் துரத்தி வந்த பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

வாகனத்தில் இருந்ததாகக் கூறப்படும் சாணகம், கயிறு, வாள் மற்றும் வாகனத்தில் விழுந்துள்ள ஏனைய துப்பாக்கிச் சூடுகள் குறித்துத் தமக்கு எதுவும் தெரியாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

The post யாழில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவன் – இறுதி கிரியைகள் இன்று appeared first on Oruvan.com.

யாழில் பொதுச்சந்தைக்கு துப்பாக்கியுடன் வந்த நபர்! பொலிஸார் தீவிர விசாரணை
யாழ்ப்பாணத்தில் உள்ள சந்தை ஒன்றுக்கு துப்பாக்கியுடன் பச்சை மிளகாய் வாங்க வந்தவரால் சந்தையில் பரபரப்பு ஏற்பட்டதுடன் , சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மருதனார்மடம் சந்தைக்கு தலைக்கவசம் அணிந்து , கைகளுக்கு கையுறை அணிந்தவாறு, பை ஒன்றுடன் ஒருவர் வந்துள்ளார்.

வந்தவர் அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் பச்சை மிளகாயை கொள்வனவு செய்து கொண்டு , ” சந்தைக்குள் வட்டிக்கு பணம் வழங்குபவர்கள் யார்? ” என வினாவியுள்ளார்.

அதற்கு வியாபாரி தனக்கு தெரியாது என கூறியதும் அவர் அங்கிருந்து சென்றுள்ளார்.

குறித்த நபர் கையில் கொண்டுவந்திருந்த பையினுள் ரி 56 ரக துப்பாக்கி காணப்பட்டதாகவும், அவரது இடுப்பு பகுதியில் கைத்துப்பாக்கி ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தமை போன்ற தோற்றம் காணப்பட்டதாக, சுன்னாகம் பொலிஸாருக்கு வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.

அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சந்தையில் இருந்த கண்காணிப்பு கமரா பதிவுகளை சோதனையிட்டு , துப்பாக்கியுடன் வருகை தந்த நபர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த நபர் தொடர்பில் தகவல் அறிந்தோர் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் 0718591331 எனும் இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

The post யாழில் பொதுச்சந்தைக்கு துப்பாக்கியுடன் வந்த நபர்! பொலிஸார் தீவிர விசாரணை appeared first on Oruvan.com.

யாழ். பொன்னாலையில் கோர விபத்து – ஒருவர் பலி!
சற்றுமுன், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காரைநகர் – சாவகாமி அம்மன் கோவிலடியை சேர்ந்த கிருஷ்ணராஜா சாரங்கன் (வயது 26) என்பவர் உயிரிழந்த நிலையில், காரைநகர் – விக்காவில் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

பொன்னாலை சந்தியில் இருந்து மாதகல் பக்கம் செல்கின்ற வீதியால் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தனர்.

இதன்போது அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதியோரம் நின்ற பனைமீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டார்.

உயிரிழந்தவரது சடலம் தற்போது காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post யாழ். பொன்னாலையில் கோர விபத்து – ஒருவர் பலி! appeared first on Oruvan.com.

யாழில் அனர்த்த நிவாரணம்: பெயர்ப்பட்டியல் பார்வைக்கு
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடர் நிவாரண உதவிக்குத் தெரிவானோரின் பெயர் விவரங்கள் அடங்கிய பெயர்ப்பட்டியல் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், முறைப்பாடுகள் இருப்பின் அது தொடர்பில் முறையிடுமாறு யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டித்வா புயலால் 14 ஆயிரத்து 624 வீடுகள் பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டு, அவற்றைத் தூய்மைப்படுத்துவதற்காக 36 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட நிதி பெறப்பட்டுள்ளது.

எனினும், யாழ்ப்பாணத்தில் இவ்வளவுதூரம் பெரும் பாதிப்புக்கள் இல்லை என்றும், மோசடியான முறையில் தரவுகள் வழங்கப்பட்டு இந்த நிதி பெறப்பட்டுள்ளது எனவும் பொதுவான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையிலேயே, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பயனர்கள் தொடர்பான பெயர்ப்பட்டியல் பிரதேச செயலகங்களில் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் யாருடைய பெயரேனும் தேவையிருந்தும் இணைக்கப்படாதிருப்பின் அல்லது தவறான வழியில் நிவாரணம் கொடுக்க இணைக்கப்பட்டிருப்பின் தகுந்த ஆதாரங்களுடன் அறியத் தருமாறு யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.

யாழ். மாவட்ட செயலகத்தில் உள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

The post யாழில் அனர்த்த நிவாரணம்: பெயர்ப்பட்டியல் பார்வைக்கு appeared first on Oruvan.com.