யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை Archives - Oruvan.com

யாழ். போதனா வைத்தியசாலையில் குருதிக்கு தட்டுப்பாடு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ‘ஓ பொசிடிவ்’ குருதி வகைக்குத் தற்போது அதி தீவிர தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குருதி வங்கிப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குருதி வங்கியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ‘ஓ பொசிடிவ்’ குருதி வகைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே, தற்போது தட்டுப்பாடு மேலும் தீவிரமாகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

எனவே, ‘ஓ பொசிடிவ்’ வகை குருதி உடையவர்கள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நேரடியாக வருகை தந்து குருதிக் கொடையில் ஈடுபடுமாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குருதி வங்கிப் பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post யாழ். போதனா வைத்தியசாலையில் குருதிக்கு தட்டுப்பாடு appeared first on Oruvan.com.

காவலாளியை கடித்து காயப்படுத்திய நபர்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மதுபோதையில் நுழைந்த நபர் காவலாளியை கடித்து காயப்படுத்திய சம்பவமொன்று நேற்று மாலை பதிவாகியுள்ளது.

மதுபோதையில் நோயாளர் விடுதிக்குள் நுழைய முற்பட்டவரை வைத்தியசாலை காவலாளி தடுக்க முற்பட்டபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றது.

இதனையடுத்து 35 வயது மதிக்கத்தக்க குறித்த நபர் காவலாளிகளால் பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

காயமடைந்த காவலாளி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விடுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post காவலாளியை கடித்து காயப்படுத்திய நபர் appeared first on Oruvan.com.

யாழில் தீவிரமடையும் எலிக்காய்ச்சல் – இதுவரை ஏழு பேர் உயிரிழப்பு
யாழ் மாவட்டத்தில் எலிக்காய்ச்சலினால் 85 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 21 பேரும், யாழ் போதனா வைத்தியசாலயில் 11 பேரும் இந்நோய்க்காக சிகிச்சைபெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு ஒன்பது நோயாளர்களும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு நான்கு நோயாளர்களும் எலிக்காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு யாழ் போதனா வைத்தியசாலையில் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் துன்னாலை கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவர் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

அத்துடன் இதுவரை யாழ் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் காரணமாக ஏழு இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

எலிக்காய்ச்சல் என சந்தேகிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளர்களின் குருதி மாதிரிகள் கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கும், கண்டி தேசிய வைத்தியசாலைக்கும் அனுப்பப்பட்டிருந்தன.

இவர்களில் 7 பேருக்கு எலிக்காய்ச்சல் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் உயிரிழந்த கரவெட்டி சுகாதார வைத்திய

அதிகாரி பிரிவைச் சேர்ந்த இளைஞருக்கும் எலிக்காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எலிக்காய்ச்சல் நோய் வராமல் தடுப்பதற்காக விவசாயிகளுக்கும், கடல்நீர், ஏரி மீன்பிடித் தொழிலாளர்களுக்கும் தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

யாழ் மாவட்டத்திலுள்ள சகல உள்ளூராட்சி மன்றங்களிலும் பணியாற்றும் சுத்திகரிப்புத் தொழிலாளர்களுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் இந்நோயினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள கால்நடைகளுக்கு இத்தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய குருதி மாதிரிகளை ஆய்வு செய்வதற்கு கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் உதவி கோரப்பட்டுள்ளது – என்றார்.

The post யாழில் தீவிரமடையும் எலிக்காய்ச்சல் – இதுவரை ஏழு பேர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

வடக்கு மாகாணத்தை உலுக்கும் மர்மக் காய்ச்சல் – மேலும் ஒருவர் சாவு
மர்மக் காய்ச்சல் பாதிப்புடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பருத்தித்துறையைச் சேர்ந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேற்படி நபர் மர்மக் காய்ச்சல் பாதிப்புடன் பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறையைச் சேர்ந்த ஆனந்தகுமார் (வயது47) என்ற நபரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து வடக்கு மாகாணத்தில் இதுவரை மர்மக் காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உயிரிழந்த பருத்தித்துறையைச் சேர்ந்த நபரின் மாதிரிகளும் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அறிக்கைகள் கிடைத்த பின்னரே இறப்புக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் உறுதியாகத் தெரியவரும்.

இதேவேளை, மர்மக் காய்ச்சல் அறிகுறிகளுடனும், சடுதியான சுகவீனத்துடனும் வடக்கு வைத்தியசாலைகளை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையில் மட்டும் இதுவரை 40 பேர் மர்மக் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரின் உடல்நிலை தொடர்பிலும் தீவிரமான கண்காணிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிலரின் உடல்நிலை சடுதியாகப் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

“அண்மையில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பேரிடரால், எலிக் காய்ச்சல் பரவக்கூடிய சாத்தியங்கள் உள்ளன. அத்துடன், வேறுசில விலங்குகளின் மலத்தொற்றாலும் இவ்வாறான நோய்நிலை ஏற்படும் சாத்தியங்கள் உள்ளன. எனவே, பொதுமக்கள் தமது சுகாதாரம், குடிதண்ணீர் ஆரோக்கியம் என்பவற்றில் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும். திடீர் காய்ச்சல் மற்றும் சடுதியான சுகவீனம் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாட வேண்டும்.” – என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

The post வடக்கு மாகாணத்தை உலுக்கும் மர்மக் காய்ச்சல் – மேலும் ஒருவர் சாவு appeared first on Oruvan.com.