யாழ்ப்பாணம் செய்திகள் Archives - Oruvan.com

யாழில் கத்திக்குத்துக்கு இலக்காகி கடை உரிமையாளர் மரணம்
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை கிழக்கு பகுதியில் கடையொன்றில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக கத்திக்குத்துக்கு இலக்காகி அதன் உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,

ஏழாலை கிழக்கு பகுதியில் காணப்பட்ட கடையொன்றுக்கு மது போதையில் வந்த இரண்டு இளைஞர்கள் மிக்சர் தருமாறு கேட்டுள்ளார்கள்.

அப்போது கடை உரிமையாளர் மிக்சருக்கு உரிய பணத்தை தருமாறு கேட்டபோது மிக்சரை வாங்க வந்தவர்களுக்கும் கடை உரிமையாளர்களுடைய வாய் தர்க்கம் ஏற்பட்டது.

இதன்போது கடை உரிமையாளர் மீது மிக்சர் வாங்க வந்தவர்கள் கத்திக் குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்கள். இதன்போது கடை உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் ஏழாலை கிழக்கு பகுதியை சேர்ந்த சிங்காராவேல் தானவன் வயது 35 என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது தொல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுளளது.

சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவப் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுண்ணாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post யாழில் கத்திக்குத்துக்கு இலக்காகி கடை உரிமையாளர் மரணம் appeared first on Oruvan.com.

யாழில் சிறுமி வைசாலியின் கை அகற்றிய விவகாரம்!! தாதிய உத்தியோகத்தருக்கு நாட்டைவிட்டு வெளியேறத் தடை
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு, மருத்துவத் தவறால் மணிக்கட்டுடன் கை அகற்றப்பட்ட விவகாரத்தில், இரண்டாவது சந்தேகநபரான தாதிய உத்தியோகத்தர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் அவர் நாட்டைவிட்டு வெளியேற முடியாத வகையில் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது –

கடந்த 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சாண்டில்யன் வைசாலி என்ற சிறுமி காய்ச்சலுக்குச் சிகிச்சை பெறுவதற்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அவருக்கு மணிக்கட்டில் கனோலா ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டது. ஓரிரு நாள்களில் மணிக்கட்டு வீக்கமடைந்து பின்னர் அந்தப் பகுதி வெட்டி அகற்றப்பட்டது.

இந்த விடயத்தில் மருத்துவத் தவறு நேர்ந்துள்ளதாக சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டியதுடன், பல்வேறு தரப்பினரிடம் தமக்கான நீதியையும் கோரியிருந்தனர்.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் உசைன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது, பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளான செ.லக்சயன், கு.புரந்திரன் ஆகியோர் பல்வேறு விடயங்களை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.

வழக்கின் விசாரணைகள் மந்தகதியில் இடம்பெறுகின்றது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான், இது தொடர்பான மேலதிக அறிக்கைகளை தாக்கல் செய்யுமாறும், விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உரிய தரப்புக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, குறித்த தாதிய உத்தியோகத்தர், சிறுவர், பெண்கள் பிரிவால் நேற்றுக் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.

அந்தத் தாதிய உத்தியோகத்தருக்குப் பிணை வழங்கிய நீதவான், அவர் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாதவாறு பயணத்தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post யாழில் சிறுமி வைசாலியின் கை அகற்றிய விவகாரம்!! தாதிய உத்தியோகத்தருக்கு நாட்டைவிட்டு வெளியேறத் தடை appeared first on Oruvan.com.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் யாழில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பம்
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தின நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது.

யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாகி தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நேரம் காலை 9.45 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமானது.

மாவீரர்களின் பெற்றோரால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து, மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

1). மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

2). சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

3). அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

4). ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

5). தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

ஆகிய ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி 12 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து திலீபன் உயிர்நீத்தார்.

The post தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் யாழில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பம் appeared first on Oruvan.com.

யாழில் கடவுச்சீட்டு அலுவலகத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டச்செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இன்று திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, கடற்றொழில் நீரியல் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்குமாகாண ஆளுனர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோல் கலந்துகொண்டனர்.

மேலும், பிரதியமைச்சர் சுனில் வட்டஹல, நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், மற்றும் சி.வி.கே சிவஞானம் அமைச்சின் செயலாளர்கள், பிரதம செயலாளர் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.சமிந்த பத்திராஜ, யாழ் மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், பிரதியமைச்சர்கள், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

யாழ் மாவட்டச் செயலகத்தின் 60வது ஆண்டு பூர்த்தயினை முன்னிட்டு முத்திரையும் தபால் தலையும் இதன்போது வெளியிடப்பட்டது.

The post யாழில் கடவுச்சீட்டு அலுவலகத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி appeared first on Oruvan.com.

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கி முனையில் மனிதாபிமானற்ற ரீதியில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர்
யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரை கைது செய்த பொலிஸார் மனிதாபிமானற்ற முறையில் அந்த இளைஞனை அழைத்து சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் உள்ளூராட்சி வேட்பாளர்களுக்கான சந்திப்பொன்றினை பொலிஸார் ஏற்பாடு செய்துள்ளனர்.

குறித்த சந்திப்புக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளரான ஜெகதீஸ்வரன் சற்குணாதேவி செல்லவில்லை.

அதனை அடுத்து அவரது வீட்டுக்கு துப்பாக்கிகளுடன் சென்ற பொலிஸார் சந்திப்புக்கு அழைப்பு விடுத்தும் ஏன் வரவில்லை என கேட்டுள்ளனர்.

அதற்கு அவர், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் பருத்தித்துறை பிரதேச சபைக்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமையால், தான் தற்போது வேட்பாளர் இல்லை எனும் காரணத்தால் சந்திப்பு வரவில்லை என பொலிஸாருக்கு பதில் அளித்துள்ளார்.

பொலிஸார் அழைத்தால் பொலிஸ் நிலையம் வர வேண்டும் என அவரை அச்சுறுத்தி தர்க்கப்பட்டுள்ளனர்.

அதனை அவதானித்த சற்குணாதேவியின் மகன், அம்மாவை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என பொலிஸாரிடம் கோரிய போது , பொலிஸார் மகனுடன் முரண்பட்டுக்கொண்டனர்.

பின்னர் மேலங்கி இல்லாது சாரத்துடன் குறித்த இளைஞனை கைது செய்து , சாரத்தில் பிடித்து இழுத்து சென்ற போது சாரம் அவிழந்தையும் கருத்தில் எடுக்காது, கையில் துப்பாக்கியுடன் மனிதாபிமானமின்றி இளைஞனை பொலிஸ் நிலையம் இழுத்து சென்றுள்ளனர்.

மேலங்கி இன்றி இளைஞனை வீதியில் சாரம் அவிழும் நிலையில் , சாரத்தை பிடித்து பொலிஸார் இழுத்து செல்லும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ள நிலையில் பல தரப்பினரும் பொலிஸாரின் செயற்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

The post யாழ்ப்பாணத்தில் துப்பாக்கி முனையில் மனிதாபிமானற்ற ரீதியில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர் appeared first on Oruvan.com.

யாழில் காதலன் இறந்த செய்தி கேட்டு காதலியும் மரணம்
தென்மராட்சி, வரணி பகுதியில் உள்ள குளமொன்றில் இருந்து நேற்று (17) இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. குளத்தில் தாமரைபூ பறித்த போது அவர் உயிரிழந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

அந்த இளைஞனின் மரண செய்தியை அறிந்த 18 வயதான காதலி இன்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.

சுட்டிபுரத்திற்கு அருகிலுள்ள குளமொன்றில் இளைஞனின் சடலம் மிதப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை இன்று இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இளைஞன் குளத்தில் தாமரைப்பூ பறித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

இளைஞனின் மரண செய்தியை அறிந்த 18 வயதான காதலி இன்று (18) அதிகாலை வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். வரணி பகுதியை சேர்ந்த 18 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

The post யாழில் காதலன் இறந்த செய்தி கேட்டு காதலியும் மரணம் appeared first on Oruvan.com.

யாழில். தொலைக்காட்சி பார்க்க முற்பட்ட சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
தொலைக்காட்சி பார்ப்பதற்காக , தொலைகாட்சிக்கு மின் இணைப்பினை இணைக்க முற்பட்ட வேளை மின்சாரம் தாக்கியதில் சிறுவன் உயிரிழந்துள்ளான்.

யாழ்ப்பாணம் , வேலணை பகுதியை சேர்ந்த சந்திரஹாசன் கனிஸ்டன் (வயது 09) எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிறுவனின் தாயார் அருகில் உள்ள வீடொன்றுக்கு சென்ற வேளை வீட்டில் இருந்த சிறுவன் தொலைக்காட்சி பார்ப்பதற்காக தொலைக்காட்சிக்கு மின் இணைப்பை இணைக்க முற்பட்ட வேளை மின்சாரம் தாக்கியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் சிறுவனின் உடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

The post யாழில். தொலைக்காட்சி பார்க்க முற்பட்ட சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு appeared first on Oruvan.com.

யாழில் ஒருவரை கட்டிவைத்து தாக்குதல் – ஐந்து பேர் கைது
யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் ஒருவரை கட்டி வைத்து தாக்குதல் நடத்தினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெளியான காணொளியை அடிப்படையாக கொண்டு கோப்பாய் பொலிஸாரினால் மூன்று பேரும் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இரண்டு பேரும் என ஜவர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

கடந்த வாரம் உரும்பிராய் பகுதியில் உள்ள வெதுப்பகமொன்றுக்கு வந்த ஒருவர் அப்பகுதியில் நிலத்தில் விழுந்து கிடந்த தங்க ஆபரணத்தை எடுத்து வெதுப்பகத்தில் வழங்கியுள்ளார்.

சில தினங்களுக்கு பின்னர் அடிக்கடி நகை உரியவர்களிடம் வழங்கப்பட்டதா என வெதுப்பகத்தில் கேள்வியெழுப்பியுள்ளார். இந்நிலையில் வெதுப்பகத்தில் இருந்த இளைஞர் குழு குறித்த நபரை கட்டிவைத்து தாக்கி காணொளியை வெளியிட்டது.

குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ள கோப்பாய் பொலிஸார் கைதானவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்துள்ளார்.

The post யாழில் ஒருவரை கட்டிவைத்து தாக்குதல் – ஐந்து பேர் கைது appeared first on Oruvan.com.

யாழ்ப்பாண மக்கள் பயப்படத் தேவையில்லை – பொலிஸாரின் அறிவிப்பு
யாழ்ப்பாண மக்கள் பயப்படத் தேவையில்லை. மக்கள் அச்சமின்றி செயல்படவும் சட்டம் ஒழுங்கை நிறைவேற்றவும் பொலிஸார் தயாராக இருக்கின்றார்கள் என யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்தார்.

யாழ் நகரில் புத்தாண்டுக்கு முன்னிரவு இளைஞர் ஒருவர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் தொடர்பாக கேள்வியெழுப்பியபோது  அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், கடந்த வாரத்தில் யாழ் நகரில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் நால்வரை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தி இருக்கின்றோம். இரண்டு சம்பவங்களையும் குறித்து புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

மேலதிக சாட்சிகளை எடுத்து மிகுதியான சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுள்ளோம்.

இதற்குரிய ஆலோசனைகள் என்னால் உயர் அதிகாரிகளுக்கும் பொலிஸ் உயரதிகாரிகளுக்கும் பொறுப்பதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களைப் பிடித்து குற்றவியல் சட்டக்கோவையின் கீழ் வழக்குத் தாக்கல் செய்து வருகின்றோம்.

இனிவரும் காலங்களில் குறித்த நபர்கள் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்காக கட்டுக்கோப்பான சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆணையை பெற்று வருகின்றோம்.

இந்த நபர்கள் எதிர்வரும் காலங்களில் தொடர்ந்து குறித்த குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அதிக தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றார்.

The post யாழ்ப்பாண மக்கள் பயப்படத் தேவையில்லை – பொலிஸாரின் அறிவிப்பு appeared first on Oruvan.com.

யாழில் முச்சக்கரவண்டியில் சாகசம் காட்டியவர்களுக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாண நகர் பகுதியில் இரவு வேளை முச்சக்கரவண்டியில் சாகசம் காட்டி சண்டித்தனம் செய்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதுடன் இரண்டு முச்சக்கரவண்டிகளும் கைப்பற்றப்பட்டது.

அரியாலை மற்றும் பொம்மை வெளி பகுதியை சேர்ந்த மூவர் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இன்றைய தினம் கைது செய்யப்பட்டனர்.

யாழ் நகரில் புத்தாண்டுக்கு முன்தினம் (31) இரவு வேளை ஒன்றுகூடிய இளைஞர்கள் குழுவினர் முச்சக்கரவண்டியில் சாகசம் காட்டியதுடன் இளைஞர் ஒருவரை கடுமையாக தாக்கியிருந்தனர்.

இது தொடர்பிலான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடன் நடவடிக்கை எடுக்ககோரி பல்வேறு தரப்பில் இருந்தும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன.

இந்நிலையில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இது தொடர்பில் விரைந்து செயற்பட பொலிஸாரிடம் கோரியிருந்தார்.

இந்நிலையில் குறித்த காணொளியை அடிப்படையாக கொண்டு யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்த விசாரணையின் போது அடையாளம் காணப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலர் தலைமறைவாகியுள்ள நிலையில், குறித்த நபர்களை கைது செய்ய பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த தாக்குதலில் காயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post யாழில் முச்சக்கரவண்டியில் சாகசம் காட்டியவர்களுக்கு நேர்ந்த கதி appeared first on Oruvan.com.