மை டிவிகே Archives - Oruvan.com

பேரறிஞர் அண்ணா இரட்டை வேடம் போட்டுத் தமிழ் மக்களை ஏமாற்றவில்லை – விஜய்
முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா இரட்டை வேடம் போட்டுத் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றவில்லை என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

மாறாக மக்களுக்காக அறிஞர் அண்ணா உண்மையாக உழைத்தார் எனவும் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா, மாநில உரிமைக்காக ஓங்கிக் குரல் எழுப்பியவர், இருமொழிக் கொள்கையை தமிழகத்திற்குத் தந்தவர், தமிழ்நாடு என்று சட்டப்படி பெயர் மாற்றியவர்.

சமூக நீதியைக் கொள்கையாகக் கொண்டிருந்தவர், சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டமாக்கியவர், குடும்ப ஆதிக்கமற்ற அற்புத அரசியல் தலைவர், கொள்கை வழி நின்றவர், கனிவின் திருவுருவம்.

இரட்டை வேடம் போட்டுத் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றாமல், அவர்களுக்காக உண்மையாக உழைத்தவர்.

தேர்தல் அரசியலில் அசாத்திய வியூகத்தை வகுத்து, மாபெரும் ஆட்சி அதிகார மாற்றத்திற்கு வழிவகுத்த பேரறிஞரின் பிறந்த நாளில் அவரைப் போற்றி வணங்குவோம்.

‘மக்களிடம் செல்’ என்ற அவரது அரசியல் மந்திரத்தைப் பின்பற்றி, 1967 தேர்தல் அரசியல் வெற்றி விளைவை, ஆட்சி மாற்றத்தை மக்கள் ஆதரவுடன் மீண்டும் தமிழகத்தில் நிகழ்த்திக் காட்ட உறுதி ஏற்போம்.” என விஜய் தனது அறிவிப்பில் மேலும் தெரிவித்துள்ளார்.

The post பேரறிஞர் அண்ணா இரட்டை வேடம் போட்டுத் தமிழ் மக்களை ஏமாற்றவில்லை – விஜய் appeared first on Oruvan.com.

“மை டிவிகே”உறுப்பினர் சேர்க்கை செயலியை வெளியிட்டார் விஜய்
புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை விரைவுப்படுத்த மை டிவிகே (MY TVK) என பெயரிடப்பட்ட உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதனை சந்திக்க தென்னிந்திய பிரபல நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக இறங்கி உள்ளது.

அந்த கட்சி சார்பில் ‘மக்கள் விரும்பும் முதல்-அமைச்சர் வேட்பாளர்’ என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் கட்டமைப்பு பணிகளை பலப்படுத்தும் பணியில் விஜய் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை விரைவுப்படுத்த மை டிவிகே (MY TVK) என பெயரிடப்பட்ட உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை விஜய் அறிமுகப்படுத்தி வைத்தார்.

சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் செயலியை அறிமுகம் செய்துள்ளார். செயலியை தொடங்கி வைத்தப்பின் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறையினருக்கு உறுப்பினர் அடையாள அட்டையை விஜய் வழங்கினார்.

தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் பரப்புரை முன்னெடுப்பையும் விஜய் இன்று தொடங்கிறார். குடும்பம் குடும்பமாக பொதுமக்களை தவெகவின் உறுப்பினர்களாக இணைப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஓரணியில் தமிழ்நாடு என திமுக உறுப்பினர் சேர்க்கை நடத்தும் நிலையில் தவெகவும் உறுப்பினர் சேர்க்கையை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post “மை டிவிகே”உறுப்பினர் சேர்க்கை செயலியை வெளியிட்டார் விஜய் appeared first on Oruvan.com.