மேர்வின் சில்வா Archives - Oruvan.com

மேர்வின் சில்வாவுக்கு எதிரான விசாரணைகள் ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியரசர் சஹன் மாபா பண்டார நேற்று திங்கட்கிழமை (28) இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்கு போலி ஆவணங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்டதாக, இவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.இந்த வழக்கை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் தாக்கல் செய்திருந்தனர் .இது குறித்த வழக்கு நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையிலே,விசாரணையை ஒத்திவைத்து தீர்ப்பளிக்கப்பட்டது.இதன்போது பிரதிவாதி சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி, இந்த வழக்கை முழுமையாக விசாரணைக்குட்படுத்துமாறு கோரிக்கை விடுத்தார்.

இதனை கருத்திற்கொண்ட நீதியரசர் , இந்த வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவித்தார். முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா பத்தரமுல்லை பிரதேசத்திலுள்ள அவரது வீட்டில், கடந்த மார்ச் 05ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 03 ஆம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

The post மேர்வின் சில்வாவுக்கு எதிரான விசாரணைகள் ஒத்திவைப்பு appeared first on Oruvan.com.

மேர்வின் சில்வாவுக்கு ஏப்ரல் 21 ஆம் திகதிவரை விளக்கமறியல்
கிரிபத்கொடையில் உள்ள அரசுக்குச் சொந்தமான காணியை போலி ஆவணங்களை தயாரித்து தனியார் ஒருவருக்கு விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் வழக்கின் மூன்று பிரதிவாதிகளையும் ஏப்ரல் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்படுவதைத் தவிர்க்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் மில்ரோய் பெரேரா ஆகியோரது மனு நிராகரிக்கப்பட்டு அவர்களை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

அரசுக்குச் சொந்தமான காணியை போலி ஆவணங்களை தயாரித்து தனியாருக்கு விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கடந்த மார்ச் 05 ஆம் திகதி குற்றப் புலனாய்வு பிரிவால் (CID) கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மேர்வின் சில்வாவுக்கு ஏப்ரல் 21 ஆம் திகதிவரை விளக்கமறியல் appeared first on Oruvan.com.

மேர்வின் சில்வாவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை விளக்கமறியலில் வைக்க மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிரிபத்கொட பகுதியில் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக, பெலவத்தை, பத்தரமுல்ல பகுதியில் மெர்வின் சில்வா அண்மையில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

முன்னாள் அமைச்சரைத் தவிர, மேலும் இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் சந்தேக நபர்கள் இன்று மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், ஏப்ரல் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

The post மேர்வின் சில்வாவுக்கு விளக்கமறியல் நீடிப்பு appeared first on Oruvan.com.

இலங்கை சிங்கள, பௌத்த நாடு – கஜேந்திரகுமார் போன்றோர் துள்ளக்கூடாது
” இலங்கையென்பது சிங்கள, பௌத்த நாடாகும். எனவே, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் இங்கு துள்ளக்கூடாது.” என்று எச்சரித்துள்ளார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இலங்கையென்பது சிங்கள தேசமாகும். வடக்கில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என ஒருவர் இருக்கின்றார். அவர் கூக்குரல் (பௌத்த சாசனத்துக்கு எதிராக) எழுப்புகின்றார். எமது நாட்டில் அவ்வாறு செய்ய முடியாது.

பண்டுகாபய மன்னர் முதல் சிங்கள மன்னர்களே இலங்கையை ஆண்டுள்ளனர். எனவே, இது சிங்கள, பௌத்த தேசமாகும். எனினும், பௌத்த தர்மத்துக்கமைய நாம் அனைத்து சமயங்களையும், இனங்களையும் மதிக்கின்றோம்.

அந்தவகையில் எம்முடன் கைகோர்த்து பயணிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் எமது கரங்களை உடைத்துக்கொண்டு செல்ல முற்பட்டால் வாழ்வதற்கு தனியான உலகை தேடிக்கொள்ள நேரிடும். அதற்காகவே மேர்வின் சில்வா போன்றவர்கள் இருக்கின்றார்கள்.

வடக்கு, கிழக்கு, தெற்கு என்றில்லை இது ஒரு நாடு. சிங்கள தேசமாகும். பௌத்த சாசனம் பாதுகாக்கப்படும்வரை, புத்த தர்வமத்துக்கமைய வாழும்வரை இயற்கை இந்நாட்டை பாதுகாக்கும். இதற்கு எதிராக ஆட்சியாளர்கள் செயற்பட்டால் இயற்கை நிச்சயம் தண்டிக்கும்.” – என்றார்.

The post இலங்கை சிங்கள, பௌத்த நாடு – கஜேந்திரகுமார் போன்றோர் துள்ளக்கூடாது appeared first on Oruvan.com.