மின் தடை Archives - Oruvan.com

நாடு முழுவதும் மின் தடை ஏற்படும் சாத்தியம் – ஆனந்த பாலித எச்சரிக்கை
மின்சார பொறியாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக நாடு முழுவது மின் தடை ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பின் இணைப்பாளர் ஆனந்த பாலித எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த முடிவு தன்னிச்சையாக எடுக்கப்படவில்லை எனவும், அனைத்து தொடர்புடைய அதிகாரிகளுக்கும் எழுத்துப்பூர்வமாக அறிவித்த பின்னரே எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, “அனைத்து பராமரிப்பு மற்றும் பழுது பார்க்கும் பணிகளும் நிலையான எட்டு மணி நேர வேலை காலத்தில் மட்டுமே மேற்கொள்ளப்படும்.

அதற்கு மேல், எவ்விதமான அவசரமாக இருந்தாலும், பராமரிப்பு அல்லது பழுது பார்க்கும் பணிகள் முன்னெடுக்கப்பட மாட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மின்சார சபையின் (CEB) மறுசீரமைப்பு தொடர்பாக ஆரம்பித்த தொழிற்சங்கத்தின் போராட்டம், பின்னர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தீவிவரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிறுத்தப்பட்ட பதவி உயர்வுகள், செலுத்தப்படாத சம்பள நிலுவைகள் மற்றும் தற்காலிக 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவை நிரந்தரமாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளா விரிவடைந்துள்ளதாக ஆனந்த பாலித குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்திடமிருந்து எந்த பதிலும் இல்லை கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

நெருக்கடியை நிவர்த்தி செய்ய எந்த அதிகாரியும் முன்வரவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

இந்த பிரச்சினைகளை கையாள நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தோல்வியடைந்துள்ளனர்.

இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்களில் சமநிலை இல்லை எனவும் இந்த நிலை நீடித்தால் நாடு விரைவில் மின் தடையை சந்திக்கும்,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post நாடு முழுவதும் மின் தடை ஏற்படும் சாத்தியம் – ஆனந்த பாலித எச்சரிக்கை appeared first on Oruvan.com.

நாடு முழுவதும் மின் தடை குறித்து 50 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, நேற்றுமுன்தினம் (29) இரவு 8:00 மணி முதல் நேற்று (30) இரவு 8:00 மணி வரையிலான 24 மணி நேரத்தில் சுமார் 50,009 மின்சார தடைகள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் பொறியியலாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவிக்கையில், பதிவாகிய மின்சார தடைகள் தொடர்பான முறைப்பாடுகளில் இதுவரை 14,030 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக கூறினார்.

மீதமுள்ள மின்சார தடைகளை விரைவாக சரிசெய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதன்படி 24 மணி நேரத்திற்குள் நாடு முழுவதும் மின்சார தடைகளை சரிசெய்யும் பணிகளை மின்சார சபை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மின்சார தடைகள் தொடர்பாக பதிவாகிய முறைப்பாடுகளில் மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் பொறியியலாளர் தம்மிக்க விமலரத்ன குறிப்பிட்டார்.

அதன்படி, மத்திய மாகாணத்தில் பதிவாகிய 15,000 மின்சார தடைகளில் 5,300 முறைப்பாடுகளும், மேல் மாகாணத்தில் பதிவாகிய 10,000 மின்சார தடைகளில் 1,700 முறைப்பாடுகளும் இதுவரை மின்சார சபையால் சரிசெய்யப்பட்டுள்ளன.

தற்போது வரை மின்சார விநியோகம் சீராகாத பகுதிகள் இருந்தால் அல்லது மின்சார கம்பிகள் முறிந்து விழுதல் போன்ற சம்பவங்கள் ஏற்பட்டால், மின்சார சபையின் 1987 என்ற இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடு அளிக்குமாறும், அல்லது மின்சார சபையின் CEB Care கைப்பேசி செயலி (mobile app) மூலம் அறிவிக்குமாறும் மின்சார சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

The post நாடு முழுவதும் மின் தடை குறித்து 50 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு appeared first on Oruvan.com.