மின்னேரியா Archives - Oruvan.com

எரிந்த வாகனத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டவர் கோடீஸ்வரரா? டி.என்.ஏ பரிசோதனை செய்ய முடிவு
மின்னேரியா ஹபரணை பிரதான வீதிக்கு அருகில் தீப்பிடித்து எரிந்த கெப் வண்டியில் உயிரிழந்தவர் பியகமவில் வசிக்கும் கோடீஸ்வர வர்த்தகரா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த பொலிஸார் தயாராகியுள்ளனர்.

மீரிகம – தெகட்டன பிரதேசத்தில் இருந்து மின்னேரியா நோக்கி பயணித்த கெப் வண்டி ஒன்று மின்னேரியா – ஹபரணை பிரதான வீதியில் 38வது மைல் கல அருகில் எரிந்து நாசமான நிலையில் காணப்பட்டது.

தீப்பிடித்த கெப் வண்டியில் கம்பஹா தெகட்டனயைசை் சேர்ந்த 62 வயதுடைய நபரே இருந்ததாகவும், கெப் தீப்பிடித்ததையடுத்து அவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீப்பிடித்த வண்டிக்குள் ஒருவரின் உடல் எரிந்த நிலையில் இருப்பதையும் பொலிஸ் அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

கெப் வண்டியை ஓட்டி வந்தவர் நேற்று முன்தினம் (25) காலை வீட்டை விட்டுச் சென்ற நிலையில், நேற்று (26) காலை சம்பவம் நடந்த இடத்திற்கு அவரது மகன் வந்துள்ளார். எரிந்த வண்டி தனது தந்தை வந்த வண்டி என்றும் அடையாளம் காட்டினார்.

கெப் வண்டி தீப்பிடித்ததா அல்லது தீ வைத்து எரிக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த நபர் தனது மகனுடன் பைகம பிரதேசத்தில் வசித்து வருவதுடன் அவரது மனைவி தனது மகளுடன் வசித்து வருகின்றார்.

மேலும், சடலமாக மீட்கப்பட்ட நபர் ஒருமுறை உயர் இரத்த அழுத்தத்திற்கு பயன்படுத்தப்படும் சுமார் 150 மாத்திரைகளை குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், தான் தற்கொலை செய்து கொள்வதாகவும், எனது சடலத்தை நீங்கள் யாரும் பார்க்கக்கூடாது என்பதற்காக இறந்துவிடுவேன் என்றும் அடிக்கடி கூறி வந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர் எரிபொருளைப் பயன்படுத்தி திட்டமிட்டு தீவைத்துக்கொண்டிருக்கலாம் என்றும், இதற்காகவே டி.என்.ஏ. பரிசோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை், சில வருடங்களுக்கு முன்னர் ஹபரணையில் இதே போன்று வெளிநாட்டவர் ஒருவர் காரில் எரித்துக் கொல்லப்பட்ட நிலையில், பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் உயிரிழந்தவர் பெண் என தெரியவந்துள்ளது.

இதன் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த நபர் தனது காப்புறுதி நட்டஈட்டைப் பெற்றுக் கொள்வதற்காக மற்றுமொரு சடலத்தை வாகனத்தில் வைத்து தீயிட்டுக் கொளுத்தியதைக் கண்டறிய முடிந்தது.

குறித்த எலும்புகளை பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்து விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் சடலம் பெண்ணின் சடலம் என கண்டறிய முடிந்தது.

இதனால் நேற்று இந்த வண்டியில் தீக்குளித்து இறந்தது பியகம வர்த்தகர்தானா என கண்டறிய டி.என்.ஏ. பரிசோதனை செய்ய பொலிஸார் முடிவெடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post எரிந்த வாகனத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டவர் கோடீஸ்வரரா? டி.என்.ஏ பரிசோதனை செய்ய முடிவு appeared first on Oruvan.com.

எரிந்த வாகனம் ஒன்றில் இருந்து சடலம் மீட்பு
ஹபரணை பொலன்னறுவை பிரதான வீதிக்கும் பதுஓயாவிற்கும் இடையில் 38 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் எரிந்த வண்டியொன்றில் இருந்து நபரொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மின்னேரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹபரணை மின்னேரிய வீதியில் பயணித்த நபர் ஒருவர் கெப் ஒன்று தீப்பிடித்து எரிவதாக அறிவித்ததையடுத்து மின்னேரிய பொலிஸார் எரிந்துகொண்டிருந்த கெப் வண்டியை மீட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று (25) இரவு 10 மணியளவில் தீ பரவியதாகவும், அப்போது கெப் வண்டி ஹபரனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்ததாகவும், அதில் வேறு யாரும் இருக்கவில்லை என்றும் மின்னேரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நபர் ஒருவரைக் கொன்று அவரது சடலத்தை வண்டியில் ஏற்றி, கெப் வண்டியை இந்த பகுதிக்கு கொண்டு வந்து எரித்து பின்னர் தீ வைத்து எரித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேம் வெளியிட்டுள்ளனர்.

மின்னேரியா பொலிஸாரும் பொலன்னறுவை மாநகரசபையின் தீயணைப்புத் திணைக்கள அதிகாரிகளும் வந்து பெரும் முயற்சியில் தீயை முழுமையாக அணைத்தனர். தீப்பிடித்த கெப் வண்டி கொழும்பு பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

The post எரிந்த வாகனம் ஒன்றில் இருந்து சடலம் மீட்பு appeared first on Oruvan.com.