மார்க் கார்னி Archives - Oruvan.com

இஸ்ரேல் பிரதமரை கைது செய்வோம் : கனடா பிரதமர் எச்சரிக்கை
இஸ்ரேல் பிரதமர் கனடா நுழைந்தால் சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை அமுல்படுத்தும் விதமாக அவர் நிச்சயம் கைது செய்யப்படுவார் என கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.

காசா மீது இஸ்ரேல் தொடுத்த போரில் 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதில் குழந்தைகள், பெண்கள் ஆகியோரும் அடங்குவர். எனவே போர்க்குற்றம் செய்ததாக நெதர்லாந்து சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

இதில் கடந்த ஆண்டு அவருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையே, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலையீட்டால் இஸ்ரேல்-காசா போர் முடிவுக்கு வந்தது.

அதேசமயம் அவருக்கு எதிரான கைது உத்தரவு தொடர்ந்து நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், தனி பாலஸ்தீன நாடு உருவாக்கத்துக்கு பெஞ்சமின் நெதன்யாகு தடையாக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி குற்றம்சாட்டினார். எனவே கனடாவில் நுழைந்தால் சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை அமுல்படுத்தும் விதமாக அவர் நிச்சயம் கைது செய்யப்படுவார் என பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.

ஏற்கனவே பிரான்ஸ், துருக்கி, பெல்ஜியம் உள்ளிட்ட பல நாடுகள் சர்வதேச நீதிமன்றத்தின் கைது உத்தரவை நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

The post இஸ்ரேல் பிரதமரை கைது செய்வோம் : கனடா பிரதமர் எச்சரிக்கை appeared first on Oruvan.com.

கனடாவின் 24வது பிரதமராக பதவியேற்றார் மார்க் கார்னி
கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும், கனடா நாட்டின் 24வது பிரதமராகவும் மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

லிபரல் கட்சித் தலைவரான சச்சித் மெஹ்ரா, லிபரல் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் முன்னாள் மத்திய வங்கித் தலைவரான மார்க் கார்னி வெற்றி பெற்றதாக அறிவித்தார். லிபரல் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிறகு புதிய பிரதமராகவும், அக்கட்சியின் தலைவராகவும் மார்க் பதவியேற்க உள்ளார்.

மார்க் கார்னி 2008 முதல் 2013-ம் ஆண்டு வரை கனடா வங்கியின் 8வது ஆளுநராக பணியாற்றியுள்ளார். 2011 முதல் 2018ம் ஆண்டு வரை நிதி நிலைத்தன்மை வாரிய தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

தலைமை பதவிக்கான போட்டியில் மார்க் கார்னி 1,31,674 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் சுமார் 85.9 சதவீத வாக்குகளாகும். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் (11,134 வாக்குகள்), கரினா கோல்ட் (4,785 வாக்குகள்), பிராங்க் பேலிஸ் (4,038 வாக்குகள்) பெற்றிருந்தனர்.

இந்நிலையில், கனடாவின் 24வது பிரதமராக மார்க் கார்னி இன்று பதவியேற்றுக் கொண்டார்.

அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப், கனடா பொருட்களுக்கு வரியை அதிகரிப்பது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், மார்க் கார்னி பிரதமராக பதவியேற்றுள்ளது அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கனடாவின் 24வது பிரதமராக பதவியேற்றார் மார்க் கார்னி appeared first on Oruvan.com.

கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி – இந்தியாவுடனான உறவை புதுபிக்க உத்தேசம்
கனடா நாட்டின் லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும், அந்நாட்டின் 24வது பிரதமராகவும் மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கனடா வங்கியின் முன்னாள் தலைவரான அவர் பிரதமராவது அந்நாட்டின் தற்போதைய நிதி சவால் சூழலில் கவனம் பெறுகிறது. மார்க் கார்னி கடந்த 2008 முதல் 2013-ம் ஆண்டு வரை கனடா வங்கியின் 8-வது ஆளுநராக பணியாற்றியுள்ளார்.

மேலும், 2011 முதல் 2018-ம் ஆண்டு வரை நிதி நிலைத்தன்மை வாரிய தலைவராக இருந்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து கனடா பொருளாதார ரீதியாக பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகிறது. பரஸ்பர வரி விதிப்பை ஏப்ரல் 2 வரை மட்டும் ட்ரம்ப் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளார். அதனால் கனடாவும் அமெரிக்கப் பொருட்களுக்கான வரி விதிப்பை நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் புதிய பிரதமராகத் தேர்வாகியுள்ளார் மார்க் கார்னி. அவருக்கான சவால்கள் ஏராளமான சாவல்கள் காத்திருப்பதாக அந்நாட்டு அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

முன்னதாக, அரசியல் ரீதியாக ட்ரூடோவுக்காக எதிராக ட்ரம்ப் காய்களை நகர்த்திவந்தார். இந்தநிலையில் அவர் கடந்த ஜனவரியில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். லிபரல் கட்சித் தலைவரான சச்சித் மெஹ்ரா, அக்கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் முன்னாள் மத்திய வங்கித் தலைவரான மார்க் கார்னியின் வெற்றி பெற்றதாக அறிவித்தார். தலைமை பதவிக்கான போட்டியில் மார்க் கார்னி 1,31,674 வாக்குகளைப் பெற்றார். இது மொத்த வாக்குகளில் சுமார் 85.9 சதவீத வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமராக தேர்வான பின்னர் ஆற்றிய வெற்றி உரையில், “டொனால்ட் ட்ரம்ப் வர்த்தகப் போரைத் தொடரும்வரை அமெரிக்கப் பொருட்கள் மீதான பரஸ்பர வரியை கனடா கைவிடாது. கனடா அரசு சரியான பாதையிலேயே செல்கிறது. நமக்கு அமெரிக்கா உரிய மரியாதை கொடுத்து நம்பகத்தன்மை வாய்ந்த, நியாயமான வர்த்தகத்தை உறுதி செய்யும் வரை நாம் விதித்த வரி அமலில்தான் இருக்கும்.” என்றார். அமெரிக்க பரஸ்பர வரிக்குப் பணியப்போவதில்லை என்ற அவரது கர்ஜனை கவனம் பெறுகிறது.

மார்க் கார்னி, பிரதமராக பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக கனடா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, இந்தியா உடனான உறவை மீண்டும் கட்டியெழுப்ப வாய்ப்புகள் உள்ளது என்றும், அதனை தான் எதிர்நோக்குவதாகவும் கனடாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ள மார்க் கார்னி தெரிவித்துள்ளார். இதன்மூலம், இந்தியா – கனடா உறவுகளில் தூதரக ரீதியில் பெரிய மாற்றம் ஏற்பட உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

The post கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி – இந்தியாவுடனான உறவை புதுபிக்க உத்தேசம் appeared first on Oruvan.com.