மாகாண சபைத் தேர்தல் Archives - Oruvan.com

மாகாண சபைத் தேர்தல்களை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்த முடியும் எனத் தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் தெரிவிப்பு
இலங்கையில் நீண்டகாலமாகத் தாமதமடைந்து வரும் மாகாண சபைத் தேர்தல்களை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் 2017ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் காரணமாக ஏற்பட்ட தொகுதி எல்லை நிர்ணயச் சிக்கல்களே இந்தத் தாமதத்திற்குப் பிரதான காரணமாகும்.

இதுவரையில் எல்லை நிர்ணய அறிக்கை நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்படாத நிலையில், தற்போது இந்த சட்டச் சிக்கல்களைத் தீர்க்க நாடாளுமன்ற விசேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்துத் கருத்து தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர், செயற்குழு தனது விதப்புரைகளை மூன்று மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் தேர்தல் முறையை நாடாளுமன்றம் விரைவாகத் தீர்மானித்தால் இந்த ஆண்டு தேர்தலை நடத்த முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

மக்களின் ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்த தேர்தல் முறையை இறுதி செய்வது நாடாளுமன்றத்தின் கைகளிலேயே உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க மேலும் வலியுறுத்தியுள்ளார்.

The post மாகாண சபைத் தேர்தல்களை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்த முடியும் எனத் தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் தெரிவிப்பு appeared first on Oruvan.com.

ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக பொதுஜன பெரமுன மாறும் – டிவி சானக தெரிவிப்பு
மாகாண சபைத் தேர்தல் நடக்கும்பட்சத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே சபைகளில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மாறும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிவி சானக தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

“ மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவதாக இருந்தால் பழைய முறைமையின்கீழ் அதனை செய்யலாம். நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் அதற்குரிய சட்டத்திருத்தத்தை நிறைவேற்றலாம்.

ஆனால் தேர்தல் நடத்தப்பட்டால் தமக்கு ஏற்படும் நிலை குறித்து அரசாங்கம் அஞ்சுகின்றது. அதனால்தான் எல்லை நிர்ணய விடயத்தைக் காண்பித்து இழுத்தடிப்பு இடம்பெறுகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு ஜனாதிபதிதேர்தலில் 2.5 சதவீத வாக்குகளை கிடைக்கப்பெற்றன. அதன்பின்னர் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அது 10 சதவீதமாக அதிகரித்தது.

எனவே, மாகாணசபைத் தேர்தல் நடைபெறும்பட்சத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வாக்கு வங்கி அதிகரிக்கும். மாகாணசபைகளில் முதலமைச்சர் உட்பட ஆட்சியை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக கட்சி மாறும்.” எனவும் டிவி சானக குறிப்பிட்டார்.

The post ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக பொதுஜன பெரமுன மாறும் – டிவி சானக தெரிவிப்பு appeared first on Oruvan.com.

மாகாண சபைத் தேர்தலை முடிந்தால் விரைவில் நடத்திக் காட்டட்டும் அரசு: மொட்டுக் கட்சி சவால்
முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்திக் காட்டுமாறு தேசிய மக்கள் சக்தி அரசுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சவால் விடுத்துள்ளது.

முன்னாள் ஆளுநர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன இந்தச் சவாலை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“அரசின் செயற்பாடுகளால் அதன் வாக்கு வங்கி சரிந்து வருகின்றது. முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்திக் காட்டுமாறு சவால் விடுக்கின்றோம்.

வடக்கில் நினைவேந்தல் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பில்கூட நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், படையினருக்குரிய கௌரவத்தை இந்த ஆட்சியாளர்கள் வழங்கவில்லை.

நாம் தமிழர்களுக்கு எதிராகப் போர் செய்யவில்லை. நாட்டு மக்களுக்கு வாழ்வதற்குரிய சூழ்நிலை இருக்கவில்லை. எனவே, மக்களைப் பாதுகாப்பதற்காகவே போர் செய்யப்பட்டு, சுதந்திரம் பெறப்பட்டது. இந்நிலைமையை அநுர அரசு சீர்குலைக்கக்கூடாது.

பொய்களைச் சமூகமயப்படுத்தியதால் ஏற்படும் பிரதிபலன்களை இந்த அரசு விரைவில் உணரும்.” – என்றார்.

The post மாகாண சபைத் தேர்தலை முடிந்தால் விரைவில் நடத்திக் காட்டட்டும் அரசு: மொட்டுக் கட்சி சவால் appeared first on Oruvan.com.

2025 நடுப் பகுதியில் மாகாண சபைத் தேர்தல் – அநுர அரசு திட்டம்
1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல் சட்டத்தின் கீழ், 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தம்) சட்டத்தை இரத்துச் செய்வதன் மூலம் நீண்ட காலமாகத் தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை அடுத்த ஆண்டு நடுப் பகுதியில் நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலைத் தொடர்ந்து, திருத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அரசு குறிப்பிட்டுள்ளது.

இந்த விடயம் சம்பந்தமாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் பிரதி அமைச்சர் பிரபா ருவான் செனரத் தெரிவிக்கையில்,

“2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், மாகாண சபைத் தேர்தல் முறையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட திருத்தங்களை இரத்துச் செய்து பழைய மாகாண சபைத் தேர்தல் முறைக்கு மாற்றுவதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களுக்குப் பிறகுதான் மாகாண சபைத் தேர்தல்களை எதிர்பார்க்க முடியும். எனினும், சட்டத்தில் பொருத்தமான திருத்தங்களை அறிமுகப்படுத்தாவிட்டால் நாங்கள் மாகாண சபைகளுக்கான தேர்தல் செயற்பாடுகளைத் தொடர முடியாது.

அதன் அடிப்படையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் முன்னாள் அமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்ட திருத்தங்களை முன்னெடுப்பதாக இருந்தால் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கை அவசியமாகின்றது. ஆனால், அந்தச் செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு முழுமையாக முடிந்திருக்கவில்லை.

அத்தோடு அவ்விடயம் ஒரு நகைச்சுவையாக மாறியுள்ளது. ஆகவேதான் அந்த ஏற்பாடுகளைத் திருத்தியமைத்து பழைய முறையிலேயே தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்.” – என்றார்.

முன்னதாக, 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல்கள் (திருத்தம்) சட்டத்தின்படி, நாட்டின் பல்வேறு பிராந்தியங்களில் சமமான பிரதிநிதித்துவத்தை வழங்கும் குறிக்கோளுடன், எல்லைகளைத் அடையாளம் காண்பதற்காக ஜனாதிபதி எல்லை நிர்ணய ஆணைக்குழுவை நியமித்திருந்தார்.

இருப்பினும், எல்லை நிர்ணயத்தின் தேவை பல ஆண்டுகளுக்கு முன்பே அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை இன்னும் நிறைவு செய்யப்படவில்லை.

2018இல் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நியமிக்கப்பட்ட மீளாய்வுக் குழு, இரண்டு மாதங்களுக்குள் புதிய எல்லைகளை இறுதி செய்யவிருந்தது. ஆனால், அதன் அறிக்கையை உரிய காலத்தில் சமர்ப்பித்திருக்கவில்லை.

இதன் விளைவாக, 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளுக்கிடையில் ஆயுட்காலம் நிறைவுக்கு வந்திருந்த மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு முடிந்திருக்கவில்லை.

2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்கச் சட்டத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட 1988ஆம் ஆண்டின் 2ஆம் எண் மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தின் பிரிவு 3ஏ(11)இல் திருத்தம் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா 2018இல் சமர்ப்பித்த எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை ஏகமனதாக நிராகரிக்கப்பட்டதோடு பைசர் முஸ்தபாவே அதற்கு எதிராக வாக்களித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

The post 2025 நடுப் பகுதியில் மாகாண சபைத் தேர்தல் – அநுர அரசு திட்டம் appeared first on Oruvan.com.