மலையகத் தமிழர்கள் Archives - Oruvan.com

மலையகத் தமிழர்கள் 15 இலட்சம் பேரைக் கொண்ட தேசிய இனம்
“மலையகத் தமிழர்களை வெறும் தோட்டத் தொழிலாளர் வர்க்கமாகச் சுருக்கிப் பார்ப்பது முறையற்றது. அவர்கள் 15 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஓர் இன அடையாளமுள்ள சிறுபான்மை தேசிய இனமாகும்” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் இஸபெல்லா மார்டினைக் கொழும்பிலுள்ள கனேடிய இல்லத்தில் இன்று சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இதனை வலியுறுத்தினார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையிலான இந்தத் தூதுக்குழுவில், கூட்டணியின் அரசியல் குழு உறுப்பினர்களான பரணீதரன் மற்றும் பாரத் அருள்சாமி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பு குறித்து ஊடகங்களிம் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்ததாவது:-

“இறுதிக்கட்டப் போர்க்காலத்தில் கொழும்பு வீதிகளில் இடம்பெற்ற வெள்ளை வான் கடத்தல்களுக்கு எதிராக நான் போராடிய போது, எனக்குத் தஞ்சம் தந்த இடமே இந்தக் கனேடிய இல்லமாகும். இன்று எமது நலிவுற்ற மலையக மக்களின் உரிமைகளுக்காக இங்கு வந்துள்ளோம்.

மலையகத் தமிழர்களில் கூலித் தொழிலாளர்கள் ஒரு சிறு பிரிவினரே (சுமார் ஒரு இலட்சம் பேர்). ஆனால், ஒட்டுமொத்தமாக 15 இலட்சம் பேரைக் கொண்ட ஒரு தேசிய இனமாக மலையகச் சமூகம் வளர்ந்துள்ளது. எனவே, அவர்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தொழிலாளர் பிரச்சினையாக மட்டும் பார்க்கக் கூடாது.

தோட்டப் பிரதேசங்களில் வாழும் மக்கள் இன்றும் முழுமையற்ற குடியுரிமை மற்றும் நவீன அடிமைத்தனத்தின் அறிகுறிகளுடனேயே வாழ்ந்து வருகின்றனர். இது மிகுந்த கவலைக்குரிய விடயமாகும்.

கனடாவின் உலகளாவிய உதவிக் கரங்கள் மற்றும் மனித உரிமை கண்காணிப்பு நடவடிக்கைகள் நலிவுற்ற எமது மலையக மக்களையும் சென்றடைவதை கனடா உறுதிப்படுத்த வேண்டும் என்று தூதுவரிடம் வலியுறுத்தினோம்.” – என்றார்.

இந்தக் கருத்துக்களைக் கனேடியத் தூதுவர் மிகவும் தெளிவாகப் புரிந்துகொண்டதுடன், இது குறித்த சாதகமான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியதாகவும் மனோ கணேசன் எம்.பி. மேலும் தெரிவித்தார்.

The post மலையகத் தமிழர்கள் 15 இலட்சம் பேரைக் கொண்ட தேசிய இனம் appeared first on Oruvan.com.

மலையகத் தமிழர்கள் ஒரு தேசிய இனம்: வெறும் தொழிலாளர் சமூகமாக எங்களைச் சுருக்கிவிடாதீர்கள்
மலையகத் தமிழர்கள் இன்று வெறும் தொழிலாளர் சமூகமாகச் சுருங்கிவிடாமல், ஒரு தேசிய இனமாக வளர்ந்துள்ளனர் என இலங்கையிலுள்ள ஜப்பான் தூதுவர் இசொமடா அகியோவிடம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதிநிதிகள் குழு, கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதுவர் இல்லத்தில் தூதுவர் இசொமடா அகியோ மற்றும் ஜப்பானிய உயர்மட்டக் குழுவினரை நேற்று சந்தித்துக் கலந்துரையாடியது.

இச்சந்திப்பின் போது மனோ கணேசன் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள் வருமாறு:-

“இலங்கையில் வாழும் சுமார் 15 இலட்சம் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் எதிர்கொள்ளும் சமூக – பொருளாதார சவால்கள் குறித்து ஜப்பான் இனிவரும் காலங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, தோட்டப்பகுதிகளில் வாழும் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களுக்கு நேரடிப் பயன் அளிக்கக்கூடிய உதவித் திட்டங்களை வழங்க முன்வாருங்கள்.”

“எமது மக்களை ஒரு இலங்கை தேசிய இனமாக அடையாங்காணுங்கள். நாம் பல்வேறு துறைகளில் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு வருகின்றோம். தற்போதைய அரசு எமது பிரச்சினைகள் குறித்து நிறையப் பேசினாலும், அவை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.”

“இலங்கைக்கு வரலாற்று ரீதியாக அதிகளவு உதவி வரும் நட்பு நாடான ஜப்பான், தனது உதவிகள் இந்நாட்டின் மிகவும் பின்தங்கிய சமூகமான மலையகத் தமிழ் மக்களைச் சென்றடைகின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று மனோ கணேசன் இதன்போது வலியுறுத்தினார்.

இந்தக் கலந்துரையாடலில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர்களான வே. இராதாகிருஷ்ணன், பாரத் அருள்சாமி மற்றும் பிரஜீவன் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

The post மலையகத் தமிழர்கள் ஒரு தேசிய இனம்: வெறும் தொழிலாளர் சமூகமாக எங்களைச் சுருக்கிவிடாதீர்கள் appeared first on Oruvan.com.