மலைப்பாம்பு Archives - Oruvan.com

கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த மலைப்பாம்பு
இந்தோனேசியாவின் சுலவேசி தீவின் மரோஸ் பகுதியில் உலகின் மிக நீளமான இராட்சத பெண் மலைப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 7.22 மீட்டர் நீளமும், சுமார் 96.5 கிலோ எடையும் கொண்ட இந்த மலைப்பாம்பு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த பாம்புக்கு இபு பரோன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இபு பரோன் ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பு வகையைச் சேர்ந்தது. உலகின் மிக நீளமான பாம்பு இனமாக ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புகள் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இவை பொதுவாக 3 முதல் 6 மீட்டர் (10 முதல் 19 அடி) வரை நீளம் கொண்டவை. 20 அடிக்கு மேல் நீளமான பாம்புகள் மிகவும் அரிதானவை. இபு பரோனின் நீளம் அதற்கு மயக்க மருந்து கொடுத்து எடுக்கப்படவில்லை என்று கின்னஸ் உலக சாதனை அமைப்பு தெரிவித்துள்ளது.

ஒருவேளை அதற்கு மயக்க மருந்து கொடுத்து அதன் உடல் முழுமையாக ஓய்வெடுக்கும்போது அளவீடு செய்தால் அது மேலும் 10 சதவீதம் நீளமாக 7.9 மீட்டர் வரை (26 அடி) இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புகள் விஷமற்றவை என்றாலும், அவற்றின் அளவு மற்றும் வலிமை காரணமாக கால்நடைகளைக் கொல்லும் தன்மை கொண்டவை எனக் குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், மனிதர்களையும் கொல்லும் திறன் கொண்டவை என தெரிவிக்கப்படுகின்றது.

The post கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த மலைப்பாம்பு appeared first on Oruvan.com.

மலைப்பாம்புகளை உடலில் மறைத்து தாய்லாந்துக்கு கடத்த முற்பட்ட இலங்கையர் கைது
தாய்லாந்தின் பாங்காக் நகரில் உள்ள சுவர்ணபூமி விமான நிலையத்தில் மூன்று பாம்புகளை தனது உள்ளாடைக்குள் மறைத்து கடத்த முயன்றதாகக் கூறப்படும் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மூன்று மலைப்பாம்புகள் இவ்வாறு குறித்த இலங்கையரின் உடலில் மறைத்து கடத்த முற்பட்டுள்ளதாக தாய்லாந்து குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவரை தாய்லாந்து வனவிலங்கு அமுலாக்க வலையமைப்பு (WEN) கைது செய்துள்ளது.

அனுமதியின்றி வனவிலங்குகளை ஏற்றுமதி செய்ய முயன்றால் சந்தேக நபருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ஒரு மில்லியன் பாட் (US$30,900) வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மலைப்பாம்புகளை உடலில் மறைத்து தாய்லாந்துக்கு கடத்த முற்பட்ட இலங்கையர் கைது appeared first on Oruvan.com.