மன்னார் Archives - Oruvan.com

மன்னாரில் காற்றாலை க்கு எதிராக அணி திரண்ட மக்கள்-அனைத்து செயல்பாடுகளும் ஸ்தம்பிதம்
மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும், மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் இன்றைய தினம் திங்கட்கிழமை (29) மன்னாரில் பொது முடக்க போராட்டம் இடம்பெற்ற நிலையில் மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மன்னார் மாவட்டம் முழுவதும் இன்றைய தினம் திங்கட்கிழமை பொது முடக்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மன்னார் பிரஜைகள் குழு மற்றும் போராட்டக்குழு இணைந்து குறித்த அழைப்பு விடுத்திருந்தனர்.

இன்றைய தினம் திங்கட்கிழமை (29) காலை முதல் மன்னார் பஜார் பகுதி உள்ளடங்களாக அனைத்து பகுதிகளிலும் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.

தனியார் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. பல்வேறு கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்லவில்லை.

இந்த நிலையில் காலை 10.30 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடினர். பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து கண்டன பேரணி ஆரம்பமானது.

மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல், மன்னாரில் கனிய மணல் அகழ்வு மற்றும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பொலிஸாரினால் பொதுமக்கள் மற்றும் அருட்தந்தையர்கள் தாக்கப்பட்டமை ஆகிய சம்பவங்களை கண்டித்து குறித்த பேரணி ஆரம்பமானது.

குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் இருந்து போராட்டக்குழு ஒன்று வருகை தந்தது. மேலும் வடக்கில் உள்ள சில மாவட்டங்களில் இருந்தும் ஆதரவு தெரிவித்து சமூக செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமான குறித்த பேரணி பொது வைத்தியசாலை வீதியூடாக சென்று மன்னார் பொலிஸ் நிலைய வீதியூடாக மன்னார் பஜார் பகுதியை சென்றடைந்தது.

பின்னர் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்று கூடிய மக்கள் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதனால் குறித்த பகுதியில் சிறிது நேரம் பதற்ற நிலை ஏற்பட்டது. பின்னர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மக்கள் ஒன்று கூடிய இடத்திற்கு வருகை தந்தார்.

இதன் போது போராட்டக்குழு சார்பாக ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டிய கடிதம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

கடிதத்தை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் உடனடியாக மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் தொடர்ச்சியாக போராட்டம் இடம் பெறும் பகுதிக்குச் சென்றனர்.

இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்ட நிலையில் தாக்குதலை மேற்கொண்ட பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதனால் பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கலகம் அடக்கும் பொலிஸார் அவ்விடத்திற்கு அழைக்கப்பட்டனர்.

பின்னர் தொடர்ச்சியாக முருகல் நிலை ஏற்பட்ட நிலையில் மத தலைவர்கள் அவ்விடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கதைத்து அவ்விடத்தில் இருந்து அனைவரையும் அகற்றினர்.

அதனை தொடர்ந்து பஜார் பகுதியில் நின்று தமது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை கோபுரங்கள் அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

மக்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

குறித்த போராட்டத்தில் சர்வமத தலைவர்கள், பொது மக்கள் அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

The post மன்னாரில் காற்றாலை க்கு எதிராக அணி திரண்ட மக்கள்-அனைத்து செயல்பாடுகளும் ஸ்தம்பிதம் appeared first on Oruvan.com.

தமிழ் மக்கள் மீது மீண்டும் முன்னெடுக்கப்பட அரச பயங்கரவாதம்
மன்னாரில் தமது இருப்பின் உரிமைக்காக போராடும் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை வன்முறையானது மீண்டும் தமிழ் மக்கள் மீது அரங்கேற்றப்பட்ட அரச பயங்கரவாதத்தின் அப்பட்டமான வெளிப்பாடு என தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் என். ஸ்ரீகாந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம் மாட்டின் வீதியிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்துக்கு எதிரான அம்மாவட்ட மக்களது உண்மையான நீதியான போராட்டத்தை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அது சட்ட விரோதமானது என கருதியிருந்தால் அதில் ஈடுபட்ட மக்களை சட்ட ரீதியாக கைது செய்திருக்க வேண்டும்.

ஆனால் அவர்களை தாக்குவதற்கும் காயங்களை ஏற்படுத்துவதற்கும் அரசுக்கு எந்த அதிகாரமும் இருக்க முடியாது.

அனுர தலைமையிலான அரசு பதவியேற்று ஒரு வருடம் நிறைவுக்கு வரும் இந்த சூழ்நிலையில், அரசு நடத்தி இருக்கிற இந்த காட்டு தர்பார், என்பது, அரசுக்கு எதிரான ஜனநாயக ரீதியான போராட்டங்கள், பாரிய அளவில் பரந்து விரிவடையும் பொழுது அரசு அவை தொடர்பிலே எந்தகைய அணுகு முறையை கையாளும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகவே நாங்கள் கருதுகிறோம்.

அத்துடன் இந்த அடாவடியை அங்கீகரிக்கவோ அல்லது ஆமோதிக்கவோ ஜனநாயகத்தை மக்களது அடிப்படை உரிமைகளை மதிக்கின்ற எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மக்கள் கடந்த காலத்தில் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில், காற்றாலை திட்டம் தொடர்பில் ஒரு பரந்த அளவிலானதும் அந்த திட்டத்திற்கு எதிராக மன்னார் தீவில் எழுந்திருந்த நிலையில், 80 நாட்களாக இந்த போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்ற நிலையில், அதை நசுக்க இந்த அரசு முயற்சிக்கின்றது.

இந்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி செயலகம் வரை சென்று போராடும் மக்கள், இந்த திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த பின்னணியிலே அரசாங்கம் இந்த பிரச்சினையை நிதானமாக கையாள இந்த அரசு முனைந்திருக்க வேண்டும்.

உண்மையில் என்ன நடந்தது என்பதை ஆராய்ந்திருக்க வேண்டும். கடந்த வெள்ளிக்கிழமை இரவிரவாக காற்றாலை உபகரணங்கள் உதிரிப்பாகங்கள் இயந்தரங்கள் எல்லாம் மன்னார் தீவுக்குள் கொண்டுவரப்பட்ட போது அதற்கு மக்களுடைய எதிர்ப்பலை எழுந்திருந்த நேரத்தில், அதை நிதானமாக கையாள அரசு முயற்சித்திருக்க வேண்டிய நிலையில், அரசு காட்டுமிராண்டித்தனமான முறையில் அந்த மக்களை அடித்து துவைத்து இருக்கிறது.

இதனால் சிலர் காயமடைந்து இருக்கிறார்கள். இதன் ஊடாக ஜனநாயக போராட்டங்களில் ஈடுபடுகிற மக்களுக்கு மாத்திரமல்ல, தமிழ் மக்களுக்கும் கூட இந்த அரசாங்க ஒரு செய்தியை சொல்லி இருப்பதாகத்தான் கருத வேண்டி இருக்கிறது.

குறிப்பாக அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் ஒரு எல்லையைத் தாண்டுமாக இருந்தால் அரசாங்கம் தன்னுடைய பலத்தை மக்கள் மீது பிரயோகிக்க தயங்காது என்பதை அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது.

இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என கோருகின்றேன்

இப்பொழுது கூட நேரம் கடந்து விடவில்லை. அரசாங்கம் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் பிரதிநிதிகளை அழைத்து பேசி தன்னுடைய நிலைப்பாட்டில் கூட அவர்களுக்கு எடுத்துரைத்து ஒரு நிதானமாக தீர்வுக்கு வர முடியும். ஆனால் நசுக்க முடியும் என்ற எண்ணத்திலே அரசாங்கம் செயற்படுமாக இருக்கின்றது.

குறிப்பாக தமிழ் தேசியம் சார்ந்த அரசியல்வாதிகள் இந்த உண்மைகளை உணர வேண்டும்.

முழு இலங்கை தீவிலும் வாழ்கிற தமிழ் மக்கள் ஏன் ஜனநாயக உரிமைகளை மதிக்கிற சிங்கள மக்களுக்கு கூட உணர்வாளை ஒன்று பட்டிருக்கிறார்கள் என்பதையும் இந்த சந்தர்ப்பத்திலே நான் சொல்லி வைக்க விரும்புகிறேன் என்றும் தெரிவித்திருந்த்மை குறிப்பிடத்தக்கது

The post தமிழ் மக்கள் மீது மீண்டும் முன்னெடுக்கப்பட அரச பயங்கரவாதம் appeared first on Oruvan.com.

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் – சுற்றி வளைத்த சுகாதார அதிகாரிகள்
மன்னார் நகர பகுதியில் அண்மையில் அமைக்கப்பட்ட உணவகம் ஒன்று சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) மன்னார் நகரசபை பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான குழுவினரால் கண்காணிக்கப்பட்ட போது பல்வேறு சுகாதார சீர்கேடுகள் காரணமாக உணவகம் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

மன்னார் – தலை மன்னார் பிரதான வீதியில் அமைந்திருந்த குறித்த உணவகம் உரிய முறையில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமல் அசுத்தமாக உணவுகள் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் மன்னார் நகரசபை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்புடன் மேற் கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பிடிப்பட்டது.

குறித்த உணவகம் எந்த ஒரு வியாபார உரிமமும் இன்றி இயங்கி வந்ததுடன் உணவகத்தின் கழிவு நீர் உரிய விதமாக அகற்றப்படாமல் புழுக்கள் உருவாகியும் அதே நேரம், ஆரோக்கியமற்ற விதமாக உணவுகள் தயாரிக்கப்பட்டிருந்தமை அத்துடன் உணவு பொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.

இதன் அடிப்படையில் குறித்த உணவகத்திற்கு எதிராகவும், உரிமையாளர் மீது பல்வேறு பிரிவுகளில் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் – சுற்றி வளைத்த சுகாதார அதிகாரிகள் appeared first on Oruvan.com.

மன்னார் போராட்டத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவில் இருந்து இளைஞர்கள் நடைபயணம்
மன்னார் காற்றாலை போராட்டத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவு இளைஞர்கள் இருவர் மன்னார் நோக்கி நடை பயணத்தை ஆரம்பித்த நிலையில் குறித்த இரு இளைஞர்களும் நேற்று (12) மாலை மன்னாரை வந்தடைந்தனர்.

மன்னார் பகுதியில் அமைக்கப்பட உள்ள காற்றாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்காலில் இருந்து 2 இளைஞர்கள் நடைபயணம் ஒன்றை கடந்த புதன்கிழமை (10) ஆரம்பித்தனர்.

அவர்கள் முல்லைத்தீவிலிருந்து கால்நடையாக செல்வதோடு துண்டு பிரசுரங்களை வீதி ஓரங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கி வந்தனர்.

இந்த நிலையில் குறித்த இரு இளைஞர்களும் நேற்று மாலை 6.00 மணியளவில் மன்னார் தள்ளாடி சந்தியை வந்தடைந்தனர்.

இந்நிலையில் குறித்த இரு இளைஞர்களையும் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் மற்றும் மன்னார் நகரில் போராட்டத்தை முன்னெடுத்து வரும் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து வரவேற்றனர்.

பின்னர் தள்ளாடி சந்தியில் இருந்து மன்னார் பஜார் பகுதி வரை குறித்த குழுவினர் நடை பயணமாக வருகை தந்து காற்றாலைக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை பஜார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு விநியோகித்தனர்.

The post மன்னார் போராட்டத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவில் இருந்து இளைஞர்கள் நடைபயணம் appeared first on Oruvan.com.

மன்னாரில் மணல் அகழ்வில் சர்வதேச நிறுவனங்கள், தீவின் தலைவிதி என்னாகும்?
பொது மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னார் தீவில் இலட்சக்கணக்கான தொன் கனிய மணலை அகழும் முயற்சில் ஈடுபட்டுள்ள சர்வதேச நிறுவனங்கள் முன்னாள் இராணுவ உறுப்பினர்களை பணிக்கு அமர்த்தி உள்ளூர் ஏழை மக்களை ஒடுக்கி வருவதை சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது.

“இந்த நிறுவனங்களுடன் தொடர்புடையவர்கள், தற்போது பணியில் இல்லாத இராணுவ அதிகாரிகள் உட்பட, ஓரளவு அதிகாரத்தைப் பயன்படுத்தக்கூடியவர்கள். இதன் மூலம், ஏழை, அப்பாவி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.”

பணத்திற்காக பாதாள உலகத்தினருக்காக கொலைகளை செய்பவர்கள் இராணுவத்தில் இருப்பதாக ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியான ஜனாதிபதி அறிவித்து பத்து நாட்களுக்குள், அரச மற்றும் வெளிநாட்டு முதலீடுகளினால் மன்னார் தீவில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களினால் உள்ளூர் மக்கள் படும் இன்னல்கள் தொடர்பில் மன்னார் பிரஜைகள் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையத்தின் தலைவர் ஹேமந்த விதானகே இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

2023 ஆண்டு மன்னாரில் இடம்பெற்ற பல கொலைகள் தொடர்பில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள இருவர் இராணுவத்தில் உள்ளவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னார் தீவில் இலங்கை மின்சார சபையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள மின் உற்பத்தி நிலையம் மற்றும் வீதி அபிவிருத்தி காரணமாக நிலப்பகுதி நீரில் மூழ்குவதால் அப்பகுதி மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்பதை ஹேமந்த விதானகே, மன்னார் பிரஜைகள் குழுவுடன் புதன்கிழமை (29) நடத்திய கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தினார்.

“நாம் இதுவரை பார்த்தது என்னவென்றால், மன்னாரின் பெரும்பகுதி நீரால் நிரம்பியுள்ளது, தாழ்வான நிலங்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன, மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர், அவர்கள் வேலை இழந்துள்ளனர், அவர்களுக்கு மலசலகூட வசதி இல்லை. மேலும், சிறுவர்கள் தண்ணீரில் இறங்கி பாடசாலைக்கு செல்ல வேண்டியுள்ளது. அந்த வீடுகள் பல வாரங்களாக இந்த வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.”

பறவைகளுக்கு உணர்திறன் கொண்ட பிரதேசத்தின் ஊடாக மற்றுமொரு மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்கும் திட்டத்தை வெளிப்படுத்திய சுற்றுச்சூழல் அந்த நிலையத்தில் தலைவர் ஹேமந்த விதானகே, நிலம் நீரில் மூழ்கியதற்கான காரணங்களை பின்வருமாறு விளக்கினார்.

“இதற்கு முக்கியக் காரணம் இந்தப் பிரதேசத்தின் பிரதான வீதிகளின் அபிவிருத்தி மற்றும் குறுக்கு வீதிகளின் அபிவிருத்தியே ஆகும். ஆனால் இலங்கை மின்சார சபையானது 100 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தை உருவாக்குதைகயில் களிமண்ணைப் பயன்படுத்தி கடற்கரைக்கு சமாந்தரமான வீதியை உருவாக்கியுள்ளது.  இங்கு, இந்த வீதியை அமைப்பதன் மூலம், இந்த தண்ணீர் வழிந்தோடும் வழிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது அவர்கள் மேலும் 20 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தை 20 மின்கம்பங்களுடன் தலை மன்னார் நோக்கி அமைப்பதற்கான முயற்சியை முன்னெடுக்கையில், அந்த பகுதி உண்மையில் பறவைகளுக்கு மிகவும் உணர்திறன் வாய்ந்த பகுதி. மேலும் இது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி”

இந்தியாவின் அதானி நிறுவனத்தினால் மன்னாரில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ள மின் உற்பத்தி நிலையம் நிர்மாணிக்கப்பட்டால் மன்னார் தீவின் கதி என்னவாகும் என்பது தொடர்பிலும் ஊடக சந்திப்பில் ஹேமந்த விதானகே விளக்கமளித்தார்.

“மேலும், அதானி வலுசக்தி நிலையம் அல்லது மின் நிலையத்தில் தீவு முழுவதும் பல இடங்களில் 56 கோபுரங்கள் நிறுவப்படவுள்ளது. இந்த கோபுரங்களை அமைக்கும் போது மீண்டும் அதே இடத்தில் களிமண்ணை பயன்படுத்தி வீதிகள் அமைக்கப்படும், எனவே, இந்த பகுதியில் வெள்ள நீர்  இரு மடங்காகவோ அல்லது மூன்று மடங்காகவோ அதிகரிக்க வாய்ப்புண்டு.”

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு அதானி நிறுவனத்துடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் இரத்துச் செய்யப்படவில்லையென்றாலும், இந்த விடயத்தை மீளாய்வு செய்து கொள்வனவு செய்யும் மின்சாரத்தின் விலையில் ‘தேவையான மாற்றங்களை’ மேற்கொள்ள குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

மன்னாரில் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்ட காற்றாலையின் காரணமாக உயிரிழப்புகளை சந்தித்த கிராம மக்கள், இந்த முதலீட்டின் மூலம் தாங்கள் மேலும் கஷ்டப்பட நேரிடும் என தொடர்ந்தும் வலியுறுத்துகின்றனர்.

மன்னார் தீவில் ஓய்வுபெற்ற இராணுவத்தினர் மற்றும் எத்தகைய பலத்தையும் பயன்படுத்தக்கூடியவர்களின் உதவியுடன் மூன்று சர்வதேச நிறுவனங்கள் வைத்து பல இலட்சம் தொன் கனிய மணலை அகழ்வதற்கான முயற்சியை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் வெளிப்படுத்தியுள்ளார்.

“மேலும், ஒரியன் என்ற நிறுவனமும், மாஸ் மெட்டல் அன்ட் மினரல்ஸ் என்ற நிறுவனமும், அவுஸ்திரேலிய நிறுவனமான இல்மனைட் சேன்ட்ஸ் என்ற மூன்று நிறுவனங்களும் இந்த நேரத்தில் தாது கனிய மணல் அல்லது இல்மனைட் அகழ்வதற்கான அனைத்து தயார்படுத்தல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளன.”

உள்ளூர்வாசிகளின் கடும் எதிர்ப்பு

2024 நவம்பரில் மன்னாரில் இலட்சக்கணக்கான தொன் கனிய மணலை அகழ்வதற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்காக சர்வதேச நிறுவனத்திற்கு அனுமதி வழங்கும் நோக்கில், ஆய்வுகளுக்கு வந்த அரச அதிகாரிகள் தலைமையிலான முதலீட்டாளர்களின் முயற்சியை கிராம மக்கள் முறியடித்தனர்.

நில அளவை திணைக்கள அதிகாரிகள், மத்திய சுற்றாடல் அதிகாரசபை அதிகாரிகள், மன்னார் மாவட்ட உதவி செயலாளர் உள்ளிட்ட  20ற்கும் மேற்பட்ட அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் குழுவில் நவம்பர் 06, 2024 அன்று டைட்டேனியம் அகழ்விற்காக மாதிரிகளை எடுக்கும் நோக்கில், மன்னார் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஓலைத்தொடுவாய், வள நகர் பிரதேசத்திற்கு  சென்றவர்கள், பாரியளவிலான கனிய மணல் அகழ்விற்கான ஐந்து உரிமங்களைப் பெறுவதற்கு இலங்கை புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச நிறுவனத்தின் பிரதிநிதிகளாகும்.

நவம்பர் மாத முற்பகுதியில் கிடைத்த அனுமதிக்கு அமைய, இலங்கை முதலீட்டுச் சபையின் வெளிநாட்டு முதலீட்டாளர் அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட வர்த்தக நிறுவனம்  அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட ஒரியன் மினரல்ஸ் டை்டேனியம் சேன்ட்ஸ் (தனியார்) நிறுவனமாகும்.

“முதலீட்டு சபையின் வழிகாட்டுதலும் ஒத்துழைப்பும் இந்தப் பணியில் பெரும் உதவியாக அமைந்துள்ளது. புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் ஒப்புதல் மற்றும் ஒரியன் பெயரில் அனுமதி வழங்கியமை ஆகியவை அகழ்விற்காக விண்ணப்பிப்பதற்கான வேகத்திற்கு உதவியது. அடுத்த சில மாதங்களில் கிடைக்கும் முடிவுகள் நிறுவனத்திற்கு ஒரு நேர்மறையான தாக்கத்தை தரும்,” என டைட்டேனியம் சேன்ட்ஸ் நிர்வாக பணிப்பாளர் பேராசிரியர் ஜேம்ஸ் சியர்ல் அந்த நேரத்தில் தெரிவித்திருந்தார்.

டைட்டேனியம் சேன்ட்ஸ் முதலீட்டில் இருந்து எதிர்பார்க்கப்படும் வருமானம் இரண்டு பில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் எனவும், வருடாந்தம் 150,000 தொன் கனிய மணலை அகழ்ந்து எடுப்பதற்கான சாத்தியம் உள்ளதாகவும் அகழ்வு தொடர்பில் அரை நூற்றாண்டுக்கும் மேலான அனுபவமுள்ள புவியியலாளர் டக் பிரைட் குறிப்பிட்டுள்ளார். இதற்காக 122 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் முதலீடு செய்யப்படும். இதன் மூலம் சர்வதேச அளவில் இல்மனைட் உற்பத்தியாளர்கள் ஊடாக 600 உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

The post மன்னாரில் மணல் அகழ்வில் சர்வதேச நிறுவனங்கள், தீவின் தலைவிதி என்னாகும்? appeared first on Oruvan.com.

மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பொலிஸாரே பொறுப்பு கூற வேண்டும் – செல்வம் எம்.பி
மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் நேற்று (16) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பொலிஸார் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் நடைபெற்ற துப்பாக்கி பிரயோகம் உண்மையிலேயே கண்டிக்கத்தக்க ஒரு விடயம் என்பதுடன், காட்டு மிராண்டித்தனமான ஒரு விடயமாகும்.

இந்த மிலேச்சத்தனமான செயலுக்கு மன்னாரில் உள்ள பொலிஸார் முழுப்பொறுப்பையும் எடுக்க வேண்டும்.

நொச்சிகுளம் மக்கள் தொடர்ந்து பழிவாங்கப்படுகிறார்கள். இன்றும் தொடர்ச்சியாக  நொச்சிகுளம் கிராமத்தின் மக்கள் படிப்படியாக படுகொலை செய்யப்படுகின்ற சூழல் காணப்படுகிறது .

இந்த விடயத்தை கடந்த அரசாங்கத்தில் மக்கள் பாதுகாப்பு தொடர்பாடல் அமைச்சரோடு நான் நேரடியாக பேசியிருந்தேன். காரணம் துப்பாக்கி பாவிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஏ.கே 47 பாவிக்கப்பட்டுள்ளது .

இப்பொழுது எந்த வகையான துப்பாக்கி பாவிக்கப்பட்டுள்ளது என்பது தெரியப் படவில்லை. இந்த துப்பாக்கி பிரயோகம் நொச்சிகுளம் மக்களை பார்த்து தான் பிரயோகிக்கப்படுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.

மன்னார் பொலிஸாருடைய மெத்தனப் போக்கும் இதில் அடங்கியிருக்கிறது. அந்த கிராமத்து மக்கள் அச்சத்தோடு வாழும் சூழலிலே மீண்டும் மன்னார் நீதி மன்றத்திற்கு முன் இந்த படுகொலைகள் நடைபெற்றிருக்கிறது. ஆகவே இது கண்டிக்கத்தக்கது.

இவ்விடயம் சம்பந்தமாக ஜனாதிபதி அவர்களினதும் கவனத்திற்கும், நாடாளுமன்ற கவனத்திற்கும் முக்கியமான விடயமாக கொண்டு வரவுள்ளேன். ஏனென்றால் இது தொடர்ச்சியாக நடைபெறுகிற விடயமாக இருக்கிறது.

போன உயிர்களை மீளப் பெற முடியாது. துப்பாக்கி பிரயோகத்தால் உயிர் நீத்த குடும்பங்கள் பல அந்த கிராம மக்கள் அச்சத்தோடு வாழுகின்ற நிலைமை தொடர்கின்றது.

ஆகவே இதன் முழுப்பொறுப்பையும் பொலிஸார் எடுக்க வேண்டும் .இந்த சம்பவத்திற்கு காரணம் பொலிஸாருடைய கவனயீனம் அசமந்தப்போக்கு என்பதை இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன்.

முப்படைகள் அங்கே பாதுகாப்பு நடவடிக்கையில் இருக்கும் போது இவ்வாறான விடயங்கள் நடைபெறுவது கேள்விக்குறியாகவே இருக்கிறது. அந்த வகையில் இவ்வாறான சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டிய விடயங்களாகும்.

சம்மந்தப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்ட வேண்டும். இதற்கான குழு அடங்கிய புலனாய்வு துறை நடவடிக்கைகளை பொலிஸார் உடனடியாக ஆரம்பித்து செயலில் இறங்க வேண்டும்.

மன்னாரில் உள்ள பொலிஸாரை மட்டும் வைத்து இதற்குரிய நடவடிக்கைகளை செய்து கொள்வது முடியாத காரியமாகும். எனவே கொழும்பில் இருந்து விசேட குழு அடங்கிய பொலிஸார் வரவழைக்கப்பட்ட வேண்டும்.

பொலிஸார் அதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டுவதுடன் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே எனது கோரிக்கை என அவர்  தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

The post மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பொலிஸாரே பொறுப்பு கூற வேண்டும் – செல்வம் எம்.பி appeared first on Oruvan.com.

மன்னாரில் மழைக்கு மத்தியில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் கொண்டாட்டம்
உலக வாழ் தமிழர்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (14) தைப் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து மற்றும் கத்தோலிக்க மக்கள் தைப்பொங்கல் பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள  இந்து ஆலயங்களில் விசேட தைப்பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றிருந்தன.

மேலும் வர்த்தக நிலையங்கள், நிதி நிறுவனங்கள் உட்பட அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட தோடு விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

மன்னார் பஜார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாகவும் பொங்கல் பொங்கி  மக்கள் மகிழ்சியை பகிர்ந்து கொண்டனர்.

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் மக்கள் அமைதியான முறையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)

The post மன்னாரில் மழைக்கு மத்தியில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் கொண்டாட்டம் appeared first on Oruvan.com.

தலைமன்னாரில் 10 வயது சிறுமி வன்புனர்வுசெய்யப்பட்டு கொலை- சந்தேக நபருக்கு விளக்கமறியல்
தலை மன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்பிரவரி மாதம் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 55 வயதுடைய நபரை எதிர்வரும் ஜனவரி ஒன்பதாம் திகதி வரை (09-01-2025) விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று (26) வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தப்பிச் சென்ற குறித்த நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

தலைமன்னார் பொலிஸார் தடுத்து வைத்து விசாரணை செய்த பின்னர் சந்தேகநபரை கடந்த திங்கட்கிழமை (16) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 26ஆம் திகதி (இன்று) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் குறித்த நபர் இன்றைய தினம் (26) மீண்டும் விசாரணைக்கு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த நபரை எதிர்வரும் ஜனவரி ஒன்பதாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்பிரவரி மாதம் 15ஆம் திகதி மாலை காணாமல் போன அக்கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி தனது அம்மம்மாவின் வீட்டில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் உள்ள தென்னந்தோப்பில் இருந்து மாறு நாள் 16ஆம் திகதி காலை சடலமாக மீட்கப்பட்டார்.

சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தெரியவந்தது.

குறித்த கொலை தொடர்பாக வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தந்து குறித்த தோட்டத்தில் வேலை செய்து வந்த 55 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த மே மாதம் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தபோது வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)

The post தலைமன்னாரில் 10 வயது சிறுமி வன்புனர்வுசெய்யப்பட்டு கொலை- சந்தேக நபருக்கு விளக்கமறியல் appeared first on Oruvan.com.

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்த 17 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 17 இந்திய மீனவர்களை இன்று செவ்வாய்க்கிழமை (24) அதிகாலை கைது செய்த கடற்படையினர், குறித்த மீனவர்களையும் படகுகளையும் தலைமன்னார் கடற்படையிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 17 மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உற்படுத்தி வருகின்றனர்.

விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்கள் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர்.

இதேவேளை மீனவர்கள் கைது செய்யப்பட்டதால் தங்கச்சி மடம் கிராமத்தில் இந்த ஆண்டு நத்தார் பண்டிகை கருப்பு நத்தாராக மாறி விட்டதாக சோகத்துடன் கூறும் மீனவர்களின் உறவினர்கள், மீனவர்களை உடனடியாக விடுதலை செய்து தாயகம் அழைத்து வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று (23) திங்கட்கிழமை 400க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப் படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

மீனவர்கள் இரவு சுமார் 12:30 மணி அளவில் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பூண்டி ராஜ் மற்றும் ஆரோன் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசை படகையும் அதிலிருந்து 17 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்ட 17 மீனவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களான எட்டுப் பேர் உள்ளடங்குகின்றனர். இதனால் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் வீட்டில் குழந்தைகளுக்கு புத்தாடை வாங்கவும், நத்தார் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக நேற்று (23) மாலை மூன்று மணிக்கு மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்களை இரவு 12 மணிக்கு இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

இதனால் நாளை நத்தார் பண்டிகை எங்களுக்கு கருப்பு நத்தாராக மாறிவிட்டதாகவும் உடனடியாக மீனவர்களை விடுதலை செய்து தாயகம் அனுப்பி வைக்குமாறு சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

குறித்த மீனவர்கள் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்

The post இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்த 17 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது appeared first on Oruvan.com.