மனோ கணேசன் Archives - Oruvan.com

ஜனாதிபதி அநுரகுமாருக்கு மனோ கணேசன் பகிரங்க எச்சரிக்கை
எரிவாயு, எரிபொருள் மற்றும் மருந்துக்கொள்வனவில் நிலவும் ஏகபோகக் கும்பல்களை ஒழிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்து வரும் நிலையில், அரசாங்கத்திற்குள்ளேயே புதிய கும்பல்கள் உருவாகி வருவதாகத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எச்சரித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அவர், பழைய ஏகபோகங்களை உடைக்க ஜனாதிபதி எடுக்கும் முயற்சிகளைப் பாராட்டினார்.

இருப்பினும், அரசாங்கத்துடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்ட நிறுவனங்கள், வெவ்வேறு போர்வையில் புதிய ஏகபோகக் கும்பல்களாக உருவெடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘பழைய கும்பல்களுக்குப் பதிலாக புதிய கும்பல்களைக் கொண்டு வருவதால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை’ எனத் தனது ‘X’ தளப் பதிவிலும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

The post ஜனாதிபதி அநுரகுமாருக்கு மனோ கணேசன் பகிரங்க எச்சரிக்கை appeared first on Oruvan.com.

மலையக மக்களை மாற்றான் தாய் பிள்ளைகளாக நடத்த வேண்டாம்
மலையகப் பெருந்தோட்ட மக்கள் அனைவருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாகக் காணி உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

கொட்டக்கலையில் நடைபெற்ற ‘மலையக வாழ்வுரிமை மாநாட்டில்’ கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மாநாட்டில் தொடர்ந்தும் உரையாற்றிய மனோ கணேசன் எம்.ப். குறிப்பிட்டதாவது:-

“காணி, வீடு, மற்றும் நியாயமான ஊதியம் ஆகிய மூன்றே ஒரு சமூகத்தின் வாழ்வுரிமையைத் தீர்மானிக்கும் பிரதான காரணிகளாகும். இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் ஏனைய சமூகங்களை விடப் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ளனர். எனினும், நாம் எவருக்கும் தாழ்ந்தவர்கள் அல்ல. 1948-இல் பறிக்கப்பட்ட எமது குடியுரிமை, நீண்ட போராட்டங்களுக்குப் பின்னரே மீளப் பெறப்பட்டது.

நல்லாட்சி அரசாங்கத்தின் நான்கு வருடக் காலப்பகுதியில் மாத்திரமே நாம் அதிகாரத்தில் இருந்தோம். அந்தக் குறுகிய காலத்தில் 7 பேர்ச் காணி உரிமை, தனி வீட்டுத் திட்டம், மலையக அதிகார சபை மற்றும் பாடசாலைகளுக்கான காணி ஒதுக்கீடு போன்ற பல அபிவிருத்திகளை முன்னெடுத்தோம். ஆனால், 40 வருடங்களாகப் பல்வேறு அரசாங்கங்களுடன் ஒட்டிக்கொண்டிருந்தவர்கள் எதனையும் செய்யவில்லை.” – என்றார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்த அவர், மலையக மக்களுக்கு வெறும் ‘கண்காட்சிகளை’ காட்ட வேண்டாம் எனவும், முறையான ஆட்சியை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

“பெருந்தோட்டங்களில் வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும், அங்கு வாழும் அனைத்து மக்களுக்கும் காணி உரிமை வழங்கப்பட வேண்டும். பயிரிடப்படாத காணிகளை மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதாக ‘ஹட்டன் பிரகடனத்தில்’ ஜனாதிபதி அறிவித்திருந்தார். ஆனால் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

அனுராதபுரம் மற்றும் குருணாகல் பகுதிகளில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 இலட்சம் ரூபாய் வழங்கி உதவிய அரசாங்கம், மலையகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த உதவியை வழங்கவில்லை. நாம் ஒன்றும் மாற்றான் தாய் பிள்ளைகள் அல்லர்.” – என்றார்.

டிக்கோயா – கிழங்கன் ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் சகோதரி ஒருவரின் சடலத்திற்கு நேர்ந்த அசாம்பவிதம் தொடர்பில் தான் உரிய அமைச்சருடனும் பொலிஸ் அதிகாரிகளுடனும் பேசியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது குறித்து நாளைக்குள் முறையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.

இறுதியாக, மலையகத்தில் விரைவில் ஒரு பலமான ‘தொழிற்சங்க சம்மேளனம்’ உருவாக்கப்படும் என்றும் அவர் இதன்போது பிரகடனம் செய்தார்

The post மலையக மக்களை மாற்றான் தாய் பிள்ளைகளாக நடத்த வேண்டாம் appeared first on Oruvan.com.

அரசாங்கத்தின் நாடக அரசியல் விரைவில் முடியும்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பொய் முகத்தை நிலக்கரி கையூட்டல் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதாகவும், இவர்களின் நாடக அரசியல் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான விசேட பயிற்சி மற்றும் இந்தியப் பயணம் குறித்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தரங்குறைந்த நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 700 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக அரிசி இறக்குமதியின் போது மோசடியில் ஈடுபட்டு ‘கருப்புப் பட்டியலில்’ சேர்க்கப்பட்ட ஒரு நிறுவனத்திற்கே, தற்போது நிலக்கரி விநியோக ஒப்பந்தத்தை இந்த அரசாங்கம் வழங்கியுள்ளது.

தரமற்ற நிலக்கரியால் மின் உற்பத்தி குறைவடையும் என்றும், இதனால் மேலதிகமாக நிலக்கரி வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டு செலவுகள் அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையின்றி மக்களிடம் கூறிய பொய்களையே மூலதனமாக வைத்து இந்த அரசாங்கம் தற்போது ஆட்சி நடத்தி வருவதாக அவர் குற்றம்சாடினார்.

The post அரசாங்கத்தின் நாடக அரசியல் விரைவில் முடியும் appeared first on Oruvan.com.

அரசாங்கம் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும்: மனோ கணேசன்
அரசாங்கம் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும், தனது சொந்த உறுப்பினர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் நடவடிக்கை எடுக்கத் தவறினால் அதன் நம்பகத்தன்மை சரிந்து விடும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், எச்சரித்துள்ளார்.

விசாரணைகள் அரசியல் எதிரிகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படக் கூடாது என்றும் அவர் எக்ஸ் தளப் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

“ரணில், நாமல் மற்றும் ஷிரந்தி ஆகியோரை விசாரியுங்கள். ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால் சமர்ப்பியுங்கள். வழக்குகளைத் தாக்கல் செய்து தீர்ப்புகளைப் பெறுங்கள். சட்டத்தின் ஆட்சியை அமுல்படுத்துங்கள்.

ஆனால் சட்டத்தின் ஆட்சியை நியாயமாகவும் வெளிப்படையாகவும் அமுல்படுத்துவது முக்கியம்.

ஊழலை எதிர்த்துப் போராடுவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், மீது பல முறைப்பாடுகள் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் முன்பாக உள்ளன, அவை தாமதமின்றி விசாரிக்கப்பட வேண்டும்.

நூற்றுக்கணக்கான கோடி இழப்புகளை ஏற்படுத்தி, மின் உற்பத்தி நிலையங்களை சேதப்படுத்தியதாகவும் கூறப்படும் தரமற்ற நிலக்கரியை கப்பல்களில் இறக்குமதி செய்ததாக கூறப்படுகிறது.

ஜேவிபி எதிர்க்கட்சியில் இருந்தபோது எதிர்த்த கேள்விப்பத்திர செயல்முறைக்கு அமைச்சரவை இப்போது ஒப்புதல் அளித்துள்ளது.

அதேவேளை, சபாநாயகரின் பல வீடுகள், வாகனங்கள், கொடுப்பனவுகள் மற்றும் நெறிமுறை நடத்தை தொடர்பாக நாடாளுமன்ற பிரதி செயலாளர் முறைப்பாடு செய்துள்ளார்.

மற்றவர்களை மட்டும் குற்றம் சாட்டி ஆட்சி செய்ய முடியாது.

உங்கள் சொந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும். நம்பகத்தன்மையைப் பாதுகாக்கவும். பொறுப்புக்கூறலை நிலைநிறுத்தவும்,” என்றும் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

The post அரசாங்கம் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும்: மனோ கணேசன் appeared first on Oruvan.com.

மனோ கணேசன் பதவி விலக வேண்டும்
“மலையக மக்களுக்கு நில உரிமையை பெற்றுக்கொடுக்க முடியவில்லை என்றால் எம்.பி. பதவியை துறந்துவிட்டு வீட்டுக்கு செல்லுங்கள்.”

இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கு சவால் விடுத்துள்ளார் உரிமை மீட்போம் தலைமுறை காப்போம் அமைப்பின் தலைவர் பா. சிவநேசன்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

“ நிலத்தை வாங்கி கொடுக்க முடியவில்லை என்றால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுவிட்டு வீட்டுக்கு போகவேண்டும் மனோ கணேசன்.

மலையகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் இடம் கொடுக்கவில்லை என்றால் வட கிழக்குக்கு போக சொல்வது மனோகனேசனின் கையாலாகாத தன்மையை காட்டுகின்றது .

மலையகத்தில் எத்தனையோ ஏக்கர் கணக்கில் இடங்கள் உள்ளது .

அதை அரசாங்கத்திடம் கேட்டு பெற்றுகொடுக்க முடியாத நீங்கள் (உங்கள் மொழியில்) தற்குறி மாதிரி அறிக்கை விட வேண்டாம் .

வடகிழக்கு இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்படாத பிரதேசமா ?

மலையக மக்கள் வடகிழக்குக்கு சென்று அங்கு அனர்த்தம் ஏற்பட்டால் அவர்களை நீங்க எமலோகத்துக்கு போக சொல்வீர்கள் போல …

மலையக மக்களை வைத்து நீங்கள் ஆடிய ; நாடகம் போதும் சாமி.

மலையகத்தில் இருக்கின்ற நாங்கள் எப்படி இடத்தை பெறவேண்டும் என்பதை நாங்கள் பார்த்துகொள்கின்றோம்

உங்களுக்காக 14 ஆயிரம் வாக்களித்த கொழும்பு மக்களை தயவு செய்து கவனியுங்கள்.

மலையக மக்களை வைத்து அரசியல் செய்ய முனையவேண்டாம் அமைதியாக கொழும்பை சுத்தம் செய்யுங்கள்” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post மனோ கணேசன் பதவி விலக வேண்டும் appeared first on Oruvan.com.

“காணி” என்ற மணமகள்,“வீடு” என்ற மணமகன் இல்லாத காணி-வீட்டு உரிமை கல்யாணம்
வீடு கட்டும் காணி அடையாள படுத்தவில்லை. காணியில் அடிக்கல் நாட்டு விழா, நடத்த வில்லை. புது வீடு கட்டி, புதுமனை புகு விழா, நடத்த வில்லை. கட்டி முடிக்க பட்ட வீடுகளுக்கு, நீர், மின்சாரம், வீதி ஆகிய உட்கட்டமைப்பு பணிகள் முடித்து வைக்க படவில்லை. இதில் எதுவும் செய்யாமல், இலங்கை வரலாற்றில் முதன் முறையாக, இலங்கைக்கு பாரதம் நன்கொடையாக வழங்கும் இந்திய வீடமைப்பு திட்ட நிகழ்வு ஒன்றில், பயனாளிகள் என்று சிலரை அழைத்து வெறும் காகிதத்தில் உங்களுக்கு காணியும், வீடும், தருகிறோம் என எழுதி கொடுத்து அனுப்பி உள்ளார்கள்.

“காணி” என்ற மணமகள், “வீடு” என்ற மணமகன் இல்லாத, காணி-வீட்டு உரிமை கல்யாணம் நடத்தி அப்பாவி மக்களை ஏமாற்றி உள்ளார்கள். உண்மையில், நடந்தது, “காது குத்தல்” கல்யாணம் என நான் நினைக்கிறேன். நன்றாக ஜனாதிபதி அனுரவுக்கு இந்த விடயம் முழுமையாக தெரியும் என நான் நம்பவில்லை. அவரது பெயரை வைத்து வாழும், மலையக ஜேவிபி அமைச்சர்கள், அனுரவை ஏமாற்றுகிறார்கள் எனவும் நான் நினைக்கிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்று நடத்த பட்ட விசேட ஊடக சந்திப்பில் மனோ கணேசன் எம்பி, மேலும் தெரிவித்துள்ளதாவது;

இந்த 10,000 தனி வீட்டு திட்டம் என்பது, தமிழ் முற்போக்கு கூட்டணியினராகிய நாம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை அழைத்து வந்து, நோர்வுட் நகரில் அவருக்காக நாம் நடத்திய வரவேற்பு நிகழ்வில், அவர்களிடம் கேட்டு பெற்று, அவரது வாயால் இந்திய அரசின் சார்பில் அவர் வழங்கிய உறுதிமொழியின் மூலம், இலங்கை வாழ் மலையக மக்களுக்காக நாம் பெற்று கொடுத்தது ஆகும். இதையே இன்றைய அரசு முன்னெடுக்க முனைவதாக தெரிகிறது. நல்லது. அதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளோம்.

ஆனால், அரசாங்கத்தில் இருக்கும் ஜேபிபி மலைநாட்டு அமைச்சர்கள், எம்பிகள், இந்த திட்டத்தை நடைமுறை படுத்துவது தொடர்பில் தாம் அனுபவமற்றவர்கள் என்பதை முழு உலகிற்கே வெளிச்சம் போட்டு காட்டி வருகிறார்கள். அது மட்டும் அல்ல, நாம் ஆரம்பித்த திட்டத்தையே அரைகுறையாக செய்து கொண்டு, எம்மையே மிகவும் தரக்குறைவாக குறை கூறி கொண்டு திரிகிறார்கள்.

இன்று, மலைநாட்டில். தனி வீடு கட்ட காணி அடையாளம் காண படவில்லை. அந்த காணியில் அடிக்கல் நாட்டு விழா, நடத்த பட வில்லை. புது வீடு கட்டி, புதுமனை புகு விழா, நடத்த பட வில்லை. கட்டி முடிக்க பட்ட வீடுகளுக்கு, நீர், மின்சாரம், வீதி ஆகிய உட்கட்டமைப்பு பணிகள் முடித்து வைக்க படவில்லை. ஆனால், விழா நடத்தி, அப்பாவி மக்களையும் ஏமாற்றி உள்ளார்கள். தங்கள் தலைவர், நாட்டு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை மலைநாட்டுக்கு அழைத்து வந்து, அவரையும் ஏமாற்றி உள்ளார்கள்.

இது போதாது என்று, இந்த வீட்டு திட்ட செலவில் 90% நிதியை எமக்காக நன்கொடையாக தரும் இந்திய அரசின் தூதரையும் அழைத்து வந்து, அவரது பெயரையும் பயன் படுத்தி, அரசியல் செய்கிறார்கள். தங்கள் இயலாமையை, இந்திய அரசின் மூவர்ண தேசிய கொடியால் மறைக்க முயல்கிறார்கள். வரலாற்றில் இதற்கு முன்பு நாம், இந்தய தூதரை அழைத்து வந்து, ஒன்றில், புது வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி விழா எடுப்போம். அல்லது புது வீடுகளை கட்டி முடித்து, கையளிக்கும் விழா நடத்துவோம்.

ஆனால், இலங்கை வரலாற்றில் முதன் முறையாக, இலங்கைக்கு பாரதம் நன்கொடையாக வழங்கும் இந்திய வீடமைப்பு திட்ட நிகழ்வு ஒன்றில், இந்திய தூதரையும் அழைத்து வந்து, பயனாளிகள் என்று அப்பாவி மக்கள் சிலரையும் அழைத்து வந்து, வெறும் காகிதத்தில், “உங்களுக்கு காணியும், வீடும், தருகிறோம்” என எழுதி கொடுத்து அனுப்பி உள்ளார்கள். இவற்றின் மூலம், “பொய் சொல்லவும், தவறு செய்யவும், பயமும், வெட்கமும் இல்லாத மனிதர்கள்” என தம்மை இந்த ஜேபிபி மலைநாட்டு அமைச்சர்கள், நிரூபித்து உள்ளார்கள்.

The post “காணி” என்ற மணமகள்,“வீடு” என்ற மணமகன் இல்லாத காணி-வீட்டு உரிமை கல்யாணம் appeared first on Oruvan.com.

பெருந்தோட்டத்துறை சார் அதிகார சபை நீக்க ​வேண்டாம் – மனோ கணேசன்
பெருந்தோட்டப் பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையை நீக்கும் தீர்மானத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று (8) இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு தாம் கடிதம் அனுப்பியிருந்த நிலையில் அதற்கு அவர் பதில் கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.

அந்த கடிதத்தில் இந்த விடயம் தொடர்பில் பரிசீலனை செய்வதாக குறிப்பிட்டுள்ளதாக மனோ கணேசன் தெரிவித்தார்.

மலையக மக்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 2018 ஆம் ஆண்டு பெருந்தோட்டப் பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை ஸ்தாபிக்கப்பட்டது.

அதனை தற்போதைய அரசாங்கத்தின் சில அதிகாரிகளினால் இல்லாது செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளமை கவலையளிப்பதாக தெரிவித்தார்.

எனவே இது தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் அது தொடர்பில் கவனம் செலுத்தி அந்த தீர்மானத்தை கைவிடுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

அத்துடன் இந்த அதிகார சபையை மேலும் வினைத்திறனுடன் முன்கொண்டு செல்வதற்கான முயற்சிகளை எடுக்குமாறும் கோரினார்.

இந்த விடயம் தொடர்பில் பதில் வழங்கிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அரசாங்கத்தினால் அவ்வாறான எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.

இதனை மேலும் வலுப்படுத்த பிரதமர் தலைமையிலான குழுவும் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.

The post பெருந்தோட்டத்துறை சார் அதிகார சபை நீக்க ​வேண்டாம் – மனோ கணேசன் appeared first on Oruvan.com.

மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு மனோ வலியுறுத்து
மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும். தேர்தல் முறைமை தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அன்று என்னுடன் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இடம்பிடித்திருந்தார். பழைய முறைமையின்கீழ் தேர்தலை நடத்துவதற்கு அன்று அவர் இணக்கம் வெளியிட்டிருந்தார்.

எனவே, மாகாணசபைத் தேர்தலை பழைய முறைமையில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

தேர்தல் முறைமைதான் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தடையாக உள்ளது. இதனை இலகுவில் சரி செய்யலாம். நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தனிநபர் பிரேரணையை, அரசாங்கம் ஏற்று அதனை நிறைவேற்றி இதற்கு வழிசமைக்க வேண்டும்.” எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.

The post மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு மனோ வலியுறுத்து appeared first on Oruvan.com.

மகா கூட்டணி மலரும்: ஐ.தே.க ஆண்டு விழாவில் மனோ
” ஜனநாயக ரீதியில் மகா கூட்டணியொன்றை உருவாக்குவதற்கு முற்படுகின்றோம். அதனை நாம் செய்வோம். இது கள்வர்களின் கூட்டணி அல்ல. ”

இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“எதிரணிகள் ஒன்றிணைவதற்கு முற்படும்போது கள்வர்கள் ஒன்றிணைகின்றனர் என ஆளுந்தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகின்றது. இதனை முற்றாக நிராகரிக்கின்றோம். இங்கு களவு, மோசடிகளுக்கு இடமில்லை. எனவே, அனைவரும் கள்வர்கள் எனக் கூறுவதை ஆளுங்கட்சி நிறுத்த வேண்டும்.

கள்வர்களை பிடிக்க வேண்டும், அவர்களுக்கு எதிராக சட்டரீதியிலான நடவடிக்கை வேண்டும். இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. இது தொடர்பான நடவடிக்கைகள் சட்டப்பூர்வமாகவே இடம்பெறவேண்டும். கள்வர்கள் யாரென்பதை நீதிமன்றம் தீர்மானிக்கட்டும்.” – எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.

The post மகா கூட்டணி மலரும்: ஐ.தே.க ஆண்டு விழாவில் மனோ appeared first on Oruvan.com.

ஆட்சியைக் கவிழ்க்க சூழ்ச்சியா? பீரிஸின் வீட்டில் நடந்தது என்ன?
”எதிரணிகளை ஒன்றிணைப்பதானது ஆட்சியைக் கவிழ்ப்பதற்குரிய சூழ்ச்சி அல்ல. இந்த அரசாங்கம் ஐந்து வருடங்களுக்கு பதவியில் இருக்க வேண்டும்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

எதிரணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் வீட்டில் நேற்று முன்தினம் இரவு சந்திப்பு நடத்தினர்.

மேற்படி சந்திப்பு குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மனோ கணேசன் இவ்வாறு கூறினார்.

” இது எதிரணி கூட்டணி அல்ல. எதிரணிகளை ஒன்றிணைப்பதற்குரிய பொது மேடையை அமைக்கும் முயற்சியாகும். ஜீ.எல்.பீரிஸ் தலைவர் அல்லர். இப்பணியை முன்னெடுப்பதற்குரிய ஏற்பாட்டாளர் அவர். விரைவில் எதிர்க்கட்சி தலைவரையும் சந்திக்கவுள்ளோம்.

ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சி நடப்பதாக ஜனாதிபதி குறிப்பிடுகின்றார். நாம் அவ்வாறு சூழ்ச்சி செய்யவில்லை. இந்த அரசாங்கம் ஐந்து வருடங்கள் இருக்க வேண்டும். அதன்பின்னர் தேர்தல் நடத்தி மக்கள் ஆணை வழங்கினால் பதவியில் மீண்டும் இருக்கலாம். தேர்தல் மூலம் மாத்திரமே நாம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முற்படுவோம்.”- என்றார்.

The post ஆட்சியைக் கவிழ்க்க சூழ்ச்சியா? பீரிஸின் வீட்டில் நடந்தது என்ன? appeared first on Oruvan.com.