மனித புதைகுழி Archives - Oruvan.com

இலங்கையின் நான்காவது பெரிய மனித புதைகுழி கொழும்பில்
கொழும்பில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி, இதுவரை அடையாளம் காணப்பட்ட உடல்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், நாட்டின் நான்காவது பெரிய மனிதப் புதைகுழியாக மாறியுள்ளது.

தற்போதைய அரசாங்கம் போதுமான நிதியை வழங்கத் தவறியதால் ஆரம்பத்தில் அகழ்வுப் பணிகள் தாமதமான கொழும்பு துறைமுக மனித புதைகுழியிலிருந்து குறைந்தது 88 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு முடிவடையும் தருவாயில் இருப்பதைக் காண முடிந்ததாக கடந்த வாரம் புதைகுழியைப் பார்வையிட்ட ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மூத்த தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் தலைமையில் நீதவான் கசுன் திசாநாயக்கவின் மேற்பார்வையில் அகழ்வு இடம்பெற்று வரும் கொழும்பு துறைமுகப் புதைகுழியில் பலரின் எலும்புக்கூடுகள் இருப்பதையும், பலரது மனித எலும்புக்கூடுகள் எவ்வாறு மீட்கப்பட்டுள்ளன என்பதையும் ஊடகவியலாளர்கள் அவதானித்திருந்தனர்.

கொழும்பு துறைமுக மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு துறைமுகத்திற்குச் செல்லும் புதிய அதிவேக வீதியை நிர்மாணிப்பதற்காக பூமியைத் அகழ்ந்தபோது ஜூலை 13, 2024 அன்று அந்த பிரதேசத்தில் அமைந்துள்ள பழைய செயலக வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டன.

இது தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவித்த பின்னர், கொழும்பு புதுக்கடை மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்கவின் உத்தரவின் பேரில், செப்டெம்பர் 5, 2024 அன்று அந்த இடத்தில் அகழ்வாய்வு பணிகள் ஆரம்பமாகின.

அண்மையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்கார, இலங்கையில் 17 மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக முதன்முறையாக வெளிப்படுத்தியிருந்தார். அவை குறித்த பெயர் விபரங்களையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய புதைகுழி மன்னாரில் உள்ள சதொச புதைகுழி ஆகும், அங்கு 28 சிறுவர்களின் எலும்புகள் உட்பட 376 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.

இலங்கையில் இரண்டாவது பெரிய மனித புதைகுழியாக தற்போது அகழ்வாய்வுப் பணிகள் இடம்பெற்று வரும் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழி பதிவாகியுள்ளது. அந்த புதைகுழி வளாகத்தில் இருந்து குழந்தைகள் உட்பட 166 பேரின் எலும்புக்கூடுகள் (ஓகஸ்ட் 26 வரை) அடையாளம் காணப்பட்டுள்ளன.

2013 ஆம் ஆண்டில், இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது பெரிய புதைகுழியாகக் கருதப்படும் மாத்தளை வைத்தியசாலைக்கு அருகிலுள்ள ஒரு இடத்திலிருந்து 155 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.

ஐந்தாவது பெரிய புதைகுழி மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரம் புதைகுழியாகும். அங்கு 2013 இல் 82 மனித உடல்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வாய்வு பணிகள் நிறைவடைந்த நேரத்தில், 52 நபர்களின் எச்சங்கள் மீட்கப்பட்டன.

The post இலங்கையின் நான்காவது பெரிய மனித புதைகுழி கொழும்பில் appeared first on Oruvan.com.

கிழக்கில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு மனித புதைகுழியை அகழ்வு செய்ய நீதிமன்றம் அனுமதி
இலங்கையில் யுத்தம் நிறைவடைந்ததில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஏழாவது மனித புதைகுழி என சந்தேகிக்கப்படும் இடத்தில், இராணுவ மேற்பார்வையின் கீழ் அகழ்வாய்வை நடத்த நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

சம்பூர் கடற்கரையில் எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட மூன்று பேரின் மரணங்கள் இயற்கை காரணங்களால் ஏற்பட்டவை என தீர்மானிப்பது கடினம் என சட்ட வைத்திய அதிகாரி நிர்மால் பொறுக்கம நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.

எலும்புக்கூடுகள் மூன்று நபர்களுடையவை என்பதையும், அந்த இடத்தில் முறையான மயானம் ஒன்று இருந்தமைக்கான எவ்வித ஆதாரமும் இல்லை என்பதையும் கருத்தில் கொண்டு, அந்த இடத்தை அகழ்வாய்வு செய்யுமாறு மூதூர் நீதவான எச்.எம். தஸ்னீம் பௌசான் கடந்த 6ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சம்பூர் கடற்கரையில் கண்ணிவெடி அகழ்வை நடத்திய பிரித்தானியாவை தளமாகக் கொண்ட மெக் (MAG) நிறுவனம் ஜூலை 20ஆம் திகதி ஒரு மண்டை ஓடு உள்ளிட்ட எலும்புகளைக் கண்டுபிடித்தது.

கண்ணிவெடிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலத்தில் அகழ்வாய்வுப் பணிகளை மேற்கொள்வது ஆபத்தானது என ஓகஸ்ட் 6 அன்று நீதிமன்றத்திற்குத் தெரிவித்த தேசிய கண்ணிவெடி அகற்றும் செயலகம், அந்தப் பணிகள் மாகாண இராணுவத் தளபதியின் உதவியுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என பரிந்துரைத்திருந்தது.

இதற்கமைய, கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியின் மேற்பார்வையின் கீழ், இராணுவ பொறியியலாளர் பிரிவு உறுப்பினர்களின் உதவியுடன் அகழ்வாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென உத்தரவிட்ட மூதூர் நீதவான், ஓகஸ்ட் 26ஆம் திகதி வரை  வழக்கை ஒத்திவைத்தார்.

மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட காணி அரச காணி எனவும் அங்கு முன்னர் மயானம் ஒன்று இருந்தமைக்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும் பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பாக மூதூர் நீதவான் விசாரணைகளை அடுத்து, ஆய்வுகளை மேற்கொண்ட திருகோணமலை சட்ட வைத்திய அதிகாரியும் தடயவியல் நிபுணருமான நிர்மால் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் மூன்று ஆண்களுடையது என நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.

அவர்களின் வயது குறித்தும் அறிக்கையில் தெரிவித்திருந்த அவர், அவர்களில் இருவரின் எலும்புகள் ஒன்றாகக் காணப்பட்டதால், இயற்கையான காரணங்களால்தான் மரணங்கள் நிகழ்ந்தனவா என்பதை தீர்மானிப்பது கடினம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச பகுப்பாய்வுத் திணைக்களம், திருகோணமலை சட்ட வைத்திய அதிகாரி, புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம், தொல்பொருள் திணைக்களம், காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் (OMP), மத்திய சுற்றாடல் அதிகாரசபை அதிகாரிகள், கிராம அலுவலர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட தொடர்புடைய தரப்பினர் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.

57 பொதுமக்கள் சுட்டும், வெட்டியும், எரியூட்டியும் கொலை செய்யப்பட்ட, இலங்கை இராணுவத்தின் மீது குற்றம் சாட்டப்படும், ஜூலை 7, 1990 சம்பூர் படுகொலையின் நினைவாக பாதிக்கப்பட்ட கிராம மக்களால் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

The post கிழக்கில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு மனித புதைகுழியை அகழ்வு செய்ய நீதிமன்றம் அனுமதி appeared first on Oruvan.com.

மனித புதைகுழிகளை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பார்வையிட வேண்டும்
” செம்மணி புதைகுழி மற்றும் கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட புதைகுழிகளை இலங்கைக்கு வருகைதரும் ஐ.நா. பிரதிநிதி பார்வையிட்டு நீதிப்பொறி முறைக்கு, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.”

இவ்வாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட மேற்படி சங்கத்தின் தலைவி யோகராசா கலாறஞ்சினி ,

‘காணாமல் ஆக்கப்பட்ட எங்களது பிள்ளைகளுக்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. இந்த அரசும் அதற்கான நீதியைப் பெற்றுத் தருவதற்கு இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை.

அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தை உடனடியாக அகற்றுமாறு மக்களின் வாக்குகளை பெற்று தவிசாளராக நியமிக்கப்பட்டவரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்புத்தெரிவித்து அம்பாறையில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தோம்.” – எனவும் குறிப்பிட்டார்.

நடைபெறவுள்ள ஐ.நா. கூட்டத்தொடரிலே எங்களுக்கான நீதிப் பொறிமுறை விடயங்களை வலியுறுத்துவதுடன் இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐ.நா. பிரதிநிதி காணமல் ஆக்கப்பட்ட உறவினர்களை சந்திப்பதோடு செம்மணிப்புதை குழி மற்றும் கொக்குத்தொடுவாய் புதைகுழிகளையும் பார்வையிட வேண்டும்.

அது தொடர்பில் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்-என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவர் யோகராசா கலாறஞ்சினி வலியுறுத்தினார்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் எதிர்வரும் 23 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மனித புதைகுழிகளை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பார்வையிட வேண்டும் appeared first on Oruvan.com.

“மனித புதைகுழி அகழ்வில் உரிய நியமங்களை பின்பற்றுங்கள்” யாழிலும் நாடாளுமன்றத்திலும் வலியுறுத்தல்
இலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகளை சர்வதேச தரத்திற்கு அமைய மேற்கொள்ள வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

போராட்டத்திற்கு முதல்நாள், அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளும் இல்லாததால் ஆதாரங்கள் அழிக்கப்படும் அபாயம் இருப்பதாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

நேற்றைய தினம் (ஜூன் 5) செம்மணியில் உள்ள சித்துபாத்தி மயான மனிதப் புதைகுழியின் முன் போராட்டத்தை நடத்திய வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் (ARED), சர்வதேச மேற்பார்வை மற்றும் சர்வதேச தரநிர்ணயங்களுக்கு அமைய மனிதப் புதைகுழியின் அகழ்வினை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியது.

“இது ஒரு தனியான சம்பவமல்ல. இது குறித்த விசாரணைகள் மற்றும் அகழ்வுகள் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் பற்றிய முழு உண்மையையும் வெளிக்கொணர உதவும்” வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சனி மற்றும் செயலாளர் டி.செல்வராணி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மே 15, ஆரம்பமான அகழ்வில், இதுவரை குறைந்தது 18 பேரின் எலும்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, மேலும் ஐந்து எலும்புக்கூடுகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன.

சமூக புதைகுழியின் பாதுகாப்பற்ற நிலைமை ஜூன் 4 அன்று நாடாளுமன்றத்தில் நீதி அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அகழ்வுப் பணிகளுக்கு போதுமான நிதி ஒதுக்கப்படாததால், அகழ்வுப் பணிகள் விரைவில் நிறுத்தப்படும் அபாயம் இருப்பதாக சுட்டிக்காட்டியிருந்தார்.

“விசாரணைக்காக சட்ட வைத்திய அதிகாரிக்கு தற்போது ஒதுக்கப்பட்ட பணம் உண்மையில் இருபது நாட்களுக்குக் கூட போதாது. எனவே, பணிகள் ஒத்திவைக்கப்பட்ட பின்னர் நிதி நிறைவடைந்தால், அவர்கள் பணியை நிறுத்தப் போகிறார்கள்.”

நீதிமன்றத்தால் வெளிப்படுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான உடல்கள் புதைக்கப்பட்ட ஒரு சமூக புதைகுழியின் முக்கியத்துவத்தை நீதி அமைச்சரிடம் விளக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அந்த புதைகுழியில் அகழ்வுப் பணிகளுக்கு நிதி வழங்க நீதி அமைச்சர் தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

“1996ஆம் ஆண்டு, அந்தப் பகுதி ஒரு பெரிய புதைகுழியாக அறிவிக்கப்பட்டிருந்தது.  என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள் என நம்புகின்றேன். ஏனெனில், கிருஷாந்தி குமாரசாமி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் அந்தப் பகுதியில் 600ற்கும் மேற்பட்ட உடல்கள் புதைக்கப்பட்டதாகக் கூறினார். உண்மையை வெளிக்கொணர்வதில் இது மிகவும் முக்கியமானது என நான் நினைக்கிறேன். எனவே, இதில் தலையிட்டு பொருத்தமான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நிதி வழங்குவதோடு மாத்திரமல்லாமல் சமூக புதைகுழியில் உள்ள ஆதாரங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதும் அவசியம் என, தமிழ் மக்கள் பிரதிநிதி நாடாளுமன்றத்தில் மேலும் வலியுறுத்தினார்.

“அதனை ஒரு சமூக புதைகுழியாக அறிவிக்குமாறு நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன், அது ஒரு சமூக புதைகுழியாக மாறக்கூடிய இடம், பின்னர், இந்த வேலையை சரியாக செய்ய, நீங்கள் விரும்பினால், வெளியில் இருந்து நிதியுதவியை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அதனை செய்ய வேண்டும். ஏனெனில், நான் இதை மிகுந்த பொறுப்புடன் சொல்கிறேன். ”

செம்மணி புதைகுழி விசாரணைகள் தடையின்றி தொடர்வதை உறுதி செய்வதற்காக தலையிட வேண்டும் என்ற தமிழ் மக்கள் பிரதிநிதியின் கோரிக்கையை நிறைவேற்ற உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நாடாளுமன்றத்தில் உறுதியளித்தார்.

“ஆம், உங்கள் விடயத்தை நான் நன்கு கவனத்தில் கொள்வேன். நான் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பேன்.

இந்த விடயத்தை நான் உடனடியாக விசாரிக்கின்றேன். இந்தப் பணிக்காக அமைச்சு சிறிது பணம் ஒதுக்கியிருப்பதை நான் அறிவேன். அது போதாது என்றால், என்ன செய்ய முடியும் என்பதைப் பார்ப்போம். ஆனால், நீங்கள் சொல்வதன் முக்கியத்துவத்தை நான் புரிந்துகொள்கிறேன். நான் அதன்படி செயல்படுவேன்.  மேலும், சில நாட்களில் நல்ல பதிலை வழங்க நான் எதிர்ப்பார்க்கின்றேன்.”

செம்மணியில் உள்ள சித்துபாத்தி புதைகுழியில் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஜூன் 2 முதல் நடைபெற்று வருகின்றன.

The post “மனித புதைகுழி அகழ்வில் உரிய நியமங்களை பின்பற்றுங்கள்” யாழிலும் நாடாளுமன்றத்திலும் வலியுறுத்தல் appeared first on Oruvan.com.