மந்திரிமனை Archives - Oruvan.com

மந்திரிமனையை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம் – அரசாங்கம் அறிவிப்பு
இலங்கையில் காணப்படும் பாரம்பரியமான மாளிகைகளில் ஒன்றான நல்லூர் மந்திரிமனை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது, இதனை பாதுகாப்பதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சரோடு கலந்துரையாடி, பாதுகாப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை பெய்த மழை காரணமாக நல்லூர் இராசதானி காலத்து மந்திரிமனையின் ஒரு பாகம் இடிந்து விழுந்துள்ளது.

இந்நிலையில் , மந்திரிமனையினை நெடுஞ்சாலைகள் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர், நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் உள்ளிட்டோர் நேற்றைய தினம் வியாழக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதன் போது, தொல்லியல் திணைக்களத்தின் யாழ். பிராந்திய உதவி பணிப்பாளர் யு.ஏ பத்துலஜீவ மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் புனர்நிர்மாண உத்தியோகத்தர் கபிலன் ஆகியோருடன் அமைச்சர்கள் கலந்துரையாடி , மந்திரிமனையை பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தெரிவித்தனர்

The post மந்திரிமனையை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம் – அரசாங்கம் அறிவிப்பு appeared first on Oruvan.com.

இடிந்து விழுந்தது நல்லூர் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பெய்த மழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது.

யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது.

அந்தக் கட்டடம் உடைந்து விழும் நிலையில் காணப்பட்டது. அதனை அடுத்து அதற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நடப்பட்டிருந்தன.

அதேவேளை மந்திரி மனையை புனரமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையிலையே இன்றைய தினம் புதன்கிழமை மந்திரிமனையின் ஒரு பாகம் இடிந்து விழுந்துள்ளது.

யாழ்ப்பாண இராசதானி காலத்திற்குரியதாக கருதப்படும் மந்திரி மனை, பாதுகாக்கப்பட வேண்டிய தொல்பொருள் சின்னமாக 2011 ஆம் ஆண்டு வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post இடிந்து விழுந்தது நல்லூர் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை appeared first on Oruvan.com.