மத்தியகிழக்கு Archives - Oruvan.com

நீரிணைகளை திறப்பதற்கு ஜீ-07 அமைப்பு அழுத்தம்?
மத்தியகிழக்கு போரை முடித்து வைக்கும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ள பாகிஸ்தான், இதில் ஏற்படவுள்ள தடைகளை விளக்கமாகக் கூறுவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இதற்கான முயற்சிகளில் சவூதிஅரேபியா, எகிப்து, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஈடுபட்டிருந்தன.

எனினும் ஏனைய மூன்று நாடுகளதும் நடுநிலைமையில் ஈரான் சந்தேகம் வௌியிட்டதால், பாகிஸ்தான் தனியே நின்று இதற்கான முயற்சிகளில் ஈடுபடவுள்ளதாக அல்ஜஸீரா செய்தி வௌியிட்டுள்ளது.

இன்னும் சில வாரங்களில் போர் முடியுமென அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உறுதியளித்துள்ள நிலையிலே, பாகிஸ்தானின் இந்த முயற்சி குறித்து செய்திகள் வௌியாகியுள்ளன.

ஹோர்மூஸ் நீரிணை மற்றும் செங்கடல் நீரிணைகளை பணயமாக வைத்து ஈரான் போரில் ஈடுபட்டுள்ளதால்,சர்வதேச அளவில் ஏற்பட்டு வரும் நெருக்கடிகளை ஜீ-07 நாடுகள் உணரத் தொடங்கியுள்ளன. இதனால், அடுத்தவாரம் கூடவுள்ள ஜீ-07 அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள், இந்நீரிணைகளை திறப்பதற்கான மூலோபாயங்களில் கவனம் செலுத்துமென்றும் அல்ஜஸீரா ஆரூடம் கூறியுள்ளது.

இந்நிலையில், ஜேர்மன் அதிபர் இவ்விடயத்தில் ஈரானை வழிக்கு கொண்டுவருமாறு ஈரானின் நட்பு நாடுகளின் தலைவர்களுடன் உரையாடியுள்ளார்.

இஸ்ரேலின் சிறைகளிலுள்ள பலஸ்தீனர்ளை தூக்கிலிட்டு கொல்வதற்கு இஸ்ரேல் பாராளுமன்றம் (நெசட்) எடுத்திருந்த தீர்மானத்தால்,இந்த யுத்தம் பழிவாங்கல் படலமாக விரியும் என்றும் சிலர் அச்சம் தெரிவித்துள்ளனர். இவ்வாறு நிகழ்ந்தால்,கைதியாகப் பிடிக்கப்படும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க வீரர்களும் தூக்கிலிடப்படுவரென ஈரான் எச்சரித்துள்ளது.

சர்வதேச எரிபொருள் தேவைகளில் பாதிப்பங்கை பூர்த்தி செய்யும் கடல் வழிகளை மறித்து ஈரான் யுத்தம் செய்வதே,இந்த மோதல் சகல நாடுகளின் கவனங்களையும் ஈர்த்துள்ளது.

The post நீரிணைகளை திறப்பதற்கு ஜீ-07 அமைப்பு அழுத்தம்? appeared first on Oruvan.com.

மத்தியகிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர் சூழ்நிலை – ஆராய விசேட அமைச்சரவை உபக் குழு
மத்தியகிழக்கு பிராந்தியத்தில் தற்போது மோசமடைந்துள்ள போர்ச்சூழல் காரணமாக தொடர்ந்துவரும் காலங்களில் இலங்கை எதிர்கொள்வதற்கு நேரிட்டுள்ள சவால்கள் தொடர்பாக முற்கூட்டிய தயார்நிலை இருக்க வேண்டிய தேவை பற்றி நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, மத்தியகிழக்கு போர்ச்சூழல் தொடர்பாக ஆராய்ந்து, தாக்கங்கள் ஏற்படக்கூடிய துறைகள், தாக்கத்தின் அளவு மற்றும் அது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கைகள் பற்றிய மீளாய்வு செய்து, அமைச்சரவைக்கு சந்தர்ப்பத்திற்கேற்ப பொருத்தமான விதந்துரைகளை வழங்குவதற்காக கீழ்க்காணும் கட்டமைப்புடன் கூடிய அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கும், குறித்த உபகுழுவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக ஏற்புடைய அமைச்சுக்களின் செயலாளர்களுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

• விஜித ஹேரத்

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்

• சமந்த விதயாரத்ன

பெருந்தோட்டத்துறை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர்

• வசந்த சமரசிங்க

வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்

• (பொறியியலாளர்) குமார ஜயகொடி

வலுசக்தி அமைச்சர்

ஆகியோர் இந்த அமைச்சரவை உபக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post மத்தியகிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர் சூழ்நிலை – ஆராய விசேட அமைச்சரவை உபக் குழு appeared first on Oruvan.com.