ப.சத்தியலிங்கம் Archives - Oruvan.com

உள்ளூராட்சி மன்றங்களை அரசாங்கம் ஒப்பந்ததாரர்கள் போன்று நடாத்துவது கவலையளிக்கின்றது
“மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை இந்த அரசாங்கம் ஒப்பந்ததாரர்கள் போன்று நடாத்துவது கவலையளிக்கின்றது” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்று (24) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, “கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக அபிவிருத்தித் திட்டங்கள் முடக்கப்பட்டிருந்தாலும் தற்போது படிப்படியாக இந்த அரசாங்கம் ஓரளவுக்கேனும் குறிப்பிட்ட சில அத்தியாவசியமான அபிவிருத்தித் திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்து வருவது வரவேற்கப்படவேண்டியதாகும்.

அந்த வகையில் உள்ளூராட்சி மன்றங்களின் ஆளுகைக்குட்பட்ட கிராமிய உள்ளக வீதிகளை ஓரளவுக்கேனும் மக்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் திருத்தம் செய்வதற்கு துறைசார்ந்த அமைச்சினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை

வரவேற்கின்றேன்.

எனினும் இந்த நிதி ஒதுக்கீட்டின் கீழ் திருத்தப்படவுள்ள வீதிகளின் தெரிவானது சம்மந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுடன் கலந்துரையாடப்படாது தெரிவு செய்யப்பட்டுள்ளமை கவலையளிக்கும் விடயமாகும். அதிலும் சில வீதிகள் குறிப்பிட்ட உள்ளூராட்சி மன்றத்தினால் சட்டரீதியாக வர்த்தமானியில் பிரசுரிக்கப்படாத வீதிகளாகும்.

இங்கு கட்சி அரசியலுக்கு அப்பால் ஜனநாயக முறைப்படி நடைபெற்ற தேர்தலில் மக்களின் அதிகப்படியான ஆசனங்களைப் பெற்ற கட்சிகளே உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைத்துள்ளன. அதே போன்று அந்த சபைகள் ஒவ்வொரு வட்டாரங்களிலும் மக்கள் சந்திப்புகளை நடாத்தி மக்கள் பங்களிப்புடன் தேவைகளை இனங்கண்டு அவற்றை முன்னுரிமை அடிப்படையில் தேவைப் பட்டியல் தயாரித்து வைத்திருக்கின்றார்கள். எனவே இங்கு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் மக்களால் முன்மொழியப்பட்ட முன்னுரிமைப்படுத்தப்பட்ட வீதிகளை புனரமைப்பதே சரியான முறையாகும்.

குறிப்பிட்ட ஒரு உள்ளூராட்சி மன்றத்தின் கீழ் வருகின்ற அனைத்து வட்டாரங்களையும் உள்வாங்கி வீதி அபிவிருத்திகளை செய்வதே சிறந்தது. எனினும் துரதிஷ்டவசமாக வீதித்தெரிவுகள் சம்மந்தப்பட்ட சபையுடன் கலந்துரையாடப்படாது

நடைபெற்றுள்ளமையை துறைசார்ந்த அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

அத்துடன் இந்த நிதி ஒதுக்கீடானது மாவட்ட செயலகத்திற்கே வழங்கப்பட்டுள்ளது. முறையான தொழிநுட்ப மதிப்பீடு செய்யப்படாது நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்மொழியப்பட்ட சில வீதிகளுக்கான திருத்தவேலைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி போதாமலுள்ளது. தெரிவு செய்யப்பட்ட வீதிகளின் விபரங்கள் பிரதேச செயலகத்தால் உள்ளுராட்சி சபைகளுக்கு வழங்கப்படுகின்றது.

குறிப்பட்ட வீதிகளுக்கான நிதி ஒதுக்கீடு சபைகளுக்கு வழங்கப்படவில்லை. இங்கு சபைகள் ஒப்பந்ததாரர்களை போன்று செயற்படவேண்டியுள்ளது. அதாவது மாவட்ட செயலகத்துடன் வேலைக்கான ஒப்பந்தமொன்றினை செய்து பின்னர் வேலைகள் முடிவுற்றதும் வேலைக்கான கொடுப்பனவை பெற்றுக் கொள்ளவேண்டும். இது மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளூர் அதிகார சபையை அவமதிக்கும்செயற்பாடாகும்.

எனவே சம்மந்தப்பட்ட சபைகளுடன் கலந்துரையாடி அனைத்து வட்டாரங்களையும் உள்ளடக்கிய வகையில் முன்னுரிமைப்படுத்தப்பட்ட வீதிகளை புனரமைப்பதற்காக நிதி ஒதுக்கீடுகளை நேரடியாக சபைகளுக்கு வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன்” எனத் தெரிவித்தார்.

The post உள்ளூராட்சி மன்றங்களை அரசாங்கம் ஒப்பந்ததாரர்கள் போன்று நடாத்துவது கவலையளிக்கின்றது appeared first on Oruvan.com.

கூடிய ஆசனங்களை பெற்றவர்களுக்கு ஆதரவு – சங்கு, தமிழரசு கட்சி உடன்பாடு
வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் கூடிய ஆசனங்களை பெற்றுக்கொண்ட கட்சிக்கு மற்றைய தரப்பு ஆதரவளிக்கும் வகையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணிக்கும், இலங்கை தமிழரசுக்கட்சிக்கும் இடையிலான கலந்துரையாடல் வவுனியாவில் இன்று இடம்பெற்றது.

அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“வவுனியா மாநகரசபையில் சங்கு கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு இலங்கை தமிழரசுக்கட்சி முழுமையான ஆதரவினை வழங்கும்.

அதேபோல வவுனியா தெற்கு, வடக்கு, செட்டிகுளம் பிரதேச சபைகளில் தமிழரசுக்கட்சி கூடிய ஆசனங்களை பெற்றுள்ளமையினால் நாங்கள் ஆட்சியமைப்பதற்கு ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி தங்களது பூரண ஆதரவினை வழங்குவதாக இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

ஆட்சியமைப்பதற்கான இணக்கப்பாடே தற்போது ஏற்ப்பட்டுள்ளது. சபைகளின் தவிசாளர் பிரதி தவிசாளர்களை நியமிப்பது எங்களுக்கு சிறிய பிரச்சனை.

சபை அமைக்கும் சந்தர்ப்பத்தில் அதனை எங்களுக்குள் பேசி தீர்மானித்துக்கொள்வோம். அத்துடன் சில கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களில் போட்டியிட்டு வென்றவர்களுடன் நாம் கலந்துரையாடியுள்ளோம்.

சபைகள் தொங்கு நிலையில் உள்ள ஆட்சியாக இல்லாமல் பூரண பலம் கொண்ட முடிவுகளை எடுக்க கூடிய மன்றங்களாக வவுனியாவில் உள்ள நான்கு மன்றங்களும் இருக்கவேண்டும்.

எனவே வவுனியாவில் உள்ள நான்கு சபைகளிலும் நாங்கள் ஆட்சியமைக்க கூடிய சூழல் இருக்கிறது. அத்துடன் இந்த இணக்கப்பாடு உள்ளூராட்சிமன்றத்துடன் மாத்திரம் முடிவடையாமல் தொடரவேண்டும் என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

இந்த இணக்கப்பபாட்டை வடகிழக்கு முழுவதும் தொடர்வதற்கு இரண்டு கட்சிகளின் தலைமைகளும் பேசி ஒரு முடிவிற்கு வருவார்கள் என எதிர்பார்கிறோம்” என்றார்.

The post கூடிய ஆசனங்களை பெற்றவர்களுக்கு ஆதரவு – சங்கு, தமிழரசு கட்சி உடன்பாடு appeared first on Oruvan.com.

வடக்கு, கிழக்கு வதை முகாம்கள் பற்றி பேசுவதற்கு அநுர அரசு தயாரில்லை – ப.சத்தியலிங்கம்
“பட்டலந்த வதை முகாம் போல் பல வதை முகாம்கள் வடக்கு, கிழக்கில் கடந்த 30 வருடங்களாக இயங்கின. இது தொடர்பில் விசாரிக்க இந்த அரசு தயாரில்லை.”

– இவ்வாறு சாடியுள்ளார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம்.

வவுனியாவில் உள்ளூராட்சி வேட்பாளர் அறிமுக நிகழ்வில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உள்ளூராட்சி சபைகளில் சிறப்பாகச் செயற்பட்டால் அதன் பின் வரும் மாகாண சபைத் தேர்தல், 5 வருடங்களின் பின் வரும் நாடாளுமன்றத் தேர்தல் என்பவற்றில் சிறப்பான வெற்றியைப் பெற முடியும்.

முல்லைத்தீவில் பாரம்பரிய வைத்தியம் படித்தவர்கள் வேலையில்லாமல் இருக்கின்றார்கள். பிரதேச சபைகள் இலசவச மருத்துவ சேவையை வழங்க வேண்டும். அதற்கேற்ப சட்டங்களை வகுத்து சித்த மருத்துவ நிலையங்களை உருவாக்க முடியும். அதில் அவர்களை வைத்தியர்களாக நியமிக்க முடியும்.

கட்சியைப் பலப்படுத்துவதற்கு உள்ளூராட்சி சபைகள் அவசியம். அத்துடன் மக்களுக்குச் சேவை வழங்க அவை முக்கியமானவை. தேர்தல் நேரம் பலர் வருவார்கள். ஆனால், கடந்த 75 வருடங்களாகத் தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காகத் தியாகங்களை செய்த தாய்க் கட்சி ஆகிய தமிழரசுக் கட்சி சீசனுக்கு வரும் பறவைகள் அல்ல. நாம் மக்களுடனேயே இருக்கின்றோம்.

வவுனியா வடக்கு பிரதேசத்துக்குத் தண்ணீர் வரவில்லை. ஆனால், மகாவலி எல் வலயம் ஊடாக பல குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் திட்டமிட்ட இனப்பரம்பலை மாற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.

இதேபோன்று, செட்டிகுளம் பிரதேசம் கீழ் மல்வத்து ஓயா திட்டத்தின் மூலம் ஆபத்தான நிலையில் உள்ளது. புதிதாக வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளார்கள். திட்டங்களை நேர்மையாக மக்களுக்காகச் செயற்படுத்தினால் நல்லது. ஆனால், இவ்வாறான திட்டங்களின் பின்னால் குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன.

வடக்கு – கிழக்கில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறலை ஏற்றுக்கொள்ள இந்த அரசும் தயாரில்லை.

அண்மையில், 4 பேரை பிரித்தானியா தடை செய்தது. அதனை எமது கட்சியும் வரவேற்றுள்ளது.

தற்போதைய அரசு இந்தத் தடையை, “ஒரு தலைப்பட்சமான இந்த முடிவை

ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என்று தெரிவித்துள்ளது.

பட்டலந்த அறிக்கை பற்றிப் பேசும் அவர்கள், பல வதை முகாம்கள் வடக்கு, கிழக்கில் இயங்கின. தங்கள் உறவுகளை இராணுவத்தினரிடம் கையளித்தவர்கள் உள்ளனர். அதை விசாரிக்க தயாரில்லை. அதைப் பற்றி பேச அவர்கள் தயாரில்லை.

கடந்த கால அரசுகள் என்ன பதிலைத் தந்தார்களோ அதே பதிலைத்தான் இவர்களும் சொல்கின்றார்கள். அவர்களது செயற்பாடுகளை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

இந்த அரசுக்கு ஒரு கால அவகாசத்தை வழங்கியுள்ளோம். பொருளாதார நெருக்கடிக்குள் இந்த நாடு இருந்தது. அவர்கள் உடனடியாக மஜிக் செய்ய முடியாது. அவர்கள் பொருளாதார ரீதியாக நாட்டை மீட்டு எமது அரசியல் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். அதற்கு நாம் கால அவகாசம் வழங்கியுள்ளோம். அதனை அவர்கள் பயன்படுத்தி விரைவாகச் செய்ய வேண்டும். அது நடக்காவிடின் இந்த அரசையும் நாம் எதிர்ப்போம். அதற்கான காலத்தை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.” – என்றார்.

The post வடக்கு, கிழக்கு வதை முகாம்கள் பற்றி பேசுவதற்கு அநுர அரசு தயாரில்லை – ப.சத்தியலிங்கம் appeared first on Oruvan.com.