போப் பிரான்சிஸ் Archives - Oruvan.com

போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு இன்று நடைபெறும்
மறைந்த போப் பிரான்சிஸ் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்துக்கு நேற்று எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கு இன்று சனிக்கிழமை நடைபெறும் வாடிகன் நிர்வாகம் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மதத் தலைவரான போப் பிரான்சிஸ் தனது 88-வது வயதில் காலமானார். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலமின்றி இருந்த அவர், அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

எனினும் தேவாலயப் பணிகளை அவர் தொடர்ந்து செய்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு அவர் ஆசி வழங்கினார்.

இந்நிலையில் மறுநாளான திங்கட்கிழமை காலையில் உள்ளூர் நேரப்படி காலை 7.35 மணிக்கு காலமானார். பெருமூளை பக்கவாதம், கோமா, இதயம் செயலிழப்பு என அடுத்தடுத்த பாதிப்புகளால் அவரது உயிர் பிரிந்ததாக வாடிகன் தெரிவித்தது.

இறப்புக்கான காரணம் குறித்த மருத்துவ அறிக்கையில் இரண்டாம் வகை நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சுவாசக் கோளாறு, நிமோனியா உள்ளிட்ட நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளும் விவரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திறந்த சவப்பெட்டியில் போப் பிரான்சிஸ் உடல் வைக்கப்பட்டிருக்கும் முதல் புகைப்படம் மற்றும் வீடியோவை வாடிகன் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதில், மறைந்த போப்பாண்டவரின் உடல் சிவப்பு நிற வழிபாட்டு அங்கி அணிவிக்கப்பட்டு தலையில் மிட்ரே என்ற தலைப்பாகை மற்றும் கைகளில் ஜெபமாலையுடன் வைக்கப்பட்டு இருப்பது தெரிகிறது.

வாடிகனில் அவர் வசித்த காசா சாண்டா மார்ட்டா இல்லத்தின் தனிப்பட்ட தேவாலயத்தில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

போப் பிரான்சிஸ், அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் பிறந்தவர். லத்தீன் அமெக்காவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் போப் என்ற பெருமைக்குரியவர். கடந்த 2013 மார்ச் மாதம் அவரது பதவிக் காலம் தொடங்கியது. 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அவரது பதவிக் காலம் கருணை, பணிவு, சீர்திருத்தம், ஏழைகள் மீதான உலகளாவிய கவனம் உள்ளிட்ட சிறப்புகளை கொண்டிருந்தது.

போப் ஆண்டவர் மறையும்போது அவரது உடலை வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பேராலயத்தில் நல்லடக்கம் செய்வது பாரம்ரிய வழக்கமாகும். ஆனால் போப் பிரான்சிஸ் தனது உடலை ரோமில் உள்ள புனித மேரி மேஜர் பேராலயத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என இறுதி சாசனத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தனது கல்லறை எளிய முறையில் எவ்வித அலங்காரமும் இன்றி அமைக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் போப் பிரான்சிஸ் உடல் அவரது இல்லத்திலிருந்து பொதுமக்களின் அஞ்சலிக்காக செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்துக்கு நேற்று எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இன்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு இறுதிச் சடங்கு தொடங்க உள்ளது.

இதில் உலகம் முழுவதிலும் இருந்து கார்டினல்கள், பேராயர்கள், ஆயர்கள் மற்றும் பாதிரியார்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முதல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வரை பல்வேறு நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர். இதையடுத்து போப் பிரான்சிஸ் உடல் ரோம் நகரில் உள்ள புனித மேரி பேராலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் வாடிகன் நகருக்கு வெளியில் அடக்கம் செய்யப்படும் முதல் போப் என்ற பெருமையை பிரான்சிஸ் பெறுவார். போப் பிரான்ஸ்சிஸ் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவர் பிறந்த அர்ஜென்டினாவில் ஒரு வாரத்துக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

The post போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு இன்று நடைபெறும் appeared first on Oruvan.com.

யார் இந்த போப் பிரான்சிஸ்? – வழக்கங்களை ‘தகர்த்த’ சீர்திருத்த தலைவர்
கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் மறைந்தார். அவருக்கு வயது 88. ஜார்ஜ் பெர்கோகிலோ என்ற இயற்பெயர் கொண்ட போப் பிரான்சிஸ், அப்பதவியில் அமர்ந்த முதல் லத்தீன் அமெரிக்கர் என்ற பெருமையைக் கொண்டவர். 2013-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி 266-வது போப் ஆக அவர் தேர்வு செய்யப்பட்டார். அவரது செயல்பாடுகள் குறித்து சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின் தொகுப்பு இது…

பல நூற்றாண்டுகள் பழமையான கோட்பாட்டை மாற்றியமைக்காமல், மிகவும் இரக்கமுள்ள கத்தோலிக்க திருச்சபையை உருவாக்கிய சீர்திருத்த தலைவராக போப் பிரான்சிஸ் வரலாற்றில் இடம் பிடிப்பார். மக்களின் போப் ஆண்டவராக விளங்கியவர் பிரான்சிஸ். இவர் இந்த பெயரை தேர்ந்தெடுத்ததிலேயே அவர் தனது தனித்துவத்தை வெளிப்படுத்தினார். தனது செல்வத்தைத் துறந்து ஏழைகளுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த 13-ஆம் நூற்றாண்டின் மறைபொருள் அசிசியின் புனித பிரான்சிஸ் நினைவாக பிரான்சிஸ் என்ற பெயரைப் பெற்ற முதல் போப் இவராவார்.

திருச்சபைக்குள் பாரம்பரியவாதிகளிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகளை எதிர்கொண்ட போதிலும், விசுவாசிகளின் நேசத்தை அதிக அளவில் பெற்ற சீர்திருத்த தலைவராக விளங்கியவர் போப் பிரான்சிஸ். பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியவர்களை, சொந்த நாட்டை விட்டு வெளியேறி வேறு நாட்டில் குடியேறியவர்களை, காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களை என விளிம்பு நிலை மக்களை பாதுகாப்பதில் உறுதியாக இருந்தவர் போப் பிரான்சிஸ். மனிதர்கள் எதிர்கொள்ளும் இத்தகைய பிரச்சினைகளுக்கு சக மனிதர்களே காரணம் என எச்சரித்தவர் அவர்.

பாதிரியார்களால் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொண்டவர்களுக்கு அவர் ஆதரவாக நின்றார். எனினும், அத்தகைய பாதிரியார்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மெதுவாக நடப்பதாக எழுந்த குற்றச்சாட்டையும் அவர் எதிர்கொண்டார்.

ஓர் எளிய நபராக இருந்தவர் போப் பிரான்சிஸ். சாதாரண அங்கிகளை அணிவதாகட்டும், ஆடம்பரமான அரண்மனைகளைத் தவிர்ப்பதாகட்டும், தனக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை தானே எடுப்பதாகட்டும், கணவரை இழந்த பெண்கள், கைதிகள் போன்றோருக்கு ஆறுதல் தெரிவிப்பதாகட்டும் அவர் என்றுமே எளிமையை விரும்புபவராகவும், எளிய மக்களோடு நிற்பவராகவும் இருந்துள்ளார். சமூக ஊடகங்கள் முதல் ஆபாசம் வரையிலான பிரச்சினைகள் குறித்து இளைஞர்களுடன் உரையாடிய போப் அவர். அதுமட்டுமல்ல, தனது உடல்நலம் குறித்து வெளிப்படையாகப் பேசியவர்.

2021-ல் அவருக்கு பெருங்குடல் அறுவை சிகிச்சை நடந்தது. ஜூன் 2023-இல் குடலிறக்கம், மூச்சுக்குழாய் அழற்சி, முழங்கால் வலி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதனால் அவர் சக்கர நாற்காலியைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இரண்டு நுரையீரல்களிலும் உள்ள மூச்சுக்குழாய்களில் ஏற்பட்ட அழற்சி காரணமாக ஒரு மாதத்துக்கும் மேலாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டி இருந்தது. போப் பிரான்சிஸ் தனது பதவியை ராஜினாமா செய்வார் என மிக நீண்ட காலமாக ஊகங்கள் வெளிவந்தன. எனினும், அதனை திட்டவட்டமாக மறுத்தவர் போப் பிரான்சிஸ். போப்பாண்டவர் ராஜினாமா செய்வது “சாதாரண விஷயமாக” மாறக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

கைதிகளின் பாதங்களை முத்தமிட்ட போப்: வாட்டிகனில் தனது முதல் ஈஸ்டருக்கு முன்பு, ரோம் சிறையில் கைதிகளின் பாதங்களை அவர் கழுவி முத்தமிட்டார். போப் பிரான்சிஸ் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்துக்காக, இத்தாலிய தீவான லம்பேடுசாவைத் தேர்ந்தெடுத்தார். இதற்குக் காரணம், ஐரோப்பாவுக்குள் நுழைய விரும்பும் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு அந்த தீவுதான் நுழைவு வாயிலாக இருந்தது. உலகின் அலட்சியத்தையும் அதன் விளைவுகளையும் உணர்த்தவே அவர் இந்த தீவுக்குச் சென்றார்.

ட்ரம்ப்புக்குக் கண்டனம்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப்பின் முதல் பதவிக் காலத்தில் மெக்சிகோவுக்கு எதிராக எல்லைச் சுவரைக் கட்ட அவர் திட்டமிட்டார். இது கிறிஸ்தவத்துக்கு எதிரானது என்று கண்டனம் தெரிவித்தவர் போப் பிரான்சிஸ். மேலும், அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையில் வரலாற்று நல்லிணக்கத்தை எளிதாக்க உதவினார். 2018-ஆம் ஆண்டு பிஷப்புகளை நியமிப்பது தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் மூலம் சீனாவுடனான உறவுகளை மேம்படுத்த அவர் முயன்றார்.

தன்பாலின ஈர்ப்பாளர் கத்தோலிக்கர்கள் விஷயத்தில், “தீர்ப்பளிக்க நான் யார்?” என்று கூறிய போப் அவர். விவாகரத்து பெற்ற மற்றும் மறுமணம் செய்து கொண்ட விசுவாசிகள் மத்தியில் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். திருநங்கை விசுவாசிகளின் ஞானஸ்நானத்தை அங்கீகரித்தார்.

கத்தோலிக்க படிநிலையின் முக்கிய நீரோட்டத்தில் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க அவர் வழிவகுத்தார். முதலில் அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸில் “சேரிகளின் பிஷப்” ஆகவும், பின்னர் பிஷப்களின் பிம்பத்தை உடைக்கும் போப்பாகவும் தன்னை நிறுவியவர் போப் பிரான்சிஸ்.

The post யார் இந்த போப் பிரான்சிஸ்? – வழக்கங்களை ‘தகர்த்த’ சீர்திருத்த தலைவர் appeared first on Oruvan.com.

‘சீர்திருத்தங்களை ஆதரித்தவர் போப் பிரான்சிஸ்’ – உலக தலைவர்கள் இரங்கல்
கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவர் போப் பிரான்சிஸின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “போப் பிரான்சிஸின் மறைவுக்கு உலகம் இன்று இரங்கல் தெரிவிக்கிறது. கத்தோலிக்க திருச்சபையைத் தாண்டி, அவர் தனது பணிவு மற்றும் ஏழைகள் மீதான தூய அன்பின் மூலம் கோடிக்கணக்கான மக்களை ஊக்கப்படுத்தினார்.

இந்த ஆழ்ந்த இழப்பை உணரும் அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. போப் பிரான்சிஸின் மரபு நம்மை நீதியான, அமைதியான மற்றும் இரக்கமுள்ள உலகத்தை நோக்கி தொடர்ந்து வழிநடத்தும். அவரது ஆன்மா ஆறுதல் காணட்டும்.” என தெரிவித்துள்ளார்.

போப் பிரான்சிஸ் காலமானதைத் தொடர்ந்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “போப் பிரான்சிஸ், சாந்தியடையட்டும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனுடன் போப், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் உடன் தனித்தனி சந்தர்ப்பங்களில் சந்தித்த புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்தியா வந்துள்ள ஜே.டி. வான்ஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “போப் பிரான்சிஸ் காலமான செய்தியை இப்போதுதான் அறிந்தேன். உலகம் முழுவதும் அவரை நேசித்த கோடிக்கணக்கான கிறிஸ்தவர்களுக்கு என் இதயம் இரங்குகிறது.

நேற்று அவரைப் பார்த்ததில் நான் மகிழ்ச்சியடைந்தேன், இருப்பினும் அவர் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். ஆனால் கோவிட் தொற்றின் ஆரம்ப நாட்களில் அவர் ஆற்றிய மறையுரைக்காக நான் எப்போதும் அவரை நினைவில் கொள்வேன். அது மிகவும் அழகாக இருந்தது. கடவுள் அவரது ஆன்மாவை அமைதிப்படுத்தட்டும்.” என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஆழ்ந்த நம்பிக்கையும் எல்லையற்ற இரக்கமும் கொண்ட அவர், ஏழைகளை மேம்படுத்துவதற்கும், பிரச்சினை நிறைந்த உலகில் அமைதிக்காக அழைப்பு விடுப்பதற்கும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

மத்திய கிழக்கில் அமைதிக்காகவும், (காசாவில்) பிணைக் கைதிகள் பாதுகாப்பாகத் திரும்புவதற்காகவும் அவர் செய்த பிரார்த்தனைகள் விரைவில் நிறைவேறும் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்து பிரதமர் டிக் ஸ்கூப் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நாம் வாழும் காலத்தில் உலகின் மிக முக்கிய பிரச்சினைகளை அங்கீகரித்து அவற்றிற்கு கவனம் செலுத்திய ஒரு தலைவருக்கு உலகளாவிய கத்தோலிக்க சமூகம் அஞ்சலி செலுத்துகிறது. நிதானமான வாழ்க்கை முறை, சேவை மற்றும் இரக்கச் செயல்கள் மூலம் போப் பிரான்சிஸ், கத்தோலிக்கர்கள் மற்றும் கத்தோலிக்கரல்லாதவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்தார். நாங்கள் அவரை மிகுந்த மரியாதையுடன் நினைவுகூருகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்திய ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “போப் பிரான்சிஸ் ஓர் ஆழ்ந்த நம்பிக்கையாளராகவும், மாறுபட்ட பாரம்பரியவாதியாகவும் இருந்தார்! அவர் சீர்திருத்தத்தை ஆதரிப்பவராகவும், மதங்களுக்கு இடையேயான உரையாடலை ஆதரிப்பவராகவும் இருந்தார்.

சுற்றுச்சூழல் மீதான அவரது அக்கறையும், மனித கடத்தலுக்கு எதிரான அவரது முயற்சிகளும் குறிப்பிடத்தக்கவை. சிறந்த புரிதலுக்கான அவரது அழைப்பு அவரது ஆதரவாளர்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும்.

புது டெல்லி மற்றும் வாஷிங்டன், டி.சி.யில் நடைபெற்ற உலக கலாச்சார விழாவில் வாழும் கலைக்கான அன்பான செய்தியுடன் அவர் தனது தூதரை அனுப்பியிருந்தார்.” என குறிப்பிட்டுள்ளார்.

The post ‘சீர்திருத்தங்களை ஆதரித்தவர் போப் பிரான்சிஸ்’ – உலக தலைவர்கள் இரங்கல் appeared first on Oruvan.com.

போப் பிரான்சிஸ் பதவி விலகுவாரா? வாடிகன் விளக்கம்
போப் பிரான்சிஸ் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில், அவரின் உடல் நிலையில், தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில், அவர் பதவி விலகுவாரா என்ற கேள்வியும் எழுத் தொடங்கியுள்ளது.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88 வயது), உடல் நலக்குறைவு காரணமாக 14-ம் திகதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை மாலை அவரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது இதயம் நன்றாக செயல்படுவதாகவும் வாடிகன் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலை வெளியான தகவலின்படி, ‘இரவு அவர் நன்றாக ஓய்வெடுத்தார். இன்று காலை போப் பிரான்சிஸ் எழுந்து காலை உணவை உட்கொண்டார்’ என கூறப்படுகிறது.

போப் பிரான்ஸிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில், தற்போது வரை அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், போப் பிரான்சிஸ் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்ற கேள்வி எழத் தொடங்கியுள்ளது. இதற்கு முன்பு கடந்த 2013-ம் ஆண்டு பெப்ரவரி 28-ம் திகதி போப் பெனடிக்ட் தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர் கடந்த 600 ஆண்டுகளில் முதல் முறையாக தனது போப் பதவியை ராஜினாமா செய்தவர் ஆவார். அவரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த பிரான்சிஸ் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், இது குறித்து வாடிகன் நிர்வாகம் சார்பில், கத்தோலிக்க திருச்சபையின் மதகுருவான கார்டினல் ரவாசி கூறுகையில், “போப் பிரான்சிஸ் மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும் என்று விரும்புவார். அதற்கு ஏதேனும் இடையூறு ஏற்படும் சூழ்நிலை வந்தால், அவர் இராஜினாமா செய்ய முடிவு செய்யலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்றார். அதேசமயம் போப் பிரான்சிஸ் பதவி விலகுவது குறித்து இதுவரை பரிசீலனை செய்யபடவில்லை. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வயதில் முதிர்ந்தவர் என்பதால், நிமோனியா பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு வர அவருக்கு மேலும் சில வாரங்கள் தேவைப்படலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, போப் பிரான்சிஸ், போப் பதவி என்பது வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் என்று நம்புவதாக கூறியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

88 வயதான போப் சற்றே அதிக எடை கொண்டவர். உடல் ரீதியாக அவரால் சுறுசுறுப்பாக இயங்க முடியாது. முழங்கால்கள் மோசமாக இருப்பதால் சக்கர நாற்காலியைப் பயன்படுத்துகிறார். முன்னதாக, தனது உடல் நிலை மோசமாக இருப்பதை அவரே ஒப்புக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post போப் பிரான்சிஸ் பதவி விலகுவாரா? வாடிகன் விளக்கம் appeared first on Oruvan.com.

போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி
கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பிரார்த்தனைக் கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தார்.

ஆனாலும் தனக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக போப் பிரான்சிஸ் தெரிவித்தார்.

இந்நிலையில், இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என வாடிகன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே, இதே மருத்துவமனையில் குடல் அறுவை சிகிச்சைக்காக கடந்த 2021, ஜூலை மாதத்தில் போப் பிரான்சிஸ் 10 நாட்கள் அனுமதிக்கப்பட்டார். 2023, ஜூலையிலும் அதே மருத்துவமனையில் அவருக்கு குடலிறக்கத்தை சரிசெய்வதற்கான அறுவை சிகிச்சையும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

The post போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி appeared first on Oruvan.com.