போதைப்பொருள் Archives - Oruvan.com

போதைப்பொருள் வர்த்தகத்துக்கு முடிவு கட்டி பாதாள உலகக் குழுக்களை ஒடுக்கியே தீருவோம்
இலங்கையின் எதிர்கால சந்ததியினரைப் போதைப்பொருளின் கெடுபிடியிலிருந்து பாதுகாப்பதற்கும், பாதாள உலகக் கும்பல்களின் செயற்பாடுகளை ஒடுக்குவதற்கும் தற்போதைய அரசு தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

அனுராதபுரம் இலங்கை பொலிஸ் பயிற்சி நிலையத்தில் நேற்று பொலிஸ் பயிற்சிகளை நிறைவு செய்ததன் பின்னர் வெளியேறும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“போதைப்பொருள் வர்த்தகம் இலங்கையில் பாரிய புற்றுநோயாகப் பரவியுள்ளது. நாட்டின் எதிர்காலச் சந்ததியினரைப் போதைப்பொருளின் கெடுபிடியிலிருந்து பாதுகாப்பதற்கும், பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை ஒடுக்குவதற்கும் தற்போதைய அரசு தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

நாட்டில் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளும் போதைப்பொருள் வர்த்தகமும் ஒன்றோடொன்று இணைந்துள்ளன. இவற்றை வேரோடு ஒழிப்பதற்குப் பொலிஸாரும் முப்படையினரும் இணைந்து தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

போதைப்பொருள் கடத்தல், வர்த்தகம், சந்தையில் உள்ள கேள்வி ஆகியவற்றை முழுமையாக ஒழிப்பதற்கு விசேட வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் சேவையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில இவ்வருடம் மாத்திரம் 10 ஆயிரம் புதிய உத்தியோகத்தர்களைப் பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்வதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு மற்றும் அமைச்சரவை அங்கீகாரம் என்பன பெறப்பட்டுள்ளன. அதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நீண்டகாலமாக நிலுவையிலிருந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் ஏற்கனவே 5 ஆயிரம் பேருக்குப் பதவி உயர்வுக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன், இவ்வாண்டு மேலும் 5 ஆயிரம் பேருக்குப் பதவி உயர்வு வழங்குவதற்கு அவசியமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவைக்குத் தகுந்த சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், பொலிஸ் நிலையங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், உத்தியோகத்தர்களுக்கான ஏனைய நலன்புரி வசதிகளை உறுதிப்படுத்தவும் அரசு முன்னுரிமை அளித்துள்ளது.

பழைய பொலிஸ் முறைகளைக் கொண்டு எதிர்வரும் காலங்களிலும் முன்னோக்கிச் செல்ல முடியாது. பொலிஸ் திணைக்களத்தை முழுமையாக நவீனமயப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கமைய பொலிஸ் சேவைக்குள் நவீன தொழில்நுட்பத்தை இணைத்து தொழில்நுட்பம் சார்ந்த அறிவுடன் பொலிஸ் உத்தியோகத்தர்களை மேம்படுத்த வேண்டியுள்ளது.

தற்போதைய பொலிஸ் சேவையின் வளர்ச்சிக்குப் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்னவின் அனுபவமிக்க வழிகாட்டல் பெரும் பலமாக உள்ளது.” – என்றார்.

The post போதைப்பொருள் வர்த்தகத்துக்கு முடிவு கட்டி பாதாள உலகக் குழுக்களை ஒடுக்கியே தீருவோம் appeared first on Oruvan.com.

கொழும்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் போதைப்பொருள் பயன்பாடு
கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 2 , 30 000கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அக்குரஸ்ஸ கோடபிட்டிய தேசிய பாடசாலையில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சிறைச்சாலைகள் ஆணையாளர் இதனை தெரிவித்திருந்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், இலங்கையிலுள்ள சிறைச்சாலைகள் இளைஞர்களால் நிறைந்துள்ளன எனவும் கல்வியறிவு குறைவாக உள்ளவர்களை போதைப்பொருள் கடத்தலுக்காக பாதாள உலகத்தினர் பயன்படுத்துகின்றனர் எனவும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, நாட்டை போதைப்பொருட்களிலிருந்து காப்பாற்ற நாம் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கவேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

இலங்கையில் மொத்தமாக 36 சிறைச்சாலைகள் உள்ள நிலையில் அதில் சுமார் 10 ,500 குற்றவாளிகளை மட்டுமே தடுத்து வைத்திருக்க முடியும், ஆனால் அந்த எண்ணிக்கை இன்று நான்கு மடங்காக அதிகரித்துள்ள நிலையில் அங்கு 36,000 குற்றவாளிகளை இன்று தடுத்து வைத்துள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் கொலை மற்றும் ஐந்து கிராம் போதைப்பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை விதிக்கப்படும், ஆனால் அதனை நிறைவேற்ற முடியாது .

குறிப்பாக இன்று கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 2 ,30,982 பாடசாலை மாணவர்கள் போதைக்கு அடிமையாகியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தென்மாகாணத்தில் இதைவிட அதிக எண்ணிக்கையிலானவர்கள் இருப்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் பாதாள உலக நடவடிக்கைகளில் தென் மாகாணம் தான் முதலிடத்தில் உள்ளது எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

மேலும், இலங்கையில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பான்மையினர் குறைவான எழுத்தறிவு மட்டத்தில் காணப்படும் இளைஞர்கள் என தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் பாடசாலை முடிந்த பின்னர் எப்படிச் செல்கிறார்கள், யாருடன் பழகுகிறார்கள் ,

எங்கு குழுவாக நிற்கின்றார்கள் என்று பார்க்க நிறைய அதிகாரிகளை சிவில் உடையில் பணியில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் ஏதேனும் தகவல் இருந்தால் பாடசாலை விட்டுச் செல்லும்போது பஸ் நிலையங்கள், கடைகள் போன்ற இடங்களில் இதுபோன்ற விடயங்களைக் கண்டால் அறிவிக்குமாறு

071 859 2683 எனும் தொலைபேசி இலக்கத்தையும் வழங்கியுள்ளார்.

The post கொழும்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் போதைப்பொருள் பயன்பாடு appeared first on Oruvan.com.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பில் ஐவர் கைது
தெற்கு கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பாக ஐந்து சந்தேக நபர்களை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகையும் விசேட அதிரடிப்படையினர் பறிமுதல் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (14) கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருட்களில் 670 கிலோகிராம் ஐஸ், 156 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 12 கிலோ கிராம் ஹாஷிஷ் ஆகியவை அடங்கியுள்ளன.

The post கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பில் ஐவர் கைது appeared first on Oruvan.com.

தெற்கு கடலில் மீட்கப்பட்ட பொதிகளில் 839 கி.கி போதைப்பொருள்
தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் பொதிகளில் மொத்தம் 839 கி.கி போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 670 கி.கி ஐஸ் (Ice), 156 கி.கி ஹெரோயின் (Heroin), 12 கி.கி ஹஷீஷ் (Hashish) என்பன அடங்குகின்றன.

தெற்கு கடலில் மிதந்து வந்த நிலையில் நேற்று (14) சுமார் 51 பொதிகள் மீட்கப்பட்டன. இந்தப் பொதிகள் நேற்று (14) மாலை தங்காலை மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டன.3 பொதிகளில் ஹெரோயின் இருப்பதாகவும், மற்ற 48 பொதிகளிலும் ஐஸ் ரக போதைப்பொருள் இருப்பதாகவும் கடற்படை தெரிவித்தனர்.

இவை உனாகுருவே சாந்த என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமானவை என சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த செப்டெம்பர் மாத தொடக்கத்தில், 3 படகுகள் மூலம் போதைப்பொருட்கள் நாட்டிற்குள் கடத்தப்படவுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமல் பிரசாந்தவுக்கு தகவல் கிடைத்திருந்தது.

இதனையடுத்து, பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையில், கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகம் தேவேந்திரமுனை மற்றும் தங்காலை கடல் பகுதிகளில் 32 நாட்கள் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டன.

சம்பந்தப்பட்ட படகுகளுடன் தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும், எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. படகுகளின் இருப்பிடத்தைக் கண்டறிய பயன்படுத்தப்படும் VMS (Vessel Monitoring System) அமைப்பு செயலிழக்கச் செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை விமானப்படையின் உதவியும் பெறப்பட்ட போதிலும், இந்த 3 படகுகள் தொடர்பான எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

எனவே, இந்தப் பொதிகள் சந்தேகநபர்களால் கடலில் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கை குறித்து ஊடகங்களுக்குப் பேசிய பாதுகாப்பு பிரதியமைச்சர்,

பொது பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து நாட்டின் எதிர்கால சந்ததியினரை விடுவிப்பதற்கான அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மற்றும் ஒன்றாக இணைந்து செயல்படும் தேசிய நடவடிக்கை’ மற்றும் இந்த போதைப்பொருளை ஒழிப்பதற்கான தேசிய திட்டம் குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.

மேலும், கடல் வழிகள் வழியாக நாட்டிற்குள் போதைப்பொருள் நுழைவதைத் தடுக்க, பரந்த கடல் எல்லையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இலங்கை கடற்படை ஆற்றிய முக்கிய பங்கைப் பாராட்டிய பாதுகாப்பு பிரதியமைச்சர், நாட்டில் போதைப்பொருள் பரவுவதை ஒரு தேசிய அச்சுறுத்தலாக அரசாங்கம் கருதுவதாகவும், போதைப்பொருள் இல்லாத நாட்டை உருவாக்க உறுதிபூண்டுள்ளதாகவும் வலியுறுத்தினார். போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு பொதுமக்களின் பெரும் ஆதரவு இருப்பதாகவும், பொதுமக்கள் வழங்கும் தகவல்கள் நடவடிக்கைகளின் வெற்றிக்கு பெரும் பலம் என்றும், அதற்காக பொதுமக்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

தேசிய பாதுகாப்பிற்கு அர்ப்பணிப்புடன் செயல்படும் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு மூலம், தேசிய பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் போதைப்பொருள் உள்ளிட்ட எந்தவொரு சட்டவிரோத பொருட்களையும் கடல் வழியாக நாட்டிற்குள் கொண்டு வர வாய்ப்பில்லை என்றும், மீன்பிடி நடவடிக்கைகள் என்ற போர்வையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவது, அதை ஆதரிப்பது அல்லது அதை உருவாக்குவது போன்ற எந்தவொரு முயற்சியும் வெற்றிபெற அனுமதிக்கப்படாது என்றும், அத்தகைய கடத்தலை அடக்குவதற்கான ஒருங்கிணைந்த திட்டத்துடன் நடவடிக்கைகள் தொடரும் என்றும் மேலும் வலியுறுத்தினார்.

The post தெற்கு கடலில் மீட்கப்பட்ட பொதிகளில் 839 கி.கி போதைப்பொருள் appeared first on Oruvan.com.

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தியவர்களின் சொத்துக்கள் இந்தியாவில் முடக்கம்
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தியவர்களின் சுமார் 2 கோடி ரூபாய் இந்திய மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

சென்னையில் போதைப் பொருள் வழக்கில் சிக்கியவா்களின் சொத்துக்களே இவ்வாறு இந்திய மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவால் முடக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவின் சென்னை மண்டல அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், சென்னை அருகே செங்குன்றத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கடத்தி வந்த ஒரு கும்பலை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 1,470 கிலோ மெத்தம்பெட்டமைன், ரூ. 1.29 கோடி ரொக்கம், 30 ஆயிரம் அமெரிக்க டொலா், இலங்கை நாட்டின் ரூபாய் நோட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடா்பாக அப்பிரிவு வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட அந்த நபா்கள், ஹவாலா பணப்பரிமாற்றத்திலும் ஈடுபட்டிருப்பதும், அந்தக் கும்பல் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்துவதும், சிந்தட்டிக் வகை போதைப் பொருளை மையமாகக் கொண்டு கடத்தலில் ஈடுபடுவதும் தெரியவந்தது.

இந்த வழக்கில் முக்கிய எதிரிகளான நிசாருதீன், அவா் மனைவி ரபீயா சஹானா ஆகியோருக்கு சொந்தமான ரூ. 2 கோடி மதிப்புள்ள 11 வீட்டு மனைகள், விவசாய நிலம் ஆகியவற்றை போதைப் பொருள் தடுப்புச் சட்டம், கடத்தல் மற்றும் அந்நிய செலாவணி மோசடி சட்டம் ஆகியவற்றின் கீழ் முடக்கப்பட்டதாக இந்திய மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு தொடா்பாக இந்திய மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு தொடா்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

The post இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தியவர்களின் சொத்துக்கள் இந்தியாவில் முடக்கம் appeared first on Oruvan.com.