பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு Archives - Oruvan.com

மின்சார கட்டண திருத்தம் – நாளை இறுதி முடிவு
இந்த ஆண்டின் இறுதி மின்சார கட்டண திருத்தம் குறித்த இறுதி முடிவை நாளை அறிவிப்பதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டின் கடைசி காலாண்டில், ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மின்சார கட்டணத்தில் 6.8 சதவீத அதிகரிப்பை இலங்கை மின்சார சபை (CEB) கோரியுள்ளது.

இது தொடர்பான பொது ஆலோசனை செப்டம்பர் 18 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் தொடங்கியது, இறுதி ஆலோசனை கூட்டம் கடந்த எட்டாம் திகதி மேல் மாகாணத்தில் நடைபெற்றது.

முன்வைக்கப்பட்ட கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு, மின்சார கட்டண திருத்தம் எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பது குறித்த தனது முடிவை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு நாளை அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான மூன்றாவது மின்சார கட்டண திருத்தம் குறித்து பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக நடத்தப்பட்ட அமர்வுகளில் சுமார் 500 பேர் கருத்துகளையும் பரிந்துரைகளையும் சமர்ப்பித்துள்ளனர்.

இதற்கிடையில், மின்சார சபையின் மறுசீரமைப்பு முறையாக மேற்கொள்ளப்படாவிட்டால் மின்சார கட்டண உயர்வை தடுக்க முடியாது என்று இலங்கை மின்சார சபையின் சுயாதீன ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மின்சார  சபையின் மறுசீரமைப்பு தொடர்பாக தனது சங்கம் ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் சுயாதீன ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரபாத் பிரியந்தா தெரிவித்துள்ளார்.

The post மின்சார கட்டண திருத்தம் – நாளை இறுதி முடிவு appeared first on Oruvan.com.

மின்சார கட்டணம் 6.8% அதிகரிக்கும் சாத்தியம்?
இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் படி, 2025ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களை ஆறு தசம் எட்டு வீதம் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளது.

இதன்படி, முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்து பொதுமக்களின் கருத்தைப் பெற பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு முடிவுசெய்துள்ளது.

பொதுமக்கள் தங்கள் கருத்துகளையும் பரிந்துரைகளையும் எழுத்துப்பூர்வமா சமர்ப்பிக்கலாம் என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இது குறித்து பொது மக்களின் வாய்மொழி கருத்துகளை பெற்றுக்கொள்ள ஒன்பது மாகாணங்களை உள்ளடங்கிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான நடவடிக்கைகள் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டின் மூன்றாவது மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை தொடர்பான எழுத்துப்பூர்வ கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு முன்னர் சமரப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மின்சார கட்டணம் 6.8% அதிகரிக்கும் சாத்தியம்? appeared first on Oruvan.com.