பொதுஜன பெரமுன Archives - Oruvan.com

மக்கள் யார் பக்கம்? மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு பொதுஜன பெரமுன வலியுறுத்து
மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் வலியுறுத்தியுள்ளார்.

என்.பி.பி. அரசாங்கத்துக்கான மக்கள் ஆதரவு சரிந்துவிட்டது என்பதை நுகேகொடைக் கூட்டம் வெளிப்படுத்தியது என்பதை சுட்டிக்காட்டியே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.

“ நுகேகொடை கூட்டம் வெற்றியளித்துள்ளது. பொய்கள்மூலம் இனியும் நாட்டை ஆளமுடியாது என்பதை இனியாவது ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

அரசாங்கத்துக்கான மக்கள் ஆதரவு சரிந்துவிட்டது.

அவ்வாறு இல்லை, மக்கள் ஆதரவு தமக்கு இருக்கின்றது என அரசாங்கம் கூறுமானால், அதன் உண்மை தன்மை என்னவென்பதை அறிய மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.” எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.

The post மக்கள் யார் பக்கம்? மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு பொதுஜன பெரமுன வலியுறுத்து appeared first on Oruvan.com.

21 ஆம் திகதி போராடத்துக்கு வாருங்கள்: சஜித் அணிக்கு பொதுஜன பெரமுன அழைப்பு
நுகேகொடையில் எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்புக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் உறுப்பினரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர மேற்படி அழைப்பை விடுத்தார்.

நுகேகொடை கூட்டத்தில் தமது கட்சி பங்கேற்காது என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ள நிலையிலேயே, மொட்டு கட்சி தரப்பில் இருந்து இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

” இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் வேலைத்திட்டம் 21 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இதில் ஐக்கிய மக்கள் சக்தியும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கின்றோம். இது தனி நபர்களை பிரச்சாரப்படுத்தும் கூட்டம் அல்ல. எனவே, இதில் பங்கேற்பதால் கட்சிகளின் தனித்துவத்துக்கு பாதிப்பு ஏற்படாது.” எனவும் மேற்படி ஊடக சந்திப்பின்போது ஜானக வக்கும்புர தெரிவித்தார்.

The post 21 ஆம் திகதி போராடத்துக்கு வாருங்கள்: சஜித் அணிக்கு பொதுஜன பெரமுன அழைப்பு appeared first on Oruvan.com.

சஜித், ரணிலுடன் அரசியல் கூட்டு கிடையாது: பொதுஜன பெரமுன திட்டவட்டம்
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றுடன் அரசியல் ரீதியிலான கூட்டு பயணம் கிடையாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஒருமித்தக்கொள்கையுடையக் கட்சிகளாகும். அந்த தரப்புகள் இணைவது பிரச்சினை இல்லை. அதனை வரவேற்கின்றோம்.

ஆனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கொள்கை தனித்துவமானது.

ஒற்றையாட்சி, தேசிய பொருளாதாரம் என்பவற்றை மையப்படுத்தியது. எனவே, மேற்படி தரப்புகளுடன் அரசியல் ரீதியில் எமக்கு கூட்டு கிடையாது. ஆனால் ஜனநாயகம் மற்றும் ஏதேச்சாதிகாரத்துக்காக எதிரணியாக ஒன்றிணைந்து செயற்படக்கூடிய இடங்களில் ஒன்றிணைவோம். மாறாக அரசியல் ரீதியில் கூட்டு கிடையாது.” – என்றார்.

The post சஜித், ரணிலுடன் அரசியல் கூட்டு கிடையாது: பொதுஜன பெரமுன திட்டவட்டம் appeared first on Oruvan.com.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பொதுஜன பெரமுன ஆதரவு
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். குண்டுத்தாக்குதல் பற்றி கிடைத்த புலனாய்வு தகவல்களை மேசையில் பத்திரப்படுத்தி வைத்து பொறுப்பினை மீறியவர்கள் இந்த அரசாங்கத்தில் உயர்பதவிகளில் உள்ளார்கள். அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (11) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் முழுமையான அரசியலாகிவிட்டது.குண்டுத்தாக்குதல்கள் பற்றி போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்ற போது கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக செயற்பட்டார். இவர் தனது பதவிக்கான பொறுப்பில் இருந்து விலகியுள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு குற்றச்சாட்டுக்குள்ளானவரை பதவியில் வைத்துக்கொண்டு எவ்வாறு சுயாதீனமான முறையில் விசாரணைகள் இடம்பெறும் என்பதில் பாரிய சந்தேகம் காணப்படுகிறது. ஆகவே இவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்போம்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் கிடைத்த புலனாய்வுத் தகவல்களை கொண்டு எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமல் அவற்றை அலுவலக மேடையில் பத்திரப்படுத்தி வைத்தவர்கள் இந்த அரசாங்கத்தில் உயர் பதவிகளில் உள்ளார்கள். அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பொதுஜன பெரமுன ஆதரவு appeared first on Oruvan.com.