பெஞ்சமின் நெதன்யாகு Archives - Oruvan.com

ஈரானில் ஆட்சி மாற்றம் நேரடி இலக்கு அல்ல
ஈரானில் ராணுவ ரீதியான இலக்குகளில் பாதிக்கும் மேலான பணிகள் நிறைவடைந்துவிட்டன என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஈரானுடனான எப்போது முடிவுக்கு வரும் என்பது தொடர்பான கேள்விக்கு அவர் தெளிவான பதிலை வழங்கவில்லை.

அத்துடன், ஈரானின் ஆயுத உற்பத்தி நிலையங்கள் மற்றும் அணுசக்தி திட்டங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது எனவும் இஸ்ரேல் பிரதமர் குறிப்பிட்டார்.

ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது தங்களது நேரடி நோக்கமல்ல என்றும், அந்நாட்டின் தற்போதைய ஆட்சி உள்நாட்டிலேயே வீழ்ச்சியடையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஈரானியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இந்த மோதலில் கொல்லப்பட்டுள்ளதாக அவர் மேலும் விவரித்துள்ளார்.

The post ஈரானில் ஆட்சி மாற்றம் நேரடி இலக்கு அல்ல appeared first on Oruvan.com.

சிதைக்கப்படுகிறது ஈரான்: போர் விரைவில் முடிவுக்கு வரும்
“ஈரானால் இனி யுரேனியத்தை செறிவூட்டவோ அல்லது பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரிக்கவோ முடியாது. போரில் நாம் வெற்றி பெறுகிறோம், ஈரான் சிதைக்கப்படுகிறது” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய நெதன்யாகு, “முதலில், நான் உயிருடன் இருக்கிறேன் என்று சொல்ல விரும்புகிறேன்.

பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரிப்பதற்கான பாகங்களையும், அணு ஆயுதங்களை தயாரிக்க முயற்சிக்கும் அவர்களின் தொழிற்சாலைகளையும்தான் நாம் இப்போது அழித்துக் கொண்டிருக்கிறோம்.

ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் ஆயுதக் கிடங்கு மிகப் பெரிய அளவில் சிதைக்கப்பட்டு அழிக்கப்படும்.

இஸ்ரேல் தான் அமெரிக்காவை இந்த போருக்குள் இழுத்துவிட்டது என்பது உண்மையில்லை. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு என்ன செய்ய வேண்டும் என்று யாராவது சொல்ல முடியும் என உண்மையிலேயே நீங்கள் நினைக்கிறார்களா?.

அமெரிக்காவுக்கு எது நல்லது என்று அவர் நினைக்கிறாரோ, அதன் அடிப்படையிலேயே எப்போதும் அவர் தனது முடிவுகளை எடுக்கிறார்.

ட்ரம்ப்புடன் நெருங்கிய ஒருங்கிணைப்பிலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையேயான நெருங்கிய ஒருங்கிணைப்பிலும், எங்கள் ராணுவங்கள், உளவுத்துறை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பின் மூலம், நாங்கள் மின்னல் வேகத்தில் இலக்குகளை அடைந்து வருகிறோம்.

இந்தப் போரில் அமெரிக்க – இஸ்ரேல் கூட்டாண்மை மிகவும் முக்கியமானது. நாங்கள் முழு மத்திய கிழக்கையும் பாதுகாக்கிறோம். மேலும், முழு உலகத்தையும் பாதுகாக்கிறோம் என்று நான் துணிந்து கூறுவேன். ஈரான் விஷயத்தில் நானும் ட்ரம்ப்பும் ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறோம் உலகம் ட்ரம்ப்புக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளது.

ட்ரம்ப்பின் கோரிக்கையைத் தொடர்ந்து, ஈரானின் முக்கிய எரிவாயு வயல்கள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தி வைக்கும். முதல் உண்மை, தெற்கு பார்ஸ் எரிவாயு வளாகத்துக்கு எதிராக இஸ்ரேல் தனியாகவே செயல்பட்டது. இரண்டாவது உண்மை, எதிர்காலத் தாக்குதல்களைத் தள்ளிப்போடுமாறு ட்ரம்ப் எங்களிடம் கேட்டுக்கொண்டார், நாங்கள் தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஈரானின் ராணுவ உள்கட்டமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. போரில் நாம் வெற்றி பெறுகிறோம், ஈரான் சிதைக்கப்படுகிறது. தற்போது ஈரானை யார் நடத்துகிறார்கள் என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஈரான் உயர் அதிகாரிகளிடையே மிகுந்த பதற்றம் நிலவுகிறது. போர் நாம் எதிர்பார்ப்பதை விட விரைவாக முடிவுக்கு வரும். ” என்று அவர் கூறினார்.

The post சிதைக்கப்படுகிறது ஈரான்: போர் விரைவில் முடிவுக்கு வரும் appeared first on Oruvan.com.

‘‘ஈரானிய மக்களால்தான் ஈரானில் ஆட்சி மாற்றம் சாத்தியம்” – இஸ்ரேல் பிரதமர்
ஈரானில் ஆட்சியை மாற்றுவது அந்நாட்டு மக்களின் கைகளில்தான் உள்ளது என்றும், அடக்குமுறை அமைப்பில் இருந்து அவர்கள் தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதலை தொடங்கி 10 நாட்கள் ஆகின்றன. தொடர்ந்து போர் தீவிரமடைந்து வருகிறது. இதனால், உலகின் பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இந்தப் போர் தொடருமானால், அது சர்வதேச அளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இஸ்ரேலில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘‘ஈரானின் தற்போதைய அரசியல் தலைமையின் எதிர்காலம் அந்நாட்டு மக்களின் கைகளில்தான் உள்ளது. தற்போதைய ஆட்சியை, அடக்குமுறை ஆட்சி என அவர்கள் கூறுகிறார்கள். அத்தகைய அமைப்புக்கு எதிராக எழுந்து நிற்கும் அவர்களின் மனநிலையைப் பொறுத்தே ஈரானில் ஆட்சி மாற்றம் என்பது இருக்கும்.

ஈரானிய மக்கள் அடக்குமுறை ஆட்சியில் இருந்து விடுபடுவதற்கு உதவுவதே இஸ்ரேலின் நோக்கம். இறுதியில் இது அவர்களிடமே இருக்கிறது. இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம் நாம் அவர்களின் சக்தியை பலவீனப்படுத்தி வருகிறோம் என்பதில் சந்தேகமில்லை. அதோடு, நாம் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.

ஈரானிய மக்களுடன் சேர்ந்து நாம் வெற்றி பெற்றால், அவர்கள் தற்போது சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை அளிக்க முடியும். நாம் மாற்றத்தை உருவாக்குவோம். இஸ்ரேலின் சர்வதேச நிலைப்பாட்டிலும் நாம் பெரிய மாற்றங்களை நிகழ்த்தி வருகிறோம்’’ என தெரிவித்துள்ளார்.

The post ‘‘ஈரானிய மக்களால்தான் ஈரானில் ஆட்சி மாற்றம் சாத்தியம்” – இஸ்ரேல் பிரதமர் appeared first on Oruvan.com.

கைது பயத்தால் பயண பாதையை மாற்றிய இஸ்ரேல் பிரதமர்?
ஐநா சபை கூட்டத்தில் பங்கேற்க சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் விமானம், ஐரோப்பிய வான்வெளியை தவிர்த்து, மாற்று வழியில் பயணம் மேற்கொண்டது.

அமெரிக்காவில் 80வது ஐ.நா., பொதுச்சபை கூட்டம் நடந்து வருகிறது. கூட்டத்தில் முதலாவதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் பேசினார். அதை தொடர்ந்து பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்று பேசி வருகின்றனர். அந்தவகையில், ஐநா சபை கூட்டத்தில் பங்கேற்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

அவரது விமானம், வழக்கமாக, இஸ்ரேலில் இருந்து கிரீஸ், இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் வான்வெளி வழியாக தான் செல்லும். ஆனால் இந்த முறை, ஐநா சபைக்கு நெதன்யாகுவின் விமான பயணம் வேறு பாதையில் இருந்தது.

சிறிது நேரம் மட்டுமே கிரீஸ் மற்றும் இத்தாலி வான்வெளியை கடந்து சென்றது. அங்கிருந்து மத்தியத்தரைக்கடல் மீது பறந்த விமானம், ஜிப்ரால்டர் தடத்தை கடந்து அட்லாண்டிக் கடல் வழியாக அமெரிக்கா சென்று சேர்ந்தது. இதனால் விமானத்தின் பயண நேரம் அதிகரித்தது.

இவ்வாறு ஐரோப்பிய நாடுகளின் வான்வெளியை பயன்படுத்தாமல், கடல் மீது பறந்து அமெரிக்கா சென்றதற்கு முக்கிய காரணம் உள்ளது. பாலஸ்தீனத்தை தனி நாடாக பிரான்ஸ் இந்த வாரத்தில் அங்கீகரித்துள்ளது. ஸ்பெயின் ஏற்கனவே அங்கீகரித்து விட்டது.

ஐரோப்பிய நாடுகள், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடிவாரண்டை அமல் செய்வதற்கான ரோம் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன. காசாவில் நிகழ்த்திய போர்க்குற்றங்களுக்காக, நெதன்யாகு மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

இதனால் விமானம் அவசரமாக தரையிறங்கும் பட்சத்தில், கைது வாரண்டை அந்த நாடுகள் அமல் செய்யவும் வாய்ப்புள்ளது. அத்தகைய ரிஸ்க் எடுப்பதற்கு தயங்கியே, இஸ்ரேல் பிரதமரின் விமானம், கடல் மீது பறந்து அமெரிக்கா சென்றதாக, இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐநா பொதுச்சபைவில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இன்று உரையாற்ற உள்ளார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்கவும் உள்ளார்.

The post கைது பயத்தால் பயண பாதையை மாற்றிய இஸ்ரேல் பிரதமர்? appeared first on Oruvan.com.