புங்குடுதீவு Archives - Oruvan.com

வித்தியா கொலை வழக்கு – விரைவில் தீர்ப்பு
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், குறித்த மனு மீதான தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்படும் என உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இன்று அறிவித்துள்ளது.

பிரதம நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

வித்தியா கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட குற்றவாளிகளால் குறித்த மேன்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

முன்னதாக யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் மாணவி சிவலோகநாதன் வித்தியா, 2015 ஆம் ஆண்டு மே மாதம் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், வழக்கும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது.

இந்த வழக்கில், குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட ஏழு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உள்ளிட்ட மூவரடங்கிய நீதிபதிகளால் பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

The post வித்தியா கொலை வழக்கு – விரைவில் தீர்ப்பு appeared first on Oruvan.com.

பெருமளவில் கரையொதுங்கும் Plastic Pellets
யாழ்ப்பாண மாவட்டத்தின் புங்குடுதீவு தெற்கு கடற்கரையோர பகுதி, குறிகட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு கடற்கரையோர பகுதிகளில் தற்போது பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருள் (Plastic Nurdle) பெருமளவில் கரையொதுங்கிவருவதாக கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட கடற் சூழல் உத்தியோகத்தர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்பட்ட பொருட்கள் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான பிரதான மூலப்பொருள் என்பதுடன் இது சூழலுக்கும் மனிதனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

அந்தவகையில் பொதுமக்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் விழிப்புணர்வுடன் நடந்துகொள்வதுடன் இப் பொருட்களை தொடுதல் மற்றும் எடுத்துச்செல்லுதலை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் உதவி முகாமையாளருக்கு அறிக்கையிடப்பட்டுள்ளதுடன் இதனை அப்புறப்படுத்தல் தொடர்பாக உரிய பொறிமுறை எதிர்வரும் நாட்களில் முன் எடுக்கப்படும் என மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவு மற்றும் சிலாபம் கடற்கரைகளில் ஒதுங்கியுள்ள Plastic Pellets குறித்து உடனடியாக ஆராய நாரா நிறுவனத்திற்கு அமைச்சர் பணிப்புரை!

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள், இன்று (ஜூன் 12) நெடுந்தீவு மற்றும் சிலாபம் கடற்கரைகளில் ஒதுங்கியுள்ள Plastic Pellets குறித்து உடனடியாக விரிவான ஆய்வொன்றை மேற்கொள்ளுமாறு தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையத்திற்கு (NARA) பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த Plastic Pellets கடற்கரையில் ஒதுங்கியிருப்பதன் மூலம் கடல் சூழலியல் மற்றும் கடற்கரையோர சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்படக்கூடிய பாதகமான தாக்கங்கள் குறித்து அமைச்சர் தனது தீவிர கவனத்தைச் செலுத்தியுள்ளார். கடல் மாசடைதல், குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் மாசடைதல், சுற்றுச்சூழலுக்கும் கடல்வாழ் உயிரினங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால், இந்த நிலைமை குறித்து உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நாரா நிறுவன அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவித்தார்.

இந்த Plastic Pellets வந்த வழி, அவற்றின் தாக்கம் மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்களைத் தவிர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஒரு விஞ்ஞான ரீதியான அறிக்கை ஒன்றின் அவசியத்தை அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.

The post பெருமளவில் கரையொதுங்கும் Plastic Pellets appeared first on Oruvan.com.