பிரியந்த வீரசூரிய Archives - Oruvan.com

புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்
புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, புதிய பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவிடம் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவருக்கான நியமனக் கடிதத்தை வழங்கி வைத்தார்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 61E(b) பிரிவின்படி இந்தப் புதிய நியமனத்திற்கு அரசியலமைப்பு சபையின் அனுமதி பெறப்பட்டது.

இதன்படி, இலங்கையில் 37வது பொலிஸ்மா அதிபராக சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் இலங்கை பொலிஸ் துறையின் மூன்று நிலைகளிலும், அதாவது பொலிஸ் கான்ஸ்டபிள், உதவி பொலிஸ் பரிசோதகர் மற்றும் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் ஆகிய பதவிகளிலும் பணியாற்றியவர் என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார்.

The post புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம் appeared first on Oruvan.com.

புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய – அரசியலமைப்பு சபை ஒப்புதல்
புதிய பொலிஸ்மா அதிபராக சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவை நியமிக்க அரசியலமைப்பு சபை ஒப்புதல் அளித்துள்ளது.

இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் அரசியலமைப்பு சபை கூடியது.

இதன்போது புதிய பொலிஸ்மா அதிபரை நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க புதிய பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பதில் பொலிஸ்மா அதிபரான பிரியந்த வீரசூரியவின் பெயரை அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரை செய்திருந்தார்.

The post புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய – அரசியலமைப்பு சபை ஒப்புதல் appeared first on Oruvan.com.

கண்ணுக்குத் தெரியாத பயங்கரவாதம் – வீதி விபத்துகள் குறித்து எச்சரிக்கை
கண்ணுக்குத் தெரியாத பயங்கரவாதமாக வீதி விபத்துகள் இருப்பதுமடன், தினமும்  9 பேர் வீதி விபத்துகளால் உயிரிழக்கின்றனர் என பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.

‘புதிய அரசாங்கத்துடன் பொலிஸாரின் பங்கு’ என்ற தலைப்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே பொலிஸ்மா அதிபர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

தூய்மை இலங்கை திட்டத்துடன் இணைந்து காவல்துறையினர் மேற்கொண்ட போக்குவரத்து நடவடிக்கைகள் காரணமாக, வாகன விபத்துகளால் ஏற்படும் தினசரி உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.

‘புதிய அரசாங்கத்துடன் காவல்துறையின் பங்கு’ என்ற தலைப்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற அவர்,

போக்குவரத்து விபத்துகளால் தினமும் இறப்பவர்களின் எண்ணிக்கை, யுத்தத்தின் போது இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது.

இது கண்ணுக்குத் தெரியாத பயங்கரவாதம். வீதிச் சட்டங்களையும் ஒழுக்கத்தையும் பேணுவது மிகவும் முக்கியமானது.

அண்மைய நாட்களில் சாலை விபத்துகளால் தினமும் 9 பேர் இறக்கின்றனர். இந்த எண்ணிக்கை தற்போது 4 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.  சில நாட்களில் இது 2 ஆகக் கூட குறைந்துள்ளது.

வீதி விபத்துகளால் ஒரு நாளைக்கு 10-15 பேர் நிரந்தரமாக ஊனமடைகின்றனர். போரின் போது ஒரு நாளைக்கு 4-5 பேரே உயிரிழந்திருந்தனர்.

பொலிஸாரால் தொடங்கப்பட்ட போக்குவரத்து நடவடிக்கைகள் காரணமாக, கடந்த டிசம்பர் 25 ஆம் திகதி கிறிஸ்துமஸ் தினத்தன்று எந்தவொரு போக்குவரத்து விபத்துகளும் பதிவாகவில்லை. இது ஒரு சிறந்த சந்தர்ப்பம்.

புதிய அரசாங்கத்தின் கொள்கைகளால் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு இனி அரசியல் பாதுகாப்பு கிடைக்காது. வெளிநாடுகளில் உள்ள குற்றவாளிகள் தொடர்பான சிவப்பு அறிவிப்புகளைப் பெற்று இலங்கைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் பொறுப்பு பொலிஸாருக்கு உள்ளது. கடந்த காலங்களில் குற்றங்களை அடக்குவதற்கு சரியான நடவடிக்கை எடுக்கத் தவறியதால் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குற்றங்களின் அதிகரிப்புக்கு வெளிநாட்டில் இருந்து வழிநடத்துபவர்களும் காரணமாகும்.” என்றார்.

The post கண்ணுக்குத் தெரியாத பயங்கரவாதம் – வீதி விபத்துகள் குறித்து எச்சரிக்கை appeared first on Oruvan.com.

போக்குவரத்து சட்டத்தை மீறிய 8,747 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 நபர்கள் உட்பட போக்குவரத்து சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் மொத்தம் 8,747 வாகன சாரதிகளுக்கு எதிராக இன்று புதன்கிழமை அதிகாலை 6 மணி வரையா 24 மணித்தியாலங்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலுக்கு இணங்க வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கில் நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கை பண்டிகைக் காலத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

நாட்டின் போக்குவரத்துச் சட்டத்தை நடைமுறைப்படுத்தவும், வீதி விபத்துகளையும் தவிர்க்கவும், சாரதிகளை வீதி ஒழுங்கை பின்பற்ற செய்யவும் இந்த விசேட போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க நேற்று புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டதுடன், இன்று அதிகாலை வரையான 24 மணித்தியாலங்களில் நாட்டில் எவ்வித உயிரிழப்புகளும் வீதி விபத்தில் இடம்பெறவில்லை என்றும் கூறியுள்ளார்.

பாதுகாப்பாக வாகனத்தை செலுத்தல், மது அருந்துவதை தவிர்த்தல் மற்றும் போக்குவரத்து சட்டங்களை கடைபிடித்து உயிர்களை பாதுகாக்குமாறும் பொலிஸார் சாரதிகளை கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post போக்குவரத்து சட்டத்தை மீறிய 8,747 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை appeared first on Oruvan.com.