பிரபாத் சந்திரகீர்த்தி Archives - Oruvan.com

பண்டிகை காலத்தில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படுமா?
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சந்தையில் ஏற்பட்டுள்ள சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக அவற்றை இறக்குமதி செய்ய வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி இதனைத் தெரிவித்தார்.

சந்தையில் நிலவும் தட்டுப்பாடு மற்றும் கறுப்புச் சந்தை வியாபாரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், சம்பா மற்றும் கீரி சம்பா உள்ளிட்ட அரிசி வகைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பற்றாக்குறையாக உள்ள ஏனைய தானியங்களையும் இறக்குமதி செய்வதை உணவுப் பாதுகாப்புக்கான ஜனாதிபதி குழு உறுதி செய்யும் என அவர் குறிப்பிட்டார்.

சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி வகைகள் அதிக விலைக்கு விற்கப்படுவதோடு, அந்த விலைகளிலும் அரிசியைப் பெற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல் நிலவுவதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து பருப்பு, கருவாடு மற்றும் தேங்காய் எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

போக்குவரத்துச் செலவு தவிர்ந்த ஏனைய காரணங்களுக்காக விலைகளை உயர்த்தும் வர்த்தகர்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) சட்ட நடவடிக்கை எடுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்கி, பொருட்களைப் பதுக்கும் வர்த்தகர்களைக் கண்டறிய நாடு தழுவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக நுகர்வோர் விவகார அதிகார சபையின் அனைத்து அதிகாரிகள் விடுமுறை நாட்களிலும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சந்தை முறைகேடுகள் அல்லது நியாயமற்ற விலையேற்றம் தொடர்பில் பொதுமக்கள் 1977 என்ற உடனடி அழைப்பிலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு முறைப்பாடுகளைத் தெரிவிக்க முடியும்.

The post பண்டிகை காலத்தில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படுமா? appeared first on Oruvan.com.