பிரதமர் ஹரிணி அமரசூரிய Archives - Oruvan.com

பிரதமர் ஹரிணி அமரசூரிய இலக்கு வைக்கப்படுவது ஏன்? பின்னணியில் உள்ள அரசியல் காரணங்கள்
​6 ஆம் தரத்திற்கான கல்வி தொகுதியில் (Education Module) பொருத்தமற்ற இணையதள இணைப்பு ஒன்று இடம்பெற்றமை தொடர்பாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய சமூக ஊடகங்களிலும், சில மத மற்றும் சமூகக் குழுக்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றார்.

பாடசாலை பாடநூல் ஒன்றில் பொருத்தமற்ற வெளிவாரி இணையதள இணைப்பு சேர்க்கப்பட்டமை பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியது. இது தொடர்பில் கல்வி அமைச்சு பதிலளிக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். எனினும், இந்தத் தவறு திணைக்கள மட்டத்தில் இடம்பெற்றது என்றும், அதனைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தவறுக்கு பிரதமர் நேரடியாகப் பொறுப்பல்ல என்ற போதிலும், அவர் மீது முன்னெடுக்கப்படும் தீவிரமான விமர்சனங்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

​ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் ஹரிணி அமரசூரிய பிரதமராக நியமிக்கப்பட்டமை, தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் சர்வதேச நன்மதிப்பை வலுப்படுத்தியிருந்தது.

​இடதுசாரி சார்பு அரசாங்கம் சர்வதேச ரீதியில் எதிர்ப்புகளைச் சந்திக்கும் என எதிர்பார்த்த எதிர்க்கட்சிகளுக்கு ஏமாற்றமளிக்கும் வகையில், பிரதமர் ஹரிணி சர்வதேச சமூகத்துடன் வெற்றிகரமான இராஜதந்திர உறவுகளைப் பேணி வருகின்றார்.

அரசாங்கத்தின் சர்வதேச நம்பகத்தன்மையைக் குலைக்கும் நோக்கில், உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவரான பிரதமரை பலவீனப்படுத்த இச்சம்பவம் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இந்தத் தவறுக்குக் காரணமானவர்களைக் கண்டறிய கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளது. நிர்வாக ரீதியான தவறுகளுக்கும், திட்டமிட்ட அரசியல் தாக்குதல்களுக்கும் இடையிலான வேறுபாட்டை பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசாங்கத் தரப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

The post பிரதமர் ஹரிணி அமரசூரிய இலக்கு வைக்கப்படுவது ஏன்? பின்னணியில் உள்ள அரசியல் காரணங்கள் appeared first on Oruvan.com.

சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களை அரசுடைமையாக்க நடவடிக்கை
இலங்கையில் திட்டமிட்ட குற்றவாளிகளால் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களைத் தடை செய்வதற்கும், அவற்றை அரசுடைமையாக்குவதற்குமான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.

அதன்படி கடந்த மற்றும் நடப்பு ஆகிய இரண்டு ஆண்டுகளுக்குள் 354 பவுண் தங்கம், 77 வாகனங்கள், 35 கோடி ரூபா பணம் மற்றும் நூறு கோடிக்கும் அதிக பெறுமதியான பல்வேறு சொத்துக்களை அரசுடைமையாக்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதில் 2024ஆம் ஆண்டில் மாத்திரம் 150 பவுண் தங்கம், 64 வாகனங்கள், 6 கோடி ரூபா பணம் மற்றும் 61 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களுக்குத் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளன.

அதேபோன்று, இந்த ஆண்டில் இதுவரை 204 பவுண் தங்கம், 13 வாகனங்கள், 67 கோடியே 78 இலட்சம் ரூபா பெறுமதியான காணி மற்றும் ஏனைய சொத்துக்கள், மற்றும் 18 வீடுகள் எனச் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பெருமளவிலான சொத்துக்களை அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களை அரசுடைமையாக்க நடவடிக்கை appeared first on Oruvan.com.

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் இல்லை
போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் இல்லை என அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாய்மொழிபோல வினாக்களுக்குப் பதில் வழங்கும் போது, பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் அரசாங்கம் உடன்படவில்லை எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பிரதமர், அந்த வாய்ப்பை பயன்படுத்தி, நாட்டு மக்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வைத் தேசிய நெறிமுறைகளினூடாக உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வெளிப்புற நடவடிக்கைகள் நாட்டில் மேலும் பிளவுகளை ஏற்படுத்தும் எனவும், அந்த செயன்முறையானது, உள்ளக செயற்பாடுகளுக்கு இடையூறாக அமையும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயங்களின் அடிப்படையிலேயே சர்வதேச விசாரணைகளை அரசாங்கம் எதிர்ப்பதாகவும் பிரதமர், நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தவகையில் நம்பகமான உள்நாட்டு பொறிமுறையினூடாக, பொறுப்புக்கூறல் செயற்பாடுகளை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

The post போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் இல்லை appeared first on Oruvan.com.

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பெயரில் இந்தியாவில் புதிய ஆராய்ச்சிப் பிரிவு
பிரதமர் ஹரிணி அமரசூரிய, இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, அவர் சமூகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரிக்கு விஜயம் செய்தார்.

கல்லூரி நிர்வாகம், துறைசார் ஆசிரியர்கள் மற்றும் தற்போதைய மாணவர்கள் ஆகியோர் பிரதமரை அன்புடன் வரவேற்றனர். பிரதமரின் வெற்றிகளைப் பாராட்டும் வகையில், கல்லூரி நிர்வாகம் “ஹரிணி அமரசூரிய சமூக மற்றும் இனவியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை” திறந்து வைத்தது.

அதையடுத்து, பிரதமர் தான் ஒரு காலத்தில் கல்வி கற்ற வகுப்பறைகளுக்கு மீண்டும் விஜயம் செய்தார். அத்துடன், மாணவியாக இருந்த தனது காலத்தை நினைவுகூர்ந்து தனது எண்ணங்களை அங்கு கூடியிருந்தவர்களுடன் பகிர்ந்துகொண்டார். இந்து கல்லூரியில் தான் பெற்ற கல்வியானது, கல்விப் பயணம், சமூக நீதி, சமத்துவம் மற்றும் கல்விச் சீர்திருத்தம் மீதான தனது வாழ்நாள் அர்ப்பணிப்பை எவ்வாறு வடிவமைத்தது என்பதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

அவ் வரவேற்பு விழாவில் கல்லூரி மாணவர்களிடையே உரையாற்றிய பிரதமர், “கல்வி என்பது வெறுமனே தமது எதிர்காலத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்கானது மட்டுமல்ல, மற்றவர்களின் எதிர்காலத்தை மாற்றுவதற்கு நம்மைத் தயார்படுத்துவதுமாகும்” எனக் குறிப்பிட்டார். அத்துடன், அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவம்மிக்க சமூகங்களை உருவாக்குவதில் கருணை, ஜனநாயகம் மற்றும் செயல் திறன் மிக்க குடிமகனாக இருப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

இந்து கல்லூரி விஜயத்தை அடுத்து பிரதமர், 2015 ஆம் ஆண்டில் திட்டமிடல் ஆணைக்குழுவிற்குப் பதிலாக நிறுவப்பட்ட, இந்திய அரசின் கொள்கை அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (NITI Aayog) விஜயம் செய்தார்.

இந்த விஜயத்தில், கல்வி, புத்தாக்கம் மற்றும் அரச நிர்வாகம் ஆகியவற்றில் இந்தியாவின் கொள்கை மற்றும் நிறுவனச் சீர்திருத்தங்களைப் புரிந்துகொள்வதில் கவனம் செலுத்தப்பட்டது. இலங்கை தற்போது தனது புதிய கல்விச் சீர்திருத்தத்தை செயல்படுத்தத் தயாராகி வருவதால், NITI Aayog அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கான மேற்பார்வைப் பயணம் மூலமும் Atal Innovation Mission (AIM) மற்றும் கல்வித் துறையில் ஆய்வு, படைப்பாற்றல் மற்றும் டிஜிட்டல் கற்கை முறைகளை வலுவூட்டுவதற்கான அதன் அணுகுமுறை உட்பட இந்தியாவின் மாற்றம் பற்றிய அனுபவங்கள் மீதும் பிரதமர் கவனம் செலுத்தினார்.

The post பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பெயரில் இந்தியாவில் புதிய ஆராய்ச்சிப் பிரிவு appeared first on Oruvan.com.

சீன ஜனாதிபதியுன் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று சந்திப்பு
சீனாவிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, இன்று அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடனும், நாளை அவரது பிரதி பிரதமர் லி கியாங்குடனும் இருதரப்பு சந்திப்பை நடத்தவுள்ளார்.

சீனாவில் நடைபெறும் 2025ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பெண்கள் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரியா நேற்று சீனாவை சென்றடைந்தார்.

பிரதமரை சீனத் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாக அமைச்சர் திருமதி. கவோ ஷூமின் வரவேற்றார்.

இந்த விஜயத்தின் முதல் நாளில், பிரதமர் தடைசெய்யப்பட்ட நகரம் மற்றும் சீனப் பெருஞ்சுவர் ஆகியவற்றைப் பார்வையிட்டார்.

முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சீனாவிற்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, சினோபெக்கின் 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டிற்கான ஒப்பந்தம் உட்பட பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஜனாதிபதி கையெழுத்திட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post சீன ஜனாதிபதியுன் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று சந்திப்பு appeared first on Oruvan.com.

காணாமல் போனவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறது
காணாமல் போனவர்கள் தொடர்பில் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் எழுப்பிய கேள்வியொன்றுக்கு நேற்று பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு கூறினார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

காணாமல் போனோர் தொடர்பாக அநீதிக்குள்ளானவர்களுக்கு நீதி மற்றும் சமத்துவத்தை வழங்க அரசாங்கம் உறுதியுடன் உள்ளது. ஆனால், நாங்கள் நேரில் சென்று இந்தப் விசாரணைகளைச் செய்ய முடியாது. இந்த விடயம் சட்ட ரீதியாகவும் நிறுவன ரீதியாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட நிறுவன ரீதியான தோல்விகளும், முறைமை ரீதியான தோல்விகளுமே இந்த விடயங்களில் தாமதத்திற்கு முதன்மையான காரணங்களாகும். எனவே நாம் அதில் கவனம் செலுத்த வேண்டும்.

இதன் மூலம் பிரபல்யமாவதற்காகவன்றி, இதுபோன்ற விடயங்கள் மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்குத் தேவையான நிறுவனங்கள் மற்றும் சூழலை உருவாக்குவது பற்றியும், ஏற்கனவே உள்ள அநீதிகள் குறித்து விசாரித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

நிவாரணம் வழங்கும் அலுவலகம் மற்றும் காணாமல் போனோர் அலுவலகம் என்பன பெயரளவில் மட்டுமே நிறுவப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு அவற்றின் மீது நம்பிக்கை இல்லை. போதுமானளவு பலமில்லாதமையாலும் அவை தோல்வியடைந்தன.

எனவே இதுதான் கடந்த காலங்களில் நடந்தது, இதைத்தான் நாங்கள் சரிசெய்ய முயற்சிக்கிறோம். இந்த இடங்களில் சரியான நபர்கள் இருப்பதையும், வளங்கள் போதுமான அளவு ஒதுக்கப்படுவதையும், இந்த நிறுவனங்கள் அவற்றின் செயற்பாடுகளைச் செய்ய முடியும் என்பதையும் நாம் உறுதி செய்ய வேண்டும்.

காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகள் இன்னும் உள்ளன. இவை கடந்த 16 ஆண்டுகளாக இருந்து வரும் வழக்குகள். இவை எளிதானவை அல்ல. எனினும் நீதியை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்காக நீதி அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை தற்போது அங்கீகாரம் அளித்துள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

The post காணாமல் போனவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறது appeared first on Oruvan.com.

விவசாயிகளுக்கு 25,000 ரூபா உர மானியம் இரண்டு கட்டங்களாக வழங்கப்படுகிறது – பிரதமர்
பெரும்போகத்திற்காக உர மானியமாக 25,000 ரூபா மற்றும் இலவச சிவப்பு தூள் உரத்தை விவசாயிகளுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

”விவசாயிகளுக்கு உர மானியங்களை வழங்கும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பாக நாடாளுமன்ற விவாதத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு கூறினார்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உர மானியம் வழங்கப்பட வேண்டிய காலம் 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் 01 திகதி முதல் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 01 திகதி வரையாகும்.

ரூ.25,000 உர மானியம் இரண்டு கட்டங்களாக ரூ.15,000 மற்றும் ரூ.10,000 என வழங்கப்படும். முதல் தவணையாக ரூ.15,000 ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளின் உரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு நேர்மறையான மற்றும் முறையான அமைப்பைச் செயல்படுத்த அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. இதற்காக விவசாய அமைப்புகளிடமிருந்து தற்போது யோசனைகள் கோரப்பட்டு வருகின்றன.

நெல் நிலங்களில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதி உதவிக்கு கூடுதலாக, அரசாங்கம் தற்போது 25239.73 மெற்றிக் தொன் பொட்டாசியம் உரத்தை இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளது.” எள்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

The post விவசாயிகளுக்கு 25,000 ரூபா உர மானியம் இரண்டு கட்டங்களாக வழங்கப்படுகிறது – பிரதமர் appeared first on Oruvan.com.

புதிய கல்விக் கொள்கை 2026இல் அறிமுகம்
புதிய கல்விக் கொள்கை 2026ஆம் ஆண்டில் அமுல்படுத்தப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

2025ஆம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் திட்டமிட்டப்படி செயல்படும் என்றும் 2026ஆம் ஆண்டுமுதல் வழமைபோன்று கல்வி நடவடிக்கைகள் வருட ஆரம்பம் முதல் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

The post புதிய கல்விக் கொள்கை 2026இல் அறிமுகம் appeared first on Oruvan.com.